கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இயற்கையோடு இசைந்த வாழ்வுக்கான சில ஆலோசனைகள் (Some tips for living in harmony with nature)...



இயற்கையோடு இசைந்த வாழ்வுக்கான சில ஆலோசனைகள் (Some tips for living in harmony with nature)...


1. உடம்பு சூடு ஆகாமல் பாத்துக்கணும். வாரத்தில் ஒரு நாளாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். 


2. காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் மோரில் சிட்டிகை பெருங்காயம்,உப்பு சேர்த்து குடிக்கலாம். 


3 . இரவில் படுக்கும் போது தொப்புளில் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் விட்டு படுக்க வேண்டும்.


4. நீர்ச்சத்துள்ள காய்கறிகளை கூட்டு செய்து சாப்பிட வேண்டும் மசாலா புளி காரம் சேர்க்கக்கூடாது.


5. காய்கறிகள், பழச்சாறுகள் சாப்பிட வேண்டும். டீ ,காபி பதிலாக சீரகம் அல்லது தனியா போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் சிறிது வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.


6 .அரைமணி நேரம் நடைபயிற்சி, உடற்பயிற்சி, தோப்புகரணம் ,சூரிய நமஸ்காரம் போன்றவற்றில் முடிந்ததை செய்யலாம். 


7. இரவு உறக்கம் 6 மணிநேரம் முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும். 

மதிய உறக்கம் வேண்டாம். 


8. தண்ணீர் ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை 2 டம்ளர் அருந்த வேண்டும். 


9. 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை ஒரிடத்தில் அமர்ந்து மூச்சு கவனியுங்கள். 


10.தினமும் ஆன்மீகம், அறிவியல், விஞ்ஞானம், இயற்கை, மருத்துவம் ,ஊக்குவிப்பு போன்ற பல புத்தகங்களில் ஏதாவது ஒன்று குறைந்தது 10 பக்கங்கள் படிக்கும் பழக்கம் நல்லது.


11 . கவலை ,கஷ்டங்கள், பிரச்சினைகள் அதிகமாக நினைக்காமல் இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு மனதை அமைதியான முறையில் வாழ முனைவோம். 


12.கோபம், வெறுப்பு ,டென்சன் போன்ற உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் எண்ணங்களை தவிர்க்க வேண்டும் .


13 . நாம் இந்த பூமிக்கு சுற்றுலா வந்து இருக்கிறோம் . சந்தோஷமாக ,ஆரோக்கியமாக , ஆயுளுடன் வாழ்ந்து பிறவியின் நோக்கம் அடைவோம்.


14 .சூரியனைபோன்று 500கோடி ஆண்டுகள் வாழ போவதில்லை. 

கொண்டு வந்தது ஒன்றும் இல்லை.

கொண்டு போவதும் ஒன்றும் இல்லை .


15. உண்மையான சொத்து உடல் ஆரோக்கியம், மன அமைதி என்பதை உணர்ந்து வாழ முனைவோம்...!!






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இன்றைய (29-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

இன்றைய (29-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஜனவரி 29, 2023



புதிய நபர்களின் அறிமுகம் மனதிற்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும். எண்ணிய சில பணிகள் அலைச்சலுக்கு பின்பு நிறைவுபெறும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். உற்சாகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : முடிவு கிடைக்கும். 


கிருத்திகை : சாதகமான நாள்.

---------------------------------------



ரிஷபம்

ஜனவரி 29, 2023



 விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார ரீதியான பயணங்களில் சாதகமான சூழல் அமையும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். புதிய வேலையின் நிமிர்த்தமாக முயற்சிகள், அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலமான முடிவு கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக குறையும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 



கிருத்திகை : விருப்பம் நிறைவேறும்.


ரோகிணி : சோர்வு நீங்கும்.


மிருகசீரிஷம் : புரிதல் அதிகரிக்கும். 

---------------------------------------



மிதுனம்

ஜனவரி 29, 2023



மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார ரீதியான பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். முயற்சிகள் ஈடேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



மிருகசீரிஷம் : செல்வாக்கு அதிகரிக்கும். 


திருவாதிரை : நம்பிக்கை ஏற்படும்.


