கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (4% increase in Dearness Allowance for Government officials, Teachers - Chief Minister Mr. M.K.Stalin's announcement)...
அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (4% increase in Dearness Allowance for Government officials, Teachers - Chief Minister Mr. M.K.Stalin's announcement)...
>>> செய்தி வெளியீடு எண்: 2130, நாள்: 25-10-2023...
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படி, 01.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மாணவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள் கலந்துரையாடல் - காணொளி வெளியீடு (Minister of School Education Mr. Anbil Mahesh's discussion with students at Kalaignar Centenary Library - Video release)...
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மாணவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள் கலந்துரையாடல் - காணொளி வெளியீடு (Minister of School Education Mr. Anbil Mahesh's discussion with students at Kalaignar Centenary Library - Video release)...
மாணவச் செல்வங்கள் நேர்காணல் கண்ட தருணம்!
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மாணவச் செல்வங்களோடு அழகான உரையாடலை மேற்கொண்டதில் மகிழ்ச்சி.
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
இந்தியா உட்பட 7 நாடுகளில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை (Visa is not required to visit Sri Lanka from 7 countries including India)...
இந்தியா உட்பட 7 நாடுகளில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை (Visa is not required to visit Sri Lanka from 7 countries including India)...
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல, இனி விசா தேவையில்லை என இலங்கை அரசு புதிய அறிவிப்பு.
இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய 7 நாடுகளில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை.
இத்திட்டத்தை மார்ச் 31 வரை சோதனை முயற்சியாக அமல்படுத்த இலங்கை அரசு ஒப்புதல்.
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.10.2023 - School Morning Prayer Activities...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.10.2023 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : கள்ளாமை
குறள் :283
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
விளக்கம்:
திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.
பழமொழி :
Even homer nods
யானைக்கும் அடி சறுக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்ல நாம் ஆழ்ந்து சிந்திக்க நம்மை தூண்டும்.
2. எனவே தேவையில்லாத பேச்சை குறைத்து அமைதி காக்க முயல்வேன்.
பொன்மொழி :
ஒத்த மனமுடையவர்கள் சேர்ந்தால், கடலையும் வற்ற வைக்கலாம்.- இந்தியா
பொது அறிவு :
1. சிப்கோ இயக்கத்தை தொடங்கியவர்-
பகுகுனா.
2. ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் -
சுவிட்சர்லாந்து.
English words & meanings :
jumble –an untidy collection or pile of things.தாறுமாறாகக் கலைந்து இருப்பது.
jockey –a person who rides horses professionally in races.
குதிரைப் பந்தயத்தில் குதிரை ஓட்டுபவர்
ஆரோக்ய வாழ்வு :
சங்கு பூ கூந்தலுக்கு சிறந்தது, இதில் உள்ள அந்தோசயனின் என்னும் ஆன்டி ஆக்சிடண்ட் தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
நீதிக்கதை
ஒரு கிராமத்தில் அனில், சுனில் என்ற இரண்டு நண்பர்கள் இருந்தனர். கிராமத்திலிருந்து நகரத்திற்கு அவர்கள் ரயில் வண்டி மூலம் பயணித்தனர். அவர்கள் இருவரும் தங்களுக்கு ஓர் கைக் கடிகாரத்தை வாங்க திட்டமிட்டனர்.
ஓர் இளைஞன் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்த கடிகாரங்கள் என்று காண்பித்து கடிகாரங்கள் தங்கத்தினால் ஆனது என்றும் கூறினார்.
அனிலுக்கு அந்தக் கடிகாரம் மிகவும் பிடித்து விட்டது, அதை உடனடியாக வாங்க ஒப்புக்கொண்டான். அந்த கடிகாரத்தை வாங்க வேண்டாம் என சுனில் அனிலிடம் பல தடவை கூறினார். சுனிலின் மறுப்புறைக்கு அனில் கவனம் செலுத்தாமல் அனில் அந்த கடிகாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கினான். சில நாட்களுக்குப் பின்னர் அந்த கடிகாரத்தின் முள் நின்று விட்டது, அனில் அந்த கடிகாரத்தை பழுது பார்ப்பவரிடம் எடுத்துச் சென்ற போது அந்த கடிகாரம் தங்கத்தினால் தயாரிக்கப்படவில்லை என்றும் அவர் ஏமாற்றப்பட்டார் என்றும் பழுது பார்ப்பவர் அது தங்கமல்ல என கூறினார்.அவனுடைய முட்டாள்தனமான செயலால் அவசர முடிவை எடுத்ததை நினைத்து அவருடைய நண்பனின் பேச்சை கேட்காதது நினைத்தும் மிகவும் வெட்கப்பட்டார் அனில்.
நீதி:
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
இன்றைய செய்திகள்
25.10.2023
*14 வயதான ஹேமந்த் என்ற அமெரிக்க மாணவன் புற்றுநோயை குணப்படுத்தும் 'சோப்' ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இளம் விஞ்ஞானி என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
*ஆம்னி பஸ்கள் அறிவித்து இருந்த வேலை நிறுத்தம்
வாபஸ்.
* 414 வது ஆண்டு தசரா விழா: சாமுண்டீஸ்வரி ஊர்வலத்தை பார்க்க லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
* புயல் அதிதீவிரமாக மாறியது. வங்கதேசத்தில் இன்று கரையை கடக்கும்.
*டி ஹாக் அதிரடி சதம்: 382 ரன்களை குவித்தது தென் ஆப்பிரிக்கா.
* முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் பிஷன் சிங் பெடி மரணம்.
Today's Headlines
*A 14-year-old American student named Hemant has invented a 'soap' that cures cancer. Everyone is praising him as a young scientist.
* Omni Buses announced strike
withdrawal
* 414th Dussehra Festival: Lakhs flock to witness Chamundeshwari procession.
* The storm became intense. It will cross the shores today in Bangladesh.
*De Hogg action century: South Africa scored 382 runs.
* Former spinner Bishan Singh Bedi passes away.
17.10.2023, 18.10.2023, 19.10.2023 மற்றும் 20.10.2023 ஆகிய நாட்களில் நடந்த 6, 7, 8 & 9ஆம் வகுப்புகளுக்கான கற்றல் விளைவுகள் மற்றும் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு விடைக்குறிப்புகள் (Answer Keys of Learning Outcomes and LOs & Competency Based Assessment Exam for Class 6, 7, 8 & 9 held on 17.10.2023, 18.10.2023, 19.10.2023 and 20.10.2023)...
17.10.2023, 18.10.2023, 19.10.2023 மற்றும் 20.10.2023 ஆகிய நாட்களில் நடந்த 6, 7, 8 & 9ஆம் வகுப்புகளுக்கான கற்றல் விளைவுகள் மற்றும் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு விடைக்குறிப்புகள் (Answer Keys of Learning Outcomes and LOs & Competency Based Assessment Exam October 2023 for Class 6, 7, 8 & 9 held on 17.10.2023, 18.10.2023, 19.10.2023 and 20.10.2023)...
18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைப் பதிவு செய்யும் வழிமுறை - தேர்தல் ஆணையம் (Procedure for Enrollment of Names in Electoral Roll for 18-year-olds - Election Commission)...
18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைப் பதிவு செய்யும் வழிமுறை - தேர்தல் ஆணையம் (Procedure for Enrollment of Names in Electoral Roll for 18-year-olds - Election Commission)...
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Pongal Gift Package Notification 2025 - TN Government Order
2025-ஆம் ஆண்டிற்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு - ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும...