கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.08.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.08.2023 - School Morning Prayer Activities...

   

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம்:அருளுடைமை


குறள் :243


அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல்.


விளக்கம்:


அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.


பழமொழி :

Beter pay the cook than the doctor


வைத்தியனுக்கு கொடுப்பதை விட வாணிகனுக்கு கொடு



இரண்டொழுக்க பண்புகள் :


1. இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாத்து என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.


2.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமான உபயோகிப்பேன்



பொன்மொழி :


முடிந்தால் மற்றவர்களைக் காட்டிலும் அறிவாளியாய் இருங்கள்; ஆனால் அதை அவர்களிடம் சொல்லாதீர்கள்.  - செஸ்டர் பீல்டு


பொது அறிவு :


1. தமிழகத்தின் முதல் ரயில் நிலையம் எது?


விடை: ராயபுரம், சென்னை


2. தெற்கின் கைலாஷ் என்பது?


விடை: வெள்ளையங்கிரி மலை


English words & meanings :


 spacecraft-a vehicle used for travelling in space.

விண்வெளிக் கப்பல்


firecracker- a loud, explosive firework; a banger.,பட்டாசுகள்


ஆரோக்ய வாழ்வு : 


கடுகு - இருமலை கட்டுப்படுத்த கூடியதும், விஷத்தை முறிக்கவல்லதும், ஜீரண கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், ஒற்றை தலைவலியை போக்கும் தன்மை கொண்டதும், விக்கலை கட்டுப்படுத்த கூடியதும், ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியதுமானது கடுகு. சமையலுக்கு மிகவும் முக்கியமான பொருளாக விளங்குவது கடுகு.



ஆகஸ்ட்22


சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும்[1].[2] இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூரப்பட்டு வருகிறது.


கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பாவிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும். வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்பன் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்பன் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது.


நீதிக்கதை


ஒரு மரத்தில நம்ம காக்கா வாழ்ந்துட்டு இருந்துச்சு. அது உணவுக்காக ரொம்ப தேடி அலைந்து கஷ்டப்பட்டு சாப்பிட்டு வந்தது. ஒரு நாள் அது ஒய்வு எடுக்க ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்து இருந்தது. அப்போ அதோட தலைக்கு மேல ஒரு குட்டி செம்மறி ஆடு பறக்குற மாதிரி தெரிஞ்சிது. அட என்னடா இது அதிசயம் செம்மறி ஆடு பறக்குதேன்னு பாத்தா, அது ஒரு பெரிய கழுகு தூக்கிட்டு போகுதுஎன்னடா இது, நம்மளும் தான் நல்ல பறக்குறோம். நமக்கு ஏன் இந்த சிந்தனை வரல, நல்ல ஒரு மாசத்துக்கு வச்சி சாப்பிடலாம் போலயே என யோசித்து கொண்டே ஒரு வாரம் முழுக்க ஆடுகள் இருக்கும் இடத்தை தேடி அலைந்தது. ஒரு வழியாக ஒரு பெரிய ஆட்டு கூட்டத்தை வளர்க்கும் இடத்தை அடைந்தது காக்கா.


