கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாநிலத் திட்ட இயக்குனர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாநிலத் திட்ட இயக்குனர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

SMC Meeting on 25-10-2024 - Guidelines - SPD Proceedings, Dated : 18-10-2024

 

 

 

 


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் School Management Committee கூட்டம் 25-10-2024 அன்று நடைபெறுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்பு - மாநிலத்‌ திட்ட இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌: 1342/A11 /பமேகு/ஒபக/2024, நாள்‌. 18-10-2024...



SMC Meeting on 25-10-2024 - Guidelines - SPD Proceedings, Dated : 18-10-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

SMC Meeting on 25-10-2024 - Agenda Addendum - SPD Proceedings, Dated : 22-10-2024

 

 

 


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 25-10-2024 அன்று நடைபெறுதல் - கூடுதல் கூட்டப் பொருள் சேர்க்கை (Addendum) - சார்பு - மாநிலத்‌ திட்ட இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌: 1342/A11 /பமேகு/ஒபக/2024, நாள்‌. 22-10-2024...


SMC Meeting on 25-10-2024 - Agenda Addendum - SPD Proceedings, Dated : 22-10-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 25.10.2024 - கூடுதல் கூட்டப் பொருள் சேர்க்கை - சார்ந்த கூடுதல் வழிகாட்டுதல்கள்...


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை - 600 006

மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

ந.க.எண்.1342/அ11/ஒபக/பமேகு/2024, நாள்:22/10/2024.


பொருள்: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 25-10-2024 அன்று நடைபெறுதல் – கூடுதல் கூட்டப் பொருள் சேர்க்கை (Addendum) - சார்பு.

பார்வை : 1. மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - ந.க. எண்.1342/C7/பமேகு/ஒபக/2024, நாள்:18.10.2024.

2. Director, Directorate of School Education, Chennai-6, R.C.No. 037289/M1/S1/2024 Dated:17.10.2024 


******

பார்வை-1-இன்படி பள்ளி மேலாண்மைக் குழுவின் முதல் கூட்டத்தினை 25.10.2024, வெள்ளிக்கிழமை அன்று பள்ளி மேலாண்மைக் குழு செயல்படும் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்காண் செயல்முறைகளில் உள்ள கூட்டப் பொருளில் கீழ்க்கண்டவாறு சேர்க்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


கூடுதல் கூட்டப் பொருள் சேர்க்கை

அ) போதை பொருள் இல்லாத தமிழ்நாடு (Drug Free Tamil Nadu):

சமூக சீர்கேடுகளில் போதைப் பொருள் பயன்பாடு மிக முக்கியமானதாக உள்ளது. எதிர்கால நற்சமூகத்தை உருவாக்கும் உயரிய பணியினைப் பள்ளிகள் மேற்கொள்கிறது என்றால் அது மிகையாகாது. ஆரோக்கியமான மாணவர் சமூகத்தை சீரழிக்கும் போதைப் பொருள்கள் பயன்பாடு மற்றும் அவற்றால் ஏற்படும் சமூக சீர்கேடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் எதிர்கால சமூகம் போதைப் பொருள் பயன்பாடு இல்லாத சமூகமாக உருவாகும்.  இதனை உறுதிசெய்ய பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் எவ்வாறு கீழ்க்காண் செயல்பாடுகளில் உதவமுடியும் என்பதை விவாதித்து தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.  

a) பார்வை-2-இன்படி அமைக்கப்பட்டுள்ள “பள்ளியளவில் போதைப் பொருள் பயன்பாடு எதிர்ப்பு குழு” வில் பள்ளி மேலாண்மைக் குழுவிலிருந்து ஒருவர் உறுப்பினராக பங்கேற்பதை உறுதிசெய்ய வேண்டும்.   

b) பள்ளிகளில் போதைப் பொருள் பயன்பாடு எதிர்ப்பு மன்றங்களை (Anti-drug club) உருவாக்கப்படுவதை பள்ளி மேலாண்மைக் குழு உறுதி செய்ய வேண்டும்.

