கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Government School லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Government School லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அரசுப் பள்ளிகளில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...



 அரசுப் பள்ளிகளில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...


Benifits of studying in Tamilnadu Government Schools


அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி மற்றும் பொருட்கள், வேலைவாய்ப்பில் முன்னுரிமை, மருத்துவம், பொறியியல் மற்றும் வேளாண்மை படிக்க 7.5 சதவீத ஒதுக்கீடு போன்ற சலுகை இருப்பதால் பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.


கிடைக்கும் நன்மைகள்!


1. அரசு மருத்துவ கல்லூரிகளில் ஒதுக்கீடு


2. தொழில்முறை படிப்புகளில் ஒதுக்கீடு


3. உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை


4. வழக்கமான சலுகைகள்/ விலையில்லா பொருட்கள்


5. தமிழ்‌ வழியில்‌ கல்வி பயிலும்‌ மாணவர்களுக்கு அரசுப்‌ பணியில்‌ 20 சதவீதம்‌ முன்னுரிமை


இந்த சலுகைகளை விரிவாக பார்ப்போம்:



1. அரசு மருத்துவ கல்லூரிகளில் இட ஒதுக்கீடு 


மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான தகுதித் தேர்வு - நீட் - கட்டாயமாக்கப்பட்டுவிட்ட நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து 2020ஆம் ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் ஒன்றை இயற்றியது. 


அதன்படி, 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிக்கூடங்களில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ் ஆகிய படிப்புகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும். தமிழ்நாடு அரசு பின்பற்றிவரும் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்குள், ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் இது செயல்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.


ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், ஆரம்ப, நடுநிலை, மேல்நிலை பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிக்கூடங்கள் அரசுப் பள்ளிக்கூடங்களாகக் கருதப்படும். 


பின்தங்கியவர்களாக இருந்து, கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழே தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்புவரை படித்தவர்களும் அரசுப் பள்ளியில் படித்தவர்களாகக் கருதப்படுவார்கள்.


இந்த இட ஒதுக்கீடு, அரசு மருத்துவக் கல்லூரிகள் தவிர, சுயநிதிக் கல்லூரிகளில் அரசுப் பிரிவுக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கும் பொருந்தும். இந்த இட ஒதுக்கீடு தவிர, பொதுவான இடங்களுக்கும் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் போட்டியிடலாம் என்றும் இந்த சட்டம் தெரிவிக்கிறது.


7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டுனால், 700-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


தகுதி: 


🔹 அரசுப்பள்ளி மாணவராக, 6-12 வரை படிப்பு அல்லது RTE முறையில் 1-8 வகுப்புகள் தனியார் பள்ளியில் படிப்பு. பின்னர் 9-12 வகுப்புகள் அரசுப்பள்ளிகளில் படிப்பு.


(அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்றவர்களுக்கு தற்போதைய நிலையில் ஒதுக்கீடு இல்லை)


🔹12ஆம் வகுப்பில் Physics, Chemistry மற்றும் Biology/ Botany/ Zoology/ Biotechnology பாடங்களில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி


🔹 நீட் தேர்வில் தேர்ச்சி (145-300 மதிப்பெண் எடுத்தால் கூட போதும்)


🔹 அரசுப்பள்ளியில் படித்தற்கான சான்றிதழுடன், மருத்துவக்கல்வி சேர்க்கை/கலந்தாய்வுக்கு விண்ணப்பம்


2. அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தொழில்முறை படிப்புகளில் (Professional courses) ஒதுக்கீடு


தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி 2020 ஆண்டு தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதனால் சுமார் 400 மாணவர்கள் வரை பயனடைந்தனர்.


இதேபோல பொறியியல், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. 


இதையடுத்து, தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அளவை ஆய்வுசெய்து பரிந்துரை வழங்குவற்காக ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஓர் குழுவை தமிழக அரசு கடந்த 2021, ஜூன் 15-ம் தேதி அமைத்தது.