பகலில் ஆடுகள் குறைவாக இருந்ததால், மாலை நேரம் வரட்டும் எல்லா ஆடுகளும் நன்றாக சாப்பிட்டு கொழுகொழுன்னு இருக்கும் என அங்கிருந்த மரத்திலேயே காவல் இருந்தது காக்கா. செம்மறி ஆடுகளும் மாலை நேரம் ஆனதும் அந்த இடத்திற்கு வந்தடைந்தன. இங்குதான் காக்கா பலமான யோசனை ஒன்றை போட்டதுசின்ன ஆட்டு குட்டிய தூக்கிட்டு போக வேண்டியது தான் என எண்ணியது காக்கா. அங்கதான் ட்விஸ்ட் இருக்கு, காக்காவால செம்மறி ஆடு மேல இருந்து வெளிய வர முடியல, இறக்கையை விரிச்சி பறந்து ட்ரை பண்ணி பார்த்தும் பறக்க முடியல. காக்காவோட கால்கள், செம்மறி ஆட்டின் கடினமான ரோமங்களில் மாட்டி கொண்டதுசெம்மறி ஆட்டின் மேல் இருந்த காகத்தால் சிறிதும் அசைய முடியவில்லை. யாரோ வருவதை உணர்ந்த காகம் இறக்கைகளை அசைக்காமல் இருந்தது. ஆடுகளின் கூடாரத்திற்கு வந்த உரிமையாளர், காகம் அசையாமல் இருந்ததை கண்டு அதன் அருகில் சென்றார். காகம் தன்னுடைய ஆட்டை கடிக்க முயற்சி செய்திருப்பதை பார்த்த அவர், காகத்தை காப்பாற்றி அதன் கால்களில் கயிறை கட்டி தனது குழந்தைகளுக்கு விளையாட கொடுத்தார். காக்கா மாட்டி கொண்டு பரிதவித்தது.ஆகையால் குழந்தைகளே, நமக்கு என்ன வருமோ அதை செய்துவிட்டால் அதுவே நமக்கு நன்மை பயக்கும். அதை விடுத்து, மற்றவர்கள் வாழ்க்கையை வாழ முயற்சிப்பதோ, அதில் நம்மால் முடியாத ஒன்றிற்கு பேராசை படுவதோ விபரீதத்தில் தான் முடியும்.


இன்றைய செய்திகள்


22.08. 2023


*நெம்மேலியில் ரூ.4276 கோடியில் மூன்றாவது கடல் குடிநீர் திட்டம் முதலமைச்சர் 

மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.


* சந்திராயன்-2 இன் ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்ட பாதையில் இயங்கி வருகிறது. இன்று சந்திராயன்- 3 லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. மகிழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள்.


* ஜெய்சங்கர் உள்பட ஒன்பது பேர் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்பு.


*சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் உருவாக்கிய அக்னிப்பான் ராக்கெட் விரைவில் விண்ணில் ஏவப்படுகிறது.


*உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப்:

பிரனோய் முதல் சுற்றில் வெற்றி.


*ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு - திலக் வர்மாவிற்கு இடம்.


Today's Headlines


*Chief Minister's Third sea water project at Nemmeli of Rs.4276 crores CM 

 M. K.  Stalin laid the foundation stone.


 * Chandrayaan-2's orbiter is orbiting around the Moon.  Chandrayaan-3 made contact with the lander today.  ISRO scientists are happy.


 * Nine people, including Jaishankar, accepted the post as members of the Rajya Sabha.


 *The Agnipan rocket developed by students of IIT Chennai will be launched soon.


 *World Badminton Championship:

 Prannoy won the first round.


 *India's 17-man squad for Asia Cup announced - Tilak Verma is listed.

 

புது ஊஞ்சல் - 16-31 ஆகஸ்ட் 2023 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ் - படிக்கலாம்! பறக்கலாம்! - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Puthu Oonjal - 16-31 August 2023 Fortnightly Magazine - Magazine for Classes 4 & 5 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...



>>> புது ஊஞ்சல் - 16-31 ஆகஸ்ட் 2023 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ் - படிக்கலாம்! பறக்கலாம்! - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Puthu Oonjal - 16-31 August 2023 Fortnightly Magazine - Magazine for Classes 4 & 5 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...



>>> புது ஊஞ்சல் - 01-15 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> புது ஊஞ்சல் - 16-30 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> புது ஊஞ்சல் - 01-15 ஜூலை 2023 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> புது ஊஞ்சல் - 16-30 ஜூலை 2023 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> புது ஊஞ்சல் - 01-15 ஆகஸ்ட் 2023 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ்...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தேன்சிட்டு - 16-31 ஆகஸ்ட் 2023 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Then Chittu - 16-31 August 2023 Fortnightly Magazine - Magazine for Classes 6 to 9 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...