c) ஒவ்வாரு நாளும் காலை அல்லது மதியம் அல்லது மாலை என வளாகம் முழுவதும் குறிப்பாக கழிவறைகள், விளையாட்டு மைதானம், பள்ளியின் சுற்றுச் சுவரின் இருபுறங்களிலும் புகையிலை, கூல்-லிப், சிகரெட் போன்ற பொருட்கள் கிடக்கின்றனவா என கண்காணிக்க வேண்டும்.

d) போதைப் பொருட்களை பயன்படுத்தும் மாணவர்களை அடையாளம் கண்டு பள்ளியளவில் போதைப் பொருள் பயன்பாடு எதிர்ப்பு குழு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

e) பள்ளி அருகில் வாசலில் கடைகளில் விற்கும் பொருட்கள் என்னென்ன என குழுவாக முன்னறிவிப்பு இல்லாமல் சென்று கவனித்து ஆசிரியர் ஒருங்கிணைப்பாளருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

f) பார்வை-2-இல் போதை எதிர்ப்பு மன்றச் செயல்திட்டங்களில்             (2024-2025) கொடுக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த பள்ளியுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

g) அனைத்துப் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் மாணவர்களின் உடல், மனநலப் பாதுகாப்பை மேம்படுத்த பள்ளி மேலாண்மைக் குழு உதவ வேண்டும். 


ஆ) பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POCSO)

பாலியல் தீங்குகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் குழந்தைகளிடம் பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் மற்றும் குழந்தைகளுக்குப் பாலியல் தொந்தரவுகள் குறித்தும் அத்தீங்குகளிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது குறித்தும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் விவாதித்து விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஏற்படுத்துவது. 

a) பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை உருவாக்க வேண்டும்.

b) பாலியல் துன்புறுத்தல் குறித்து நம்பிக்கையானவர்களிடம் தெரிவிப்பது மற்றும் அதுகுறித்துப் புகாரளிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். 

c) மாணவர்களிடையே ஏற்படும் நடத்தை மாற்றங்களை கண்காணித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ள வேண்டும்.

d) உள் புகார் குழு (Internal Compliant Committee-ICC) 

பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013 [The Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act, 2013] அடிப்படையில் ஆண், பெண் இருவரும் இணைந்து பணி செய்யும் இடங்களில் உள் புகார் குழு (Internal Compliant Committee-ICC) ஒன்று அனைத்து வகையான அரசுப் பள்ளிகளிலும் இருக்க வேண்டும். எனவே பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் உள் புகார் குழுவை ஏற்படுத்த பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். 


இ) பள்ளிக் கல்வித் துறையின் அழைப்பு மைய எண் 14417 மற்றும்  குழந்தைகள் உதவி மைய எண் 1098: 

a) அரசின் நலத்திட்டங்கள், பாடத் திட்டங்கள், தேர்வு முறைகள் மற்றும் மேற்படிப்பு சார்ந்த விவரங்கள், வளரிளம் பருவத்தினருக்கான மனநிலை சார்ந்த அறிவுரைகள், தேர்வுக்காக தயார்ப்படுத்துதல், தேர்வை எதிர்கொள்வது மற்றும் தேர்வு முடிவுகள் குறித்த பயத்தைப் போக்குதல் போன்ற தகவல்கள், ஆலோசனைகளை 14417 இலவச அழைப்பு மைய எண் வாயிலாக பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அறிந்துகொள்ள முடியும் என்பது குறித்து பள்ளி மேலாண்மைக் குழுவில் அவசியம் பகிர்ந்துகொள்ள வேண்டும். 

b) குழந்தைகள் நலன், பாதுகாப்பு, குழந்தைத் திருமணங்கள் தடுப்பு சார்ந்த சந்தேகங்கள், மற்றும் தகவல் அளித்திட 1098 குழந்தைகள் உதவி மைய எண்ணை தொடர்புகொள்ளலாம் என்கிற விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஏற்படுத்த வேண்டும். 

c) மேற்காண் உதவி மைய எண்களை பள்ளி வளாகம், மக்கள் கூடும் பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 


