கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21-09-2024...

 

  

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21-09-2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால் :பொருட்பால்

அதிகாரம் :நட்பு

குறள் எண்:790

இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்என்னும் நட்பு.

பொருள்: இவர், எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத்தன்மையுடையேம் என்று புனைந்துரைத்தாலும் நட்புச் சிறப்பிழந்துவிடும்.


பழமொழி :
Blessed are the meek: for they shall inherit the earth.

பொறுத்தார் பூமி ஆள்வார்.


இரண்டொழுக்க பண்புகள் : 

1. பொறுமை கடலை விடப் பெரியது. எனவே நான் எப்போதும் பொறுமையை கடைப்பிடிப்பேன்.

  2. சண்டை போடுவதால் பிறர் மனம் புண்படும். ஆதலால் என்னுடன் படிக்கும் மாணவர்களுடன் சண்டை போட மாட்டேன்.


பொன்மொழி :

வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட, தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துபார் , நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய். ------ஹிட்லர்


பொது அறிவு :

1. மூளைக் காய்ச்சல் நோயைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகிப்பவை -

விடை : பன்றி.

2. HIV வைரஸின் வடிவம் -

விடை : கோள வடிவம்


English words & meanings :

prevail-மேம்படு,

excist-உயிர் வாழ்


வேளாண்மையும் வாழ்வும் :

 பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.


செப்டம்பர் 21

சம இரவு நாள்

சம இரவு நாள்(Equinox) என்பது சூரியன் நிலநடுக்கோட்டினை கடந்து செல்லும் நாளாகும். ஆண்டுக்கு இருமுறை சூரியன் இவ்வாறு நிலநடுக்கோட்டினைக் கடப்பது நிகழும். சம இரவு நாள் இவற்றில் எந்தவொரு நாளையும் குறிக்கும். இந்நாட்களில் இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும். இலத்தீனில் ஈக்வீநாக்சு என வழங்கப்படுகிறது. ஈக்வீ(equi) எனபது சமம் என்றும் நாக்சு(nox) என்பது இரவு என்றும் பொருள்படும். சம இரவு நாட்கள் என்று நிகழும் என்பது நிலநடுக்கோட்டிலிருந்து எத்தனை தொலைவு தள்ளி அளக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. சாதாரணமாக மார்ச் 20 அன்றும் செப்டம்பர் 21அன்றும் இவை நிகழும். இந்த வருடம் செப்டம்பர் 23 ஆம் தேதி சம இரவு நாள் ஆகும்.


உலக அமைதி நாள்

உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21-ஆம் நாளில் அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாள் முன்னர் 1981-இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது.ஆனாலும் 2002-இல் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21-இல் கொண்டாடப்படுகிறது.


நீதிக்கதை

நாணயம்

ஒரு நாள் கிராமத்தில் வசித்த ஏழை ஒருவர், தெருவில் நடந்து சென்ற பொழுது அவருக்கு மையத்தில் பெரிய துளையுடன் இருந்த பழங்கால நாணயம் ஒன்று கிடைத்தது.

அக்காலத்தில் துளையிட்ட காசு கிடைத்தால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. எனவே,அவரும்  "எனக்கு இனி அதிர்ஷ்டம் தேடி வரும் நானும் பணக்காரனாகி விடுவேன்" என்று நினைத்தார். அதை தனது சட்டை பையில் போட்டு பத்திரப்படுத்திக் கொண்டார்.

அன்று அவருக்கு மற்ற நாட்களை விட அதிகமான வருமானம் கிடைத்தது. எல்லாம் அந்த நாணயம் கிடைத்த நேரம் என்று நினைத்தார்.

அன்றிலிருந்து அவர் தினமும் தன்னுடைய நாணயத்தை அவ்வப்போது தொட்டுப் பார்த்துக் கொள்வார். வெளியில் எடுக்கவே மாட்டார். சில ஆண்டுகளில் அவருக்கு பதவியும் பணமும் அதிகமாகவே வந்து சேர்ந்தது.

