கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Election - MASTER COVER - 3 குறித்த தகவல்கள்...

Election - MASTER COVER - 3 குறித்த தகவல்கள்...


 MASTER COVER - 3 ( STATUTORY COVER - வெள்ளை கலர் ( COVER  No. 3/1)  இதன் உள்ளே இக்கவரின் மேலே எழுதப்பட்டுள்ள கவர்கள்  5 Cover கள் அனைத்தும் (Cover எண்கள் 3/2, 3/3, 3/4, 3/5 , 3/6  என கவரிலே குறிப்பிடப்பட்டிருக்கும்) உள்ளே வைத்து வழங்கிடவும்...



Election - MASTER COVER - 2 குறித்த தகவல்கள்...

Election - MASTER COVER - 2 குறித்த தகவல்கள்...


 MASTER COVER - 2 ( SCRUTINY DOCUMENTS - வெள்ளை கலர் ( COVER  No. 2/1)  இதன் உள்ளே இக்கவரின் மேலே எழுதப்பட்டுள்ள கவர்கள்  4 Cover கள் அனைத்தும் (Cover எண்கள் 2/2, 2/3, 2/4, 2/5 என கவரிலே குறிப்பிடப்பட்டிருக்கும்) உள்ளே வைத்து வழங்கிடவும்.




Election - MASTER COVER - 1 குறித்த தகவல்கள்...

Election - MASTER COVER - 1 குறித்த தகவல்கள்...


வெள்ளை கலர் ( COVER  No. 1/1)  இதன் உள்ளே இக்கவரின் மேலே எழுதப்பட்டுள்ள கவர்கள் அனைத்தும் (கவர் எண்கள் 1/2, 1/3, 1/4 என கவரிலே குறிப்பிடப்பட்டிருக்கும்) உள்ளே வைத்து வழங்கிடவும்.




வாக்குச்சாவடி மையங்களுக்கு வழங்கப்படும் உறைகள் விவரம்...

 வாக்குச்சாவடி மையங்களுக்கு வழங்கப்படும்  உறைகள் விவரம்...



நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ ஆசிரியர்கள்‌ கைபேசி, உயர்‌ தொழில்‌ நுட்ப கணினி ஆய்வகங்கள்‌ மற்றும்‌ திறன்‌ வகுப்பறைகளில்‌ மணற்கேணி செயலியை பயன்படுத்தி கற்றல்‌ கற்பித்தல்‌ செயல்பாட்டினை மேற்கொள்ளுதல்‌ - அறிவுரைகள்‌ வழங்குதல்‌ - தொடர்பாக - தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌...

 

மணற்கேணி செயலி பயன்பாடு - நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ கற்றல்‌ செயல்பாடுகள்‌ - வீடியோக்கள்‌ - ஆசிரியர்கள்‌ கைபேசி, உயர்‌ தொழில்‌ நுட்ப கணினி ஆய்வகங்கள்‌ மற்றும்‌ திறன்‌  வகுப்பறைகளில்‌ மணற்கேணி செயலியை பயன்படுத்தி கற்றல்‌ கற்பித்தல்‌ செயல்பாட்டினை மேற்கொள்ளுதல்‌ - அறிவுரைகள்‌ வழங்குதல்‌ - தொடர்பாக - தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌. 007694 / ஜெ2 / 2024, நாள்‌. 15.04.2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, சென்னை - 6.

ந.க.எண்‌. 007694 / ஜெ2 / 2024, நாள்‌. 15.04.2024.


பொருள்‌ : தொடக்கக்‌ கல்வி - மணற்கேணி செயலி பயன்பாடு - நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ கற்றல்‌ செயல்பாடுகள்‌ - வீடியோக்கள்‌ - ஆசிரியர்கள்‌ கைபேசி, உயர்‌ தொழில்‌ நுட்ப கணினி ஆய்வகங்கள்‌ மற்றும்‌ திறன்‌  வகுப்பறைகளில்‌ மணற்கேணி செயலியை பயன்படுத்தி கற்றல்‌-கற்பித்தல்‌ செயல்பாட்டினை மேற்கொள்ளுதல்‌ - அறிவுரைகள்‌ வழங்குதல்‌ - தொடர்பாக.


பார்வை : சென்னை-6, தமிழ்நாடு மாதிரிப்‌ பள்ளிகள்‌, உறுப்பினர்‌ செயலர்‌ அவர்களின்‌ கடித நாள்‌. 12.04.2024.