ஈ) விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்குவிப்பது:

மாணவர்களிடையே விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளி வகுப்பு நேரம் முடிந்த பிறகு சிறப்பு விளையாட்டு வகுப்புகள் நடத்திடவும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கீழக்காண் செயல்பாடுகளை மேற்கொள்வது குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

a) மாணவர்கள் விளையாட்டு பயிற்சிகள் மேற்கொள்ள தேவையான விளையாட்டுப் பொருட்கள், விளைாயட்டு மைதானம் மற்றும் முறையான பயிற்சியாளர் போன்ற ஏற்பாடுகள் நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி (NSNOP)  திட்டம் வாயிலாக பெற தீர்மானம் நிறைவேற்றலாம்.

b) ஒவ்வொரு வருடமும் Battery test முறையாக நடத்தப்படுவதை பள்ளி மேலாண்மைக் குழு உறுதி செய்ய வேண்டும். 

c) மாவட்ட, மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

d) விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதன் சாதக பலன்கள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஏற்படுத்த வேண்டும். 


உ)  திறந்த வெளி மலம் கழித்தல் தடுத்தல் (Prevention of Open Defecation): 

திறந்த வெளி மலம் கழித்தலால் பொது சுகாதாரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு பல வகையான தொற்று நோய்கள் ஏற்பட இவை முக்கியக் காரணியாக உள்ளது. பள்ளி வளாகம், பள்ளிக்கு வரும் வழியில், தெருக்களில், பொது இடங்களில் மலம் கழிப்பதை தடுத்தல் வாயிலாகப் பொது சுகாதாரம் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் ஆலோசித்து தீர்மானங்கள் நிறைவேற்றி, இதுகுறித்து கிராம சபைக் கூட்டங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்.     

a) பள்ளிகளில் உள்ள கழிவறைகள் போதிய தண்ணீர் வசதியுடன், பயன்படுத்தும் வகையில் இருப்பதை பள்ளி மேலாண்மைக் குழு உறுதி செய்ய வேண்டும்.

b) கழிவறைகள் பயனற்ற நிலையில் இருப்பது, நீரிணைப்பு இல்லாமல் இருப்பது, போதிய எண்ணிக்கையில் கழிவறைகள் இல்லாமல் இருப்பது உள்ளிட்ட தேவைகளை ஆலோசித்து பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

c) மாணவர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளிலும் திறந்தவெளி மலம் கழித்தல் பிரச்னைகள் இருப்பின், அதுகுறித்த விவரங்களை பள்ளி மேலாண்மைக்கு குழு கூட்டத்தில் பகிர்ந்து உரிய தீர்மானங்களை நிறைவேற்றி கிராம சபைக் கூட்டங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

மேற்காண் கூடுதல் கூட்டப் பொருள்களை (Addendum) சேர்த்து பள்ளி மேலாண்மைக் குழுவின் கூட்டத்தில் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றிட தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




மாவட்டத் திட்ட இயக்குநருக்காக


பெறுநர்:

 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 

(அனைத்து மாவட்டங்கள்)


நகல்: (மின்னஞ்சல் வாயிலாக)

1. அரசுச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை, சென்னை-9.

2. அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்

3. இயக்குநர், பள்ளிக் கல்வித் துறை 

4. இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம்


Kalai Thiruvizha - CRC and Block Level Competitions - Guidelines - Regarding - SPD Proceedings, Dated: 30.09.2024...

 

 பள்ளிக்‌ கல்வி - 1 முதல்‌ 5 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கான  குறுவளமைய மற்றும்‌ வட்டார அளவிலான போட்டிகள்‌ - 6 முதல்‌ 12-ம்‌ வகுப்பு வரை மாணவர்களுக்கான வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள்‌ - குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்‌- சார்ந்து - தமிழ்நாடு ஒருங்கிணைந்தப்‌ பள்ளிக்‌ கல்வி மாநில திட்ட இயக்குநர்‌ செயல்முறைகள் கடிதம் ந.க.எண்‌.2183/ஆ8/கலைத்திருவிழா/ஒபக/2024, நாள்‌: 30.09.2024...