>>> தேன்சிட்டு - 16-31 ஆகஸ்ட் 2023 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Then Chittu - 16-31 August 2023 Fortnightly Magazine - Magazine for Classes 6 to 9 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



>>> தேன்சிட்டு - ஜனவரி 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - பிப்ரவரி 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - மார்ச் 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - ஏப்ரல் 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - 01-15 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - 16-30 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - 01-15 ஜூலை 2023 மாதமிருமுறை இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - 16-31 ஜூலை 2023 மாதமிருமுறை இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...





01.01.2007 வரை இளங்கலைப்பட்டத்தினை எந்தப்பாடத்தில் பெற்றிருந்தாலும் அவர்கள் பட்டதாரி/ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெறலாம் - அரசாணை (நிலை) எண்: 134, கல்வி, நாள்.15.06.2007 (If any Teacher got Degree in any subject till 01.01.2007, they can be promoted to the post of B.T. Assistant /Middle School Headmaster - G.O. (Ms) No: 134, Education, Dated: 15.06.2007)...

 

>>> 01.01.2007 வரை இளங்கலைப்பட்டத்தினை எந்தப்பாடத்தில் பெற்றிருந்தாலும் அவர்கள் பட்டதாரி/ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெறலாம் - அரசாணை (நிலை) எண்: 134, கல்வி, நாள்.15.06.2007 (If any Teacher got Degree in any subject till 01.01.2007, they can be promoted to the post of B.T. Assistant /Middle School Headmaster - G.O. (Ms) No: 134, Education, Dated: 15.06.2007)...


முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்கள்- பணியிட மாறுதல் (CEOs Transfer) அரசாணை (G.O.Ms.No.273, Dated: 11-08-2023) - வெளியீடு (Chief Educational Officers and Allied Posts- Transfer Ordinance G.O.(Provincial).No.273, Dated: 11-08-2023)...


>>> முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்கள்- பணியிட மாறுதல் (CEOs Transfer) அரசாணை (G.O.Ms.No.273, Dated: 11-08-2023) - வெளியீடு (Chief Educational Officers and Allied Posts- Transfer Ordinance G.O.(Provincial).No.273, Dated: 11-08-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் (CEOs Transfer) - திருத்தம் - அரசாணை (வாலாயம்) எண்: 283, நாள்: 21-08-2023 வெளியீடு (Transfer of Chief Education Officers - Ordinance G.O.(Provincial) No: 283, Dated: 21-08-2023)...


>>> கரூர் - திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலர்கள் பரஸ்பர இடமாற்றம் - அரசாணை (வாலாயம்) எண்: 283, நாள்: 21-08-2023 வெளியீடு( Karur - Tirupur Reciprocal Transfer of Chief Education Officers - Ordinance G.O.(Provincial) No: 283, Dated: 21-08-2023)...



>>> முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்கள்- பணியிட மாறுதல் அரசாணை எண் : 273, நாள்: 11-08-2023 வெளியீடு...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.08.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.08.2023 - School Morning Prayer Activities...

   

திருக்குறள் :



பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம்:அருளுடைமை


குறள் :242


நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்

தேரினும் அஃதே துணை.


விளக்கம்:


நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.


பழமொழி :

Bend the twig, bend the tree


ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?



இரண்டொழுக்க பண்புகள் :


1. இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாத்து என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.


2.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமான உபயோகிப்பேன்



பொன்மொழி :


உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாக

சேவைதான் செய்ய முடியும்.

                                      - விவேகானந்தர்


பொது அறிவு :


1. தமிழ்நாட்டு மிக நீளமான ஆறு எது?


விடை: காவிரி


2. கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள மாவட்டம் எது?


