கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் வாயு கசிவு, தொழில் நுட்பக் கோளாறுகள் - சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் பூமி திரும்ப இன்னும் ஒரு மாதம் ஆகும்...



போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் வாயு கசிவு, தொழில் நுட்பக் கோளாறுகள் - சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் பூமி திரும்ப இன்னும் ஒரு மாதம் ஆகும் என தகவல்...


வாஷிங்டன்: 

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்பிட இன்னும் ஒரு மாதங்களுக்கு மேல் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.


அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளிக்கு இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மூத்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் (வயது 61) ஆகியோர் ஜூன் 5ம் தேதி பயணம் மேற்கொண்டனர்.


ஜூன் 5ம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி இரவு 8.22 மணிக்கு புறப்பட்டு, ஜூன் 06ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தனர். 


9 நாட்கள் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஆய்வுகள் நடத்தி திட்டமிட்டபடி கடந்த 22-ம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். தற்போது, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 


போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் வாயு கசிவு , தொழில் நுட்ப கோளாறுகள் சரி செய்ய குறைந்தது 30 நாட்களுக்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் இருவரும் மேலும் 30 நாட்களுக்கு மேல் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


அலைபேசி சேவை கட்டணங்களின் விலை உயர்வு - இந்தியர்கள் ஆண்டுக்கு ரூ.47500 கோடி அதிகம் செலவிட வேண்டும்...



அலைபேசி சேவை கட்டணங்களின் விலை உயர்வு - இந்தியர்கள் ஆண்டுக்கு ரூ.47500 கோடி அதிகம் செலவிட வேண்டும்...


தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விலைஉயர்வு குறித்து, கோடக் நிறுவன பங்குகள் வெளியிட்டுள்ள ஆய்வுக் குறிப்பின்படி இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.47,500 கோடி கூடுதல் சுமை உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் சேவை கட்டணங்களை அடுத்தடுத்து அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. இதில் இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையில் முதன்மையில் இருக்கும் ஜியோ நிறுவனம் நேற்று முன்தினம் (ஜூன் 27) முதலில் தங்கள் ரீசார்ஜ் பிளான்களின் விலையை அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டது.


ஜியோ தனது ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 12 முதல் 27% வரையில் அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டது. 

இந்த விலையேற்றம் ஜூலை முதல் அமலுக்கு வரும் என கூறியது. அதேபோல, ஏர்டெல் நிறுவனமும், தங்கள் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு கட்டணங்களை 11 முதல் 21% உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. 


இந்த கட்டண உயர்வு வரும் ஜூலை 3 முதல் அமலுக்கு வரும் என கூறியது. தொடர்ந்து, வோடஃபோன் ஐடியா நிறுவனமான VI நிறுவனமும் விலையேற்றத்தை அறிவித்துள்ளது. அடுத்தடுத்த காலாண்டுகளில் 5ஜி தொலைத்தொடர்பு சேவையில் கவனம் செலுத்தவும் உள்ளது என அறிவித்துள்ளது.  


இந்த விலையேற்றம் ஜூலை 4-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளது. சமீப காலங்களில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 5G தொலைத்தொடர்பு சேவைகளை வழங்க பெரும் முதலீடுகளை செய்துள்ளன.


இப்போது வாடிக்கையாளர்கள் 5ஜி சேவையைப் பெற 71% கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு பயனருக்கான சராசரி செலவை (ARPU) 15 முதல் 17% வரை அதிகரித்துள்ளன.


தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விலைஉயர்வு குறித்து, கோடக் நிறுவன பங்குகள் ஆய்வுக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.47,500 கோடி கூடுதல் சுமையை இந்த விலை உயர்வு ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


2023-2024ஆம் நிதியாண்டுக்கான CPS Account Slip இன்று (01-07-2024) வெளியீடு...

 

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2023–2024ஆம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்கள் தொகுக்கப்பட்டு 01.07.2024 அன்று காலை 10 மணிக்கு அரசுத் தகவல் தொகுப்பு விவர மையத்தால் வெளியிடப்படுகிறது...


Contributory Pension Scheme Accounts Slip for the year 2023-2024 for Tamil Nadu Government employees and teachers working under Contributory Pension Scheme are being compiled and published by the Government Data Center on 01.07.2024 at 10 am...


வலைதள முகவரி:

http://cps.tn.gov.in/public/index.php



>>> 2023-2024ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT தரவிறக்கம் செய்யும் வழிமுறை...




01-03-2024 நிலையில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இறுதி பணி மூப்புப் பட்டியல் - ஆதிதிராவிடர் நல இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 25-06-2024...


 01-03-2024 நிலையில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இறுதி பணி மூப்புப் பட்டியல் - ஆதிதிராவிடர் நல இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 25-06-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2024-2025 - பருவம் 1 - எண்ணும் எழுத்தும் (4-5) FA(b)க்கான கால அட்டவணை...

 

2024 - 2025 - பருவம் 1 Term I - எண்ணும் எழுத்தும் Ennum Ezhuthum (4, 5) வளரறி மதிப்பீடு - ஆ ( FORMATIVE ASSESSMENT (b) FA (b) ) க்கான கால அட்டவணை...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2024-2025 - பருவம் 1 - எண்ணும் எழுத்தும் (1-3) FA(b)க்கான கால அட்டவணை...


2024 - 2025 - பருவம் 1 Term I - எண்ணும் எழுத்தும் Ennum Ezhuthum (1-3) வளரறி மதிப்பீடு - ஆ ( FORMATIVE ASSESSMENT (b) FA (b) ) க்கான கால அட்டவணை...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தனியார் பள்ளிகளில் இருந்து புதிதாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு திறனறித் தேர்வு...

 

இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் இருந்து புதிதாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு திறனறி தேர்வை ஜூலை மாதம் முதல் நடத்த அறிவுறுத்தல்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

World Carrom Championship: Tamil Nadu's Kasima wins gold

  உலக கேரம் போட்டி: தமிழ்நாடு வீராங்கனை காசிமா தங்கம் வென்று சாதனை World Carrom Championship - Tamil Nadu's Kasima wins gold உலக கேரம் ச...