Kalai Thiruvizha - Cluster Resource Center and Block Level Competitions for Class 1 to 5 Students - Detailed Guidelines on Block Level Art Festival Competitions for Class 6 to 12 Students - Regarding - Proceedings Letter of Tamil Nadu State Project Director of Samagra Shiksha Rc.No.2183/A8/Kalai thiruvizha/SS/2024, Dated: 30.09.2024...



தமிழ்நாடு ஒருங்கிணைந்தப்‌ பள்ளிக்‌ கல்வி


அனுப்புநர்‌ 

Dr. மா. ஆர்த்தி, இ.ஆ.ப. 

மாநில திட்ட இயக்குநர்‌ 

ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி ,

சென்னை- 600006.


பெறுநர்‌

முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌,

அனைத்து மாவட்டங்கள்‌.



ந.க.எண்‌. 2183 / ஆ8 / கலைத்திருவிழா /ஒபக / 2024, நாள்‌: 30.09.2024


பொருள்‌:  பள்ளிக்‌ கல்வி - 1 முதல்‌ 5 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கான  குறுவளமைய மற்றும்‌ வட்டார அளவிலான போட்டிகள்‌ - 6 முதல்‌ 12-ம்‌ வகுப்பு வரை மாணவர்களுக்கான வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள்‌ - குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்‌- சார்ந்து.


பார்வை: 

1) பள்ளிக்‌ கல்வித்துறை- ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி மாநில திட்ட இயக்குநர்‌, பள்ளிக்‌ கல்வி இயக்குநர்‌ மற்றும்‌ தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ இணைச்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.2183/ஆ8/ கலைத்‌ திருவிழா/ ஒபக/2024, நாள்‌ : 09.08.2024

2) மாநில திட்ட இயக்குநரின்‌ கடித எண்‌ 2183/ஆவ/கலைத்திருவிழா/ஒபக/2024 நாள்‌ 22.08.2024.

3) மாநில திட்ட இயக்குநர்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.2183/ஆ8/கலைத்திருவிழா/ஓபக/2024, நாள்‌: 27.08.2024


*******


பார்வை-1ல்‌ காணும்‌ இணைச்‌ செயல்முறைகளின்படி, 2024-2025 ஆம்‌ ஆண்டில்‌, 1 முதல்‌ 12 வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்காக, பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகள்‌ நடத்துதல்‌ சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள்‌ வழங்கப்பட்டுள்ளது.


பார்வை-2ல்‌ காணும்‌ செயல்முறைகளின்படி 1 முதல்‌ 5-ம்‌ வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான குறுவள மற்றும்‌ வட்டார அளவிலான போட்டிகள்‌ EMIS தளத்தின்‌ வாயிலாகவே நடைபெறும்‌ என தெரிவிக்கப்பட்டிருந்தது.



>>> தமிழ்நாடு ஒருங்கிணைந்தப்‌ பள்ளிக்‌ கல்வி மாநில திட்ட இயக்குநர்‌ செயல்முறைகள் கடிதம் ந.க.எண்‌.2183/ஆ8/கலைத்திருவிழா/ஒபக/2024, நாள்‌: 30.09.2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



.



>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


நுழை , நட , ஓடு , பற என நான்கு நிலைகளில் புத்தகங்கள் தயாரித்தல் - கதைகள் வரவேற்றல் - ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் படைப்புகளை பள்ளியின் EMIS login வழியே அனுப்புதல் - சார்பு - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம், நாள்: 27-05-2024...


நுழை , நட , ஓடு , பற - புத்தக உருவாக்கத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் படைப்புகளுக்கு முக்கியத்துவம் - SPD Proceedings...


மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த நுழை, நட, ஓடு, பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரித்தல் - SPD செயல்முறைகள்...


தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவதற்காக வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது . இதில் குழந்தைகளின் வாசிப்பு நிலைகளுக்கு ஏற்ப நுழை , நட , ஓடு . பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன.



