கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

போக்குவரத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போக்குவரத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Special Motivation scheme to encourage travelers to make online bookings in government transport corporationbuses

 

 அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு குலுக்கல் திட்டம் 


முதல் பரிசு : இரு சக்கர வாகனம் 

2வது பரிசு : LED SMART TV

3 வது பரிசு : குளிர்சாதனப் பெட்டி


Special Motivation scheme to encourage travelers to make online bookings in government transport corporation buses



18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு வாகனங்களை இயக்கக் கொடுப்பவர்களுக்கு தண்டனை, அபராதம், வாகனப் பதிவு நிறுத்தம் உறுதி - நீதிமன்றத் தீர்ப்பின் நகல்...

 

 18 வயது கீழ் மகன், மகளுக்கு வாகனம் வாங்கித்தரும் அல்லது ஓட்ட தரும் பெற்றோர்களே இனி கவனமாக இருங்கள்..


 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு  இருசக்கரவாகனம், நான்கு சக்கர வாகனம் ஓட்ட அல்லது வாங்கிக்கொடுக்கும் பெற்றோருக்கு தண்டனை உறுதி. இதோ நீதிமன்ற தீர்ப்பின் நகல். கவனம் தேவை பெற்றோர்களே...


18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு வாகனங்களை இயக்கக் கொடுப்பவர்களுக்கு தண்டனை, அபராதம், வாகனப் பதிவு நிறுத்தம் உறுதி - நீதிமன்றத் தீர்ப்பின் நகல்...



>>> நீதிமன்றத் தீர்ப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசுப்பேருந்தில் பயணித்து புதிருக்கு விடை கண்டுபிடிக்கும் போட்டியில் பங்கேற்று ரூ.30000 பரிசுகளை வெல்ல போக்குவரத்துக் கழகம் அழைப்பு...

 


சென்னை: பேருந்தில் பயணித்து புதிருக்கு விடை கண்டுபிடிக்கும் போட்டியில் பங்கேற்க மாநகர போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது...



இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாதத்தையொட்டி, பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறோம். இதன் தொடர்ச்சியாக சென்னை பஸ் டிரெஷர் ஹண்ட் (Chennai bus treasure hunt) என்ற போட்டியையும் ஏற்பாடு செய்துள்ளோம்.



இதில் கலந்துகொள்ள விரும்பும் 16 வயதுக்கு மேற்பட்டோர் குழுவாக பங்கேற்கலாம். ஒரு குழுவில் 2-3 நபர்கள் இருக்கலாம். அதில் ஒருவர் குழுவின் தலைவராக இருக்க வேண்டும்.



மொத்தம் 60 குழுக்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். எனவே, விரைவாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த 60 குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஆகஸ்ட் 25ஆம் தேதி போட்டி நடைபெறும். அன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் பல்லவன் போக்குவரத்து இல்லத்துக்கு வர வேண்டும்.



அவர்களிடத்தில் ஒரு துப்பு கொடுக்கப்படும். இதன் மூலம் அவர்கள் அடுத்துச் செல்ல வேண்டிய இடத்தை கண்டுபிடிக்க வேண்டும். அங்கு மாநகரப் பேருந்தில் மட்டுமே பயணிக்க வேண்டும். அவ்வாறு முதலில் செல்வோர், அங்குள்ள தன்னார்வலரிடம் இருந்து அடுத்த துப்பு பெற்றுக் கொண்டு அடுத்து செல்ல வேண்டிய இடம் என அடுத்தடுத்து பேருந்துகளில் பயணிக்க வேண்டியிருக்கும்.



இறுதியாக செல்ல வேண்டிய இடத்துக்கு யார் முதலில் வருகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். அக்குழுவுக்கு ரூ.15 ஆயிரமும், அடுத்தடுத்து வருவோருக்கு ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என பரிசுத் தொகை வழங்கப்படும்.