விடை: திருநெல்வேலி


English words & meanings :


 Kindle - arouse or inspire an emotion or feeling. தூண்டுதல். 

loafer-a person who avoids work or a lazy person. சோம்பேறி


ஆரோக்ய வாழ்வு : 


புதினாக் கீரையை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால் தசை வலி ,நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும் .புதினாக் கீரை ஆஸ்துமாவையும் கட்டுப்படுத்துகிறது .


ஆகஸ்ட்21


உசைன் போல்ட் என்கிற உசேன் செயிண்ட் லியோ போல்ட் (Usain St. Leo Bolt, பிறப்பு: ஆகத்து 21, 1986) யமேக்காவில் பிறந்த தடகள ஆட்டக்காரர். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 9.69 நொடி நேரத்தில் 100 மீட்டர் விரைவோட்டத்தை ஓடி உலகச் சாதனை பெற்றார். அத்துடன் 200 மீ ஓட்டம் (19.30 வினாடி) போட்டியிலும் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைகளைப் புரிந்தவர்; தன் நாட்டு சக வீரர்களுடன் இணைந்து 4 x 100 மீ தொடரோட்டத்தில் 37.10 வினாடிகளில் ஓடி சாதனை புரிந்தார். இவை அனைத்தையும் போல்ட்டு 2008 பெய்ஜிங் கோடை ஒலிம்பிக்கில் நிகழ்த்தினார்.2003இல் 200 மீட்டர் விரைவோட்டத்திலும் உலக இளையோர் சாதனை படைத்தார். ஒலிம்பிக்கின் மூன்று விரைவோட்டப் பந்தயங்களின் (100 மீ, 200 மீ மற்றும் 4 x 100 மீ) நடப்பு முதன்மை வீரன் (சாம்பியன்), ஒன்பது முறை உலக முதன்மை வீரன், ஒலிம்பிக் விரைவோட்டப் பந்தையங்களில் ஆறு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் வீரர், இம்மூன்று விரைவோட்டப் பந்தயங்களின் நடப்பு உலக சாதனைகளின் சொந்தக்காரர் எனப் பல சிறப்புகள் போல்ட்டைச் சாரும்.




நீதிக்கதை


பெரும் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவரிடம் குதிரைப் பண்ணை இருந்தது. அதில் உள்ள குதிரைகளுக்குத் தினமும் பயிற்சி கொடுத்து, பல்வேறு ஊர்களில் நடக்கும் போட்டிகளுக்கு அனுப்பி வைப்பார். பயிற்சி கொடுப்பதற்கு ஆள்கள் இருந்தனர். அவர்களும் குதிரைகளுக்குச் சத்தான உணவு கொடுத்து, காலை மாலை என இருவேளையும் குதிரைகளை ஓட விடுவார்கள்.அந்தக் குதிரைகளில் ஒரு குதிரை மிகவும் கம்பீரமாக இருக்கும். எல்லாப் போட்டிகளிலும் முதல் பரிசைப் பெற்றுவிடும். அதனால் அந்தக் குதிரைக்கு எல்லோர் மத்தியிலும் மதிப்பு அதிகம்


அன்று காலை பயிற்சியாளர்கள் வந்து அந்தக் குதிரையைப் பயிற்சிக்கு அழைத்தார்கள். ஆனால், அது வராமல் படுத்துக்கொண்டே இருந்தது. சரி, இன்று ஒரு நாள் போகட்டும் என்று விட்டுவிட்டு மற்ற குதிரைகளுடன் பயிற்சிக்குச் சென்றார்கள். மறுநாளும் இப்படியே அது முரண்டு பிடித்தது. குதிரைக்குத் தான் எல்லாப் போட்டிகளிலும் வெற்றி பெறுகிறோம் என்ற தலைக்கனம் வந்துவிட்டது. பயிற்சியாளர்களும் சரி, இந்தக் குதிரை எப்படியும் ஜெயித்துவிடும் என்ற நம்பிக்கையில் சில நாட்கள் அதன் போக்கிலேயே விட்டுவிட்டார்கள்.மறுநாள் போட்டிக்கு மற்ற குதிரைகளுடன் இதுவும் சென்றது. ஆனால், முன்பு போல் வேகமாக ஓட முடியவில்லை. போட்டியில் தோல்வி அடைந்தது. எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. தொடர்ந்து பல போட்டிகளில் தோல்வியே கிடைத்தது. எல்லோர் மத்தியிலும் அந்தக் குதிரைக்கு இருந்த மதிப்பு குறைந்தது. அந்தக் குதிரையைத் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்ததால் உரிமையாளர், அந்தக் குதிரையை விற்க முடிவு செய்துவிட்டார்.இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் குதிரைக்கு அழுகை வந்தது. பக்கத்தில் நின்றிருந்த இன்னொரு குதிரை, “நண்பா, கவலைப்படாதே” என்று ஆறுதல் கூறியது.