அவர்  தனது மனைவியிடம் "அந்த நாணயத்தை கண்ணால் பார்க்க வேண்டும் போல் உள்ளது" என்று கூறியபடி தனது சட்டைப் பையில் பத்திரப்படுத்தி இருந்த நாணயத்தை எடுத்துப் பார்த்தார்.

அந்த நாணயத்தின் மையத்தில் துளையே இல்லை.   என்னவாயிற்று? என்று கேட்டார்.

அதற்கு அவரது மனைவி "சட்டை அழுக்காக இருந்ததால், அதை துவைக்க எண்ணி எடுத்து போது   நாணயம் தவறுதலாக தெருவில் விழுந்து விட்டது.எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதனால் நான் தான் வேறொரு நாணயத்தை  சட்டை பைக்குக்குள் போட்டு வைத்தேன் என்றார்.

"இது எப்போது நடந்தது?" என்று அவர் கேட்டார். அதற்கு அவரது மனைவி தங்களுக்கு நாணயம் கிடைத்த ஒரு வாரத்திற்குள் நடந்தது என்றார்.

அதன் பின் அவர் யோசித்தார். அப்படியானால் நமக்கு அதிர்ஷ்டம் கொடுத்தது அந்த நாணயம் அல்ல. நமது நம்பிக்கையும், உழைப்பும் தான் என்று எண்ணி மகிழ்ந்தார்.

நீதி: நமது உழைப்பு, தன்னம்பிக்கை  மட்டுமே நமக்கு வெற்றியைத் தேடித் தரும்.


இன்றைய செய்திகள்

21.09.2024

* பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர் உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

* தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் வழக்கத்துக்கு மாறாக வெயில் சுட்டெரித்து வருவதால், தினசரி மின் தேவை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் இதுவரை குரங்கம்மை, நிபா வைரஸ் பாதிப்பில்லை: சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்.

* பாதுகாப்பற்ற உணவால் ஆண்டுக்கு 4.20 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்.

* செஸ் ஒலிம்பியாட்: இந்திய ஆண்கள் அணி 8-வது வெற்றி.

* ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: ஐதராபாத்தை வீழ்த்திய பெங்களூரு எப்.சி. அணி.


Today's Headlines

* Chief Minister Stalin has issued an order doubling the amount of assistance given to differently-abled students studying in schools and colleges.

* The daily electricity demand has increased by 30 percent due to unusually hot weather in most places across Tamil Nadu.

* Tamil Nadu has no cases of monkeypox or Nipah virus so far: Director of Health informed.

* 4.20 lakh deaths per year due to unsafe food: World Health Organization shock data.

* Chess Olympiad: Indian Men's Team records its 8th victory.

* ISL  Football series: Bengaluru FC beat Hyderabad  Team.

Prepared by

Covai women ICT_போதிமரம்


Nandini Ghee in Temples - Karnataka Govt Order...

  


கோயில்களில் நந்தினி நெய் - கர்நாடக அரசு உத்தரவு...


"கர்நாடகாவில் உள்ள கோயில்களில் பிரசாதம் மற்றும் விளக்குகளுக்கு, அரசின் நந்தினி நெய்யை மட்டுமே பயன்படுத்த வேண்டும்" - கர்நாடக அறநிலையத்துறை அதிரடி உத்தரவு.


திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில் கர்நாடக அறநிலையத்துறை உத்தரவு.


கர்நாடக அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயில்களுக்கு நந்தினி நெய்யை பயன்படுத்துமாறு சுற்றறிக்கை.


கர்நாடக அரசு சார்பாக நந்தினி பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


திருப்பதி லட்டுக்கும் கர்நாடகாவின் நந்தினி நெய் முன்னதாக அனுப்பப்பட்டு வந்தது - 8 மாதமாக திருப்பதி தேவஸ்தானம் நிறுத்தியது.


UDISE+ Portal -இல் தகவல்கள் பதிவு செய்வது குறித்த பயிற்சி - SPD செயல்முறைகள்...

 

UDISE+ Portal -இல் தகவல்கள் பதிவு செய்வது குறித்த பயிற்சி - SPD செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


UDISE+ Data required for Student's Profile updations...

 

Data required for Student's Profile updations in U-DISE +



>>> Click Here to Download UDISE+ Data required for Student's Profile updations Format...


FOSS - Free and Open Source Software - Training Module...

 


FOSS - Free and Open Source Software - Training Module...



>>> Click Here to Download FOSS - Free and Open Source Software - Training Module...



Introduction to FOSS:

(Free and open-source software)

Free Open Source Software (FOSS), sometimes also called just Open Source or Free Software, is software that is licensed to be free to use, modify, and distribute. Most FOSS licenses also include a kind of legal Golden Rule that requires any changes, such as fixes and enhancements, to be released under the same license. This creates the all important trust in developers and users that generates large, sustainable communities that continue to grow the software capability over time


Open Source Software

Now as we know what free is, we need to know about what does Open Source Software mean.

Software is considered to be Open Source when its source code is available to the public and anyone can have access to it, view it, modify it or use it.

There are times when people get confused with the term FOSS, not every free software is open source and not every open source software can be free (Some might ask money to provide its source code and also for any changes you make in it).


Opposite to FOSS is Proprietary and CSS.

Proprietary:

Various confinements on use, encapsulated in EULAs (End User License Agreements) – e.g., what number of occurrences can be run without a moment's delay, what machines can run on, illicit to figure out, what number of customers can interface, need actuation, and so forth.


Closed Source Software:

just a twofold/executable form of the program is given can't look at nor edit the code.



>>> Click Here to Download FOSS - Free and Open Source Software - Training Module...


UDISE + Website ல் Progression Activity - 2023 - 2024 பதிவேற்றம் செய்வதற்கு தேவையான படிவம்...


UDISE + Website ல் Progression Activity - 2023 - 2024 பதிவேற்றம் செய்வதற்கு தேவையான படிவம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20-09-2024...

  

  

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20-09-2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம் : நட்பு

குறள் எண்:789

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்புன்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

பொருள் :நட்புக்குச் சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.


பழமொழி :
No rain, no grains

மாரியல்லாது காரியமில்லை


இரண்டொழுக்க பண்புகள் : 

1. பொறுமை கடலை விடப் பெரியது. எனவே நான் எப்போதும் பொறுமையை கடைப்பிடிப்பேன்.

  2. சண்டை போடுவதால் பிறர் மனம் புண்படும். ஆதலால் என்னுடன் படிக்கும் மாணவர்களுடன் சண்டை போட மாட்டேன்.


பொன்மொழி :

எதிர்காலத்தைப் பற்றி பயம் கொள்ள வேண்டாம். அதை உருவாக்கத்தான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.-----பராக் ஓபாமா


பொது அறிவு :

1. பென்சில் தயாரிக்கப் பயன்படுவது

விடை : கிராபைட்

2. விவசாயத்திற்கு மிகவும் ஏற்றமண்

விடை : கரிசல் மண்


English words & meanings :

obtain-பெறுதல்,

  acquire-பெறுதல்


வேளாண்மையும் வாழ்வும் :

 நிலத்தடி நீர் மட்டம் உயர குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர் நமது முன்னோர்கள்…


நீதிக்கதை

மகன் தந்தையிடம்,தனக்கு ஏதேனும் துன்பமோ, மனக்கவலையோ வரும்போது வந்து கலங்கி நிற்பான். அப்போது அவனது  பிரச்சினையை கேட்டபின் தந்தை "இவ்வளவுதானா? உன் பிரச்சனை எல்லாம் சரியாகிவிடும் போ" என்பார்.

அவனுக்கும் சில நாட்களில் அந்தப் பிரச்சனையோ அந்த துன்பமோ காணாமல் போய்விடும். மகனும் வளர்ந்தான்.