முன்பதிவுக்கு https://t.co/EQT4hGEZKl என்ற இணையதளத்தை அணுகலாம். மேலும் விவரங்கள் மற்றும் போட்டிக்கான நிபந்தனைகளை அறிய, 99439 97373 என்ற எண்ணை வாட்ஸ் ஆப்-ல் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.


MTC Chennai Bus

Treasure Hunt - Guidelines and Rules


Date: 25 Aug 2024 - Sunday

Time: 3 PM (Report at 02:45 PM)

Starting Point: Pallavan Illam (Pallavan Salai, Chennai)


Please read the following instructions carefully before registering:


Team Composition:

Each team must consist of 2-3 members.

One member must be designated as the Team Leader who will act as the primary point of contact and ensure team coordination.

This hunt is open to participants aged 16 and above.

Registration and Expenses:

No registration fee is required to participate in the hunt.

However, team members should carry sufficient cash as change - at least ₹100 per

head - to purchase bus tickets as needed during the event.

Event Duration and Travel:

The hunt will last approximately 3 hours.

Teams should be prepared to travel around the city using to solve and crack clues sequentially.

Teams are required to travel by MTC buses only. The use of personal vehicles is strictly prohibited. 

Tasks and Challenges:

Teams will be required to perform specific tasks as part of the hunt.

These tasks may vary in nature, requiring problem-solving, creativity, and teamwork.

Essential Items: 

Teams are encouraged to carry the following items:

Pens for writing down clues and solving puzzles.

Small bag to store papers and tickets

     collected along the way

Water bottles to stay hydrated.

Caps/umbrellas for weather protection.

Safety and Conduct:

The Team Leader is responsible for the safety and well-being of all team members throughout the event.

Teams must adhere to all traffic rules and behave respectfully towards the public.

Participants are advised to stay together as a team at all times.

Communication:

Use of mobile phones is allowed. Movement of teams maybe tracked via a designated WhatsApp group.

We may contact you during the hunt. Ensure that the Team Leader’s phone number is active and reachable always.

Health Precautions:

Participants are advised to wear comfortable clothing and footwear suitable for walking and physical activity.

If any team member has health concerns, please inform the organizers beforehand.

Disqualification:

Any team found cheating, breaking the rules, or engaging in unsafe behavior will be disqualified immediately.

The decision of the organizers will be final in all matters.

Registration Confirmation:

By registering, you agree to adhere to the rules and participate at your own risk.

In case you need clarity on any of the above points, please contact the organizers.

For Queries:

Please contact us via WhatsApp at +91 99439 97373 for any questions or further information.


போக்குவரத்துத்துறை ஓய்வூதியர்களுக்குப் பணப்பலன் வழங்க ₹38 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...

 


🔹🔸போக்குவரத்துத்துறை ஓய்வூதியர்களுக்குப் பணப்பலன் வழங்க ₹38 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...



- *போக்குவரத்து ஓய்வூதியர் பணப்பலன் - ₹38 கோடி ஒதுக்கீடு!*



*▪️. போக்குவரத்து ஓய்வூதியர்களுக்குப் பணப்பலன் வழங்க ₹38 கோடி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!*



*▪️. 2022 டிசம்பர் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் இதன்மூலம் பயனடைவர்.*



*▪️. கோவை போக்குவரத்துக் கழகத்திற்கு ₹4.3 கோடி,*


 *கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்திற்கு ₹8 கோடி,*


*மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு ₹9.6 கோடி ஒதுக்கீடு.


பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பான பயணம் - நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் - போக்குவரத்துக் கழகம் செய்தி வெளியீடு...



 மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பேருந்துகளை பாதுகாப்பாக இயக்கிட ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு நிலையான இயக்க முறைமை வாயிலாக அறிவுரை...


 

>>> பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பான பயணம் - நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் - போக்குவரத்துக் கழகம் செய்தி வெளியீடு...


போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஜனவரி 19ஆம் தேதி வரை தற்காலிக வாபஸ்...



போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஜனவரி 19ஆம் தேதி வரை தற்காலிக வாபஸ்...


தமிழ்நாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தம் திரும்பப்பெறப்பட்டுள்ளது.


