கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பத்மஸ்ரீ விருதை திருப்பியளிக்கும் மேலும் ஒரு மல்யுத்த வீரர்...

பத்மஸ்ரீ விருதை திருப்பியளிக்கும் மேலும் ஒரு மல்யுத்த வீரர்...



இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக வீராங்கனைகளால் பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் ஒரு மல்யுத்த வீரர் தனது பத்மஸ்ரீ விருதினை திருப்பியளிப்பதாக தெரிவித்துள்ளார்.


இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


பிரிஜ் பூஷண் சிங்கின் ஆதரவாளர் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக சாக்‌ஷி மாலிக் மீடியா சந்திப்பில் அழுதபடி அறிவித்தார்.



 அதனைத் தொடர்ந்து, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பியளிப்பதாக தெரிவித்தார்.



இந்த நிலையில், காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங் யாதவ் தனது பத்மஸ்ரீ விருதினை திருப்பியளிப்பதாக தெரிவித்துள்ளார்.



வீடு விற்பனை நிலவரம் அறிய வீட்டுவசதி வாரிய புதிய இணையதளம் அறிமுகம்...

 


வீடு விற்பனை நிலவரம் அறிய வீட்டுவசதி வாரிய புதிய இணையதளம் அறிமுகம்...


வீட்டுவசதி வாரிய திட்டங்களில், விற்பனைக்கு தயாராக உள்ள வீடுகள் விவரங்களை எளிதாக அறிய, புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.


வீட்டுவசதி திட்டங்கள் குறித்த விபரங்களை பொது மக்கள் அறிவதில், பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. கோட்ட அலுவலகம் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்களில், வீடுகள் இருப்பு அறிய, அந்த அலுவலகத்தை பொது மக்கள் அணுகுகின்றனர்.


ஆனால், அங்குள்ள பணியாளர்கள் முறையான விவரங்களை அளிப்பதில்லை. இதேபோன்று, வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் தவணை செலுத்துவதிலும், வாடகை செலுத்துவதிலும் சிக்கல் ஏற்படுகிறது.


இதற்காக, சில ஆண்டுகளுக்கு முன், வீட்டுவசதி வாரியத்துக்கு என பிரத்யேகமாக, ஒரு இணையதளம் துவக்கப்பட்டது. அதில் முழுமையான விபரங்கள், பொது மக்களுக்கு கிடைப்பதில்லை என புகார் எழுந்தது. இந்த இணையதளமும் முறையாக செயல்படாமல் முடங்கியது.


இதற்கு தீர்வாக, புதிய இணையதளம் ஏற்படுத்த, வீட்டுவசதி வாரியம் முடிவு செய்தது. அதன்படி, tnhb.tn.gov.in என்ற பெயரில் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டது. இந்த இணையதளத்தை, வாரிய தலைவர் பூச்சி முருகன் துவக்கி வைத்தார்.


நவீனமாக இல்லாமல் இருப்பதாக விமர்சனங்கள் - சென்னை வானிலை மையம் விளக்கம்...

  நவீனமாக இல்லாமல் இருப்பதாக விமர்சனங்கள் - சென்னை வானிலை மையம் விளக்கம்...


சென்னை வானிலை மையம் நவீனமாக இல்லாமல் இருப்பதாக தவறான விமர்சனங்கள் ஊடகங்களில் வெளியாகி வருகிறது.


இந்திய வானிலை துறையில் இருக்கும் அதிவேக கணினிகள், ரேடார்கள், செயற்கைக்கோள் வசதிகள் உலகத்தரத்திற்கு ஒப்பானது .


சென்னை மண்டல வானிலை மையத்திலும் இத்தகைய கருவிகளே பயன்பாட்டில் உள்ளன.


சென்னை வானிலையை கண்காணிக்க 2 டாப்ளர் ரேடார்களும், தென் தமிழகத்தை கண்காணிக்க 3 டாப்ளர் ரேடார்களும் பயன்பாட்டில் உள்ளன.


இதில் X band வகை ரேடார் இஸ்ரோ தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டதாகும்.


இந்தியாவில் சிறந்த ரேடார் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னை வானிலை மையத்தில் பணியாற்றுகிறார்கள்.


இந்திய வானிலை ஆய்வு துறையின் கட்டமைப்பு, முன்னெச்சரிக்கைகளை உலக வானிலை அமைப்பு பாராட்டியுள்ளது.


வர்தா, கஜா, மிக்ஜாம் புயல்கள் குறித்து வானிலை மைய எச்சரிக்கைகள் காரணமாக பெருமளவு உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.


