கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.12.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.12.2023 - School Morning Prayer Activities...

   


திருக்குறள்: 


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : இன்னாசெய்யாமை


குறள்:314


இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்.


விளக்கம்:


 துன்பம் தந்தவரை தண்டித்தல் என்பது அவர் வெட்கப்படும்படி நல்லது செய்து விடுவதே.



பழமொழி :

Cut the coat according to the cloth


வரவுக்குத் தகுந்த செலவு செய்


இரண்டொழுக்க பண்புகள் :


1. வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 


2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.



பொன்மொழி :


உடல் நலம் உள்ளவனுக்கு ஒவ்வொரு நாளும் விருந்து தான் – துருக்கி



பொது அறிவு :


1.தர்ம சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு


விடை: பாயும் குதிரை


2. இந்திய கட்டுப்பாட்டு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர்


விடை: குடியரசுத் தலைவர்



English words & meanings :


 knack - a special talent or skill. தனித்திறமை. 

knighthood - a title given to a man for his service to his country மாவீரர் பட்டம்



ஆரோக்ய வாழ்வு : 


பாரிஜாத பூக்கள்: பாரிஜாத மரத்தின் இலைகளை அம்மியில் நன்றாக அரைத்து அதன் சாறை எடுத்து, தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமலுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும்.



டிசம்பர் 06


பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் நினைவுநாள்


பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990இல் இவருக்கு வழங்கப்பட்டது.[3]



நீதிக்கதை


 வீமபுரி என்ற நாட்டை வீரகேசரி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் நீதியும், நேர்மையும் தவறாமல் ஆட்சி செய்து வந்ததால் அவன் நாட்டு மக்கள் பயமும் கவலையும் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்.


அந்த அரசன் தன்னாட்டு மக்களின் செயல்களை கண்காணிக்க மாறுவேடம் அணிந்து செல்வது வழக்கம். அவ்வாறு அவன் மாறுவேடம் அணிந்து செல்லும்போது வழியில் உழவன் ஒருவன் வயலில் உழுது கொண்டிருப்பதை பார்த்தான். அவனைக் கண்ட மாறு வேடத்தில் இருந்த அரசன், “எல்லாம் வல்ல இறைவன் உனக்கு நல்ல வலிமையையும், நீண்ட வாழ்நாளையும் வழங்குவானாக” என்று வாழ்த்தினான். 




அதற்கு அந்த உழவன் மாறுவேடத்தில் இருந்த அரசனைப் பார்த்து, “தாங்கள் என்மீது காட்டும் அன்பிற்கு மிக்க நன்றி” என்றான். “நிலத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது?” என்று மாறுவேடத்தில் இருந்த அரசன் அந்த உழவனிடம் கேட்டான். 


அதற்கு உழவன், “மாதத்திற்கு நூறு வெள்ளி காசுகள் கிடைக்கின்றன” என்று பதில் அளித்தான். “அவ்வளவு தொகையை என்ன செய்கிறாய்?” என்று அரசன் கேட்டான். ஐந்தில் ஒரு பங்கை அரசனுக்கு வரியாக செலுத்துகிறேன். இன்னொரு பங்கை நான் பட்ட கடனுக்கு அடைகிறேன். மற்றொரு பங்கை கடனாக தருகிறேன். நான்காவது பங்கை வீசி ஏறிகிறேன். இறுதிப் பங்கை எனக்காக செலவு செய்கிறேன்” என்று புதிராக பேசினான்.


இதை கேட்ட மாறுவேடத்தில் இருந்த அரசனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தன் மாறுவேடத்தை   கலைத்தான். இதுவரை தன்னிடம் பேசியவர் அரசர் தான் என்பதை அறிந்த உழவன் அவரை பணிவுடன் வணங்கினான்.


“நீ சொன்ன பதிலில் வரியாக தருவதும், உனக்காக செலவு செய்வதும்தான், எனக்கு புரிந்தது. மற்றவற்றின் அர்த்தம் என்ன?” என்று கேட்டான் அரசன். 


அதற்கு உழவன் அரசே, “என் வருமானத்தில் ஒரு பங்கை என் தாய் தந்தையருக்கு செலவு செய்கிறேன். என்னை வளர்த்து ஆளாக்கிய அவர்களுக்கு செலவு செய்வதை கடனை அடைக்கிறேன் என்றேன்.இன்னொரு பங்கை என் மகனுக்கு செலவு செய்கிறேன். பிற்காலத்தில் என்னை காப்பாற்ற போகிறவன் அவன். அதனால், அதை கடனாக தருகிறேன் என்றேன். 