இந்தக் குழு சமர்பித்த அறிக்கையில், தொழில்நுட்பப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதத்துக்கு குறையாமல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. அதன் அடிப்படையில் பொறியியல், வேளாண்மை, சட்டம், கால்நடை மற்றும் மீன்வளம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா, 2021, ஜூன் 26-ம் தேதி தமிழகசட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு கிடைத்தது.


இதுகுறித்து உயர்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:


தொழிற்கல்வி படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2 முதல் 4 சதவீதம் வரையே இருந்தது. இதை சரிசெய்யவே சிறப்பு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு அரசு ஒதுக்கீட்டில் 1.9 லட்சம் இடங்கள் வரை இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் படிப்புகளில் சுமார் 14,250 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.


1,253 இடங்கள்


குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக வளாக மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 8,840 இடங்களில் 663 இடங்களும் அரசு மற்றும் உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 7,860 இடங்களில் 590 இடங்களும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். கடந்த ஆண்டு அண்ணா பல்கலை.யில் 0.83 சதவீதமும், அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் 7.4 சதவீதமும் சேர்க்கை இருந்தது கவனிக்கத்தக்கது.


இதேபோல, கால்நடை மருத்துவப் படிப்புகளில் மொத்தமுள்ள 580 இடங்களில் 44 இடங்களும் வேளாண் இளநிலை படிப்புகளில் உள்ள 4 ஆயிரம் இடங்களில் 300 இடங்கள் வரையும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும்.


இதுதவிர இளநிலை மீன்வள பட்டப் படிப்புகளில் மொத்தமுள்ள 140-ல் 10 இடங்கள் ஒதுக்கப்படும். 


மேலும், சட்டப் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டில் 1,651 இடங்கள் உள்ளன. அதில் 7.5 சதவீத ஒதுக்கீடு மூலம் 124 இடங்கள் வரை மாணவர்களுக்கு கிடைக்கும். அதன்படி, தொழிற்கல்வி படிப்புகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 15 ஆயிரம் இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்ந்து பயன்பெறுவர்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.


3. கல்லூரியில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை.


அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வகுப்பு வரை படித்த மாணவிகள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியை தொடர்ந்தால் அந்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் ஏற்கனவே இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்/ புதுமைப்பெண் திட்டம் என மாற்றிய அமைக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான அறிவிப்பைத் தமிழ்நாடு நிதி அமைச்சர் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார்.


இந்தத் திட்டத்தின் கீழ் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியான பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இந்த உதவித் தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


மேலும், இந்த ரூ.1000 ஊக்கத்தொகை ஒவ்வொரு மாதமும் 7ஆம் தேதி ஒவ்வொரு மாணவிகளின் வங்கிக் கணக்கிற்கும் நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மாணவிகள் ஏதேனும் கல்வி உதவித்தொகை வாங்கிக் கொண்டிருந்தாலும் இந்த ரூ.1000 உதவித்தொகையை பெற்றுக்கொள்ளலாம்.


கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்கிட ரூ. 698 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சென்ற வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.


4. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவர்களுக்கு வழங்கப்பெறும் நலத்திட்டங்கள்



1. சீருடைகள் - 4 (1 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை)


2. இடை நிற்றலைக் குறைப்பதற்கான சிறப்பு ஊக்கத்தொகை


3. மடிக்கணினி (12 வகுப்பு)


4. காலணிகள் (1 முதல் 10)


5. புத்தகப்பை (1 முதல் 12 வரை)


6. கணித உபகரணப்பெட்டி (6 முதல் 10 வரை)


7. வண்ணப் பென்சில்கள் (3 முதல் 5 வரை)


8. வண்ணக் கிரையான்கள் (1 முதல் 2 வரை)


9. நிலவரைபடநூல் (6 முதல் 10 வரை)


10. நோட்டுப்புத்தகங்கள் (1 முதல் 10 வரை)


11. பாடநூல்கள் (1 முதல் 12 வரை)


12. மிதிவண்டி (11)


13. பேருந்துப் பயண அட்டை (1 முதல் 12 வரை)


