கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கடன் சுழல் (Debt Trap) - நீங்கள் சிக்கியிருக்கிறீர்களா? கண்டுகொள்வது எப்படி?



கடன் சுழல் (Debt Trap) - நீங்கள் சிக்கியிருக்கிறீர்களா? கண்டுகொள்வது எப்படி?


கீழ்க்கண்டவற்றுள் ஏதேனும் ஒன்றையோ அல்லது பலவற்றையோ நீங்கள் செய்தால் கடன் சூழலில் சிக்கி இருக்கிறீர்கள் என்று அர்த்தம். 


1️⃣ உங்களது மொத்த மாதாந்திர EMI, உங்கள் வருமானத்தில் 50% க்கு மேல் இருந்தால்…


2️⃣ மாதாந்திர செலவுகள் (EMI மற்றும் வீட்டு செலவுகள்) உங்களது வருமானத்தில் 70% க்கு மேல் இருந்தால்…


3️⃣ உங்களது அன்றாட செலவுகளுக்கு (பள்ளிக் கட்டணம், சுற்றுலா போன்றவை) கடன் வாங்கினால்…


4️⃣ ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்குகிறீர்கள் என்றால்…


5️⃣ Credit கார்டில் பணம் withdraw செய்தீர்களென்றால்…


6️⃣ Credit card outstanding ஐ மாதா மாதம் முழுமையாக செலுத்தாமல் மினிமம் பேலன்ஸ் மட்டுமே செலுத்தி வருவதை வழக்கமாக கொண்டிருப்பது.

 

7️⃣ உங்களுக்கு வங்கிகள் கடன் தர மறுப்பது. உங்களது மாதாந்திர EMI, வருமானத்தில் 50% க்கு மேல் இருந்தால் வங்கிகள் கடன் தர மறுத்துவிடுவார்கள். வங்கிகள் தரவில்லையென்று NBFC க்கு சென்று கடன் கேட்டால் வட்டி 13% க்கு மேல் இருக்கும். அதிலும் கிடைக்கவில்லையென்றால் app களில் கடன் வாங்க முற்படுவீர்கள். 


8️⃣ மாதாந்திர billகளை கட்ட தாமதித்தாலோ அல்லது கட்டவில்லையென்றாலோ…


9️⃣ நாளை வரப்போகும் வருமானத்தை வைத்து, இன்றே கடன் வாங்குவது. உதாரணமாக, நான்கு மாதங்கள் கழித்து உங்களுக்கு போனஸ் தொகை ௹2,50,000 வருகிறதென்று வைத்துக் கொள்வோம். அதற்கு காத்திராமல், இந்த மாதமே “அதான் நாலு மாசம் கழித்து வருதே, அத வச்சி அடைச்சிடலாம்” என்று நினைத்து கடன் வாங்கி செலவு செய்வது. 


🔟 ஏறும் வட்டி விகிதங்களை சமாளிக்க முடியாமல் திணறுவது. அதற்கு பணமில்லாமல் தவிப்பது. 


மேற்க்கண்ட எந்தவொரு சூழலிலும் சிக்காமல் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 


கடன் சூழலில் சிக்கித் தவிக்கும் அன்பர்கள் அதிலிருந்து விடுபட வேண்டுமென்று நினைத்தால், அதற்கு இரண்டே வழிகள் தான். 


1. வருமானத்தை உயர்த்துங்கள். 

2. செலவுகளை குறையுங்கள். 


சிந்தித்து, செலவழியுங்கள். 


வேளாண்மை மற்றும் தோட்டக்கலை குறித்த படிப்புகள்...



 வேளாண்மை மற்றும் தோட்டக்கலை குறித்த படிப்புகள் (Courses in Agriculture and Horticulture)...


கொரோனா தொற்றுக்கு பின்னர் அனைவரின் கவனமும் விவசாயம் பக்கம் திரும்பியுள்ளது. மாணவர்கள் மத்தியில் வேளாண்மைப் படிப்புகள் மீதான ஆர்வமும் அதிகரித்துவருகிறது. ஏனென்றால், இந்த கொரோனா மக்களுக்கு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பற்றிய முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது. 


ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவைப்படும் அடிப்படை தேவைகளில் ஒன்று உணவு. எனவே தான் எப்போதும் விவசாய படிப்புகளுக்கு மவுசு அதிகம். விவசாயத்துறையில் நாமும் சாதிக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பவராக இருந்தால் உங்களுக்கு நாங்கள் சில உதவிக்குறிப்புகளை வழங்குகிறோம். அதாவது, விவசாயத்துறையில் என்னென்ன படிப்புகள் உள்ளது. அவற்றில் எதை படித்தால் எதிர்காலத்தில் நமக்கு பயனுள்ளதாக இருக்கும் என உங்களுக்கு கூறுகிறோம். 