 முதல் கட்டமாக 53 புத்தகங்கள் வழங்கப்பட்டு, இரண்டாம் கட்டமாக 70 புத்தகங்கள் அச்சிடப்பட்டு , அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட உள்ளன . மேலும் , இக்கல்வியாண்டில் அடுத்தகட்டமாக 127 புத்தகங்கள் உருவாக்கப்பட உள்ளன.



இப்புத்தக உருவாக்கத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட உள்ளது . அனைத்து வகை அரசுப் பள்ளிகள் , அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களது படைப்புகளை அனுப்பலாம்.



நுழை , நட , ஓடு , பற என நான்கு நிலைகளில் புத்தகங்கள் தயாரித்தல் - கதைகள் வரவேற்றல் - ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் படைப்புகளை பள்ளியின் EMIS login வழியே அனுப்புதல் - சார்பு - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம், நாள்: 27-05-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 100 Mbps வேகம் கொண்ட இணைய சேவை இணைப்பு வழங்குதலை செயல்படுத்த மாவட்ட அளவிலான குழு அமைத்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு...



அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 100 Mbps வேகம் கொண்ட இணைய சேவை இணைப்பு வழங்குதலை செயல்படுத்த மாவட்ட அளவிலான குழு (ICT District Team) அமைத்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு - State Project Director has directed to set up a District Level Team (ICT District Team) to implement the provision of 100 Mbps internet service connection to Government Primary / Middle / High / Higher Secondary Schools...



>>> Click Here to Download SPD Letter...


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர், EMIS நிர்வாகத் தலைவராகவும் செயல்படுவார் - அரசாணை வெளியீடு...


G.O. 205 - EMIS - ற்கு புதிய Administrative Head Officer நியமனம் - அரசாணை வெளியீடு...


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர், EMIS நிர்வாகத் தலைவராகவும் செயல்படுவார் - அரசாணை வெளியீடு (G.O. (1D) No 205, Dated: 15-12-2023 - School Education - Education Management Information System (EMIS) - Appointment of The State Project Director, Samagra Shiksha as the Administrative Head of EMIS – Issue of Ordinance)...



>>> Click Here to Download G.O. (1D) No 205, Dated: 15-12-2023...



இல்லம் தேடி கல்வி (ITK) - தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு 20.02.2023 அன்று பயிற்சி - மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் (SPD Proceedings) - Illam Thedi Kalvi - Training for Primary Level Volunteers on 20.02.2023 - SPD Proceedings...


>>> இல்லம் தேடி கல்வி (ITK) - தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு  20.02.2023 அன்று பயிற்சி - மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் (SPD Proceedings) - Illam Thedi Kalvi - Training for Primary Level Volunteers on 20.02.2023 - SPD Proceedings...




ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இல்லம் தேடிக் கல்வி - தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தல் - இதற்காக தேவைப்படும் நிதியினை 38 மாவட்டங்களுக்கும் விடுவித்தல் தொடர்பாக SPD அவர்களின் செயல்முறைகள்...


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - கல்வி சாரா செயல்பாடுகள் - 2022-2023 - மாநில அளவிலான "கலைத் திருவிழா போட்டிகள்" (Kalai Thiruvizha) 27.12.2022 முதல் 30.12.2022க்குள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 3195/ ஆ7/ கலை/ ஒபக/ 2022, நாள்: 22-12-2022 (Samagra Shiksha - Extra Curricular Activities - Conduct of State Level "Art Festival Competitions" in Government Schools during the Academic Year 2022-2023 from 27.12.2022 to 30.12.2022 - Guidelines - Regarding - State Project Director's Proceedings)...

 


>>> ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - கல்வி சாரா செயல்பாடுகள் - 2022-2023 - மாநில அளவிலான "கலைத் திருவிழா போட்டிகள்" (Kalai Thiruvizha) 27.12.2022 முதல் 30.12.2022க்குள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 3195/ ஆ7/ கலை/ ஒபக/ 2022, நாள்: 22-12-2022 (Samagra Shiksha -  Extra Curricular Activities - Conduct of State Level "Art Festival Competitions" in Government Schools during the Academic Year 2022-2023 from 27.12.2022 to 30.12.2022 - Guidelines - Regarding - State Project Director's Proceedings)...