14. சத்துணவுத் திட்டம் (1 முதல் 8 வரை) + காலை சிற்றுண்டி (1 முதல் 5 வரை) 


15. வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான நிதி உதவி (1 முதல் 12 வரை)


16. கம்பளிச் சட்டை (குளிர் நிறைந்த பகுதிகளில்) 1 முதல் 8 வரை


17. சதுரங்க விளையாட்டு (2 முதல் 12 வரை)


18. அரசுப்பள்ளிகளில் 8ஆம் வகுப்பு பயிலும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்டம் மூலம் மாதம் ரூபாய் 1000 என நான்கு ஆண்டுகளுக்கு 48 ஆயிரம் ரூபாயும், 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு மூலம் வருடம் ரூபாய் ஆயிரம் என நான்காண்டுகளுக்கு நான்காயிரம் ரூபாயும், பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என் டி எஸ் இ தேர்வு மூலம் மாதம் ரூபாய் 1250 என பட்டப்படிப்பு பயலும் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.


19. அரசுப் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியின / மிகவும் பிற்படுத்தப்பட்ட / பிற்படுத்தப்பட்ட வகுப்பு பிரிவு பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்குவிப்பு தொகை வழங்கப்படுகிறது.


5. அரசுப்‌ பள்ளியில்‌ 1 முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை தமிழ்‌ வழியில்‌ கல்வி பயிலும்‌ மாணவர்களுக்கு அரசுப்‌ பணியில்‌ 20 சதவீதம்‌ முன்னுரிமை


10, 12-ம் வகுப்புகளில் தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசுப் பணியில் 20% இட ஒதுக்கீடு வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.


முன்பு தமிழ் வழியில் பட்டப்படிப்பைப் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பட்டப் படிப்பு மட்டுமின்றி 10, 12-ம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.


தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன், கல்லூரியில் தமிழ்வழியில் படித்ததாக சிலர் போலியான சான்றிதழ்களைச் சமர்ப்பித்து, இட ஒதுக்கீடு பெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.


இதைத் தொடர்ந்து 6-ம் வகுப்பில் இருந்து தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் எனவும் 10, 12-ம் வகுப்புச் சான்றிதழ்களில் தமிழ்வழிக் கல்வியில் படித்திருப்பது குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


அதைக் கொண்டே டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, எம்ஆர்பி உள்ளிட்ட தமிழக அரசு நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய சலுகை


இந்த ஆண்டு முதல், தமிழ்நாட்டில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. 


ஆகவே உங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து அவர்களது கனவுகளை நனவாக்குங்கள்!


அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of Enrolling Children in Government Schools)...



  அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of Enrolling Children in Government Schools)...


அரசுப்பள்ளி  நம்பள்ளி....

சேர்த்திடுங்கள் நம் குழந்தைகளை அங்கே...


அரசுப் பள்ளிகளில் 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது 

              - அரசு அறிவிப்பு.


✳️LKG முதல்  8ஆம் வகுப்பு வரை .

        

✳️தெரிந்தவர்கள் புதுப்பித்துக்கொள்க..


✳️ தெரியாதவர்கள் தெரிந்துகொள்க..


✳️அரசுப் பள்ளியில் பயின்றால்...


✳️கட்டணமில்லா கல்வி...


✳️ ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியில் 

20% முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.


✳️ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு உயர் கல்வி (மருத்துவம், பொறியியல், வேளாண்மை , சித்த மருத்துவம் , ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம், கலை & அறிவியல் உள்ளிட்ட படிப்புகள்) பயில 

7.5 % முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.


✳️பெண் கல்வி இடைநிற்றலை தவிர்க்க அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவியர்களுக்கு உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1,000 வீதம் படிப்பு முடியும் வரை வழங்கப்படும்.


✳️6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு இலவச கராத்தே பயிற்சி .


✳️மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500, ஆறாம் வகுப்பிற்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது.