வேளாண் பொறியியல்....


தற்போதைய காலகட்டத்தில், வேளாண் பொறியியல் முக்கியத்துவம் நிறைந்த பட்டப்படிப்பாக மாறி வருகிறது. இது 4 ஆண்டுப் படிப்பாகும். பிளஸ் 2 பொதுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்ணையும், அந்த கல்வி நிறுவனங்கள் நடத்தும் தேர்வின் மதிப்பெண்ணையும் அடிப்படையாக வைத்து இப்படிப்பிற்கான மாணவ சேர்க்கை நடைபெறுகிறது. 


பொறியியல் மாணவர் சேர்க்கை மூலம் இந்த படிப்பையும், நீங்கள் விரும்பும் கல்லூரியையும் தேர்வு செய்யலாம். இந்த படிப்பில், வேளாண் துறைக்கு தேவையான கருவிகள், எந்திரங்களை வடிவமைப்பதே வேளாண் பொறியாளர்களின் வேலை. 


B.Sc வேளாண்மை (அக்ரிகல்ச்சர்)


வேளாண்மையில் இளங்கலை பட்டம் பெறுவதற்கான இந்த படிப்பை 4 ஆண்டுகள் படிக்க வேண்டும். 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்களை தேர்வு செய்த மாணவர்கள் இந்த படிப்பில் சேரலாம். இந்த படிப்பில், மரபியல் மற்றும் தாவர இனப்பெருக்கம், வேளாண்மை நுண்ணுயிரியல், மண் அறிவியல், தாவர நோய்க்குறியியல் போன்றவை மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. 


B.Sc (கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி)


கால்நடை வளர்ப்பு என்பது கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளை வளர்ப்பதற்கான விவசாய நடைமுறையாகும். கால்நடை வளர்ப்பு தொடர்பான இந்த படிப்பு 4 ஆண்டு இளங்கலை படிப்பு ஆகும். இதில் விவசாயத்திற்கு உதவும் கால்நடைகளை வளர்ப்பது எப்படி, பராமரிப்பது எப்படி மற்றும் அவற்றிற்கான உணவு முறை அமைப்பது எப்படி என்பதை மாணவர்கள் பயில்கின்றனர். ஆர்வமுள்ள மாணவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் வேதியியல், இயற்பியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றுடன் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றவர்கள் இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். 


B.Sc (வேளாண்மை மற்றும் பண்ணை மேலாண்மை)


வேளாண்மை தொடர்பான பொருளாதாரம் மற்றும் பண்ணை மேலாண்மை குறித்து இந்த படிப்பில் மாணவர்கள் பயிலுகின்றனர். இதுவும் ஒரு நான்கு ஆண்டு இளங்கலை படிப்பு ஆகும். 12 ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவு படித்தவர்கள் இந்த படிப்பில் சேரலாம். 


B.Sc (மரபணு தாவர இனப்பெருக்கம்)


மரபணு தாவர வளர்ப்பு தொடர்பான இந்த படிப்பில் மாணவர்கள் பயிரிடப்பட்ட தாவர இனங்களை மேம்படுத்த மரபியல் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். இந்த படிப்பு ஆனது 3 வருட இளங்கலை படிப்பு ஆகும். தாவர இனப்பெருக்கம் என்பது பயிரிடப்பட்ட தாவர இனங்களை மேம்படுத்த மரபியல் மற்றும் தொடர்புடைய அறிவியலின் பயன்பாடு ஆகும். 12 ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவு படித்தவர்கள் இந்த படிப்பில் சேரலாம். 


B.Sc (மீன்வளர்ப்பு)


இது 4 வருட இளங்கலை படிப்பு ஆகும். இந்த படிப்பில் மாணவர்கள் மீன்கள் மற்றும் அவற்றின் சூழலியல், உணவுப் பழக்கம், இனப்பெருக்க முறை போன்றவற்றை குறித்து படிக்கின்றனர். இந்த படிப்பை படிப்பதற்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி அவசியம். மீன்வள சூழலில் கடல்சார்வியல், லிம்னாலஜி, சூழலியல், பல்லுயிர் மற்றும் நீர்வாழ் மாசுபாடு ஆகியவை அடங்கும். மாணவர்கள் இப்படிப்பில் சேர்க்கை பெற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


B.Sc (வனவியல்)


வனவியலில் இளங்கலை அறிவியல் என்பது நான்கு வருட இளங்கலைப் படிப்பாகும், இது எட்டு சம செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு வனவியல் பற்றிய அறிவையும் பயிற்சியையும் வழங்குகிறது. வனவியல் திட்டம் மாணவர்களுக்கு காடுகளை நிர்வகித்தல், புதிய தோட்டங்கள், பழைய தோட்டங்களை பராமரித்தல் மற்றும் பிற இயற்கை வளங்களை பயிற்றுவிக்கிறது. 