>>>  மாநில அளவிலான கலைத் திருவிழா - கோவையில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த தகவல்கள்...



>>> மாநில அளவிலான கலைத் திருவிழா - மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் கடிதம்...








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள், பிஸியோதெரபிஸ்ட்கள் மற்றும் பள்ளி ஆயத்த பயிற்சி மைய பராமரிப்பாளர், உதவியாளர் ஆகியோருக்கு நவம்பர் 2022 முதல் ஊதிய உயர்வு வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் (Pay Increase to special educators and therapists at elementary level and Helper/ Ayah and Care-giver / Attendant in IE centres with effect from 01.11.2022 - Proceedings of the State Project Director - Rc.No.4600/B8/SS/2022,dated 15.12.2022)...

 

>>> ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள், பிஸியோதெரபிஸ்ட்கள் மற்றும் பள்ளி ஆயத்த பயிற்சி மைய பராமரிப்பாளர், உதவியாளர் ஆகியோருக்கு நவம்பர் 2022 முதல் ஊதிய உயர்வு வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் (Pay Increase to special educators  and therapists at elementary level  and Helper/ Ayah and Care-giver / Attendant in IE centres with effect from  01.11.2022 - Proceedings of the State Project Director - Rc.No.4600/B8/SS/2022,dated 15.12.2022)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




Proceedings of the State Project Director, 

Samagra Shiksha, Chennai- 600006. 

Present: Thiru.R.Sudhan, I.A.S., 

Rc.No.4600/B8/SS/2022,dated 15.12.2022. 

Sub: Samagra Shiksha - Pay Increase to special educators  and therapists at elementary level  and Helper/ Ayah and Care-giver / Attendant in IE centres with effect from  01.11.2022 - Orders issued. 

Ref: Circulation agenda dated 15.12.2022 

***** 

As per the reference cited above, the Pay for the Special  Educators & Therapists both under IE head and BRC head at the  Elementary Level is enhanced from Rs.18,000/- to Rs.20,000/- with  effect from 01.11.2022. The pay for the Helper/ayah and Care-giver / Attendant working in the Day care centre/SRP centre/IE centre is  enhanced from Rs.3,250/- to Rs.4,500/- for Helper/Ayah , and  Rs.5,750/- to Rs.7,000/- for Care-giver/Attendant respectively with  effect from 01.11.2022. The existing pay for Helper/Ayah and Care- giver/ Attendant shall be met out from the OoSC head and the  additional expenditure shall be met out from the MMER head. 

State Project Director

Copy to: 

1. The District Educational Officer/ Administrative Officer. 

2. Bill Section. 

3. Stock File.


மாதிரிப் பள்ளிகள் (Model School) - முதுகலை பாட ஆசிரியர்கள் - ஆஷா நிவாஸ் சமூக சேவை மையத்தில் முந்தைய ஆண்டு நீட் (NEET) தேர்வு வினாத்தாட்களைத் தட்டச்சு செய்ததில் பிழைத்திருத்தம் மேற்கொள்ளுதல் - ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க அறிவுறுத்துதல் -மாநில திட்ட இயக்குநரின் கடிதம் (Model Schools - Post Graduate Teachers - Correction of typing of previous year NEET question papers in Asha Niwas Social Service Center - Directing Relieving of Teachers - Letter from State Project Director)...