சென்னை வானிலை மையத்தை இலக்காக வைத்து செய்யப்படும் விமர்சனங்கள், வானிலை மைய பணியாளர்களை புண்படுத்தும் விதமாக உள்ளது - வானிலை மையம்...




முன்னதாக அன்புமணி இராமதாசு அவர்கள் பேட்டியில் தெரிவித்த கருத்துகள்...




35 போலீஸ் டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம்...



35 போலீஸ் டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்...


1. அடையாறு காவல் உதவி ஆணையராக இருந்த நெல்சன் தாம்பரம் உதவி ஆணையராக மாற்றம். 


2. காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருள் செல்வன் தாம்பரம் போக்குவரத்து காவல்துறை புலனாய்வு பிரிவு உதவி ஆணையராக மாற்றம். 


3. திருவள்ளு மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணையத்தின் டிஎஸ்பியாக இருந்த இளங்கோவன் சென்னை திருவொற்றியூர் காவல் உதவி ஆணையராக மாற்றம். 


4. ஆவடி பட்டாபிராம் காவல் உதவி ஆணையராக இருந்த சதாசிவம் வண்ணாரப்பேட்டை காவல் உதவி ஆணையராக மாற்றம்.


5. தாம்பரம் சேலையூர் காலல் உதவி ஆணையராக இருந்த முருகேசன் சென்னை அடையாறு காவல் உதவி ஆணையராக மாற்றம். 


6. தாம்பரம் காவல் உதவி ஆணையராக இருந்த சீனிவாசன் சென்னை சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையராக மாற்றம். 


7. சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையராக இருந்த மோகன் கடலூர் திட்டக்குடி டிஎஸ்பியாக மாற்றம். 


8. சென்னை சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையராக இருந்த கிறிஸ்டின் ஜெயசீலி தாம்பரம் சேலையூர் காவல் உதவி ஆணையராக மாற்றம். 


9. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜி.கே.கண்ணன் தமிழக காவல்துறை தொலைத்தொடர்பு பிரிவு டிஎஸ்பி.


10. காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுபகுமார் மதுரை நகர திடீர் நகர் காவல் உதவி ஆணையராக மாற்றம். 


11. திருப்பூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவின் டிஎஸ்பியாக இருந்த விஜயகுமார் நாமக்கல் மாவட்ட ராசிபுரம் காவல் டிஎஸ்பியாக மாற்றம். 


12. மயிலாடுதுறை மாவட்ட சீர்காழி காவல் டிஎஸ்பியாக இருந்த அகஸ்டின் ஜோசுவா லானெச் மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் டிஎஸ்பியாக மாற்றம். 


13. தேனி மாவட்ட பெரியகுளம் காவல் டிஎஸ்பியாக இருந்த கீதா தமிழக காவல்துறை சைபர் கிரைம் பிரிவு டிஎஸ்பியாக மாற்றம். 


14. திருநெல்வேலி டவுன் காவல் உதவி ஆணையராக இருந்த சுப்பையா திண்டுக்கல் மாவட்ட பழனி காவல் டிஎஸ்பியாக மாற்றம். 


15. திருநெல்வேலி நகர குற்ற ஆவண காப்பகப் பிரிவின் காவல் உதவி ஆணையராக இருந்த சரவணன் ஈரோடு மாவட்ட சத்தியமங்கலம் காவல் டிஎஸ்பியாக மாற்றம். 


• செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!

• https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29


16. தூத்துக்குடி மாவட்ட விளாத்திகுளம் காவல் டிஎஸ்பியாக இருந்த ஜெயச்சந்திரன் கோவை மாவட்டம் பொள்ளாச்சி காவல் டிஎஸ்பியாக மாற்றம். 


17. முதல்வர் பாதுகாப்பு பிரிவில் (Core cell) டிஎஸ்பியாக இருந்த கந்தவேலு சென்னை காவல்துறை (கிழக்கு) மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் உதவி ஆணையராக மாற்றம். 


18. நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் டிஎஸ்பியாக இருந்த சிவக்குமார் திருப்பூர் மாவட்ட அவினாசி காவல் டிஎஸ்பியாக மாற்றம். 


19. கோவை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாக இருந்த கிருஷ்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.


20. ராமநாதபுரம் சரக காவல் பயிற்சி பிரிவு டிஎஸ்பி சுரேஷ் தமிழ்நாடு போலீஸ் அகாடமி போலீஸ் டிஎஸ்பியாக மாற்றம். 