புனர்பூசம் : புதுமையான நாள்.

---------------------------------------

 


கடகம்

ஜனவரி 29, 2023



வியாபாரம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த சில எதிர்ப்புகள் குறையும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் ஆதாயமான சூழ்நிலைகள் உண்டாகும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். தெளிவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



புனர்பூசம் : எதிர்ப்புகள் குறையும். 


பூசம் : மேன்மை உண்டாகும்.


ஆயில்யம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 

---------------------------------------



சிம்மம்

ஜனவரி 29, 2023



நிர்வாகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். முக்கியமான முடிவுகளுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. மனதிற்குப் பிடித்தவாறு வீட்டில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். திட்டமிட்ட பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். திட்டமிட்ட சில செயல்களில் உள்ள இழுபறியான சூழல் நீங்கும். சிக்கல்கள் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


பூரம் : மாற்றம் ஏற்படும்.


உத்திரம் : இழுபறிகள் நீங்கும்.

---------------------------------------



கன்னி

ஜனவரி 29, 2023



உத்தியோகம் நிமிர்த்தமான பயணங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆவணங்கள் சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். பக்தி வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீலம்



உத்திரம் : அலைச்சல்கள் அதிகரிக்கும். 


அஸ்தம் : விழிப்புணர்வுடன் செயல்படவும்.


சித்திரை : கவனம் வேண்டும்.

---------------------------------------



துலாம்

ஜனவரி 29, 2023



புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் பலவிதமான இலக்குகள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 



சித்திரை : புதிய இலக்குகள் பிறக்கும்.


சுவாதி : லாபம் அதிகரிக்கும்.


விசாகம் : அனுகூலமான நாள்.

---------------------------------------



விருச்சிகம்

ஜனவரி 29, 2023



உத்தியோகம் சார்ந்த பணிகளில் ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். பணிகளில் இருந்துவந்த அலைச்சல்கள் படிப்படியாகக் குறையும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



விசாகம் : புரிதல் உண்டாகும்.


அனுஷம் : அலைச்சல்கள் குறையும்.


கேட்டை : எண்ணங்கள் அதிகரிக்கும். 

---------------------------------------



தனுசு

ஜனவரி 29, 2023



பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். இன்பம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



மூலம் : லாபகரமான நாள்.


பூராடம் : ஈடுபாடு அதிகரிக்கும். 


உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------



மகரம்

ஜனவரி 29, 2023



வியாபாரம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். பணிகளில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். வாசனை திரவியம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். நலம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



உத்திராடம் : தாமதங்கள் குறையும். 


திருவோணம் : ஆர்வம் ஏற்படும்.


அவிட்டம் : முயற்சிகள் கைகூடும்.

---------------------------------------



கும்பம்

ஜனவரி 29, 2023



உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் துரிதமும், விவேகமும் வெளிப்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அவிட்டம் : முன்னேற்றமான நாள்.


சதயம் : விருப்பம் நிறைவேறும்.


பூரட்டாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும். 

---------------------------------------




மீனம்

ஜனவரி 29, 2023



பயணங்களின் போது பிறமொழி பேசும் மக்களின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கும். வாக்குவன்மையால் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழில் சார்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் புதிய நபர்களின் அறிமுகத்தினால் மாற்றமான சூழல் ஏற்படும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பான சிந்தனைகள் மனதில் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.


உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும். 


ரேவதி : முதலீடுகள் அதிகரிக்கும்.

---------------------------------------


நம்ம ஊரு பள்ளி அறக்கட்டளையின் (Namma School Foundation) இயக்குநர்கள் குழு மற்றும் அவர்களின் செயல்பாடுகள் - அரசாணை (நிலை) எண்.158, நாள்: 21-09-2022 வெளியீடு (G.O.Ms.No.158, Dated: 21-09-2022 - The Board of Directors of the Namma School Foundation and their Functions)...

