கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNPSC தேர்வு விடைத் தாள்களை மதிப்பீடு செய்வதற்கு, பழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் அதிக கால தாமதம் ஏற்படுகிறது. எனவே, AI Automation மூலம் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் (For evaluation of TNPSC exam answer sheets, use of old technology leads to high time delay. Hence, corrective action will be taken through AI Automation” – Minister PDR Palanivel Thiagarajan)...

 TNPSC தேர்வு விடைத் தாள்களை மதிப்பீடு செய்வதற்கு, பழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் அதிக கால தாமதம் ஏற்படுகிறது. எனவே, AI Automation மூலம் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் (For evaluation of TNPSC exam answer sheets, use of old technology leads to high time delay. Hence, corrective action will be taken through AI Automation” – Minister PDR Palanivel Thiagarajan)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வருகின்ற 21.04.2023 வெள்ளிகிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் (Private Sector Employment Camp on Friday 21.04.2023 at District Employment Offices)...

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வருகின்ற 21.04.2023 வெள்ளிகிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் (Private Sector Employment Camp on Friday 21.04.2023 at District Employment Offices)...


 கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகின்ற 21.04.2023 வெள்ளிகிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிவாய்ப்பு வழங்கிட உள்ளது. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளோமா மற்றும் ஐ டி ஐ படித்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ள விரும்பும் வேலையளிப்பவர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் .


Contact Details 1

Contact Person Name

SUDHA G

Mobile No

9894146651

Email Id

dempt.karur2022@gmail.com

Contact Person Role

DEO,KARUR






_________


தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வரும் 21.04.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தேனி மாவட்டத்திலுள்ள பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்நிறுவனங்களில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ள வகுப்புகள் படித்தவர்கள் மற்றும் 12ம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப் படிப்பு மற்றும் இளநிலை முதுநிலை பட்டப்படிப்புகள், பொறியியல் பட்டப் படிப்புகள் படித்தவர்கள் மற்றும் தையல்பயிற்சி முடித்தவர்கள் ஆகிய பல்வேறு கல்வித்தகுதியில் உள்ள வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம் எனவே வேலைநாடுநர்கள் தங்களது சுயவிபர நகல் மற்றும் கல்விச்சான்றிதழ்களின் நகல்கலுடன் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் 21.04.2023 அன்று நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / - அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 01.01.2023 நிலவரப்படி நடுநிலைப்பள்ளி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்குத் தகுதியான தேர்ந்தோர் பட்டியல் (Promotion Panel) தயாரித்தல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 6413/டி1/2023, நாள்: 19-04-2023 (Elementary Education - Panchayat Union / Municipal / - Government School Teachers as on 01.01.2023 - Preparation of list of eligible candidates for promotion to Middle School / Primary School Headmaster - Issuance of instructions - Regarding - Proceedings of Tamil Nadu Director of Elementary Education RC.No: 6413/T1/ 2023, Dated: 19-04-2023)...

 

>>> தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / - அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 01.01.2023 நிலவரப்படி நடுநிலைப்பள்ளி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்குத் தகுதியான தேர்ந்தோர் பட்டியல் (Promotion Panel) தயாரித்தல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 6413/டி1/2023, நாள்: 19-04-2023 (Elementary Education - Panchayat Union / Municipal / - Government School Teachers as on 01.01.2023 - Preparation of list of eligible candidates for promotion to Middle School / Primary School Headmaster - Issuance of instructions - Regarding - Proceedings of Tamil Nadu Director of Elementary Education RC.No: 6413/T1/ 2023, Dated: 19-04-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கனவு ஆசிரியர் - 2023 முதல் நிலை தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் 22ம் தேதி அன்று வெளியிடப்படும் (Kanavu Aasiriyar-2023 Contest level-1 results will be published on April 22nd)...

 கனவு ஆசிரியர் - 2023 முதல் நிலை தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் 22ம் தேதி அன்று வெளியிடப்படும் (Kanavu Aasiriyar-2023 Contest level-1 results will be published on April 22nd)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of Enrolling Children in Government Schools)...



  அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of Enrolling Children in Government Schools)...