வேலை நிறுத்தத்தைத் கைவிட்டு, உடனடியாக பணிக்குத் திரும்புவதாகவும், தொழிற்சங்கங்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பண்டிகைக் காலத்தில் போராட்டம் நடத்துவது, மக்களை பிணைக் கைதிகளாக வைத்து போராடுவது போல உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் இதில் கருத்துத் தெரிவித்துள்ளது.




'மிக்ஜாம்' புயல் பாதிப்பு - 6670 போக்குவரத்து வழக்குகள் ரத்து ('Michaung' storm - 6670 traffic cases cancelled)...



'மிக்ஜாம்' புயல் பாதிப்பு - 6670 போக்குவரத்து வழக்குகள் ரத்து ('Michaung' storm - 6670 traffic cases cancelled)...


சென்னையில் டிசம்பர் 3ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நவீன தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் பதிவான வழக்குகள் ரத்து.


சென்னையின் வெவ்வேறு சந்திப்புகளில் நிறுவப்பட்ட ANPR கேமராக்கள் மூலம் 6,670 வழக்குகள் பதிவாகின.


சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பை கருத்தில்கொண்டு வழக்குகள் ரத்து - போக்குவரத்து காவல்துறை.


ANPR Cameras: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழையினைக் கருத்தில் கொண்டு, சென்னையில் தானியங்கி கேமராக்களால் பதிவு செய்யப்பட்ட சுமார் 6,670 வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.


மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு, மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட வெளியே வர முடியாமல் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.



இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழையினை கருத்தில் கொண்டு, 6,670 வழக்குகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளாதாவது, “சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 03.12.2023 முதல் 08.12.2023 வரை, வெவ்வேறு சந்திப்புகளில் நிறுவப்பட்ட ஏஎன்பிஆர் (ANPR) கேமராக்கள் மூலம் மொத்தம் 6,670 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழையினைக் கருத்தில் கொண்டு, இந்த ஒரு முறை மட்டும் 03.12.2023 முதல் 08.12.2023 வரையிலான தேதிகளில் நவீன தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மட்டும் ரத்து செய்யப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு (TNSTC) 812 ஓட்டுநர், நடத்துனர்களை தேர்வு செய்ய அரசாணை (G.O.Ms.No.: 111, Dated: 21-07-2023) வெளியீடு (Government Order (G.O.Ms.No.: 111, Dated: 21-07-2023) issued for recruitment of 812 drivers and conductors for Tamil Nadu State Transport Corporation)...

 


>>> தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு (TNSTC) 812 ஓட்டுநர், நடத்துனர்களை தேர்வு செய்ய அரசாணை (G.O.Ms.No.: 111, Dated: 21-07-2023) வெளியீடு (Government Order (G.O.Ms.No.: 111, Dated: 21-07-2023) issued for recruitment of 812 drivers and conductors for Tamil Nadu State Transport Corporation)...


கும்பகோணம் 174, சேலம் 254, கோவை 60, மதுரை 136, நெல்லை 188 என 5 கோட்டங்களில் 812 பேர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


கும்பகோணம், சேலம், கோவை, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 போக்குவரத்துக் கழகங்களில் 812 டிசிசி (Driver cum Conductor) பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.


இது தொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: கும்பகோணம் (291), சேலம் (423), கோவை (60), மதுரை (272), திருநெல்வேலி (376) ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் 1422 நடத்துநர் காலிப்பணியிடங்கள் இருப்பதாக போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.



இது தொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர், போக்குவரத்து துறையின் மூத்த நிதி அலுவலர் ஆகியோருடன் நிதித்துறைச் செயலர் நடத்திய கூட்டத்தில், கும்பகோணம், சேலம், கோவை ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் 60 சதவீத நடத்துநர் காலிப்பணியிடங்களையும், மதுரை, திருநெல்வேலி ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் 50 சதவீத நடத்துநர் காலிப்பணியிடங்களை நிரப்பலாம் என முடிவு செய்யப்பட்டது.


