கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Vidyalakshmi Scheme - Information




 வித்யாலட்சுமி திட்டம் குறித்த தகவல்கள் 


Information about Vidyalakshmi Scheme


 வித்யாலட்சுமி திட்டம் என்பது இந்திய மாணவர்களுக்கு பிணையம் இல்லாத மற்றும் உத்தரவாதம் இல்லாத கடன்களை வழங்கும் ஒரு கல்விக் கடன் திட்டமாகும்.


 இந்தத் திட்டம் நவம்பர் 6, 2024 அன்று இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. 


தகுதி :  


    இந்தியாவில் உள்ள சிறந்த 860 தரமான உயர்கல்வி நிறுவனங்களில் (QHEIs) சேர்ந்த மாணவர்கள் மற்றும்  குடும்ப வருமானத்தில் படிப்புக்கான செலவுகளை செய்யும் அனைத்து மாணவர்களும் தகுதியுடையவர்கள் .


கடன் தொகை ரூ. 10 லட்சம் வரை பெறலாம்.  


வட்டி மற்றும் மானியம் :  


ஆண்டுக்கு  ரூ. 8 லட்சம் வரை குடும்ப  வருமானம் உள்ள மாணவர்களுக்கு  ரூ. 10 லட்சம் வரையிலான கடன்களுக்கு 3% வட்டி மற்றும் மானியம் உண்டு. 


பிற விவரங்கள் :


வேறு ஏதேனும் அரசு உதவித்தொகை அல்லது வட்டி மானியத் திட்டங்களின் கீழ் சலுகைகளைப் பெறும் மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வட்டி மானியத்திற்குத் தகுதியற்றவர்கள் .


வித்யா லட்சுமி கடன் திட்டத்தை வழங்கும் வங்கிகளில் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கோடக் வங்கி ஆக்சிஸ் வங்கி, HDFC வங்கி, ICICI வங்கி, IDBI வங்கி மற்றும் அபியுதயா கூட்டுறவு வங்கி லிமிடெட் ஆகியவை அடங்கும். 


வித்யா லட்சுமி போர்டல் மாணவர்கள் கடனுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கிறது.


https://www.vidyalakshmi.co.in/Students/


IFHRMS - Payroll run February 2025 தொடர்பான தகவல்

 

 IFHRMS - Payroll run February 2025 தொடர்பான தகவல்


Dear All,


As instructed by the CTA/eTeam, Payroll run (Centralized locations Salary and Pension) for the February month will be processed today and expected to complete by Monday morning (17.02.25). 


During this period the payroll icon will be disabled and the eServices will be down between 9pm to 6am tonight (16.02.25).


Thanks & Regards


IFHRMS - Income Tax February 2025 projection report release

 

வருமான வரி February 2025 projection report வெளியிடப்பட்டுள்ளது. 


IFHRMS - Income Tax February 2025 projection report release


 வருமான வரி சரி பார்க்க வேண்டி இருப்பின் சரிபார்த்துக் கொள்ளலாம்


பிப்ரவரி மாதம் வரை வருமான வரி & 4% Cess பிடித்தம் செய்த விவரம் காட்டும். மேலும் balance tax 0 என்று காட்டும் .



IFHRMS - வருமான வரிப்பிடித்தம் தொடர்பான சமீபத்திய புதுப்பிப்பு Feb 2025


IFHRMS - Latest UPDATE Regarding Income Tax Deduction 


 2024-25 நிதி ஆண்டிற்கான வருமானவரித் தொகை முழுவதுமாக பிடித்தம் செய்யப் பட்டு விட்டதா? என்பதை IFHRMS  மூலம் சுலபமாக கண்டறியலாம். 


👉Open Google 

👉Type IFHRMS  and search 

👉Select களஞ்சியம் Website

👉Input Your IFHRMS User ID and Password 

👉Select eServices ( HR & Fin)

👉Select employee self service

👉Select Reports ( Top of the Menu ICONS )

👉Choose Incometax projection Report self service 

👉Input Feb-2025 and select the same below

👉And then select Continue

👉Finally submit

👉Click OK

👉Click Monitor Request Status

👉Selec View Output (HTML  format)



👉இதில் இந்த வருடத்திற்கான மொத்த சம்பளத்தொகை


இந்த தொகைக்கு இந்த வருடத்திற்கு பிப்ரவரி 2025 வரை IFHRMS மூலம் கட்டிய வருமான வரி தொகை விவரம் இருக்கும்.


Balance tax என்பதில் 0 என இருந்தால், நீங்கள் 2024-25 ஆம் நிதி ஆண்டிற்கான வருமான வரி & 4% Cess முழுமையாக செலுத்தி விட்டீர்கள் என புரிந்து கொள்ளலாம்.