அரசுப்பள்ளி  நம்பள்ளி....

சேர்த்திடுங்கள் நம் குழந்தைகளை அங்கே...


அரசுப் பள்ளிகளில் 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது 

              - அரசு அறிவிப்பு.


✳️LKG முதல்  8ஆம் வகுப்பு வரை .

        

✳️தெரிந்தவர்கள் புதுப்பித்துக்கொள்க..


✳️ தெரியாதவர்கள் தெரிந்துகொள்க..


✳️அரசுப் பள்ளியில் பயின்றால்...


✳️கட்டணமில்லா கல்வி...


✳️ ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியில் 

20% முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.


✳️ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு உயர் கல்வி (மருத்துவம், பொறியியல், வேளாண்மை , சித்த மருத்துவம் , ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம், கலை & அறிவியல் உள்ளிட்ட படிப்புகள்) பயில 

7.5 % முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.


✳️பெண் கல்வி இடைநிற்றலை தவிர்க்க அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவியர்களுக்கு உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1,000 வீதம் படிப்பு முடியும் வரை வழங்கப்படும்.


✳️6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு இலவச கராத்தே பயிற்சி .


✳️மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500, ஆறாம் வகுப்பிற்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது.


✳️ நலிவடைந்த பிரிவைச்சேர்ந்த மாணவிகளுக்கு மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500 , 

ஆறாம் வகுப்பிற்கு ரூ.1,000, 

ஏழு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு ரூ 1,500 வழங்கப்படுகிறது.


✳️விலையில்லா புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கும்...


✳️விலையில்லா  குறிப்பேடுகள்- 3 பருவம்


✳️விலையில்லா சீருடைகள்- 4 செட்.


✳️விலையில்லா புத்தகப்பை.


✳️விலையில்லா காலணிகள்.


✳️வண்ண பென்சில்கள்.


✳️கணித உபகரணப் பெட்டி.


✳️புவியியல்  வரைபட நூல்.


✳️தினந்தோறும்  முட்டையுடன் சத்துணவு.


✳️இலவச பேருந்து பயண அட்டை...


✳️ போட்டிகளில் வெற்றி பெறும் அரசுப்பள்ளி மாணவ மாணவியர் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்...


✳️ அரசுப்பள்ளி மாணவ மாணவியர் வாசிப்பு திறன் வளர்க்க தேன்சிட்டு மாத இதழ்...


✳️ விலையில்லா மிதிவண்டி...


✳️ விலையில்லா மடிக்கணினி...


இன்னும் நன்மைகள் ஏராளம் ஏராளம்....


"அரசுப்பள்ளி வறுமையின் அடையாளமல்ல, பெருமையின் அடையாளம்"


அன்பு பெற்றோர்களே, 

தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்ப்பீர்... அவர்களின் வளமான எதிர்காலத்திற்கு அடித்தளமிடுவீர்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.04.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.04.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: வெஃகாமை


குறள் எண்: 178

அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை

வேண்டும் பிறன்கைப் பொருள்.


பொருள்:

தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்


பழமொழி :

The only jewel which will not decay is knowledge


அறிவு மட்டுமே அழியா அணிகலம்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. தனக்கு தலைவன் இல்லா விட்டாலும் வரிசையாக சென்று தன் பணியைச் செய்யும் எறும்பு போல் இருப்பேன். 


2. ஆசிரியர் இருந்தாலும் இல்லாவிடடாலும் என் ஒழுக்கம் காத்துக் கொள்வேன்.


பொன்மொழி :


பார்த்த மாத்திரத்திலேயே அனைத்தையும் ஆதாரமாக எடுத்துவிடாதீர்கள், தரமான ஆதாரத்துடன் எடுத்துக்கொள்ளுங்கள்


பொது அறிவு :


1. பாராமென்சியா என்றால் என்ன ? 


மிகச்சிறந்த ஞாபகம். 


2. புரோட்டீனின் முக்கிய பொருள் எது ? 


அமினோ ஆசிட்.