வனவியல் தொழிலில் ஈடுபட ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் சாகச மனப்பான்மை, வெளிப்புற நடவடிக்கைகளில் ஆர்வம், உடல் தகுதி மற்றும் புதிய சூழலுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். உலகளாவிய கவலைகள் மற்றும் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது என்பதில் அவர்களுக்கு மிகுந்த ஆர்வம் இருக்க வேண்டும்.


B.Sc (மண் மேலாண்மை)


மண் மற்றும் நீர் மேலாண்மையில் இளங்கலை பட்டம் பெறுவதற்கு உதவும் இந்த படிப்பு 4 ஆண்டுகள் பயிற்றுவிக்கப்படும் ஒரு படிப்பு ஆகும். இதில் மாணவர்கள், மண்ணின் தரம் மற்றும் நீர் மேலாண்மையை மேம்படுத்துவதற்கான விவசாய ஆய்வுகளை செய்கின்றனர். மண் அரிப்பைக் கட்டுப்படுத்தும் வேளாண்மை மற்றும் பொறியியல் நடவடிக்கைகள் இதில் அடங்கும்.


B.Sc (பயிர் உடலியல்)


பலவகை பயிர்களின் அமைப்பு மற்றும் பயிர்களின் வாழ்கை முறை பற்றி பயிற்றுவிக்கப்படும் இந்த படிப்பு ஆனது 4 ஆண்டு இளங்கலை படிப்பு ஆகும். இந்த படிப்பில் சேர மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்களை படித்திருத்தல் வேண்டும்.


B.Sc (வேளாண்மை மற்றும் உணவு வணிகம்)


வேளாண்மை மற்றும் உணவு வணிகத்தில் இளங்கலை பட்டம் பெறுவதற்கு உதவும் இந்த படிப்பு ஒரு 4 ஆண்டு இளங்கலை படிப்பு ஆகும். இந்த படிப்பில் சேர மாணவ்கள் 12-ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்களை படித்திருத்தல் வேண்டும்.


மேற்கண்ட படிப்புகளை படித்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் வேளாண் நிறுவனங்கள், வேளாண் கருவி தயாரிப்பு நிறுவனங்கள், உர நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் போன்றவற்றிலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். விருப்பம் உள்ளவர்கள் வேளாண் படிப்பை தேர்வு செய்து பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குங்கள்.


அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 100 Mbps வேகம் கொண்ட இணைய சேவை இணைப்பு வழங்குதலை செயல்படுத்த மாவட்ட அளவிலான குழு அமைத்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு...



அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 100 Mbps வேகம் கொண்ட இணைய சேவை இணைப்பு வழங்குதலை செயல்படுத்த மாவட்ட அளவிலான குழு (ICT District Team) அமைத்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு - State Project Director has directed to set up a District Level Team (ICT District Team) to implement the provision of 100 Mbps internet service connection to Government Primary / Middle / High / Higher Secondary Schools...



>>> Click Here to Download SPD Letter...


8 ஆம் வகுப்பு - அரையாண்டுத் தேர்வு 2023 - விடைகள்...

 

 

8 ஆம் வகுப்பு -  அரையாண்டுத் தேர்வு 2023 - விடைக்குறிப்புகள் (Answer Key - Term 2 - Half Yearly Examination 2023 - 8th Standard)...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


7 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவத் தேர்வு 2023 - விடைகள்...

  


7 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவத் தேர்வு  2023 - விடைக்குறிப்புகள் (Answer Key - Term 2 - Summative Examination 2023 - 7th Standard)...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


6 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவத் தேர்வு 2023 - விடைகள்...

 

 


6 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவத் தேர்வு  2023 - விடைக்குறிப்புகள் (Answer Key - Term 2 - Summative Examination 2023 - 6th Standard)...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


6, 7, 8 ஆம் வகுப்புகள் - இரண்டாம் பருவத் தேர்வு / அரையாண்டுத் தேர்வு 2023 - விடைகள்...

 


6, 7, 8 ஆம் வகுப்புகள் - இரண்டாம் பருவத் தேர்வு / அரையாண்டுத் தேர்வு 2023 - விடைக்குறிப்புகள் (Answer Key - Term 2 - Summative / Half Yearly Examination 2023 - 6, 7, 8th Standard)...


🍁 6 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவத் தேர்வு  2023 - விடைகள்...



🍁 7 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவத் தேர்வு  2023 - விடைகள்...



🍁 8 ஆம் வகுப்பு -  அரையாண்டுத் தேர்வு 2023 - விடைகள்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

USA - Wildfires in California & Los Angeles - Hundreds of homes in ashes

அமெரிக்கா - கலிபோர்னியா & லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ - சாம்பலான நூற்றுக்கணக்கான வீடுகள் - காணொளி USA - Wildfires in California & Lo...