நான்காவது பங்கை என் மகளுக்கு செலவு செய்கிறேன். எப்படி இருந்தாலும் திருமணம் ஆகி இன்னொருவன் வீட்டில் வாழ வேண்டியவள். அதனால் அந்த செலவை வீணாகத் தெருவில் எறிகிறேன் என்றேன். 


அந்த  உழவனின் பதிலை கேட்டு மகிழ்ந்த அரசன். உன் அறிவு கூர்மை மிகவும் நன்றாக உள்ளது. “இந்த விளக்கத்தை நான் இல்லாமல் நீ யாரிடமும் கூறக்கூடாது. அப்படி கூறினால் உன் உடலில் உயிர் இருக்காது” என்று சொல்லிவிட்டு சென்றான். 


அரசவைக்கு வந்த அரசன் தான் கேட்ட புதிரை அனைவரிடமும் சொல்லி அதற்கு விளக்கம் கேட்டான். ஒருவராலும் அதற்கு விளக்கம் கூற முடியவில்லை. இந்த புதிருக்கு யார் விளக்கம் கூறினாலும் அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கப்படும், என்று அறிவித்தான் அரசன். 


அரசனுக்கு இந்த புதிரை கூறியவர் யார் என்பதை அறிந்து கொண்டான் அமைச்சர்களுள் ஒருவன். அந்த அமைச்சர் நேராக இந்த உழவனிடம் சென்றான். 


“அரசு நாணய சாலையில் புத்தம் புதிதாக அச்சடித்த இந்த ஐநூறு பொற்காசுகளை பெற்றுக்கொண்டு அரசரிடம் சொன்ன புதிருக்கான விளக்கத்தை என்னிடம் கூறு” என்றான் அமைச்சர். 


கண்ணை பறிக்கும் ஒளியுடன் கூடிய பொற்காசுகளை கண்ட உழவன் அரசரை எப்படியும் சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணி அந்த புதிருக்கான விளக்கத்தை கூறி பொற்காசுகளை பெற்றுக் கொண்டான்.அரண்மனை திரும்பிய அமைச்சர் நேரடியாக அரசிடம் சென்று புதிருக்கான விளக்கத்தை கூறினான். உழவன் தான் பதில் கூறி இருக்கிறான் என்பதை அரசன் அறிந்து கொண்டு, அவனை இழுத்து வருமாறு தன்னுடைய காவலர்களுக்கு ஆணையிட்டான்.


உழவனைப் பார்த்து நீ ஏன்  பதிலை கூறினாய்? நான் இல்லாமல் பதில் கூற கூடாது எனக் கூறியிருந்தேனே? என அரசர் கேட்க, அரசே, பொற்காசுகளில் உங்கள் முகம் பொறிக்கப்பட்டு இருந்தது. அதனைப் பார்த்தே நான் பதில் கூறினேன், என அரசனிடம் உழவன் கூறினான்.


உழவனின் அறிவு கூர்மையை  அறிந்த அரசன் அவனுக்கு பரிசுகள் பல தந்து அனுப்பி வைத்தான். உழவனின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றியது அவருடைய அறிவு கூர்மையே ஆகும். 


நீதி : ஒருவரிடம் இருக்கும் அறிவு மிக சிறந்த செல்வமாகும். அது தக்க சமயத்தில் அவனுக்கு உதவும். எனவே அனைவரும் அறிவை மேன்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.



இன்றைய செய்திகள்


06.12.2023


*ஆந்திராவில் 110 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடந்தது 

மிச்சாங் புயல்.


*சென்னை- நெல்லூர் சாலையில் கடும் வெள்ளம்; 4 அடி உயரம் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து முடக்கம்.


*சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.


*சென்னையில் மீண்டும் விமான சேவை தொடங்கியது.


*ஐஎஸ்எல் கால்பந்து தொடர்; மோகன் பகான் - ஓடிஸா அணிகள் இன்று மோதல்!


*புரோ கபடி: புனே மற்றும் பெங்கால் அணிகள் வெற்றி.


Today's Headlines


*Michong storm crossed the Andhra Pradesh coast at 110 kmph 

 

 *Heavy flood on Chennai-Nellore road;  Traffic blocked due to 4 feet height water level.


 * Today is  holiday for schools and colleges in four districts including Chennai.


 *Flight service resumed in Chennai.


 *ISL Football Series;  Match between Mohan Bagan and Odisha teams !


 *Pro Kabaddi: Pune and Bengal win.