 



>>> நம்ம ஊரு பள்ளி அறக்கட்டளையின் (Namma School Foundation) இயக்குநர்கள் குழு மற்றும் அவர்களின் செயல்பாடுகள் - அரசாணை (நிலை) எண்.158, நாள்: 21-09-2022 வெளியீடு (G.O.Ms.No.158, Dated: 21-09-2022 - The Board of Directors of the Namma School Foundation and their Functions)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


நம்ம ஸ்கூல் பவுண்டேசன் (நம்ம ஊரு பள்ளி) - பள்ளி மேலாண்மைக் குழுவின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயல்பாடுகள் - வழிகாட்டுதல் வழங்குதல் மற்றும் Single Nodal Account தொடங்குதல் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Namma School Foundation (Namma Ooru Palli) – Powers, Duties and Functions of School Management Committee – Issuance of Guidelines and Opening of Single Nodal Account – Proceedings of Chief Educational Officer) Rc.No.28/ C7/ SMC/ 2022, Dated: 25-01-2023...

 



>>> நம்ம ஸ்கூல் பவுண்டேசன் (நம்ம ஊரு பள்ளி) - பள்ளி மேலாண்மைக் குழுவின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயல்பாடுகள் - வழிகாட்டுதல் வழங்குதல் மற்றும் Single Nodal Account தொடங்குதல் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Namma School Foundation (Namma Ooru Palli) – Powers, Duties and Functions of School Management Committee – Issuance of Guidelines and Opening of Single Nodal Account – Proceedings of Chief Educational Officer) Rc.No.28/ C7/ SMC/ 2022, Dated: 25-01-2023...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


ஆசிரியர் தகுதி தேர்வு - தாள் 2 (TNTET Paper II) - தேர்வு நடைபெறும் நாட்கள், District & Venue Admit Card வெளியிடப்படும் தேதிகள் அறிவிப்பு...


>>> ஆசிரியர் தகுதி தேர்வு - தாள் 2 (TNTET Paper II) - தேர்வு நடைபெறும் நாட்கள், District & Venue Admit Card வெளியிடப்படும் தேதிகள் அறிவிப்பு...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இன்றைய (28-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

இன்றைய (28-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஜனவரி 28, 2023



மனதில் புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். எந்தவொரு செயலிலும் உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கை துணைவரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வியாபாரம் நிமிர்த்தமான சில உதவிகள் சாதகமாக அமையும். நலம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்



அஸ்வினி : சிந்தனைகள் மேம்படும்.


பரணி : லாபம் கிடைக்கும். 


கிருத்திகை : முயற்சிகள் கைகூடும்.

---------------------------------------



ரிஷபம்

ஜனவரி 28, 2023



நீண்ட நாட்களாக தடையாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். குணநலன்களில் மாற்றம் ஏற்படும். கால்நடை வாங்குவது தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வெளியூர் பயணம் சார்ந்த செயல்பாடுகளில் புதிய அனுபவம் கிடைக்கும். பயனற்ற பேச்சுக்களையும், வாக்குறுதிகளையும் குறைத்துக் கொள்ளவும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமையை கையாளவும். உதவி கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.


ரோகிணி : அனுபவம் கிடைக்கும்.


மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------



மிதுனம்

ஜனவரி 28, 2023



எதிலும் விவேகத்துடன் செயல்பட வேண்டும். வாழ்க்கை துணைவருடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் மாற்றம் உண்டாகும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கலை சார்ந்த துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இன்னல்கள் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மிருகசீரிஷம் : விவேகம் வேண்டும்.


திருவாதிரை : ஆர்வம் அதிகரிக்கும்.  


புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

---------------------------------------



கடகம்

ஜனவரி 28, 2023



வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வீடு, மனை சார்ந்த விஷயங்களில் லாபம் அதிகரிக்கும்.  நெருக்கமானவர்களிடம் மனம் திறந்து பேசுவதன் மூலம் தெளிவு உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அங்கீகாரங்கள் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.


பூசம் : மகிழ்ச்சியான நாள்.


ஆயில்யம் : தெளிவு உண்டாகும்.

---------------------------------------



சிம்மம்

ஜனவரி 28, 2023



சகோதரர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். அரசு சார்ந்த துறைகளில் நிதானம் வேண்டும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும். எதிர்பாராத அதிர்ஷ்டகரமான சூழ்நிலைகள் அமையும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். குழப்பம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மகம் : அனுசரித்து செல்லவும். 


பூரம் : நிதானம் வேண்டும். 


உத்திரம் : முயற்சிகள் கைகூடும். 