Link...👇 

https://www.karuvoolam.tn.gov.in/



அனைவருக்கும் வணக்கம்!!! 2025 பிப்ரவரி மாத களஞ்சியம் Pay Roll Run ஆகி விட்டது!! வருமானவரி படிவத்தில் உள்ளவாறு IT மற்றும் Cess பிடித்தம் மிக சரியாக உள்ளதா என அவசியம் சரி பாருங்கள்!! நன்றி 🌹🌹


Disadvantages of Parthenium plants and methods of control



 பார்த்தீனியம் செடிகளின் தீமைகளும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் 


Disadvantages of Parthenium plants and methods of control


மனிதர்கள் - கால்நடைகளுக்கும் தீங்கு விளைவிக்கும் பார்த்தீனியம் செடிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி விளக்கம் அளித்துள்ளார்.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



விழிப்புணர்வு வாரம்


பார்த்தீனியம் விழிப்புணர்வு குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், தொழில்நுட்ப வல்லுனர் கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-


இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் அங்கமான ஜபல்பூரில் அமைந்துள்ள களை ஆராய்ச்சி இயக்குனரகம், பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.


இந்தியா முழுவதும் பரவியுள்ளது


பார்த்தீனிய செடிகள் மெக்சிகோ, தென் மற்றும் வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, கிழக்கு மற்றும் தென் ஆப்பிரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இந்தியாவில் பார்த்தீனியம் செடிகள் 1950-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்த செடியானது மராட்டிய மாநிலத்தில் கோதுமை இறக்குமதி செய்தபோது ஊடுருவியதாக கருதப்படுகிறது. தற்போது இந்த செடி இந்தியா முழுவதும் பரவி உள்ளது. ஒரு முறை பார்த்தீனியம் ெசடி உற்பத்தியாகி விட்டால் எந்த சூழ்நிலையிலும், அதாவது மழை, வறட்சி எதையும் தாங்கி வளரக்கூடியது.



பொதுவாக பார்த்தீனியம் ஒரு விஷ செடி. மனிதனுக்கும், விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது.


இது ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய விஷமுள்ள செடி. இவை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் ஆஸ்துமா, தொழுநோய் மற்றும் சுவாசம் சம்பந்தமான நோய்களை மனிதனுக்கு ஏற்படுத்துகிறது.


பார்த்தீனியம் பரவியுள்ள பகுதிகளில் மேயும் கால்நடைகளில் இருந்து பெறப்படும் பால் மனிதர்களுக்கு தீமை விளைவிக்கக் கூடியது. பார்த்தீனியத்தின் மகரந்தத்தூள் சரும நோய்களை ஏற்படுத்தக்கூடிய தன்மை உடையது.




பார்த்தீனிய செடிகளை கட்டுப்படுத்தும் முறை


பொது இடங்கள் அல்லது பயிரிடாத நிலங்களில் இருக்கும் பார்த்தீனிய செடிகளை இயற்கை சூழல் பாதிக்காமல் அகற்ற வேண்டும்.


ஆவாரை, அடர் ஆவாரை, துத்தி, நாய் வேளை, சாமந்தி ஆகிய செடிகளின் விதைகளை மழைக்காலங்களில் விதைக்க வேண்டும்.


இந்த செடிகளின் அதிக வளர்ச்சி பார்த்தீனிய செடியை வளரவிடாமல் கட்டுப்படுத்தி தடுத்து விடுகிறது. மழைப்பருவம் தொடங்கும் காலமே மெக்ஸிகன் வண்டுகளின் உற்பத்திக்கு உகந்த காலமாகும். இந்த மெக்சிகன் வண்டுகள் அதிக எண்ணிக்கையில் காணப்படும் போது வண்டுகளை சேகரித்து பார்த்தீனியம் மிகுந்த பகுதிகளில் விட வேண்டும்.



கையுறை அணிந்து அகற்ற வேண்டும்


பூங்காக்களிலும், தோட்டங்களிலும், புல் தரைகளிலும் மற்றும் விவசாய நிலங்களிலும் பார்த்தீனிய செடிகளை ஆட்களைக்கொண்டு கையுறை அணிந்து கைக்களையாக அகற்ற வேண்டும். ஆட்களைக்கொண்டு அகற்றும் போது வேரோடு அகற்றுவதுடன் பார்த்தீனி செடிகளால் ஏற்படக்கூடிய தோல் தொடர்பான நோய்கள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.


அதிகமாகவும், மீண்டும் மீண்டும் பார்த்தீனியம் வளரும் இடங்களில், உடனடியாகக் கட்டுப்படுத்த அட்ரஸின், 2,4-டி, கிளைபோசேட் மற்றும் மெட்ரி பூசன் போன்ற களைக்கொல்லிகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


இது பார்த்தீனிய செடியில் ஒரு வகை. 

1  இந்த செடியின் வாழ்நாள் மூன்று மாதம். 