அதேநேரம், ஓட்டுநர், நடத்துநர் பிரிவில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் யாராவது ஒருவர் விடுப்பு எடுத்துக் கொண்டாலும், பேருந்துகளை இயக்க முடியாத சூழல் உள்ளது. எனவே, விரைவு போக்குவரத்துக் கழகத்தில் உள்ளதைப் போல ஓட்டுநர், நடத்துநர் ஆகிய பணிகளை ஒரு சேர மேற்கொள்ளும் டிசிசி பணியாளர்களை நியமிப்பதன் மூலம் பேருந்துகளை சீராக இயக்க முடியும். ஏராளமான காலிப்பணியிடங்களை டிசிசி பணியாளர்களை தேர்வு செய்வதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களால் சமாளிக்கவும் முடியும். எனவே, இதர போக்குவரத்துக் கழகங்களிலும் டிசிசி பணியாளர்களை நியமிக்கலாம் என கடந்த ஆண்டு தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற செயலாளர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver cum conductor) பணியிடங்களுக்கான தகுதிகள்


** 10ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


** கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான தகுதியான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டுவதில் 18 மாதங்கள் அனுபவம் கண்டிப்பாக வேண்டும். அதுதவிர நடத்துனர் லைசென்ஸ் இருக்க வேண்டும்.


சம்பள விவரம்


** ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver cum conductor) பணியிடங்களுக்கான ஊதியமாக ரூ.17,700 முதல் ரூ.56,200 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) பேருந்துகளில் 50% கட்டணச் சலுகை, பெண்களுக்கு தனி இருக்கைகள், விபத்தில் உதவுவோருக்கு ரூபாய் 5000 ஊக்கத்தொகை - போக்குவரத்துத்துறை அமைச்சர் (50% fare concession in State Express Transport Corporation (SETC) buses, separate seats for women, Rs 5000 incentive for accident responders - Transport Minister)...

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) பேருந்துகளில் 50% கட்டணச் சலுகை, பெண்களுக்கு தனி இருக்கைகள், விபத்தில் உதவுவோருக்கு ரூபாய் 5000 ஊக்கத்தொகை - போக்குவரத்துத்துறை அமைச்சர் (50% fare concession in State Express Transport Corporation (SETC) buses, separate seats for women, Rs 5000 incentive for accident responders - Transport Minister)...



 போக்குவரத்துத் துறையில் தனியார்மயம் கிடையாது - சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் உறுதி.


அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு, 6வது பயணம் முதல் 50% கட்டணச் சலுகை (50% fare concession from the 6th journey onwards for passengers booking more than 5 trips in a month on State Express Transport Corporation (SETC) buses)



இணைய வழியில் பொதுமக்களுக்கு சேவைகள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆதார் அட்டையை பயன்படுத்தி ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு தொடர்பான 42 சேவைகளை பொதுமக்கள் இணைய வழியில் பெறலாம்.





சாலை விபத்தில் காயம் அடைந்த நபர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களுக்கு ( Good Samaritan) ரூ.5000 வழங்கப்படும்.






பேருந்துகளில் பெண்களுக்கும் தனி இருக்கை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெண்களுக்கென 4 இருக்கைகள் பிரத்யேகமாக ஒதுக்கப்படும்.


- சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்


விபத்தில் உதவுவோருக்கு ரூ. 5000 ஊக்கத்தொகை"


* சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோருக்கு ஊக்கத்தொகையாக ரூ. 5,000 வழங்கப்படும்


* மத்திய அரசால் ரூ. 5,000 வழங்கப்படும் நிலையில், மாநில அரசு சார்பிலும் ரூ. 5,000 வழங்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்


சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் எழுப்பிய கேள்விக்கு போக்குவரத்து அமைச்சர் சட்டப்பேரவையில் அளித்த பதில்:


போக்குவரத்துத் துறையில் தனியார்மயம் கிடையாது. 


அரசின் வழித்தடத்தில் தனியார் பேருந்து இயக்கப்படுமே தவிர, தனியாருக்கு வழித்தடம் தரப்படவில்லை. 