21. தமிழ்நாடு காவல்துறை சைபர் கிரைம் பிரிவு டிஎஸ்பியாக இருந்த உவ பிரியா (P.Uva Priya) காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். 


22. கடலூர் மாவட்ட பண்ருட்டி  டி எஸ் பி யாக இருந்த சபியுல்லா கடலூர் மாவட்ட நெய்வேலி காவல் டிஎஸ்பியாக மாற்றம். 


23. காத்திருப்போர் பட்டியலில் இருந்த தீபு திருநெல்வேலி நகர உளவுப்பிரிவு உதவி ஆணையராக மாற்றம். 


24. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரவிக்குமரன் தமிழ்நாடு சீருடை பணியயாளர் தேர்வாணைய பிரிவின் டிஎஸ்பியாக மாற்றம். 


25. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆல்டிரின் தாம்பரம் காவல் ஆணையரக நலப்பிரிவின் உதவி ஆணையராக மாற்றம்.


26. காத்திருப்போர் பட்டியலில் இருந்த கார்த்திக் முதல்வர் பாதுகாப்பு பிரிவு (Core cell) டிஎஸ்பியாக மாற்றம். 


27. காத்திருப்போர் பட்டியலில் இருந்த அன்பரசன் தஞ்சாவூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாக மாற்றம்.


28. காத்திருப்போர் பட்டியலில் இருந்த பூரணி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் டிஎஸ்பியாக மாற்றம். 


29. காத்திருப்போர் பட்டியலில் இருந்த தையல்நாயகி கோவை மாவட்ட மின்பகிர்மான கழக விஜிலென்ஸ் பிரிவு டிஎஸ்பியாக மாற்றம். 


30. தாம்பரம் மணிமங்கலம் காவல் உதவி ஆணையராக இருந்த ரவி தாம்பரம் காவல் ஆணையரக நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக மாற்றம். 


31. கோவை மாவட்ட பேரூர் டிஸ்பியாக இருந்த ராஜபாண்டியன் தாம்பரம் மணிமங்கலம் காவல் உதவி ஆணையராக மாற்றம். 


32. தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த மனோகரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.


33. திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த தனுசியா தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக மாற்றம். 


34. காத்திருப்போர் பட்டியலில் இருந்த செல்வசேகர் தாம்பரம் காவல் ஆணையரக பயிற்சி பிரிவு மையத்தின் உதவி ஆணையராக மாற்றம். 


35. சென்னை காவல்துறை (கிழக்கு) மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆணையராக இருந்த மகீமைவீரன் ஆவடி காவல் ஆணையரக மணலி காவல் உதவி ஆணையராக மாற்றம்.


உரிய நேரத்தில் ரயிலை நிறுத்தி 800 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு ரூ.5000 வழங்கி பாராட்டு...

 உரிய நேரத்தில் ரயிலை நிறுத்தி 800 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு ரூ.5000 வழங்கி பாராட்டு...


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உரிய நேரத்தில் திருச்செந்தூர் ரயிலை நிறுத்தி 800 பயணிகள் உயிரை காப்பாற்றிய தண்டவாள பராமரிப்பாளர் செல்வக்குமாருக்கு ரூ.5,000 அறிவித்து ரயில்வே துறை கவுரவம்



ஓஎம்ஆர் ஷீட் / ஸ்கேன் செய்யக்கூடிய வருகைப் பட்டியலை நிரப்பும்போது செய்யப்படும் பொதுவான தவறுகள்...



ஓஎம்ஆர் ஷீட் / ஸ்கேன் செய்யக்கூடிய வருகைப் பட்டியலை நிரப்பும்போது செய்யப்படும் பொதுவான தவறுகள் - COMMON MISTAKES DONE WHILE FILLING OMR SHEET / SCANNABLE ATTENDANCE LIST...



>>> Click Here to Download...


CBI (DEPUTY SUPERINTENDENT OF POLICE), LIMITED DEPARTMENTAL COMPETITIVE EXAMINATION, 2023 - Notification - Last Date to Apply: 09-01-2024...



CBI DSP (DEPUTY SUPERINTENDENT OF POLICE), LIMITED DEPARTMENTAL COMPETITIVE EXAMINATION, 2023 - Notification - Last Date to Apply: 09-01-2024...


>>> Click Here to Download Notification...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Powers given to Government Aided School Correspondents to pay Teachers

  அனைத்து வகை அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குகின்ற முழு அதிகாரமும் பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கி உத்தரவு The order ...