2. இந்த செடிகள் பூக்கும்போது காலை ஆறு மணி முதல் எட்டு மணிவரை இதன் அருகில் இருந்தாலே சுவாசப் பிரச்சனை ஏற்படும். 

3. இந்த செடி வாழும் இடங்களில் உள்ள வீடுகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சளி பிரச்சனையும், நுரையீரல் பிரச்சனையும் ஏற்படும். 

4. இந்த செடிகளின் பூக்கள் காய்ந்து உதிர்ந்ததும் முளைக்காது. 

5. உதிர்ந்த விதைகள் மழை பெய்த மூன்றாம் நாளே முளைக்க துவங்கிடும். 

6. முளைத்த ஏழாம் நாள் முதல் பதினைந்து தினங்களுக்குள் பூ பூத்து விதையும் தயார் செய்துவிடும்.

7. தமிழ்நாடு அரசு, பார்த்தீனிய செடிகளை அழிக்கவும் இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்திரவிட்டு நிதியும் ஒதுக்கியது. 


8. இவற்றை அழிக்க வேண்டுமெனில் கோடை காலம் முடிந்ததும் ஏற்படும் முதல் மழையில் ஏழு முதல் 13 தினங்களுக்குள் வளர்ந்த செடிகளை பூப்பதற்கு முன்னரே எடுத்து பிடுங்கி நெருப்பிலிட்டு  எரித்து விடவேண்டும்.


 9. இச்செடிகளை வெறும் கையால் பிடுங்ககூடாது.


 கையுறை முக்கியம்.


10. சொரி சிறங்கு படை தேமல் போன்றவை ஏற்படுத்தும். 


 எனவே கவனமாக கையாளவும் என்பதைவிட நமது வீட்டருகிலோ தோட்டத்தின் அருகிலோ இருந்தால் அவற்றை மேற்சொன்னவாறு  கண்டறிந்து நெருப்பின்மூலம்  எரித்து அழிக்கவும். ...


இச்செடியை அழிப்பது கட்டாயமாகும். ஏனெனில், இவை விளைநிலங்களையும் வளிமண்டலத்தையும் பெரிதும் மாசுபடுத்துகின்றன. இயற்கையான பல தாவரங்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல், அவ்வினங்களே முற்றிலும் அழிவதற்கு பெருங்காரணமாய்த் திகழ்கின்றன. மனிதர்கள், கால்நடைகள் மற்றும் விலங்குகளுக்கு காற்று மாசுபடுதல் மூலம் சுவாசம், நுரையீரல் மற்றும் தோல் நோய்களை ஏற்படுத்தும் வட அமெரிக்காவைப் பூர்வீகமாக கொண்ட கரட் புல்/ மல்லிக்கிழங்குப் புல்/ காஜர் ஹான்ஸ்/ பார்த்தினியம் என்றழைக்கப்படும் பார்த்தீனியம் செடிகள் (Parthenium hysterophorus) களைச்செடிகளாக பயிர்களுக்குப் பாயும் நீரையும் பங்குபோடுகின்றன.


அவற்றை முறைப்படி அழிக்க செடிகளைப் பூக்கள் சிதறாமல் வேரோடு பிடிங்கி பள்ளத்தில் இட்டு, கல் உப்பு கலந்த சோப்பு நீர்க்கரைசல் தெளித்து அல்லது காமாக்சின் (எறும்பு மருந்தாகவும் பயன்படுகிறது) என்னும் வேதிப்பொருளை இட்டு, செடிகள் பட்டுப் போய் வாடிய பின், எரித்து, குழிகளை மூடி, அந்த இடங்களில் ஆவாரம் பூச் செடிகள் நட்டி வளர்ப்பதன் மூலம் மட்டுமே இக்களைகளை நாம் அழிக்கமுடியும்.


இவைகளை தழைச்சத்தாக இடுவதன் மூலம் மேலும் இதன் பூக்கள் மூலம் இவை வளர்ந்து பரவுவதைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். ஆடு, மாடு மற்ற கால்நடைகளுக்கு இரையாக போட்டாலோ, மேச்சலில் அவைகள் தவறுதலாக உண்டாலோ அவற்றிற்கு நோய்கள் வந்து இறைச்சி மற்றும் பால் மூலம் மனிதர்களைத் தாக்குவதோடு, சாணக்கழிவுகளில் இதன் மகரந்தங்கள் மீண்டும் இவை வளர்ந்து பரவிப் பெருகுவதைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். ஆகையால், இவற்றை முற்றிலும் தவிர்க்கவும்.


Is Vikatan website blocked by central government - what is the reason?

 


விகடன் இணையதளம் மத்திய அரசின் சட்ட அமலாக்கத்துறையால் முடக்கமா ? - காரணம் என்ன ?


Is Vikatan website blocked by central government - what is the reason?