✳️ நலிவடைந்த பிரிவைச்சேர்ந்த மாணவிகளுக்கு மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500 , 

ஆறாம் வகுப்பிற்கு ரூ.1,000, 

ஏழு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு ரூ 1,500 வழங்கப்படுகிறது.


✳️விலையில்லா புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கும்...


✳️விலையில்லா  குறிப்பேடுகள்- 3 பருவம்


✳️விலையில்லா சீருடைகள்- 4 செட்.


✳️விலையில்லா புத்தகப்பை.


✳️விலையில்லா காலணிகள்.


✳️வண்ண பென்சில்கள்.


✳️கணித உபகரணப் பெட்டி.


✳️புவியியல்  வரைபட நூல்.


✳️தினந்தோறும்  முட்டையுடன் சத்துணவு.


✳️இலவச பேருந்து பயண அட்டை...


✳️ போட்டிகளில் வெற்றி பெறும் அரசுப்பள்ளி மாணவ மாணவியர் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்...


✳️ அரசுப்பள்ளி மாணவ மாணவியர் வாசிப்பு திறன் வளர்க்க தேன்சிட்டு மாத இதழ்...


✳️ விலையில்லா மிதிவண்டி...


✳️ விலையில்லா மடிக்கணினி...


இன்னும் நன்மைகள் ஏராளம் ஏராளம்....


"அரசுப்பள்ளி வறுமையின் அடையாளமல்ல, பெருமையின் அடையாளம்"


அன்பு பெற்றோர்களே, 

தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்ப்பீர்... அவர்களின் வளமான எதிர்காலத்திற்கு அடித்தளமிடுவீர்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


ஆந்திராவில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணி உள்ளிட்ட பிற பணிகளுக்கு பயன்படுத்த தடை (Prohibition of using Government School Teachers for other work including election work in Andhra)...


 ஆந்திராவில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணி உள்ளிட்ட பிற பணிகளுக்கு பயன்படுத்த தடை (Prohibition of using Government School Teachers for other work including election work in Andhra)...


அமராவதி,


ஆந்திர பிரதேசத்தில் பள்ளிக் கல்வியின் தரம் குறைவாக உள்ளதால், இனி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கு வெளியே இதர பணிகள் அளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள், மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு இதர பணிகளுக்கு ஆசியர்களை அனுப்ப தடை ஆந்திர பிரதேச அரசு தடை விதித்துள்ளது.


இதற்காக ஆந்திர பிரதேச இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களின் தனி உதவியாளர்கள் பணியில் நியமிக்கப்பட்டிருந்த ஆசியர்கள் அனைவரையும் பள்ளிக் கல்வித் துறை திரும்பப் பெற்றுள்ளது.


பள்ளிக் கல்வி அல்லாத பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கங்கள் வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் 3ஆம் வகுப்பு மாணவர்களில் 22.4 சதவீத்தினர் மட்டுமே பாட நூலை படிக்கும் திறன் கொண்டுள்ளதாக கல்வி தரம் பற்றிய வருடாந்தர ஆய்வறிக்கை கூறியுள்ளது.








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



தமிழ்நாடு பொறியியல் படிப்பு சேர்க்கை (TNEA) கலந்தாய்வு தரவரிசை பட்டியல் - விழுப்புரம் அரசுப் பள்ளி மாணவி பிருந்தா முழு மதிப்பெண் (200க்கு 200 கட்-ஆஃப்) பெற்று அசத்தல் சாதனை (Engineering Admissions Counselling Rank List - Villupuram Govt School student Brinda scored full marks (cut-off 200 out of 200))...



தமிழ்நாடு பொறியியல் படிப்பு சேர்க்கை (TNEA) கலந்தாய்வு தரவரிசை பட்டியல் - விழுப்புரம் அரசுப் பள்ளி மாணவி பிருந்தா முழு மதிப்பெண் (200க்கு 200 கட்-ஆஃப்) பெற்று அசத்தல் சாதனை (Engineering Admissions Counselling Rank List - Villupuram Govt School student Brinda scored full marks (cut-off 200 out of 200))...


தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையில் (TNEA) 200/200 கட்-ஆஃப் மதிப்பெண்களைப் பெற்ற ஒரே அரசுப் பள்ளி மாணவி 16 வயதான பி.பிருந்தா.


இது சிறிய சாதனையல்ல! 

இவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், இது தமிழ்நாட்டின் கல்விக் குறியீட்டில் மிக பின்தங்கிய சாதனையாளர்களில் ஒருவராகத் திகழ்கிறது இம்மாவட்டம். இந்த வெற்றி பிருந்தாவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் அவரது ஆசிரியர்களுக்கும் மிகப்பெரிய சாதனை. 


2016ஆம் ஆண்டு சாலை விபத்தில் தந்தையை இழந்த பிருந்தா, வளவனூரில் உள்ள எஸ்.ஆர். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி. கடந்த அக்டோபரில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பிரகாசமான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் ‘எலைட் ஸ்கூல் புரோகிராம்’க்கு தேர்வு செய்யப்பட்டார். 


அப்போதிருந்து, பிருந்தாவும் அவரது ஆசிரியர்களும் அவரது செயல்திறனை மேம்படுத்த கடுமையாக உழைத்தனர். “எலைட் பள்ளியில் உள்ள எனது ஆசிரியர்கள் எனக்கு உதவ 24 மணி நேரமும் தயாராக இருப்பதால், எனது வெற்றிக்கான பெருமையை அவர்களுக்கு வழங்குவேன். 


அரசு பள்ளி ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்துவதில்லை என்பது தவறான கருத்து. எலைட் ஸ்கூல் திட்டம் என்னைப் போன்ற மாணவர்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக நான் உணர்கிறேன், ”என்று பிருந்தா கூறினார். 


"என் தந்தை இன்று உயிருடன் இருந்திருந்தால், அவர் என்னைப் பற்றி பெருமைப்படுவார். நானும் என் இரண்டு சகோதரிகளும் நன்றாகப் படிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். 


அரசுப் பள்ளி மாணவர் இடஒதுக்கீட்டின் கீழ் தனக்கு சீட் கிடைத்ததாக இப்போது கிண்டல்களுக்கு பயப்பட வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார். பிருந்தாவின் சாதனை பள்ளிக் கல்வித் துறைக்கு ஒரு பாடம் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர். 


"எங்கள் அரசுப் பள்ளி மாணவர்களிடையே திறமைக்கு பஞ்சமில்லை; அவர்களுக்கு நல்ல உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். பள்ளிக் கல்வித் துறை அனைத்து மாவட்டங்களிலும் எலைட் பள்ளித் திட்டத்தைத் தொடங்க வேண்டும்” என்று கல்வியாளர்கள் கூறினர்.


16-year-old B Brindha is the only government school student to score 200/200 cut-off mark in the Tamil Nadu Engineering Admission (TNEA), and this is no minor feat! Hailing from Villupuram district, which was ranked as one of TN’s worst performers in education index, this success means a lot for Brindha, her family, and her teachers.


Brindha, who lost her father to a road accident in 2016, is a student of SR Government Girls Higher Secondary School, Valavanur. She was selected for the ‘Elite school programme’, which is run by the district administration to offer special coaching for bright government school students hailing from poor families, in October last.



Since then, Brindha and her teachers worked hard to enhance her performance. “I would give the credit for my success to my teachers in the elite school as they were available round the clock to help me. It’s a wrong notion that government school teachers don’t teach properly. I feel the elite school programme is a blessing for students like me,” Brindha said.


“If my father was al ive today, he would be proud of me. He wanted me and my two sisters to be well-educated.” She also said she now would not have to fear taunts that she got a seat under the government school students reservation.


Academicians feel Brindha’s achievement is a lesson for school education department. “There is no dearth of talent among our government school students; we just need to support them by providing good infrastructure. School education department should start Elite school programme in all districts,” said K Sundareswar, an academician.



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...