English words & meanings :


 resilient - able to recover fast to the original state. adjective. மீள் தன்மையுடைய. பெயரளபடை


ஆரோக்ய வாழ்வு :


வாழைப்பழம் உண்பதால் உங்கள் ஆற்றல் அளவு அதிகரித்து, வெகு நேரம் பசிக்காமல் இருக்க உதவுகிறது. வாழைபழம் உடலுக்கு தேவையான ஆற்றலை தருவதோடு மட்டுமல்லாமல் உங்கள் உடலின் சர்க்கரை அளவை தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. உங்களுக்கு பசிப்பது போல் தோன்றினால், வாழைபழம் உண்பது மிகச் சிறந்தது.


கணினி யுகம்


Ctrl + Shift + arrow keys: When a tile is in focus on the Start menu, move it into another tile to create a folder. Ctrl + arrow keys: Resize the Start menu when it’s open.


ஏப்ரல் 19


பியேர் கியூரி அவர்களின் நினைவுநாள்


பியேர் கியூரி (Pierre Curie,15 மே 1859 – 19 ஏப்ரல் 1906) பிரெஞ்சு இயற்பியலாளர். அழுத்த மின் விளைவு, காந்தவியல்,படிகவியல் மற்றும் கதிரியக்கக் கண்டுபிடிப்புகளின் முன்னோடிகளில் ஒருவர். 1903 ஆம் ஆண்டில் ஹென்றி பெக்கெரல்,மேரி கியூரி ஆகியோருடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொண்ட அறிவியலாளர்.1903ஆம் ஆண்டு இவருக்கு ரேடியம்,பற்றிய இவர்களது ஆய்வு செய்தமைக்காக   தாவி விருது வழங்கப்பட்டது. பியேர் கியூரி- மேரி கியூரி இணையர் நோபல் பரிசு பெற்றவர்கள். அதே போன்று இவர்களின் மூத்த மகளான ஐரீன் ஜோலியட் கியூரி,விஞ்ஞானியான ஃபிரெடரிக் ஜோலியட் என்பவரை மணந்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து கதிரியக்கம் பற்றி தொடந்து ஆய்வுகள் செய்து செயற்கை முறையில் கதிரியக்கத்தை உண்டக்கும் வழியொன்றைக் கண்டு பிடித்தனர். இதற்காக 1935-ல் ஐரின் கியூரிக்கும் அவரது கணவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது


நீதிக்கதை


மன்னன் ராஜவர்மன் நீதி தவறாத நேர்மையாளன். நீதியையும் நேர்மையையும் தன் உயிருக்கும் மேலாக மதிப்பவன். ஒரு நாள் குணசேகரன் என்னும் அயலூர்க்காரன் மன்னன் ராஜவர்மனிடம், அரசே, நான் என் மனைவியுடன் உங்கள் தலைநகரில் வந்துகொண்டிருந்தேன். தலைநகரத்தை அடைவதற்கு முன் காட்டில் நண்பகல் நேரம் நானும், என் மனைவியும் ஒரு மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்தோம். அப்போது அவள் மீது எங்கிருந்தோ வந்த அம்பு தைத்து உயிரிழந்து விட்டாள். எங்களுக்கு எதிரில் சற்று தூரத்தில் வேடன் அமர்ந்திருந்தான். அவன் தான் என் மனைவியைக் கொன்றவன். அவனை நீங்கள் தண்டிக்க வேண்டும் என்றான். 


ஆனால் அந்த வேடனோ, அரசே, நான் குற்றமற்றவன். எந்த காரணமும் இன்றி நான் ஏன் அந்தப் பெண்ணைக் கொல்ல வேண்டும்? நான் அம்பு எய்தவில்லை என கதறினான். கொல்லப்பட்ட பெண்ணின் உடலையும், அவள் மீது தைத்திருந்த அம்பையும் பார்த்த ராஜவர்மனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. 


வேடனே, நீ வேறு விலங்குக்கு குறி வைத்து தவறுதலாக இந்தப் பெண் மீது பட்டிருக்கலாம் அல்லவா? எனக் கேட்டான். ஆனால், அப்போது தானும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்ததாக வேடன் சாதித்தான். வேடனின் வார்த்தைகளை நம்பாத மன்னன், அவனை நாடு கடத்த உத்தரவிட்டான். 