“என்னை விற்கப் போகிறார். நான் எதற்கும் பயனில்லாதவன் ஆகிவிட்டேன். உங்களை எல்லாம் விட்டு நான் பிரியப் போகிறேன். என்னால் என்ன செய்ய முடியும்? இவ்வளவு நாள் நான் வெற்றி பெற்றுக்கொண்டுதானே இருந்தேன்? இப்போது எனக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை...” என்று சொல்லிக்கொண்டே மீண்டும் அழுதது. அந்தக் குதிரைநண்பா, நீ தினமும் பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது வெற்றி பெற்றுக்கொண்டே இருந்தாய். திடீரென்று பயிற்சிக்கு வர மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாய். பயிற்சிதான் நம் செயலைச் சிறந்ததாக மாற்றும். உன் தோல்விக்குக் காரணம் பயிற்சியைக் கைவிட்டதுதான். சிறப்பாகச் செயல்பட்டால் மட்டுமே இந்த உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கும். இதை நீ புரிந்துகொள். இப்போதும் ஒன்றும் பிரச்சினை இல்லை. இன்று முதல் நீ பயிற்சி செய்ய ஆரம்பித்தால் போதும். பழையபடி ஆகிவிடுவாய். உன் திறமையைக் காணும் உரிமையாளர், உன்னை விற்க மாட்டார். சரி, என்னுடன் பயிற்சிக்கு வருகிறாயா?” என்று கேட்டது அந்தக் குதிரை.


“நீ சொல்வது சரிதான். பயிற்சி இல்லாமல் வெற்றி பெற முடியும் என்று எண்ணி, முயற்சியும் பயிற்சியும் இல்லாமல் இருந்தது தவறுதான். இனி தினமும் பயிற்சிக்கு வருகிறேன்” என்று கூறிக்கொண்டே நடக்க ஆரம்பித்தது குதிரை.


இன்றைய செய்திகள்


21.08.2023


*நிலவில் மோதி நொறுங்கியது ரஷ்யாவின் 

லூனா -25 விண்கலம்.


* சந்திராயன் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நேரத்தில் மாற்றம். வரும் 23ம் தேதி மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 


*மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 26 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


* தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.


*பெண்கள் உலக கோப்பை கால்பந்து: இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஸ்பெயின்.


* உலகக்கோப்பை வில்வித்தை: 

தங்கம் வென்று அசத்திய இந்திய ஆடவர் மகளிர் அணிகள்.


Today's Headlines


* Russian spacecraft  Luna-25 crashed in the moon.


 * There is a Change in Chandrayaan-3 moon landing time.  ISRO has officially announced that it will land on the moon on the evening of 23rd.


 * Light to moderate rain may occur at one or two places in Tamil Nadu from today to 26th due to variation in speed of westerly wind.


 * You can apply for a temporary firecracker shop license on the occasion of Diwali.


 *Women's World Cup Football: Spain beat England and won the championship title.


 * Archery World Cup:

 Indian men's and women's teams made an awesome victory and won gold

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...