பிரதமர் மோடியை விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்ட காரணத்தால் விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,


தமிழின் பிரபலமான ஊடகமாக திகழ்வது விகடன். பிரபல தனியார் ஊடக நிறுவனமான விகடன் நூற்றாண்டுகளாக இயங்கி வரும் நிலையில், அவர்களது வார இதழுக்கான அட்டைப்படத்தில் பிரதமர் மோடியை விமர்சிக்கும் விதமாக சித்திரம் வரையப்பட்டிருந்தது. 


மோடிக்கு எதிரான சித்திரம்:


அந்த சித்திரத்தில் பிரதமர் மோடியை இழிவுபடுத்தியதாக கூறி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக-வினர், பிரதமர் மோடி ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விகடன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அண்ணாமலை புகார் அளித்திருந்தார். 


விகடன் இணையதளம் முடக்கமா?

இந்த சூழலில், அண்ணாமலை புகாரின் அடிப்படையில் விகடன் செய்தி நிறுவனத்தின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 




இதுதொடர்பாக ABP பத்திரிகையாளர்கள் தரப்பின் சார்பில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகனை தொடர்பு கொண்டபோது அவரது உதவியாளர் பதில் அளித்தார்.

அவர் அளித்த பதிலில் விகடன் இணையதளம் முடக்கப்பட்டது உண்மை என்று கூறினார் என குறிப்பிடப்பட்டுள்ளது.




பிரதமர் மோடியை சித்தரித்து வரையப்பட்ட கார்ட்டூனுக்கு எதிராக  விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பலரும் இது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது என்று தெரிவித்து வருகின்றனர்.


பா.ஜ.க. வரவேற்பு


இதற்கு பா.ஜ.க.வினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக பாஜகவின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான கரு.நாகராஜன் பாரத பிரதமர் உலகத் தலைவர் நரேந்திர மோடி அவர்களை அவதூறாக சித்தரித்த விகடன் டிஜிட்டல் சைட் முடக்கப்பட்டது. நீதி வெல்ல வேண்டும் நியாயம் கிடைக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். 



மேலும், பல பாஜக-வினர் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. 


ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கை போன்று எதுவும் மத்திய அரசு சார்பிலோ அல்லது அமைச்சர் எல்.முருகன் தரப்பில் இருந்தோ வெளியிடப்படவில்லை.



விகடன் குழுமம் பரபரப்பு அறிக்கை


இந்த விவகாரம் தொடர்பாக விகடன் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பல இடங்களில் பலருக்கு விகடன் தளம் வேலை செய்யவில்லை. எனினும் மத்திய அரசிடம் இருந்து இதுவரையிலும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை.


முன்னதாக விகடன் இணைய இதழான `விகடன் ப்ளஸ்’ இதழில் (பிப்ரவரி 10) அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது. இது பாஜக ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டதோடு, பாஜக மாநில தலைவரான அண்ணாமலையால் விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசிடம் புகாராகவும் அனுப்பப்பட்டது.


இந்த நிலையில் பல இடங்களில் விகடன் இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை என்று வாசகர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அரசு தரப்பில் இதுவரை விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பும் வரவில்லை.





நூற்றாண்டு காலமாக விகடன் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம், இயங்குவோம்.. ஒரு வேளை இந்த அட்டைப்படம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்பதை தெரிவித்துகொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.




EMIS New Update - Scholarship Details for Students

 

EMIS New Update - மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை விவரங்கள்


 STUDENTS SCHOLARSHIP DETAILS IS NEW UPDATE IN EMIS WEBPORTAL NOW



EMIS Website

|

School Login

|

Student

|

Student Details

|

Student Scholarship Details

|

Choose Column

|

Rural Girls Incentive MBC/DNC /

ADW Rural Girls incentive /

ADW and Tribal welfare pre matric /

Minority Rural Girls Incentive

|

Verify Bank Account Seeding Details & Aadhar eKYC


A man and an old woman were brutally assaulted by a policeman at Ulundurpet Government Hospital

 


உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் வாலிபர் ஒருவரையும், மூதாட்டி ஒருவரையும் காவலர் ஒருவர் கொடூரமாக தாக்கும் காட்சிகள் 


A young man and an old woman were brutally assaulted by a policeman at Ulundurpet Government Hospital


மென்மையான மனம் கொண்டவர்கள் காண வேண்டாம்




இந்த காணொளி வெளியாகி காவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவராலும் வலியுறுத்தப்பட்ட நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.








இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர்கல்வி வழிகாட்டல் செய்திகள் 06.07.2025

  உயர்கல்வி வழிகாட்டல் செய்திகள் 06.07.2025 ஞாயிறு நாளை 07.07.2025 தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் +2 மதிப்பெண் அடிப்படையில் BSC Nurs...