 

இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் மூலம் "எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி ('Engal Palli - Milirum Palli' Programme)" எனும் திட்டத்தை செயல்படுத்த பள்ளி மற்றும் ஒன்றிய அளவிலான குழுக்கள் அமைத்தல் - பொறுப்புகள் - செயல்பாடுகள் - மதிப்பீடு அளவுகோல் - சுற்றுச்சூழல் மீட்டர் Index - முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் (Formation of School and Union Level Committees for Implementation of "Our School, Shining School" by Youth and Environment Forum - Responsibilities - Activities - Evaluation Criteria - Environment Meter Index - Chief Education Officer Proceedings)...


 இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் மூலம் "எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி ('Engal Palli - Milirum Palli' Programme)" எனும் திட்டத்தை செயல்படுத்த பள்ளி மற்றும் ஒன்றிய அளவிலான குழுக்கள் அமைத்தல் - பொறுப்புகள் - செயல்பாடுகள் - மதிப்பீடு அளவுகோல் - சுற்றுச்சூழல் மீட்டர் Index - முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் (Formation of School and Union Level Committees for Implementation of "Our School, Shining School" by Youth and Environment Forum - Responsibilities - Activities - Evaluation Criteria - Environment Meter Index - Chief Education Officer Proceedings)...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


சென்னை மிக்ஜாம் புயல் - மழை வெள்ளம் - காணொளிகள் தொகுப்பு 2 (Chennai Flood 2023 - Michaung Cyclone - Rain Flood - Videos)...

 சென்னை மிக்ஜாம் புயல் - மழை வெள்ளம் - காணொளிகள் தொகுப்பு 2 (Chennai Flood 2023 -  Michaung Cyclone - Rain Flood - Videos)...


























தேன்சிட்டு - 01-15 டிசம்பர் 2023 இதழ் (Then Chittu - 01-15 December 2023 Magazine)...

   


தேன்சிட்டு - 01-15 டிசம்பர் 2023 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (ThenChittu - 01-15 December 2023 Fortnightly Magazine - Magazine for Classes 6 to 9 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...



>>> தேன்சிட்டு - 01-15 டிசம்பர் 2023 இதழ் (Then Chittu - 01-15 December 2023 Magazine)...



>>> தேன்சிட்டு - 16-30 நவம்பர் 2023 இதழ்  தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.12.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.12.2023 - School Morning Prayer Activities...

    


திருக்குறள்: 



பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : இன்னாசெய்யாமை


குறள்:313


செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

உய்யா விழுமந் தரும்.


விளக்கம்:


 பகைகொண்டு ஏதும் செய்யாதவர்களுக்கு துன்பம் செய்தால் பின்பு மீளமுடியாத தொல்லை ஏற்படும்.



பழமொழி :

He who hunts two hares loses both


பேராசை பேரு நட்டம்



இரண்டொழுக்க பண்புகள் :


1. வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 


2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.



பொன்மொழி :


சூரியன் போகாத இடத்திற்கு வைத்தியர் போகிறார் – இத்தாலி



பொது அறிவு :


1. இருமுறை முதலில் நோபல் பரிசு பெற்றவர் யார்?


விடை: மேரி கியூரி


2. 20 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர் யார்?


விடை: 19-ம் லூயி



English words & meanings :


 scent -odor, perfume.noun வாசனை. பெயர்ச் சொல். 

cent - Penny coin. least money value. noun. குறைந்த பணமதிப்பு. பெயர்ச் சொல் 



ஆரோக்ய வாழ்வு : 


பாரிஜாத பூக்கள்: ஆன்டி-பாக்டீரியா, பாக்டீரியா நுண்கிருமியால் உண்டாகும் தொற்று பாதிப்பை நீக்கி உதவுகிறதுபாரிஜாத மர இலைகளை பறித்து அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சியாடிகா வலி குறையும்..



டிசம்பர் 05


கல்கி அவர்களின் நினைவுநாள்


கல்கி (9 செப்டம்பர் 1899 – 5 திசம்பர் 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இரா. கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட இவர் 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.



நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவுநாள்


நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 சூலை 1918 – 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்



நீதிக்கதை


 தெனாலிராமனும் கத்தரிக்காயும்


ஒரு முறை தெனாலிராமனுக்கு கத்தரிக்காய் சாப்பிட வேண்டும் என்று அதீத விருப்பம் ஏற்பட்டது. அரண்மனைத் தோட்டத்தில் பிஞ்சு கத்திரிக்காய் அதிகமாக விளைந்திருப்பதைக் கேள்விப்பட்டார்.