---------------------------------------



கன்னி

ஜனவரி 28, 2023



விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் வேண்டும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் கவனம் வேண்டும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் பொறுமையை கையாளவும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திரம் : கவனம் வேண்டும். 


அஸ்தம் : அனுசரித்து செல்லவும். 


சித்திரை : பொறுமை வேண்டும் 

---------------------------------------



துலாம்

ஜனவரி 28, 2023



உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். தோற்றப்பொலிவில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். வாழ்க்கை துணைவரின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரம் சார்ந்த தொழிலில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரியங்களை முன்னின்று நடத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். தற்பெருமை எண்ணங்களை குறைத்து செயல்படுவது நன்மை அளிக்கும். பரிசு கிடைக்கும் நாள்.  



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



சித்திரை : மாற்றம் உண்டாகும். 


சுவாதி : அறிமுகம் கிடைக்கும். 


விசாகம் : நன்மை உண்டாகும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜனவரி 28, 2023



கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பேச்சுவன்மையின் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மனதளவில் இருந்துவந்த தயக்க உணர்வுகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிராக செயல்பட்டவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். கலை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வாகனங்களில் இருந்துவந்த பழுதுகளை சீர் செய்வீர்கள். புகழ் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9 


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



விசாகம் : திறமை வெளிப்படும். 


அனுஷம் : மாற்றமான நாள்.


கேட்டை : வாய்ப்புகள் கைகூடும்.

---------------------------------------



தனுசு

ஜனவரி 28, 2023



மனதில் இருந்துவந்த நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். வியாபாரம் சார்ந்த பணிகளில் புதிய கூட்டாளிகளை இணைப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மூலம் : ஆசைகள் நிறைவேறும். 


பூராடம் : மந்தத்தன்மை குறையும். 


உத்திராடம் : ஒற்றுமை உண்டாகும்.

---------------------------------------




மகரம்

ஜனவரி 28, 2023



சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். தந்தை பற்றிய சிந்தனைகள் அவ்வப்போது தோன்றி மறையும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். ஓட்டுநர் தொடர்பான துறைகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் நீங்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கல்வி சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.   



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திராடம் : முன்னேற்றமான நாள்.


திருவோணம் : சிந்தனைகள் மேம்படும்.


அவிட்டம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------



கும்பம்

ஜனவரி 28, 2023



தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கடன் தொடர்பான சிக்கல்கள் குறையும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு படிப்படியாக குறையும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


சதயம் : சிக்கல்கள் குறையும். 


பூரட்டாதி : சாதகமான நாள்.

---------------------------------------



மீனம்

ஜனவரி 28, 2023



இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பார்வை சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் வருகை மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



பூரட்டாதி : தனவரவு கிடைக்கும்.


உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.


ரேவதி : மாற்றம் உண்டாகும்.

---------------------------------------


இன்றைய (27-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

இன்றைய (27-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஜனவரி 27, 2023



ஆடம்பரமான பொருட்களின் மீது விருப்பம் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். பிரிந்து சென்றவர்களைப் பற்றிய நினைவுகள் மேம்படும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு கிடைக்கும். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். தெளிவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அஸ்வினி : விருப்பம் அதிகரிக்கும். 


பரணி : நினைவுகள் மேம்படும். 


கிருத்திகை : தெளிவு கிடைக்கும்.

---------------------------------------



ரிஷபம்

ஜனவரி 27, 2023



மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எந்தவொரு செயலையும் மனநிறைவுடன் செய்து முடிப்பீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை



கிருத்திகை : கவலைகள் நீங்கும்.


ரோகிணி : ஆதாயம் உண்டாகும். 


மிருகசீரிஷம் : மனநிறைவான நாள்.

---------------------------------------



மிதுனம்

ஜனவரி 27, 2023



உத்தியோக ரீதியான பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் குறையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பொறுமை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



மிருகசீரிஷம் : சாதகமான நாள்.


திருவாதிரை : சிந்தனைகள் மேம்படும்.


புனர்பூசம் : குழப்பம் குறையும்.