>>> மாதிரிப் பள்ளிகள் (Model School) - முதுகலை பாட ஆசிரியர்கள் - ஆஷா நிவாஸ் சமூக சேவை மையத்தில் முந்தைய ஆண்டு நீட் (NEET) தேர்வு வினாத்தாட்களைத் தட்டச்சு செய்ததில் பிழைத்திருத்தம் மேற்கொள்ளுதல் - ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க அறிவுறுத்துதல் -மாநில திட்ட இயக்குநரின் கடிதம் (Model Schools - Post Graduate Teachers - Correction of typing of previous year NEET question papers in Asha Niwas Social Service Center - Directing Relieving of Teachers - Letter from State Project Director)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - கல்வி சாரா செயல்பாடுகள் - 2022-2023ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாநில அளவிலான "கலைத் திருவிழா போட்டிகள்" (Kalai Thiruvizha) 27.12.2022 முதல் 30.12.2022க்குள் நடத்துதல் - சார்ந்து - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 3195/ ஆ7/ கலை/ ஒபக/ 2022, நாள்: 07-12-2022 (Samagra Shiksha - Extra Curricular Activities - Conduct of State Level "Art Festival Competitions" in Government Schools during the Academic Year 2022-2023 from 27.12.2022 to 30.12.2022 - Regarding - State Project Director's Proceedings)...


>>> ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - கல்வி சாரா செயல்பாடுகள் - 2022-2023ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாநில அளவிலான "கலைத் திருவிழா போட்டிகள்" (Kalai Thiruvizha) 27.12.2022 முதல் 30.12.2022க்குள் நடத்துதல் - சார்ந்து - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 3195/ ஆ7/ கலை/ ஒபக/ 2022, நாள்: 07-12-2022 (Samagra Shiksha -  Extra Curricular Activities - Conduct of State Level "Art Festival Competitions" in Government Schools during the Academic Year 2022-2023 from 27.12.2022 to 30.12.2022 - Regarding - State Project Director's Proceedings)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


12ஆம் வகுப்பு மாணவர்களின் உத்தேச உயர் கல்வி விருப்பப் பாடப் பிரிவுகள் அறிதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Knowing the Intended Higher Education Optional Courses of Class 12th Students - State Project Director's Proceedings) ந.க.எண்: ACE/ 118/ ஆ3/ CG-10/ ஒபக/ 2022, நாள்: 02-12-2022...

 


>>> 12ஆம் வகுப்பு மாணவர்களின் உத்தேச உயர் கல்வி விருப்பப் பாடப் பிரிவுகள் அறிதல் -  மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Knowing the Intended Higher Education Optional Courses of Class 12th Students - State Project Director's Proceedings) ந.க.எண்: ACE/ 118/ ஆ3/ CG-10/ ஒபக/ 2022, நாள்: 02-12-2022...



>>>  உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




பள்ளிகளில் SHWAAS மராத்திய மொழி சிறார் திரைப்படம் திரையிடல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 4015/ஆ7/ஒபக/2022, நாள்: 01.12.2022 மற்றும் திரைப்பட கதை சுருக்கம் (SHWAAS Marathi Language Juvenile Film Screening in Schools – State Project Director Proceedings and Film Synopsis)...



>>> பள்ளிகளில் SHWAAS மராத்திய மொழி சிறார் திரைப்படம் திரையிடல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 4015/ஆ7/ஒபக/2022, நாள்:  01.12.2022 மற்றும் திரைப்பட கதை சுருக்கம் (SHWAAS Marathi Language Juvenile Film Screening in Schools – State Project Director Proceedings and Film Synopsis)...



>>> நாளை (05-12-2022) அன்று அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒளிபரப்ப வேண்டிய மராத்திய மொழி SHWAAS சிறார் திரைப்படம் - இணைப்பு...



>>> தமிழ்த்தாய் வாழ்த்து - சைகை மொழிப் பாடல் (அனைத்து பள்ளிகளிலும், திங்கள்கிழமை குழந்தைகள் திரைப்படம் திரையிடலுக்கு முன், சைகை மொழிப் பாடல் திரையிட வேண்டும்)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - SNA வங்கிக் கணக்கு - பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர்களுக்கான வட்டார வள மைய அளவிலான பயிற்சி - தொடர்பாக - SPD செயல்முறைகள் கடிதம் (Samagra Shiksha - Single Nodal Agency - Block Resource Centre level training for School HMs and SMC Presidents - Regarding - SPD Proceedings) Rc. No.2223 / C7 / SMC / 2022, Dated .11.2022....


