கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மத்திய அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மத்திய அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Is Vikatan website blocked by central government - what is the reason?

 


விகடன் இணையதளம் மத்திய அரசின் சட்ட அமலாக்கத்துறையால் முடக்கமா ? - காரணம் என்ன ?


Is Vikatan website blocked by central government - what is the reason?


பிரதமர் மோடியை விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்ட காரணத்தால் விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,


தமிழின் பிரபலமான ஊடகமாக திகழ்வது விகடன். பிரபல தனியார் ஊடக நிறுவனமான விகடன் நூற்றாண்டுகளாக இயங்கி வரும் நிலையில், அவர்களது வார இதழுக்கான அட்டைப்படத்தில் பிரதமர் மோடியை விமர்சிக்கும் விதமாக சித்திரம் வரையப்பட்டிருந்தது. 


மோடிக்கு எதிரான சித்திரம்:


அந்த சித்திரத்தில் பிரதமர் மோடியை இழிவுபடுத்தியதாக கூறி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக-வினர், பிரதமர் மோடி ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விகடன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அண்ணாமலை புகார் அளித்திருந்தார். 


விகடன் இணையதளம் முடக்கமா?

இந்த சூழலில், அண்ணாமலை புகாரின் அடிப்படையில் விகடன் செய்தி நிறுவனத்தின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 




இதுதொடர்பாக ABP பத்திரிகையாளர்கள் தரப்பின் சார்பில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகனை தொடர்பு கொண்டபோது அவரது உதவியாளர் பதில் அளித்தார்.

அவர் அளித்த பதிலில் விகடன் இணையதளம் முடக்கப்பட்டது உண்மை என்று கூறினார் என குறிப்பிடப்பட்டுள்ளது.




பிரதமர் மோடியை சித்தரித்து வரையப்பட்ட கார்ட்டூனுக்கு எதிராக  விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பலரும் இது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது என்று தெரிவித்து வருகின்றனர்.


பா.ஜ.க. வரவேற்பு


இதற்கு பா.ஜ.க.வினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக பாஜகவின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான கரு.நாகராஜன் பாரத பிரதமர் உலகத் தலைவர் நரேந்திர மோடி அவர்களை அவதூறாக சித்தரித்த விகடன் டிஜிட்டல் சைட் முடக்கப்பட்டது. நீதி வெல்ல வேண்டும் நியாயம் கிடைக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். 



மேலும், பல பாஜக-வினர் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. 


ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கை போன்று எதுவும் மத்திய அரசு சார்பிலோ அல்லது அமைச்சர் எல்.முருகன் தரப்பில் இருந்தோ வெளியிடப்படவில்லை.



விகடன் குழுமம் பரபரப்பு அறிக்கை


இந்த விவகாரம் தொடர்பாக விகடன் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பல இடங்களில் பலருக்கு விகடன் தளம் வேலை செய்யவில்லை. எனினும் மத்திய அரசிடம் இருந்து இதுவரையிலும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை.


முன்னதாக விகடன் இணைய இதழான `விகடன் ப்ளஸ்’ இதழில் (பிப்ரவரி 10) அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது. இது பாஜக ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டதோடு, பாஜக மாநில தலைவரான அண்ணாமலையால் விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசிடம் புகாராகவும் அனுப்பப்பட்டது.


இந்த நிலையில் பல இடங்களில் விகடன் இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை என்று வாசகர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அரசு தரப்பில் இதுவரை விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பும் வரவில்லை.





நூற்றாண்டு காலமாக விகடன் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம், இயங்குவோம்.. ஒரு வேளை இந்த அட்டைப்படம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்பதை தெரிவித்துகொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.




மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் மறு உத்தரவு வரும் வரை வீட்டிலிருந்தே வேலை செய்ய மத்திய அரசு உத்தரவு...

 


மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் மறு உத்தரவு வரும் வரை வீட்டிலிருந்தே வேலை செய்ய மத்திய அரசு உத்தரவு...

>>> Click here to Download the Office Memorandum of the Additional Secretary to Government of India...



அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு நீட் தேர்வின் தகுதியை நீர்த்து போகச்செய்யும் - உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்ப்பு...

 



அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இடஒதுக்கீடு வழங்கினால் தரம் குறையுமா?

மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்


புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை 26 அக்டோபர் 2020 இல் கூடி, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கு, தீர்மானம் நிறைவேற்றி, துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.


ஆளுநர் கிரண்பேடி இத்தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு அனுப்பினார். மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்காததால், துணைநிலை ஆளுநரின் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் 10 விழுக்காடு இடஒதுக்கீட்டில் சேருகின்ற வாய்ப்பு மத்திய பா.ஜ.க. அரசால் பறிபோய் இருக்கிறது.


இந்நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி சுப்புலட்சுமியின் தாயார் மகாலட்சுமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் புதுச்சேரி அரசு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார்.


இந்த வழக்கு நேற்று (21.01.2021) நீதியரசர் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன் தாக்கல் செய்திருக்கும் பதில்  மனுவில், “‘ஒரே நாடு; ஒரே மெரிட்’ என்ற அடிப்படையில் மருத்துவப் படிப்புகளில் தரவரிசை மேற்கொள்ளப்பட்டு, மாணவர் சேர்க்கை நடத்துவதற்காக நீட் தேர்வு கொண்டுவரப்பட்டு உள்ளது. அரசுப் பள்ளியில் படித்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக இடஒதுக்கீடு வழங்கினால் அது கல்வித் தரத்தைப் பாதிக்கும் என்று கூறி இருக்கின்றார்.


இதுமட்டுமல்லாமல், “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பதை உயர்நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை” என்றும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் அளிக்கப்பட்டுள்ள 7.5 இடஒதுக்கீட்டையும் பறிக்க வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசு துடிக்கிறது.


இதன் மூலம் மத்திய பா.ஜ.க. அரசு, இடஒதுக்கீடு கொள்கையில் பின்பற்றும் மோசடி தோலுரித்துக் காட்டப்பட்டுவிட்டது. சமூகநீதியை சவக்குழிக்கு அனுப்பி வரும் பா.ஜ.க. அரசின் மனப்பான்மையும் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.


அரசியலமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு பொருளாதார அளவுகோலைத் திணித்து, “பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதிகள்” என்று ஒரு பிரிவை உருவாக்கி, 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்து சட்டத் திருத்தம் செய்து, தகுதி, தரம், திறமை பற்றி கவலைப்படாமல் அதனை உடனடியாகச் செயல்படுத்த உத்தரவிட்ட பா.ஜ.க. அரசு, “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கினால் தகுதி, தரம் குறைந்துவிடும்” என்று கூச்சலிடுவது ஆதிக்க ஆணவப்போக்கு ஆகும்.


சமூகநீதிக் கோட்பாட்டை நீர்த்துப்போகச் செய்து, இடஒதுக்கீட்டு முறையையே ஒழித்துக்கட்ட முயற்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் நிலைப்பாடு கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.


புதுச்சேரி அரசின் தீர்மானப்படி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதற்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.


மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து, சமூகநீதிக்கு சாவுமணி அடிக்கும் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசுக்குப் பாதம் தாங்கியாகச் செயல்படும் அ.தி.மு.க. அரசுக்கும் வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.


வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை - 8

22.01.2021

தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலக, ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் எம்.பி. சு.வெங்கடேசன் கேள்விக்கு மத்திய அரசு பதில்...

 தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலக, ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் எம்.பி. சு.வெங்கடேசன் கேள்விக்கு மத்திய அரசு பதில்...






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2024-2025 Final Answer Key

  NMMS 2024-2025 Final Key Answer Released by DGE >>> Click Here to Download...