இந்த சம்பவம் நடந்து இரு நாட்களுக்குப் பின், வெளியூர் சென்றிருந்த முதலமைச்சர் ராஜவர்மனைச் சந்தித்தார். அப்போது நடந்த சம்பவத்தைப் பற்றி அவரிடம் விவாதித்தான். அந்தப் பெண்ணின் மீது தைத்த அம்பினைப் பார்த்த முதலமைச்சர், அரசே, இந்த அம்பினை கவனித்தீர்களா துருப்பிடித்திருக்கிறது. வேடர்கள் துருப்பிடித்த அம்பைப் பயன்படுத்த மாட்டார்கள். அந்தப் பெண் உறங்கிய மரத்தின் மீது எப்போதோ இந்த அம்பு சிக்கியிருக்கிறது. அன்று அந்த அம்பு தற்செயலாக அந்தப் பெண் மீது விழுந்திருக்கலாம். வேடன் குற்றமற்றவன் என்றே தோன்றுகிறது என்றார். 


இதைக் கேட்டுப் பதறிய மன்னன், தவறான தீர்ப்பை வழங்கியதால் குற்ற உணர்வில் துடிதுடித்து இறந்தான். 


நீதி :

எப்பொழுதும் நேர்மையாக செயல்பட வேண்டும்.


இன்றைய செய்திகள்


19.04. 2023


✨இன்று மும்பையின் பாந்த்ரா-குர்லா வளாகத்தில் (பிகேசி) இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்பட்டது.


✨தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக மாமல்லபுரத்தில் சர்ஃபிங் போட்டி நடைபெறவுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


✨ குழந்தைகளின் கல்வி உரிமைக்காக யார் காலில் விழுந்தாவது படிக்க வைக்கிறேன் என்று பேசிய திருவள்ளூர் மாவட்ட பென்னாலூர்பேட்டை பயிற்சி S.I பரமசிவம் அவர்களை வாழ்த்துகிறேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


✨தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 107 டிகிரி ஃபாரன்ஹிட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு.


✨இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 280 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.


Today's Headlines


✨India's first Apple Store opened today at Mumbai's Bandra-Kurla Complex (PKC).


 ✨Minister Udayanidhi Stalin has announced that for the first time in Tamil Nadu, a surfing competition will be held in Mamallapuram.


✨ Chief Minister Stalin has said that he congratulates S.I Paramasivam, coach of Tiruvallur District Bennalurpet, who said that he will beg anyone and fell on their feet to give the children education for the right of children to education.


✨Tamil Nadu's Karur Paramathi temperature raised up to 107 degrees Fahrenheit, causing people to suffer


✨The woman who fainted due to heatstroke. Praise the traffic policeman who helped!


✨Ireland lost the first Test against Sri Lanka by an inning and 280 runs

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.04.2023 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.04.2023 - School Morning Prayer Activities...

 

 திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: வெஃகாமை


குறள் : 177

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்

மாண்டற் கரிதாம் பயன்.


பொருள்:

பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது


பழமொழி :

Try try again you will succeed at last


அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. தனக்கு தலைவன் இல்லா விட்டாலும் வரிசையாக சென்று தன் பணியைச் செய்யும் எறும்பு போல் இருப்பேன். 


2. ஆசிரியர் இருந்தாலும் இல்லாவிடடாலும் என் ஒழுக்கம் காத்துக் கொள்வேன்.


பொன்மொழி :


தன் பிள்ளைகளுக்கு, பிறர் மீது அன்பு செலுத்த கற்றுக் கொடுப்பதன் மூலம் தாய், தன் கடமையை செய்து முடிக்கிறாள்.


பொது அறிவு :


1. கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது எப்போது,? 


 1956 ஆம் வருடம் நவம்பர் 1ஆம் தேதி . 


 2. வங்கப் பிரிவினை எப்போது ஏற்பட்டது ?


1905 ஆம் வருடம்.