அரசுப்பள்ளிகள் 2 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்படும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உறுதி...



 தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை அடுத்த கள்ளபெரம்பூர் செங்கழுநீர் ஏரியை  நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: 

9வது முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவு செய்வார். 

பள்ளிகளில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி நிரவல் செய்யப்பட்ட பின்னர் தான் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும். 

அரசுப்பள்ளிகள் இன்னும் 2 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்படும். அரசு பள்ளிகளில் சேர சிபாரிசு வரும் நிலையும் ஏற்படும். 

அரசு பள்ளிகளில் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலை கற்றுத்தர முயற்சிக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.


அரசுப் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்?- ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு...



 அரசுப் பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் கழக கட்டணம் தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.


அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும்போது விண்ணப்ப கட்டணமாக 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை வசூலிக்கலாம். ஆனால் செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை சேரும் மாணவர்களுக்கு ரூ.100 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முரளிதரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.


இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக பள்ளிக் கல்வி ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இதை பதிவுசெய்துகொண்ட நீதிபதி, அரசுப்பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் கழக கட்டணம் தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆய்வு செய்த அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.


மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்: மகள்களை அரசுப் பள்ளியில் சேர்த்த ஐஆர்எஸ் அதிகாரி ஷெரின்...

 


மாற்றம் நம்மில் இருந்தே தொடங்க வேண்டும் என்கிறார், தன் மகள்களை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ள ஐஆர்எஸ் அதிகாரி ஷெரின் சோமிதரன். அரசு ஊழியர்கள், சமுதாயத்தில் உயர் நிலையில் இருப்பவர்கள், அதிகாரமிக்க பதவியில் இருப்பவர்கள் தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுக்கிறா.


மதுரை அருகே திருப்பாலை என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ஷெரின் சோமிதரன். ஐஆர்எஸ் அதிகாரியான இவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்திய வருவாய்த் துறையில் ஜிஎஸ்டி இணை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். அவர் தனது குழந்தைகளான ஆதிரை, ரெனி ஆகிய இருவரையும் அரும்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்த்துள்ளார். ஆதிரை இரண்டாம் வகுப்பிலும் ரெனி எல்கேஜி வகுப்பிலும் சேர்ந்துள்ளனர்.


மகள்களை அரசுப் பள்ளியில் சேர்த்தது ஏன் என்பது குறித்து ஷெரின் ஐஆர்எஸ் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் விரிவாகப் பேசினார்.


''நான் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்ததால் அத்தகைய பள்ளிச் சூழலை உணர்ந்திருக்கிறேன். அது என் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்பினேன். பொதுவாகவே நானும் ஆவணப்பட இயக்குநராகிய கணவரும் மாற்றுச் சிந்தனை கொண்டவர்கள்தான். இருவரும் இயற்கை விவசாயப் பண்ணையில்தான் எந்தவித ஆடம்பரச் செலவும் இல்லாமல் கழிவுகளை உருவாக்காமல் திருமணம் செய்துகொண்டோம். நம்மாழ்வாருடன் இணைந்து பயணித்திருக்கிறோம். இயற்கை, சூழலியல், மண் சார்ந்த விருப்பங்கள் உண்டு.


மகள்கள் பிறந்ததில் இருந்தே அவர்களை அரசுப் பள்ளியில் சேர்ப்பது குறித்து யோசித்தோம். பாடங்கள், மதிப்பெண்கள், வேலை சார்ந்து மட்டுமே அவர்களை இயங்க வைக்காமல் வாழ்க்கையின் மீது தன்னம்பிக்கையை, பிடிப்பை ஏற்படுத்த ஆசைப்பட்டோம்.


