கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSTC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TNSTC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு (TNSTC) 812 ஓட்டுநர், நடத்துனர்களை தேர்வு செய்ய அரசாணை (G.O.Ms.No.: 111, Dated: 21-07-2023) வெளியீடு (Government Order (G.O.Ms.No.: 111, Dated: 21-07-2023) issued for recruitment of 812 drivers and conductors for Tamil Nadu State Transport Corporation)...

 


>>> தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு (TNSTC) 812 ஓட்டுநர், நடத்துனர்களை தேர்வு செய்ய அரசாணை (G.O.Ms.No.: 111, Dated: 21-07-2023) வெளியீடு (Government Order (G.O.Ms.No.: 111, Dated: 21-07-2023) issued for recruitment of 812 drivers and conductors for Tamil Nadu State Transport Corporation)...


கும்பகோணம் 174, சேலம் 254, கோவை 60, மதுரை 136, நெல்லை 188 என 5 கோட்டங்களில் 812 பேர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


கும்பகோணம், சேலம், கோவை, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 போக்குவரத்துக் கழகங்களில் 812 டிசிசி (Driver cum Conductor) பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.


இது தொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: கும்பகோணம் (291), சேலம் (423), கோவை (60), மதுரை (272), திருநெல்வேலி (376) ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் 1422 நடத்துநர் காலிப்பணியிடங்கள் இருப்பதாக போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.



இது தொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர், போக்குவரத்து துறையின் மூத்த நிதி அலுவலர் ஆகியோருடன் நிதித்துறைச் செயலர் நடத்திய கூட்டத்தில், கும்பகோணம், சேலம், கோவை ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் 60 சதவீத நடத்துநர் காலிப்பணியிடங்களையும், மதுரை, திருநெல்வேலி ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் 50 சதவீத நடத்துநர் காலிப்பணியிடங்களை நிரப்பலாம் என முடிவு செய்யப்பட்டது.


அதேநேரம், ஓட்டுநர், நடத்துநர் பிரிவில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் யாராவது ஒருவர் விடுப்பு எடுத்துக் கொண்டாலும், பேருந்துகளை இயக்க முடியாத சூழல் உள்ளது. எனவே, விரைவு போக்குவரத்துக் கழகத்தில் உள்ளதைப் போல ஓட்டுநர், நடத்துநர் ஆகிய பணிகளை ஒரு சேர மேற்கொள்ளும் டிசிசி பணியாளர்களை நியமிப்பதன் மூலம் பேருந்துகளை சீராக இயக்க முடியும். ஏராளமான காலிப்பணியிடங்களை டிசிசி பணியாளர்களை தேர்வு செய்வதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களால் சமாளிக்கவும் முடியும். எனவே, இதர போக்குவரத்துக் கழகங்களிலும் டிசிசி பணியாளர்களை நியமிக்கலாம் என கடந்த ஆண்டு தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற செயலாளர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver cum conductor) பணியிடங்களுக்கான தகுதிகள்


** 10ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


** கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான தகுதியான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டுவதில் 18 மாதங்கள் அனுபவம் கண்டிப்பாக வேண்டும். அதுதவிர நடத்துனர் லைசென்ஸ் இருக்க வேண்டும்.


சம்பள விவரம்


** ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver cum conductor) பணியிடங்களுக்கான ஊதியமாக ரூ.17,700 முதல் ரூ.56,200 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கும்பகோணம் மற்றும் திருச்சியிலிருந்து வார இறுதி நாட்களான ஜூலை 8 மற்றும் ஜூலை 9ம் தேதிகளில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது (TNSTC Announcement that 300 special buses will be operated from Kumbakonam and Trichy on the weekends of July 8 and July 9)...


கும்பகோணம் மற்றும் திருச்சியிலிருந்து வார இறுதி நாட்களான ஜூலை 8 மற்றும் ஜூலை 9ம் தேதிகளில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது (Announcement that 300 special buses will be operated from Kumbakonam and Trichy on the weekends of July 8 and July 9)...


தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் மேலாண் இயக்குநர் மோகன் அறிவித்துள்ளார்.


எதிர்வரும் 9-ம் தேதி அதிக அளவில் திருமணங்கள் நடைபெற உள்ளதாலும், வார இறுதி நாட்களாக உள்ளதாலும்,


வார இறுதி நாட்களான 8 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் பொதுமக்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் தஞ்சாவூர்,


பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம் வேதாரண்யம். திருத்துறைப்பூண்டி, உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும்,


திருச்சியிலிருந்து கோயமுத்தூர், திருப்பூர், சேலம், தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் மேலாண் இயக்குனர் மோகன் அறிவித்துள்ளார்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

2022-2023ஆம் ஆண்டு - TNSTC நிறுவனத்தில் - மாதம் ரூ.9000 உதவித் தொகையுடன் பட்டம் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி அறிவிப்பு (2022-2023 Year - TNSTC - Notification for engagement of Graduate and Diploma Apprentices - Monthly Stipend: Rs.9000/- for Graduate Apprentice and Rs.8000/- for Diploma Apprentice - One Year Training)...


 TAMIL NADU STATE TRANSPORT CORPORATION LTD

Notification for engagement of Graduate and Diploma Apprentices under the Apprenticeship (Amendment) Act 1973 for the year 2022 – 23

TNSTC  - Villupuram, TNSTC - Kumbakonam, TNSTC - Salem, TNSTC –Madurai, TNSTC  – Dindigul, TNSTC – Dharmapuri, TNSTC – Virudhunagar, and SETC TN - Chennai  invites Online application from eligible Graduate/Diploma holders in Engineering ( Passed during 2020, 2021 & 2022), hailing from Tamilnadu, for undergoing one year  Apprenticeship training under the Apprenticeship (Amendment) Act 1973.

I . Monthly Stipend: Rs.9000/- for Graduate Apprentice and Rs.8000/- for Diploma Apprentice Duration of Training – One Year


>>> 2022-2023ஆம் ஆண்டு - TNSTC நிறுவனத்தில் - மாதம் ரூ.9000 உதவித் தொகையுடன் பட்டம் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி அறிவிப்பு (2022-2023 Year - TNSTC - Notification for engagement of Graduate and Diploma Apprentices - Monthly Stipend: Rs.9000/- for Graduate Apprentice and Rs.8000/- for Diploma Apprentice - One Year Training)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School students staged road blockade in support of suspended teacher

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...