English words & meanings :


 quickeners – to make the process fast. verb. ஒரு செயலை துரிதப் படுத்தல். வினைச் சொல்


ஆரோக்ய வாழ்வு :


சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மாவுச்சத்து முதல் குளுக்கோஸ் முறிவு விகிதத்தை குறைக்கும் கலவைகள் கறிவேப்பிலையில் உள்ளன. இதனால், இரத்தத்தில் சேரும் குளுக்கோஸின் அளவை இது கட்டுப்படுத்தும். எனவே, நீரிழிவு நோயாளிகள் கறிவேப்பிலையை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.


கணினி யுகம்


ஏப்ரல் 18


ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்  அவர்களின் நினைவுநாள்


ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein, மார்ச் 14, 1879 – ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல் புள்ளியியற் எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். குவாண்டம் எந்திரவியல்,சார்புக் கோட்பாடு இரண்டும் நவீன விஞ்ஞானத்தின் இரு தூண்களாக கருதப்படுகிறது.ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.


நீதிக்கதை


கதை :


ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது. அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப்பட்டது. நடக்கவும் சிரமப்பட்டது. ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது. 




எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார். கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டார். 




கழுதை அப்படியே புதைந்து போகட்டும் என்று எல்லோருமாகச் சேர்ந்து மண்வெட்டி கொண்டு வந்து அருகிலிருந்த மண்ணை வெட்டிக் கிணற்றுக்குள் தள்ளினர். ஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைக் கண்டு திகைத்த கழுதை பின்பு சுதாரித்துக் கொண்டது. 




தனக்கு நேரும் துன்பத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் பயனில்லை. ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என நினைத்தது. தன் மீது விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது. 




மேலே இருந்தவர்களும் மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தனர். தப்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளே பிரதானமாக இருந்ததால் கழுதையும் வேகமாக மண்ணை உதறி விட்டபடி மேலே ஏறி வந்துவிட்டது. 




தொழிலாளியும் கழுதையின் விடாமுயற்சியில் வியந்து மனமிறங்கி தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தான். மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம். அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம். 


நீதி :

தம்மை நோக்கி அளவுக் கடந்த பிரச்சனைகள் வந்தாலும் அதனை கடந்து முன்வர வேண்டும்.



இன்றைய செய்திகள்


18.04. 2023



* "ஓராண்டுக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்படும்" என்று கூட்டுறவுத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


* முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் மறு சீரமைப்பு செய்யப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.


* தொழிற்சாலைகள் உள்ளிட்ட உயர் அழுத்த பிரிவு நுகர்வோருக்கு பசுமை மின்சாரம் விற்பனை செய்ய மின் வாரியம் முடிவு செய்துள்ளது.


* தமிழகத்தில் 2022-ம் ஆண்டில் 2,532 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


* மருந்து தயாரிப்பு தொடர்பாக இந்தியாவின் தர விதிமுறைகள் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படும் விதிகளுக்கு நிகரானதாக இருக்க வேண்டும் என்று நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.


* தனியார் நிறுவன லேண்டர் 25-ம் தேதி நிலவில் தரையிறங்கும்.


* சீனா - ரஷ்யா இடையேயான உறவு மேம்பட்டு வருவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.


* நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் இந்தியாவுக்கு 5 தங்கப் பதக்கங்களை வென்று தந்துள்ளார்.


* மாண்டேகார்லா டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரர் ரூப்லெவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


Today's Headlines


* "Toilets will be provided in all the ration shops within one year," Cooperative Department Secretary J. Radhakrishnan said.


 * Social Welfare and Women's Rights Minister Geeta Jeevan has announced that the Chief Minister's Girl Child Protection Scheme will be revamped.


* Electricity Board has decided to sell green electricity to high voltage consumers including industries.


 * In Tamil Nadu, 2,532 child marriages have been stopped in 2022, according to the Social Welfare and Women's Rights Department's policy brief.


*  The Niti Aayog has said that India's quality norms for drug manufacturing should be at par with international norms.


* A private lander will land on the moon on the 25th.


 * Russian President Putin has said that the relationship between China and Russia is improving.


 * Actor Madhavan's son Vedant has won 5 gold medals for India in swimming competitions.


 * Russian player Rublev has won the Monte Carlo tennis tournament.

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...