ஆனால் அது அரசாங்கத்திற்குச் சொந்தமானது. நாம் உபயோகிக்கக் கூடாது என்ன செய்வது. என்னவென்றாலும் இன்று கத்தரிக்காய் சாப்பிட்டே தீருவது என்று தீர்மானித்த தெனாலிராமன் ஒரு ஆலோசனை செய்தார். காவலாளிக்கு தெரியாமல் கத்தரிக்காய் அனைத்தையும் சத்தமில்லாமல் பறித்துக் கொண்டார்.


வீட்டுக்கு சென்று மனைவியிடம் "இன்றைக்கு விதவிதமாய் கத்தரிக்காய் பதார்த்தம் செய்" என்றார். தெனாலிராமன் கொண்டுவந்த கத்தரிக்காய் அரண்மனை தோட்டத்திலிருந்து பறித்து வந்தது என்று தெரிந்ததும் தெனாலிராமனது மனைவி மிகவும் கலக்கமடைந்தார்.


தெனாலிராமன் "நீ பயப்படாதே!


எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ சமைத்து வை"என்றார்.அவரது மனைவியும் மறுபேச்சு பேசாமல் கத்தரிக்காய் குழம்பு, கத்தரிக்காய் கூட்டு என்று வித விதமாக செய்து வைத்தார். இருவரும் சாப்பிடத்தயாரானார்கள்.தெனாலிராமன் தனது மகனை எங்கே என்று கேட்டார். அவன் வெளித்திண்ணையில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதை மனைவி தெரிவித்தார். உடனே தெனாலிராமனுக்கு ஒரு யோசனை தோன்றியது.அவன் மேல் ஒரு குடம் தண்ணீர் ஊற்றினார். பதறியடித்து எழுந்த மகனைப் பார்த்து "வெளியே மழை பெய்கிறது, உள்ளே போய் படுத்துக் கொள்" என்று கூறினார்.


அரைத்தூக்கத்தில் இருந்த மகனும் அவர் சொன்னதைக் கேட்டவுடன் வேக வேகமாக வீட்டுக்குள் சென்றான். படுத்துறங்கப் போனவனை தெனாலிராமன் எழுப்பி "கத்தரிக்காய் சாப்பாடு ருசியாய் இருக்கிறது, சாப்பிட்டு விட்டு தூங்கு" என்று கூறினார்.


மறுநாள், தெனாலிராமன் அரண்மனைத் தோட்டத்தில் கத்தரிக்காய் பறித்த விஷயம் எப்படியோ மன்னருக்குத் தெரிந்து போனது.


மன்னர் தெனாலிராமனை அழைத்து வரச் சொன்னார். நடக்கப் போவதை யூகித்துக் கொண்ட தெனாலிராமனும் மன்னர் முன் சென்று நின்றார்.


மன்னர் தெனாலியைப் பார்த்து கேட்டார் "தெனாலிராமா! அரண்மனைத் தோட்டத்தில் கத்தரிக்காய் எல்லாம் காணாமல் போனது உனக்குத் தெரியுமா?" என்றார்.


தெனாலிராமனோ எதுவும் அறியாதது போல "என்ன? அரண்மனைத் தோட்டத்துக் கத்தரிக்காய் காணாமல் போனதா?" என்றார்.


மன்னரோ விடுவதாய் இல்லை. "ஒன்றும் அறியாதது போல் கேட்கிறாய் ராமா! நீ தான் கத்தரிக்காய் அனைத்தையும் பறித்ததாக நான் கேள்விப்பட்டேன். உண்மையை ஒத்துக் கொள்" என்றார். தெனாலி ராமனோ "இல்லவே இல்லை” என்று சாதித்தார்.


மன்னர் உடனே தெனாலிராமா "நீ உனது மகனை அழித்துவா. குழந்தைகள் பொய் சொல்லாது. நேற்று நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள் என்பதை நான் உன் மகனை விசாரித்து தெரிந்து கொள்கிறேன்." என்றார்.


தெனாலிராமனது மகனை காவலாளிகள் அழைத்து வந்தார்கள். மன்னன் சிறுவனிடம் அன்பாக விசாரித்தார். "தம்பி நேற்று உஙகள் வீட்டில் என்ன சாப்பிட்டீர்கள்?" உடனே சிறுவன் சொன்னான் "கத்தரிக்காய் குழம்பு, கத்தரிக்காய் கூட்டு மற்றும் சாதம் எல்லாம் சாப்பிட்டோம். மிகவும் ருசியாக இருந்தது." என்று கூறினான்.


உடனே மன்னன் தெனாலிராமனைப் பார்த்தார், "இப்போது மாட்டிக் கொண்டாயா தெனாலிராமா. இபோதாவது உண்மையை ஒத்துக் கொள்" என்றார். தெனாலிராமனோ விடாப்பிடியாக மறுத்தார். "மன்னா, இவன் இரவில் கனவு கண்டு அதை உளறுகிறான். நன்றாக விசாரியுங்கள். நீங்கள் நம்பும்படியாக அவன் கூறினால் நான் உண்மை என ஒத்துக் கொள்கிறேன்". என்றார்.


