கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நீட் 2023 தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழ்நாடு மாணவர் முதலிடம் (NEET 2023 Result Released - Tamilnadu Student Top)...

 நீட் 2023 தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழ்நாடு மாணவர் முதலிடம் (NEET 2023 Result Released - Tamilnadu Student Top)...


நாடு முழுவதும் கடந்த மே 7ஆம் தேதி 499 நகரங்களில் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.


நீட் தேர்வு முடிவுகளை www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.



>>> Press Release for Final NTA Score for NEET (UG) - 2023...


இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நீட் தேர்வு முடிவுகளை neet.nta.nic.in, ntaresults.nic.in ஆகிய இணையதளங்களில் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 78,693 மாணவர்கள் நீட் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன், ஆந்திராவை சேர்ந்த போரா வருண் சக்ரவர்த்தி இருவரும் 99.9% மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். முதல் பத்து இடங்களில் நால்வர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.


இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக நாடு முழுவதும் கடந்த மே மாதம் 7-ந்தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபஞ்சன் முதலிடம் பிடித்துள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த போரா வருண் சக்கரவர்த்தி என்பவர் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் 4 பேர் தமிழ்நாட்டினர்  ஆவர்.


இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது 


தேசிய அளவில் 11.45 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி


தமிழ்நாடு மாணவர்கள் 78 ஆயிரத்து 693 பேர் தேர்வு


 விழுப்புரம் மாவட்டம் மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் திரு.ஜெகதீஷ் அவர்களின் புதல்வன்  பிரபஞ்சன் அவர்கள் இன்று வெளிவந்த NEET தேர்வு  முடிவில் 720/720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார்.


 இவர் சொந்த ஊர் மேல்மலையனூர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தற்போது வசித்து வருகிறார்...



நாடு முழுவதும் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் நீட் தேர்வு எழுதினர். இதில் அதிக அளவில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் உத்தர பிரதேசம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து மராட்டிய மாநிலம் 2-வது இடத்திலும், ராஜஸ்தான் 3-வது இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1.44 லட்சம் பேரில் 78,693 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


கனவு ஆசிரியர் நிலை - 2 தேர்வு முடிவு வெளியீடு - அறிந்து கொள்ளும் வழிமுறை (Kanavu Aasiriyar (Dream Teacher) Level – 2 Exam Result Release – How To Know)...



 கனவு ஆசிரியர் நிலை - 2 தேர்வு முடிவு வெளியீடு - அறிந்து கொள்ளும் வழிமுறை (Kanavu Aasiriyar (Dream Teacher) Level – 2 Exam Result Release – How To Know)...


அன்புள்ள ஆசிரியருக்கு,

 வாழ்த்துகள் ! கனவு ஆசிரியர் 2023 இன் 3ஆம் நிலைக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தங்களின் பகுதி வாரியான மதிப்பெண் விவரங்கள் 15-Jun-23 அன்று EMIS போர்ட்டலில் கிடைக்கும். - TNSED



தாங்கள் கனவு ஆசிரியர் நிலை 2 தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் இது போன்ற குறுஞ்செய்தி தாங்கள் பதிவு செய்துள்ள அலைபேசி எண்ணுக்கு வரப்பெற்றிருக்கும். 


மேலும் நாளை மறுநாள் தாங்கள் பெற்றுள்ள மதிப்பெண் விவரங்களை EMIS வலைதளத்தில் தங்களது தனிப்பட்ட LOGINல் அறிந்துகொள்ளலாம்..






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

6-10ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 17.06.2023 அன்று குறுவளமைய (CRC) பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள் (CRC Training for Teachers Teaching Class 6-10 on 17.06.2023 – Proceedings of SCERT Director)...

 

>>> 6-10ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 17.06.2023 அன்று குறுவளமைய (CRC) பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள் (CRC Training for Teachers Teaching Class 6-10 on 17.06.2023 – Proceedings of SCERT Director)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.06.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.06.2023 - School Morning Prayer Activities...


திருக்குறள் :



பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: பயனில சொல்லாமை

குறள் : 192


பயனில பல்லார்முன் சொல்லல் நயனில

நட்டார்கண் செய்தலிற் றீது.


விளக்கம்:

ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.


பழமொழி :

அலைபாயும் மனதால் எதையும் செய்ய இயலாது. 


A rolling stone gathers no moss


இரண்டொழுக்க பண்புகள் :


1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன். 


2.  என் கண் இவ்வுலகை கண்டு கற்றுக் கொள்ள உதவும் ஒரு சன்னல். எனவே அதை நான் பாதுகாப்பேன்.


பொன்மொழி :


கல்வியே சுதந்திரத்தின் தங்கக் கதவை திறப்பதற்கான சாவியாகும். 

                                                        - ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்.


பொது அறிவு :


1. உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன?


12500.        


2.மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடு எது? 


தென்னாப்பிரிக்கா




English words & meanings :


 derail - upset தடம் புரளுதல் abbreviation - to cut short வார்த்தைகளின் சுருக்கம்


ஆரோக்ய வாழ்வு :


தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் முடிந்த அளவு 2 ல் இருந்து 3 டம்ளர் தண்ணீர் (உடலுக்கு ஏற்றப்படி) குடிப்பது நல்லதாகும்.