உள்ளூர், நகர, கிராம பகுதிகளில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் நாள் ஒன்றுக்கு 1.70 கோடி மக்கள் பயணம் செய்கிறார்கள். 


தமிழ்நாட்டின் பொதுப் போக்குவரத்தினை நாட்டின் முதலாவது இடத்திற்கு கொண்டு வர முயற்சி நடைபெற்று வருகிறது. 


கட்டணமில்லா பேருந்து மூலம் பெண் பயணிகள் ரூ.888 சேமித்துள்ளனர் என போக்குவரத்துத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு குறிப்பிட்டுள்ளது. 


மாநிலம் முழுவதும் 7,164 சாதாரண நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 


மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய தாழ்தள சிறப்பு பேருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 


மின்சார செலவை குறைக்கும் வகையில் போக்குவரத்து கழக வாகனங்களில் சூரிய மின்சக்தி தகடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


கட்டணமில்லா பேருந்துகள் மூலம் பெண் பயணிகள் பயணம் மேற்கொள்வதன் எண்ணிக்கை 64.65%ஆக உயர்ந்துள்ளது. 


திருநங்கைகள் 14.66 லட்சம், மாற்றுத்திறனாளிகள் 1.93 கோடி, மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் 10.2 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர் எனவும் கூறினார்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


மாணவர்கள் படியில் தொங்கியபடி அல்லது உயிருக்கு பாதுகாப்பற்ற முறையில் பயணித்தால் உடனடியாக பேருந்தை நிறுத்தி, மாணவர்களுக்கு நடத்துநர் அறிவுறுத்த வேண்டும் - நிலைமை கட்டுப்பாட்டை மீறினால் காவல்துறையில் புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை அறிவிப்பு (If students are hanging on the steps or traveling unsafely, the bus should be stopped immediately and the conductor should advise the students - If the situation is out of control, a police report can be lodged - Transport Department notification)...

 மாணவர்கள் படியில் தொங்கியபடி அல்லது உயிருக்கு பாதுகாப்பற்ற முறையில் பயணித்தால் உடனடியாக பேருந்தை நிறுத்தி, மாணவர்களுக்கு நடத்துநர் அறிவுறுத்த வேண்டும் - நிலைமை கட்டுப்பாட்டை மீறினால் காவல்துறையில் புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை அறிவிப்பு (If students are hanging on the steps or traveling unsafely, the bus should be stopped immediately and the conductor should advise the students - If the situation is out of control, a police report can be lodged - Transport Department notification)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



2022-2023ஆம் ஆண்டு - TNSTC நிறுவனத்தில் - மாதம் ரூ.9000 உதவித் தொகையுடன் பட்டம் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி அறிவிப்பு (2022-2023 Year - TNSTC - Notification for engagement of Graduate and Diploma Apprentices - Monthly Stipend: Rs.9000/- for Graduate Apprentice and Rs.8000/- for Diploma Apprentice - One Year Training)...


 TAMIL NADU STATE TRANSPORT CORPORATION LTD

Notification for engagement of Graduate and Diploma Apprentices under the Apprenticeship (Amendment) Act 1973 for the year 2022 – 23

TNSTC  - Villupuram, TNSTC - Kumbakonam, TNSTC - Salem, TNSTC –Madurai, TNSTC  – Dindigul, TNSTC – Dharmapuri, TNSTC – Virudhunagar, and SETC TN - Chennai  invites Online application from eligible Graduate/Diploma holders in Engineering ( Passed during 2020, 2021 & 2022), hailing from Tamilnadu, for undergoing one year  Apprenticeship training under the Apprenticeship (Amendment) Act 1973.