தந்தைக்கும் வயதானது.

தற்போதும்  மகன் தனது பிரச்சனையை  அவனுடைய தந்தையிடம் சொல்லும் போதும் அவர் அதே பதிலைத்தான்  திரும்ப கூறினார்

ஒரு நாள் மகன் தந்தையிடம் "ஏம்பா நான் எத்தனை பெரிய பிரச்சனை பற்றி தங்களிடம் கூறினாலும்  இவ்வளவுதானா? என்று தாங்கள் கூற எனக்கும் பிரச்சனை சுலபமாக முடிந்து விடுகிறது எப்படி அப்பா?"என்று கேட்டான்.

தந்தை சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்."உன் சிறு வயதில் பிரச்சினையைக் கண்டு பயந்து என்னிடம் கூறுவாய். அப்போது அந்த பிரச்சனையை தீர்க்கக் கூடிய வழி உனக்கு தெரியாது. ஆனால் நான் இவ்வளவுதானா? என்று கேட்கும்போது, உன் மனம் இது ஒரு பிரச்சனையே அல்ல என்று முடிவுக்கு வந்துவிடும். பிரச்சனையும் முடிந்துவிடும்.

தற்போது நீ பெரியவனாக வளர்ந்த பின்பு ஒரு பிரச்சனைக்குரிய  தீர்வை காணும் ஆற்றல் உனக்கு உண்டு. எனவே, நான் இவ்வளவுதானா? என்று கூறும்போது அந்தப் பிரச்சனையை உன் மனம் தீர்வை நோக்கி கொண்டு செல்கிறது.

பிரச்சனையும் தீர்ந்து விடுகிறது".

நீதி:

நாம் எவ்வளவு பெரிய புத்திசாலியாக இருந்தாலும், 

ஒரு நிமிடம் இவ்வளவா? என்று  மனதில் நினைத்தால் நமது முன்னேற்றம் அங்கேயே நின்று விடும். ஆனால்  இவ்வளவுதானா? என்று யோசித்தால் நாம் அதை தாண்டி, வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு சென்று விடலாம்.


இன்றைய செய்திகள்

20.09.2024

* ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெறும்: சென்னையில் 650 பேர் பங்கேற்பு.

* தமிழகத்தில் பிளே ஸ்கூல் விதிமுறைகளை செயல்படுத்த இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு.

* கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் 175 பேருக்கு பாதிப்பு: நிபா வைரஸ் காய்ச்சல் பரவலால் பள்ளி, கல்லூரிகள் மூடல்.

* குழந்தைகளுக்கான ‘என்பிஎஸ் வாத்சல்யா’ ஓய்வூதிய திட்டம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

* புதிய எக்ஸ்இசி வகை கரோனா 27 நாடுகளில் பரவியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவும் இந்த கரோனா வகை, விரைவில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய கரோனா திரிபாக மாறலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

* செஸ் ஒலிம்பியாட்: 7-வது சுற்றில் இந்தியா வெற்றி.

* சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி : இந்திய வீராங்கனை மாள்விகா பன்சோத் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.


Today's Headlines

* Civil Services Mains Exam for IAS, IPS Posts to be held from today till 29th: 650 candidates will take the exam  in Chennai.

*  Interim stay on implementation of play school regulations in Tamil Nadu: High Court orders.

* 175 affected in Kerala's Malappuram district: Schools, colleges closed due to spread of Nipah virus fever.

* 'NBS Vatsalya' Pension Scheme for Children: Union Finance Minister Nirmala Sitharaman launched.

* The new XEC strain of Corona has spread to 27 countries.  Scientists have warned that this type of corona, which is spreading rapidly in European countries, may soon become a dominant corona mutant.

* Chess Olympiad: India Won Round 7

* China Open Badminton Tournament: Malvika Bansod of India advances to the next round.



Prepared by

Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...