பார்வையில்‌ காணும்‌ கடிதத்தில்‌, 6 முதல்‌ 12ஆம்‌ வகுப்பு மாநில பாடத்திட்ட கணிதம்‌ மற்றும்‌ அறிவியல்‌ புத்தகங்களில்‌  இடம்பெற்ற பாடங்களுக்கான காணொளி காட்சிகள்‌ தமிழ்‌ மற்றும்‌ ஆங்கில மொழியில்‌ அனிமேஷன்‌ வீடியோக்களாக மணற்கேணி செயலியில்‌ வழங்கப்பட்டு உள்ளதாகவும்‌  இம்மணற்கேணி செயலியின்‌  தனித்துவமான சிறப்பம்சம்‌ என்னவெனில்‌, கற்கும்‌ ஒவ்வொருவருக்கும்‌ நன்கு திட்டமிட்ட வழிகாட்டுதலுடன்‌ கூடிய கற்றல்‌ பயணத்திற்கு வழிவகுப்பதாகவும்‌ உயர்வகுப்புகளில்‌ (XI, XII) கற்கும்‌ ஒவ்வொரு பாடப்‌ பொருளும்‌ அதற்கு அடிப்படையாக கீழ்‌ வகுப்புகளில்‌ (VI, VII, VIII, IX, X) உள்ள பாடப்‌பொருட்களுடன்‌ இணைக்கப்பட்டுள்ளதாகவும்‌ இதன்‌ மூலம்‌ ஒரு பாடப்‌ பொருளை மிகத்‌ தெளிவாகவும்‌ உள்ளார்ந்த புரிதலுடணும்‌ கற்க இயலும்‌ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மேலும்‌, தற்போது https://manarkeni.tnschools.gov.in என்ற இணையதள முகவரியின்‌ வாயிலாக மணற்கேணி செயலியை அணுகவும்‌ பாட விவரங்களை பதிவிறக்கம்‌ செய்யவும்‌, வழிவகை செய்யப்பட்டு உள்ளது எனவும்‌ இச்செயலியின்‌ வழியாக கட்டணம்‌ எதுவுமின்றி அனைவரும்‌ எளிதில்‌ பதிவிறக்கம்‌ செய்ய முடியும்‌ (Open Source and can be downloaded free) எனவும்‌ தெரிவிக்கப்பட்டு உள்ளது.


வரும்‌ கல்வி ஆண்டில்‌ அனைத்து அரசு நடுநிலைப்‌ பள்ளிகளிலும்‌ உயர்‌ தொழில்‌நுட்பக்‌ கணினி ஆய்வகங்கள்‌ அமைக்கப்பட உள்ளன. எனவே, திறன்‌ வகுப்பறைகள்‌ மற்றும்‌ உயர்‌ தொழில்‌ நுட்பக்‌ கணினி ஆய்வகங்களில்‌ மணற்கேணி இணைய முகப்பின்‌ (Manarkeni Portal) வழியாக கணிதம்‌ மற்றும்‌ அறிவியல்‌ பாடங்களை போதிப்பதற்கு ஏற்றவகையில்‌ Smart Board ல் அனிமேஷன்‌ வீடியோக்களை பாடவாரியாக பதிவிறக்கம்‌ செய்து வைத்துக்கொள்ள வேண்டும்‌. பதிவிறக்கம்‌ செய்யப்பட்ட பின்னர்‌ 6 முதல்‌ 8 வகுப்பு பாடங்களுக்கான அனிமேஷன்‌ வீடியோக்களில்‌ இடம்வற்றுள்ள பாடக்‌ கருத்துக்கள்‌ மற்றும்‌ அந்த வீடியோக்கள்‌ நல்ல முறையில்‌ இயங்குகின்றனவா என்பதை பள்ளியில்‌ பணிபுரியும்‌ பட்டதாரி ஆசிரியர்கள்‌ மற்றும்‌ தலைமை ஆசிரியர்கள்‌ முன்கூட்டியே சரிபார்த்து வைத்துக்‌ கொள்ள வேண்டும்‌.


மேலும்‌, ஆசியர்கள்‌ தங்கள்‌ கைபேசியில்‌ இச்செயலியை பதிவிறக்கம்‌ செய்து வைத்துக்கொள்வதற்கு ஏற்றவாறு மணற்கேணி QR Code-ஐ (இணைக்கப்பட்டுள்ளது) ஒவ்வொரு பள்ளியிலும்‌ உயர்‌ தொழில்‌ நுட்பக்‌ கணினி ஆய்வகம்‌ அமையும்‌ அறை மற்றும்‌ 6-8 வகுப்பு மாணவர்கள்‌ கல்வி பயிலும்‌ வகுப்பறைகளிலும்‌ ஒட்டி வைக்க வேண்டும்‌. மணற்கேணி செயலியை பயன்படுத்தவும்‌ அதன்‌ மூலம்‌ கற்றல்‌ - கற்பித்தல்‌ செயல்பாட்டினை நன்முறையில்‌ பயன்படுத்தவும்‌ அனைத்து நடுநிலைப்‌ பள்ளி தலைமை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ பட்டதாரி ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ மூலம்‌ வழங்குமாறு அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ (தொடக்கக்‌ கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.