நீதிக்கதை


திருப்தி வேண்டும்


தெரு சுற்றிக் கொண்டிருந்த ஒரு நாய் ஒரு நாள் கசாப்பு கடைப் பக்கம் சென்றது.


ஒரு கடைக்காரன் ஏமாந்திருந்த சமயமாகப் பார்த்து அவன் கடையில் வைத்திருந்த பெரிய ஆட்டுத் தொடையைத் தூக்கி வந்து விட்டது.


"இன்று எனக்கு அதிர்ஷ்ட காலம் போலும்! பெரிய இறைச்சித் துண்டு ஒன்று கிடைத்துவிட்டது. இதை யார் கண்களிலும் படாமல் தனியான ஓரிடத்தில் வைத்துச் சாப்பிடப் போகிறேன்" என்று தன் மனத்திற்குள் எண்ணியவாறு நாய் ஓடிக் கொண்டிருந்தது.


வழியில் ஒரு சிறு ஆறு இருந்தது. ஆற்றைக் கடப்பதற்கு மரப்பாலம் ஒன்று போட்டிருந்தார்கள்.


நாய் மரப்பலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது தற்செயலாக


ஆற்று நீரைக் கவனித்தது.


ஆற்று நீரில் இறைச்சித் துண்டைக் கவ்வி இருக்கும் அதன் உருவம் பிரதிபலித்தது.


ஆற்றுக்குள் வேறொரு நாய் பெரிய இறைச்சித் துண்டு ஒன்றைக் கவ்வியவாறு நிற்பதாக நாய் நினைத்துக் கொண்டது.


அந்த நாயின் இறைச்சித் துண்டையும் பிடுங்கிக் கொண்டால் இரண்டு நாளைக்கு உணவைப் பற்றிக் கவலையே இல்லை என்று நாய் நினைத்துக் கொண்டது.


நீரில் தெரியும் நாயை மிரட்டித் துரத்த எண்ணிய நாய் வாயைத் திறந்து குரைக்கத் தொடங்கியது.


உடனே அதன் வாயிலிருந்து இறைச்சித் துண்டு ஆற்று நீரில் விழுந்து மிதந்து கொண்டே சென்று விட்டது.


உள்ளதைக் கொண்டு திருப்தி அடையாமல் பிறர் பொருளுக்காகப் பேராசை கொண்டதன் காரணமாக நாய் கிடைத்த இறைச்சித் துண்டையும்


இழந்து ஏமாற வேண்டி வந்தது.


இன்றைய செய்திகள்


13.06. 2023


*ஜூன் 15-ல் கரையை கடக்கிறது பிபோர் ஜோய் புயல்.


*ஜூன் 15ஆம் தேதி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு.


*சிறுவாணி, பில்லூர் அணைகளில் தூர் வாராததால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.


*ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தி அரசாணை வெளியீடு.


*கிரிக்கெட் வீரர் சுப்மான் கில்லுக்கு அபராதம்.


*திருத்தப்பட்ட விதிகளுடன் கோவையில் நேற்று துவங்கியது. தமிழ்நாடு பிரீமியர் லீக்(TNPL) கிரிக்கெட்.



Today's Headlines


* Pibor Joy cyclone crosses the seashore on June 15.


 *Opening of multi-specialty Hospital is scheduled for 15th June.


 *As there is no proper dredging in the dams there may be a risk of shortage of drinking water in Siruvani and Pillur dams.


 *A GO is released to increase the monthly salary of sanitation guards working in rural areas.


 *Cricketer Subman Gill was fined.


 * Tamil Nadu Premier League (TNPL) cricket started yesterday in Coimbatore with revised rules.

 

புது ஊஞ்சல் - 01-15 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ் - படிக்கலாம்! பறக்கலாம்! - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Puthu Oonjal - 01-15 June 2023 Fortnightly Magazine - Magazine for Classes 4 & 5 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...



>>> புது ஊஞ்சல் - 01-15 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ் - படிக்கலாம்! பறக்கலாம்! - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Puthu Oonjal - 01-15 June 2023 Fortnightly Magazine - Magazine for Classes 4 & 5 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தேன்சிட்டு - 01-15 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Then Chittu - 01-15 June 2023 Fortnightly Magazine - Magazine for Classes 6 to 9 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...



>>> தேன்சிட்டு - 01-15 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Then Chittu - 01-15 June 2023 Fortnightly Magazine - Magazine for Classes 6 to 9 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...




>>> தேன்சிட்டு - ஜனவரி 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - பிப்ரவரி 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - மார்ச் 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - ஏப்ரல் 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...


இன்று (12-06-2023) ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளை வரவேற்க வைக்கப்பட்டுள்ள சிறப்பு அலங்கார வளைவுகள் & தோரணங்கள் (Today (12-06-2023) schools from class VI to class XII will be opened. Special decorative arches & postures to welcome female students in Erode Govt Model Higher Secondary School)...

 இன்று (12-06-2023) ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளை வரவேற்க வைக்கப்பட்டுள்ள சிறப்பு அலங்கார வளைவுகள் & தோரணங்கள் (Today (12-06-2023) schools from class VI to class XII will be opened. Special decorative arches & postures to welcome female students in Erode Govt Model Higher Secondary School)...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...