கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு (TNSTC) 812 ஓட்டுநர், நடத்துனர்களை தேர்வு செய்ய அரசாணை (G.O.Ms.No.: 111, Dated: 21-07-2023) வெளியீடு (Government Order (G.O.Ms.No.: 111, Dated: 21-07-2023) issued for recruitment of 812 drivers and conductors for Tamil Nadu State Transport Corporation)...
கும்பகோணம் 174, சேலம் 254, கோவை 60, மதுரை 136, நெல்லை 188 என 5 கோட்டங்களில் 812 பேர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கும்பகோணம், சேலம், கோவை, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 போக்குவரத்துக் கழகங்களில் 812 டிசிசி (Driver cum Conductor) பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: கும்பகோணம் (291), சேலம் (423), கோவை (60), மதுரை (272), திருநெல்வேலி (376) ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் 1422 நடத்துநர் காலிப்பணியிடங்கள் இருப்பதாக போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர், போக்குவரத்து துறையின் மூத்த நிதி அலுவலர் ஆகியோருடன் நிதித்துறைச் செயலர் நடத்திய கூட்டத்தில், கும்பகோணம், சேலம், கோவை ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் 60 சதவீத நடத்துநர் காலிப்பணியிடங்களையும், மதுரை, திருநெல்வேலி ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் 50 சதவீத நடத்துநர் காலிப்பணியிடங்களை நிரப்பலாம் என முடிவு செய்யப்பட்டது.
அதேநேரம், ஓட்டுநர், நடத்துநர் பிரிவில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் யாராவது ஒருவர் விடுப்பு எடுத்துக் கொண்டாலும், பேருந்துகளை இயக்க முடியாத சூழல் உள்ளது. எனவே, விரைவு போக்குவரத்துக் கழகத்தில் உள்ளதைப் போல ஓட்டுநர், நடத்துநர் ஆகிய பணிகளை ஒரு சேர மேற்கொள்ளும் டிசிசி பணியாளர்களை நியமிப்பதன் மூலம் பேருந்துகளை சீராக இயக்க முடியும். ஏராளமான காலிப்பணியிடங்களை டிசிசி பணியாளர்களை தேர்வு செய்வதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களால் சமாளிக்கவும் முடியும். எனவே, இதர போக்குவரத்துக் கழகங்களிலும் டிசிசி பணியாளர்களை நியமிக்கலாம் என கடந்த ஆண்டு தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற செயலாளர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver cum conductor) பணியிடங்களுக்கான தகுதிகள்
** 10ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
** கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான தகுதியான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டுவதில் 18 மாதங்கள் அனுபவம் கண்டிப்பாக வேண்டும். அதுதவிர நடத்துனர் லைசென்ஸ் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்
** ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver cum conductor) பணியிடங்களுக்கான ஊதியமாக ரூ.17,700 முதல் ரூ.56,200 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நான்காவது சுற்றை முடித்து, 5வது சுற்றை வெற்றிகரமாக தொடங்கியது சந்திரயான் - 3 விண்கலம்(Chandrayaan-3 spacecraft completes 4th cycle and successfully begins 5th cycle)...
நான்காவது சுற்றை முடித்து, 5வது சுற்றை வெற்றிகரமாக தொடங்கியது சந்திரயான் - 3 விண்கலம்(Chandrayaan-3 spacecraft completes 4th cycle and successfully begins 5th cycle)...
பூமிக்கு அருகே 236 கி.மீ. தூரத்திலும், பூமிக்கு அப்பால் 1,27,609 கி.மீ. தூரத்திலும் சுற்றி வருகிறது.
வரும் ஆகஸ்ட் 1 முதல் புவியில் இருந்து சந்திரனின் சுற்றுவட்டப் பாதைக்கு மாற்ற உந்துவிசை அளிக்கப்பட உள்ளது.
பனீர் மற்றும் பாதாம் பவுடரின் விலையை உயர்த்தியது ஆவின் நிர்வாகம் (Aavin administration hiked the prices of paneer and badam mix - The Tamil Nadu cooperative milk producers federation limited marketing unit corporate office revision of selling price for paneer and badam mix)...
ஒரு கிலோ பனீர் ரூ.450க்கு விற்கப்பட்ட நிலையில் ரூ.550க்கு விற்பனை
பாதாம் பவுடர் 200கிராம் ரூ.100க்கு விற்கப்பட்ட நிலையில் ரூ.120க்கு விற்பனை.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
புது ஊஞ்சல் - 16-31 ஜூலை 2023 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ் - படிக்கலாம்! பறக்கலாம்! - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Puthu Oonjal - 16-31 July 2023 Fortnightly Magazine - Magazine for Classes 4 & 5 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...
மணற்கேணி எனும் புதிய செயலி பள்ளிக் கல்வித் துறையில் அறிமுகம் - 25.07.2023 இன்று வெளியீடு (A new app called Manalkeni is introduced in the school education department - 25.07.2023 Released today)...
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடங்களை காணொளி வடிவத்தில் அளிக்கும் வகையில் மணற்கேணி என்ற செயலியை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
DEO Promotion to 34 Govt High/ Hr.Sec School HMs - DSE Proceedings
34 அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...