தொடக்கக்கல்வி இயக்குநர்


கோடை வெப்பம் - பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் - DSE, DEE & DPS இணைச் செயல்முறைகள்...



கோடை வெப்பம் - பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் - பள்ளிக்கல்வி DSE, தொடக்கக்கல்வி DEE & தனியார் பள்ளிகளின் DPS இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வருமான வரி - ஏமாற்றப்படும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் - பூவை உமாபாலன்...

 

 

வருமான வரி - ஏமாற்றப்படும் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் - பூவை உமாபாலன்...


 தாத்தா பாட்டி காலம் முதல் வீட்டில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பது வாடிக்கை. குழந்தைகளுக்கு சிறு உண்டியல் வாங்கிக் கொடுத்து சேமிக்க ஊக்குவிப்பார்கள். பள்ளிகளிலும் சஞ்சயிகா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு சேமிக்கும் பழக்கம் ஆசிரியர்களால் ஊக்குவிக்கப்படும். அரசு எந்தெந்த வழிகள் இருக்கிறதோ அந்தந்த வழிகளில் எல்லாம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து வந்தது. சுதந்திர இந்தியாவில் நேரு அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட  ஆயுள் காப்பீடு போன்ற பல உதாரணங்கள் உண்டு. 


ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி வந்துவிட்டால் போதும், ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சேமிப்பை நோக்கி ஓடுவார்கள். இரண்டு மாதங்கள் அதைப்பற்றியே பேச்சு ஓடும். காலாவதியாகிவிட்ட காப்பீடுகளை புதுப்பிப்பதில் தொடங்கி வருமான வரி கழிவுக்கு உட்பட்ட நிலையான வைப்பு நிதிக்கு கடன் வாங்கியாவது கட்டுவதும், தனது சேமநலநிதியின் மாதாந்திரச் சந்தாத் தொகையினை கூட்டுவதும் என்றும் சேமிப்பு.... சேமிப்பு.... என்று அலைந்து திரிந்து அரசு அறிவித்துள்ள வருமான வரிக் கழிவினை முழுதும் பயன்படுத்தி அந்தாண்டின் வருமான வரி கட்டுவதன் அளவைக் குறைக்க பாடுபடுவதே ஏறக்குறைய திருவிழாவிற்கு பொருள் சேமிப்பது போல அல்லோகலப்படும். 


ஆனால், இன்று இரண்டு விதமான வருமான வரி செலுத்தும் முறை. ஒன்று,  ஆண்டு வருமானத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்த சேமிப்பிற்கான கழிவுத் தொகை ரூ. 1,50,000ஐக் கழித்து மீதம் உள்ள தொகைக்கு வருமான வரி செலுத்துவது. இரண்டு, எந்தச் சேமிப்பும் காட்டாமல் நேரடியாக ஆண்டு மொத்த வருமானத்தை தற்போதைய ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள முறையினைப் பயன்படுத்தி வருமான வரி செலுத்துவது. ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் அவர்களின் இயக்கங்களும் இந்த இரண்டு முறைகளில் எந்த முறையினைத் தேர்ந்தெடுத்தால் வருமான வரி கட்டுவது குறையும் என்று கடந்த சில ஆண்டுகளில் பட்டிமன்றம் நடத்தி கடைசியில் சேமிப்புக் கணக்கினைக் காட்டாமல் நேரடியாக வருமான வரி கணக்கிடுவதில்தான் வருமான வரி குறைகிறது என்று தீர்ப்பு வாசிக்கப்பட்டு , அதையே இந்த ஆண்டு அலுவலகத்தில் நிரந்தர சாசனமாக எழுதி பதிந்து இனி இந்த வழியில்தான் எனது வருமான வரி பிடித்தம் என்று முடிந்த முடிவாக தலைவிதி நிர்ணயம் செய்யப்பட்டு விட்டது. இதன் மூலம் பழைய நடைமுறை காலாவதியாகிவிடுகிறது. இப்போது ஜியோ இலவசமாக நமக்குக் கொடுத்த சிம்கார்டு ஏனோ சம்பந்தம் இல்லாமல் நினைவுக்கு வருகிறது. எரிவாயு சிலிண்டருக்குக் கொடுத்த மானியம்கூட ஏனோ நினைவில் வந்து வந்து போகிறது.