I . Monthly Stipend: Rs.9000/- for Graduate Apprentice and Rs.8000/- for Diploma Apprentice Duration of Training – One Year


>>> 2022-2023ஆம் ஆண்டு - TNSTC நிறுவனத்தில் - மாதம் ரூ.9000 உதவித் தொகையுடன் பட்டம் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி அறிவிப்பு (2022-2023 Year - TNSTC - Notification for engagement of Graduate and Diploma Apprentices - Monthly Stipend: Rs.9000/- for Graduate Apprentice and Rs.8000/- for Diploma Apprentice - One Year Training)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை - அரசுப் பேருந்து நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை (Disciplinary action for refusing to buy Rs 10 and Rs 20 coins - Transport Corporation warns Govt Bus Conductors)...



 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை - அரசுப் பேருந்து நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை (Disciplinary action for refusing to buy Rs 10 and Rs 20 coins - Transport Corporation warns Govt Bus Conductors)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு தலைக்கவசம் கட்டாயம் - அணியவில்லை எனில் 1000 ரூபாய் அபராதம் மற்றும் 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து - புதுச்சேரி அரசு அறிவிப்பு (Helmets mandatory for two-wheeler riders - 1000 rupees fine and 3 months suspension of driver's license if not worn - Puducherry Govt Notification)...



>>> இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு தலைக்கவசம் கட்டாயம் - அணியவில்லை எனில் 1000 ரூபாய் அபராதம் மற்றும் 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து - புதுச்சேரி அரசு அறிவிப்பு (Helmets mandatory for two-wheeler riders - 1000 rupees fine and 3 months suspension of driver's license if not worn - Puducherry Govt Notification)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


Transport & Escort வசதிக்கான தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துதல் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Direct Payment of Transport & Escort Facility into Student's Bank Account - Proceedings of Chief Educational Officer)...


>>> Transport & Escort வசதிக்கான தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துதல் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Direct Payment of Transport & Escort Facility into Student's Bank Account - Proceedings of Chief Educational Officer)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு 5% ஊதிய உயர்வு வழங்க அரசு உறுதி - போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் தகவல் - செய்தி வெளியீடு எண்: 11/2022, நாள்: 12-05-2022 (Government promises to give 5% pay hike to Transport Corporation employees - Minister of Transport S.S.Sivasankar - Press Release No: 11/2022, Dated: 12-05-2022)...



>>> போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு 5% ஊதிய உயர்வு வழங்க அரசு உறுதி - போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் தகவல் - செய்தி வெளியீடு எண்: 11/2022, நாள்: 12-05-2022 (Government promises to give 5% pay hike to Transport Corporation employees - Minister of Transport S.S.Sivasankar - Press Release No: 11/2022, Dated: 12-05-2022)...




இருக்கை வேண்டுமென்றால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என போக்குவரத்துத் துறை விளக்க அறிக்கை - நாள்: 09-05-2022 (Department of Transport - Explanatory Report that children under the age of 5 must pay a fee if they want a seat - Date: 09-05-2022)...



>>> இருக்கை வேண்டுமென்றால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என போக்குவரத்துத் துறை விளக்க அறிக்கை - நாள்: 09-05-2022 (Department of Transport - Explanatory Report that children under the age of 5 must pay a fee if they want a seat - Date: 09-05-2022)...


அரசு பேருந்துகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருக்கை தேவை எனில் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்;


5 - 12 வரையிலான குழந்தைகளுக்கு அரைக் கட்டணம் வசூலிக்கப்படும்.


 - போக்குவரத்துத்துறை...


தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது - போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்(Tamil Nadu government buses will not charge children up to the age of 5 - Transport Minister Sivasankar)...



தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு பேருந்துகளில் 3 வயது முதல் 12 வரை உள்ள குழந்தைகளுக்கு, அரைக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சட்டசபையில் போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என தெரிவித்துள்ளார்...

ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தி பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே (Contactless Service)பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் ஆகிய சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் - போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு(Services such as Practitioner's License, Driver's License Renewal and Driver's License Change of Address will be implemented without having to come in person to the Regional Transport Offices using the Aadhar Card as an Identity Document - Notice on Transport Department Grant Request )...



>>> ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தி பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே (Contactless Service)பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் ஆகிய சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் - போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

21-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...