>>> ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - SNA வங்கிக் கணக்கு - பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர்களுக்கான வட்டார வள மைய அளவிலான பயிற்சி - தொடர்பாக - SPD செயல்முறைகள் கடிதம் (Samagra Shiksha - Single Nodal Agency - Block Resource Centre level training for School HMs and SMC Presidents - Regarding - SPD Proceedings) Rc. No.2223 / C7 / SMC / 2022, Dated  .11.2022....





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு முடித்து உயர் கல்வி தொடராத 777 மாணவர்கள் 18.11.2022க்குள் கல்லூரிகளில் சேருதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (777 students who completed 12th standard in Government Higher Secondary Schools and did not pursue higher education by 18.11.2022 depending on admission in colleges Proceedings of State Project Director) ந.க.எண்: ACE/ 118/ ஆ3/ CG-8/ ஒபக/ 2022, நாள்: 14-11-2022...


>>> அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு முடித்து உயர் கல்வி தொடராத 777 மாணவர்கள் 18.11.2022க்குள் கல்லூரிகளில் சேருதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (777 students who completed 12th standard in Government Higher Secondary Schools and did not pursue higher education by 18.11.2022 depending on admission in colleges Proceedings of State Project Director) ந.க.எண்: ACE/ 118/ ஆ3/ CG-8/ ஒபக/ 2022, நாள்: 14-11-2022...


14.11.2022 அன்று "குப்பச்சிகளு" கன்னட திரைப்படம் திரையிடுதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Screening of Kannada Movie "Gubbachigalu" on 14.11.2022 - Proceedings of State Project Director) ந.க.எண்: 4015/ ஆ7/ ஒபக/ 2022, நாள்: 11-11-2022...


>>> 14.11.2022 அன்று "குப்பச்சிகளு" கன்னட திரைப்படம் திரையிடுதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Screening of Kannada Movie "Gubbachigalu" on 14.11.2022 - Proceedings of State Project Director) ந.க.எண்: 4015/ ஆ7/ ஒபக/ 2022, நாள்: 11-11-2022...



>>> படத்தை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் (Click Here to Download Film) - File Size : 272MB (Small Size)...



>>> படத்தை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் (Click Here to Download Film) - File Size : 1.5GB (Original File)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



2022-2023ஆம் நிதியாண்டு அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மானியம் தொகை - மாவட்டங்களுக்கு நிதி பகிர்ந்தளித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (2022-2023 Financial Year - Composite School Grants for Government Primary, Middle, High and Higher Secondary Schools - Distribution of Funds to Districts - Issuance of Guidelines - Proceedings of the State Project Director of Samagra Shiksha) ந.க. எண்: 08/ ஒபக/ SCG/ 2022, நாள்: 10-2022...


>>> 2022-2023ஆம் நிதியாண்டு அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மானியம் தொகை -   மாவட்டங்களுக்கு நிதி பகிர்ந்தளித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (2022-2023 Financial Year - Composite School Grants for Government Primary, Middle, High and Higher Secondary Schools - Distribution of Funds to Districts - Issuance of Guidelines - Proceedings of the State Project Director of Samagra Shiksha) ந.க. எண்: 08/ ஒபக/ SCG/ 2022, நாள்: 10-2022...


6 - 12 வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு அக்டோபர் 11 முதல் 14 வரை மாநில அளவில் 2 நாட்கள் STEM பயிற்சி - SPD செயல்முறைகள் (State Level 2 Days STEM Training from October 11th to 14th for Teachers Handling Classes 6 - 12 - SPD Proceedings)...


>>> 6 - 12 வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு மாநில அளவில் 2 நாட்கள் STEM பயிற்சி - SPD செயல்முறைகள் (State Level 2 Days STEM Training for Teachers Handling Classes 6 - 12 - SPD Proceedings)...


2 Days STEM Training for Teachers - SPD Proceedings


Samagra Shiksha - STEM Geo Gebra - State Level Key Resource Person Training for 4 days from 11.10.2022 to 14.10.2022 - To depute Teachers to attend the training Regarding...


 




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Live Webinar Link for Head Masters and English Teachers

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link  (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...