மன்னன் சிறுவனைப் பார்த்து மீண்டும் கேட்டார். "குழந்தாய் நேற்று உங்கள் வீட்டில் என்ன நடந்தது என்று விளக்கமாகச் சொல்" சிறுவனோ நேற்று இரவு ஜோ வென்று மழை பெய்ததா! அப்பா என்னை வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு போனாரா...! அப்போ கத்தரிக்காய் வைத்து சாப்பிடச் சொன்னார்களா...! சாப்பிட்டுவிட்டு 


 பிறகு நான் உறங்கி விட்டேன்" என்றான்.


தெனாலிராமனோ நேற்று மழை பெய்ததா மன்னா! நீங்களே சொல்லுங்கள் என்று மன்னரை கேள்வி கேட்டார்.


மன்னர் குழம்பிப் போனார். அவையில் இருந்தவர்களை விசாரித்தார். நேற்று நகரத்தின் எந்தப்பகுதியிலும் மழை பெய்யவில்லை என்று எல்லோரும் சொன்னார்கள்.


மன்னரும் சரி தெனாலிராமன் சொன்னதைப்போல குழந்தை கனவில் கண்டதைத்தான் சொல்கிறான் என்று சொல்லி தெனாலிராமனையும் விடுவித்தார். மனதிற்குள் மகிழ்ந்து கொண்டே தெனாலிராமனும் இடத்தை காலிசெய்தார்.


பிறுதொருநாள் மன்னரிடம் தாம்தான் கத்தரிக்காயை திருடியதாக ஒத்துக் கொண்டுநடந்தவைகளை சொல்ல மன்னர் ஆச்சரியதுடன் சிரித்து மகிழ்ந்தார். பிறகு தெனாலிராமனின் சாதுர்யத்தை மெச்சி பல பரிசுகளை அளித்து மகிழ்ந்தார்.



இன்றைய செய்திகள்


05.12.2023


*கனமழை எதிரொலி: நான்கு மாவட்டங்களில் இன்றும் பொது விடுமுறை.


* விமான ஓடுபாதையில் இரண்டு அடிக்கு தண்ணீர்; சென்னையில் விமான சேவை நிறுத்தம்.


*மிச்சாங் புயல் எதிரொலி: சென்னையில் 14 சுரங்கப் பாதைகள் மூடல்; கோவை - சென்னை இடையே ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு.


* தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு பும்ரா நெருக்கடி கொடுப்பார்- டி வில்லியர்ஸ் எச்சரிக்கை.


* 2029 ஆம் ஆண்டு உலக தடகள சாம்பியன்ஸ் இந்தியாவில் நடத்த திட்டம்-  அஞ்சு ஜார்ஜ் தகவல்.


Today's Headlines


*Due to Heavy rain there is a Public holiday in four districts today.


 * Two feet of water on the runway–  Flight service stopped in Chennai.


 *Due to the Michang storm  14 tunnels are closed in Chennai;  Trains canceled between Coimbatore and Chennai - Southern Railway Notification.


 * Bumrah will put pressure on South African players- De Villiers warns.


 * Plan to host 2029 World Athletics Champions in India - Anju George Info.

 

சென்னை மிக்ஜாம் புயல் - மழை வெள்ளம் - காணொளிகள் தொகுப்பு 1 (Chennai Flood 2023 - Michaung Cyclone - Rain Flood - Videos)...

 சென்னை மிக்ஜாம் புயல் - மழை வெள்ளம் - காணொளிகள் தொகுப்பு 1 (Chennai Flood 2023 -  Michaung Cyclone - Rain Flood - Videos)...






















>>> சென்னை மிக்ஜாம் புயல் - மழை வெள்ளம் - காணொளிகள் தொகுப்பு 2...


தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - அக்டோபர் 2023 - ஊக்கத் தொகைக்கான பரிந்துரைப் பட்டியல் - 1500 மாணவர்கள் (Tamil Literary Talent Search Exam – October 2023 – Recommended List for Scholarship - 1500 Students)…


 தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - அக்டோபர் 2023 - ஊக்கத் தொகைக்கான பரிந்துரைப் பட்டியல் - 1500 மாணவர்கள் (Tamil Literary Talent Search Exam – October 2023 – Recommended List for Scholarship - 1500 Students)….



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால்:பொருட்பால் அதிகாரம் :தீ நட்பு குறள...