சர்வதேச பொருளாதார மந்த நிலை 1985, 1990 - 1993, 1998 மற்றும் 2001 - 2002 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட போது, உலகம் முழுதும் உள்ள நாடுகளில், நுகர்வுக் கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு செயல்படும் நாடுகள் அத்தனையும் அடிவாங்கிய சூழலில் பெரிதும் பாதிக்காத நாடுகள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகும். அதில் குறிப்பாக இந்தியா பெரிதும் அடிவாங்கவில்லை. ஏனெனில், பழங்காலந்தொட்டே அவர்கள் இரத்தத்தில் ஊறி கடைப்பிடிக்கும் சேமிக்கும் பழக்கமாகும். இதனையே வெளிநாட்டு பத்திரிக்கைகளுக்கு பேட்டியளிக்கும் போது நமது நாட்டின் பொருளாதார அறிஞரும், முன்னாள் பாரதப் பிரதமருமான மதிப்பிற்குரிய மன்மோகன் சிங் அவர்கள் கூறினார். 


ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வருடந்தோறும் கட்டாயச் சேமிப்பாக ஜனவரி பிப்ரவரிகளில் வருமான வரிக்காகவாவது சேமிக்கும் பழக்கத்தை மேற்கொண்டு வந்தனர். சேமிப்பிற்கு சேமிப்பு. சேமிப்பிற்கான குறைந்தபட்சமேனும் வட்டி. வருமான வரியிலும் கழிவு. வங்கிகளும் நிலையான சேமிப்பின் மூலம் வரும் வருவாயினை, தொழில் தொடங்குவோருக்கு, கல்விக் கடன் பெறுவோருக்கு, தனி நபர் கடன் பெறுவோருக்கு, வீடு கட்ட கடன் பெறுவோருக்கு என்று வட்டிக்குக் கொடுப்பதன் மூலம் வங்கிக்கும் வருவாய். ஆக மொத்தத்தில், பணம் எல்லோருக்கும் பணமாகச் சேர்த்தது. 


ஆனால், இன்று. பலர் தன் ஆயுள் காப்பீடுகளைக்கூட கட்டாமல் விட்டுவிட்டதனை அறிய முடிகிறது. வங்கிகளில் சேமிக்கப்படும் சேமிப்புகளுக்கும் வரி பிடித்தம் செய்யப்படுகிறது. சாதாரண சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்திற்குக்கூட வரி விதிப்படுவதால் வங்கிகளின் மூலம் பண பரிவர்த்தனை செய்வதனையே பெருவாரியானவர்கள் கவலையுடன்  தவிர்க்கக்கூடிய நிலை உள்ளது. 


புதிய வருமான வரி செலுத்தும் முறையினை இன்றைய ஒன்றிய அரசு மிகவும் கெட்டிக்காரத்தனமாக அறிமுகம் செய்து எல்லோரையும் ஏமாற்றி நடைமுறைப்படுத்தி உள்ளது. உண்மையில் என்ன செய்து இருக்க வேண்டும்? கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நிதியமைச்சராக இருந்த மதிப்பிற்குரிய ப. சிதம்பரம் அவர்கள் கடைசியாக அறிவித்த சேமிப்பிற்கான கழிவு தொகை 1,50,000 லிருந்து இன்றைய பொருளாதார புள்ளி விவரத்திற்கு ஏற்ப 3 இலட்சத்திலிருந்து 5 இலட்சமாக உயர்த்தி இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய நிதி அமைச்சர் அதை விடுத்து புதிய முறை என்று அறிவித்து அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர்களை அந்தச் சிந்தனையே எழ விடாமல் மடைமாற்றி புதிய வருமான வரிக் கணக்கின் மூலம் சற்றே சிக்கனம் இருப்பது போலக்காட்டி இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமே என்கிற வாய்ப்பினை உருவாக்குவது போல உருவாக்கி இன்று மீளா முடிவிற்கு எல்லோரையும் அழைத்து வந்து விட்டார்.


உலக நாடுகளில் இந்தியா நான்காவது மிகப் பெரிய சந்தையாக உள்ளது. இந்திய மக்களை மடைமாற்றும் உத்தியின் மூலம் சேமிப்பற்ற நுகர்வோராக மாற்றுவதில் வலதுசாரிகள் வெற்றி பெற்றுவிட்டார்கள். என்ன செய்யப்போகிறோம் நாம்?


கட்டுரை - பூவை உமாபாலன்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள்  - தமிழ்...