---------------------------------------



கடகம்

ஜனவரி 27, 2023



உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை வெளிப்படும். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தந்தைவழி வியாபாரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதை உறுத்திய சில கவலைகள் குறையும். வெளியூர் தொடர்பான பயணங்கள் ஈடேறும். முயற்சிக்கு உண்டான வெற்றி கிடைக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அசதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



புனர்பூசம் : திறமை வெளிப்படும். 


பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


ஆயில்யம் : தேவைகள் நிறைவேறும்.

---------------------------------------



சிம்மம்

ஜனவரி 27, 2023



செய்யும் செயல்களில் பதற்றமின்றி செயல்படவும். நெருக்கமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுத்து செயல்படுவது நல்லது. எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் அதிகரிக்கும். மனதிலிருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் முன் சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். உடனிருப்பவர்கள் இடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பரிவு வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



மகம் : பதற்றமின்றி செயல்படவும். 


பூரம் : கற்பனைகள் அதிகரிக்கும். 


உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------



கன்னி

ஜனவரி 27, 2023



மனதில் நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். நண்பர்களின் ஆலோசனைகள் மேன்மையை ஏற்படுத்தும். வெளிவட்டாரங்களில் உங்கள் மீதான மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அன்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு



உத்திரம் : மேன்மையான நாள்.


அஸ்தம் : மதிப்பும் அதிகரிக்கும். 


சித்திரை : புரிதல் உண்டாகும்.

---------------------------------------



துலாம்

ஜனவரி 27, 2023



கடினமான செயல்களையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் பொறுமையை கையாளவும். உத்தியோகம் நிமிர்த்தமான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். சிறு மற்றும் குறுந்தொழிலில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். நிறைவான நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 



சித்திரை : பொறுமை வேண்டும்.


சுவாதி : பொறுப்புகள் அதிகரிக்கும். 


விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜனவரி 27, 2023



எதிர்பாராத இடத்திலிருந்து தனவரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த தனவரவு கிடைக்கும். சகோதரர் வகையில் ஒத்துழைப்பு உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். உத்தியோகப் பணிகளில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும். மனதில் நினைத்த காரியங்களை எளிதில் செய்து முடிப்பீர்கள். தனவரவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை



விசாகம் : தனவரவு கிடைக்கும்.


அனுஷம் : ஒத்துழைப்பு உண்டாகும். 


கேட்டை : காரியங்கள் ஈடேறும்.

---------------------------------------



தனுசு

ஜனவரி 27, 2023



புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் சாதகமான சூழல் அமையும். வசதி வாய்ப்புகளை பெருக்கி கொள்வதற்கான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோக ரீதியான பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : அனுசரித்து செல்லவும்.


பூராடம் : சாதகமான நாள்.


உத்திராடம் : சிந்தனைகள் உண்டாகும்.

---------------------------------------



மகரம்

ஜனவரி 27, 2023



மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். விலகி நின்றவர்கள் நெருங்கி வருவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு மேம்படும். நலம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : தன்னம்பிக்கை உண்டாகும். 


திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும். 


அவிட்டம் : ஆதரவு மேம்படும்.

---------------------------------------



கும்பம்

ஜனவரி 27, 2023



சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனை உண்டாகும். கற்பனை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3 


அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்



அவிட்டம் :  எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


சதயம் : மாற்றங்கள் ஏற்படும்.


பூரட்டாதி : ஈடுபாடு உண்டாகும்.

---------------------------------------




மீனம்

 ஜனவரி 27, 2023



பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தம்பதியர்களுக்குள் விட்டுக்கொடுத்து செல்லவும். உறவினர்களின் வருகை மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மறதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



பூரட்டாதி : குழப்பம் நீங்கும். 


உத்திரட்டாதி : சிந்தனைகள் மேம்படும். 


ரேவதி : எண்ணங்கள் கைகூடும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

100% No Govt Servant & Teachers Will Accept Tamil Nadu Govt's Evasion Words to instead of Old Pension Scheme - Tamil Nadu Chief Secretariat Association Condemns Report

  பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, தமிழ்நாடு அரசின் பசப்பு வார்த்தைகளை 100% எந்த அரசு ஊழியரும், ஆசிரியர்களும் ஏற்க மாட்டார்கள் - தமிழ்...