அதேபோலப் பல தரப்பட்ட மக்களுடன் அவர்கள் பழக வேண்டும் என்று விரும்பினோம். கல்வி வணிகமயமாகி வரும் சூழலில், பள்ளி என்பது அனைத்துத் தரப்பு மக்களுக்குமானதாக இருக்க வேண்டும். அதற்கு அரசுப்பள்ளி சரியானதாக இருக்கும் என்று முடிவு செய்தோம். மற்ற பள்ளிகளைக் காட்டிலும் அரசுப் பள்ளி மாணவர்கள், எந்த ஒரு சூழலையும் தைரியத்துடனும் நேர்மறைச் சிந்தனையுடனும் அணுகுவார்கள்'' என்கிறார் ஷெரின்.


அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்துத் தொடர்ந்து பொதுச் சமூகத்தில் ஐயங்கள் எழுப்பப்படுவது குறித்துக் கேட்டபோது, ''ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், சமுதாயத்தில் உயர் நிலையில் இருப்பவர்கள், அதிகாரமிக்க பதவியில் இருப்பவர்கள் தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அதன்மூலம் இயல்பாகவே பள்ளிகளின் உள் கட்டமைப்பு, வசதிகள், கல்வித் தரம் குறித்த கேள்விகள் எழுப்பப்படும். அவற்றை அமைப்பதற்கான கட்டாயம் அரசுக்கு ஏற்படும்.


இதன் மூலம் கிராமங்களில் உள்ள ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் அடுத்தகட்டத்துக்கு வளர்ச்சி அடையும். எனினும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் சிறப்பாகச் செயல்படும் அரசுப் பள்ளிகளைத் தேடி அங்கு சேர்க்க பல்வேறு வாய்ப்புகள் உள்ளன'' என்று ஷெரின் கூறுகிறார்.


அரசுப் பள்ளியில் மகள்களைச் சேர்த்தது குறித்து சக அலுவலக நண்பர்கள் கருத்து என்னவாக இருந்தது என்று கேட்டதற்கு, ''பெரும்பாலானோர் தைரியமான, வரவேற்கத்தகுந்த, முன்மாதிரியான முடிவு என்றுதான் கூறினர். அரசுப் பள்ளிகள் குறித்த பிம்பம் மாறியதன் அடையாளமாகத்தான் இதை நினைக்கிறேன். அதேவேளையில் சில ஆண்டுகளுக்கு முன்னால் இத்தகைய நிலை இல்லை'' என்று புன்னகைக்கிறார்.


பெருந்தொற்றுக் காலகட்டத்தில் பள்ளிகள் ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள சூழலில் அரசுப் பள்ளியில் சேர்த்தது குறித்தும் பேசுகிறார் ஷெரின். ''கற்றல் என்பது வாழ்க்கை முழுமைக்குமான நிகழ்வு. குழந்தைகள் பள்ளியில் மட்டுமே கற்பதில்லை. அது ஒரு பகுதிதான். இந்த ஊரடங்கு காலகட்டத்தில் என்னென்ன முறைகளில் அவர்களுக்குப் படிக்க வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த வகையில் படிக்கட்டும். இதனால் அவர்கள் படிப்பதற்கான வேகம் வேண்டுமானால் குறைந்திருக்கலாம். அதை மதிப்பெண்கள், தேர்வுகள் என்று மட்டுமே பார்க்க வேண்டியதில்லை என்பதை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


ஒவ்வொரு குழந்தைக்கும் எந்த வகையிலாவது கற்றல் நிகழ்ந்துகொண்டே இருக்கும் என்று நம்புகிறேன். படிப்பு மட்டுமல்லாமல், இயற்கை விவசாயம், நெசவு, தையல், தச்சு வேலை என கலைகள் சார்ந்தும் மகள்களை வளர்த்தெடுக்க ஆசை. அரசுப் பள்ளிகளில் இத்தகைய ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.


அரசு அதிகாரிகள் மட்டுமல்லாமல் அதிகாரமிக்க பதவியில் இருப்போர், தொழிலதிபர்கள் என சமுதாயத்தில் உயர் நிலையில் இருப்பவர்கள், தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்தால் இவை அனைத்தும் சாத்தியமாகும்'' என்று விடைகொடுக்கிறார் ஷெரின் ஐஆர்எஸ்.


க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in


நன்றி: இந்து தமிழ் திசை நாளிதழ்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...