கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Online Exams லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Online Exams லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2020-21ஆம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் நிலை-1/கணினி பயிற்றுநர்கள் நிலை-1 பதவிகளுக்கான நேரடி நியமனம் - கணினி அடிப்படையிலான தேர்வு கால அட்டவணை வெளியீடு ( TRB - DIRECT RECRUITMENT FOR THE POST OF POST GRADUATE ASSISTANTS / PHYSICAL EDUCATION DIRECTOR GRADE-1/COMPUTER INSTRUCTOR GRADE-I FOR THE YEAR 2020-21 COMPUTER BASED EXAMINATION SCHEDULE)...



>>> 2020-21ஆம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் நிலை-1/கணினி பயிற்றுநர்கள் நிலை-1 பதவிகளுக்கான நேரடி நியமனம் - கணினி அடிப்படையிலான தேர்வு கால அட்டவணை வெளியீடு ( DIRECT RECRUITMENT FOR THE POST OF POST GRADUATE ASSISTANTS / PHYSICAL EDUCATION DIRECTOR GRADE-1/COMPUTER  INSTRUCTOR GRADE-I FOR THE YEAR 2020-21  COMPUTER BASED EXAMINATION SCHEDULE)... 

இணையவழியில் அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு-2021 (வெற்றி பெறுபவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகை) - Online Science Awareness Talent Exam-2021 (Monthly Scholarship for Winners) ...



 வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் 2021 - இணையவழியில் அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு-2021 (வெற்றி பெறுபவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகை)...


Vidyarthi Vigyan Manthan 2021 - Online Science Awareness Talent Exam-2021 (Monthly Scholarship for Winners) ...



>>> அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



மாணவர்களுக்கான தேசிய அளவிலான அறிவியல் திறனாய்வுத் தேர்வு - மாதந்தோறும் உதவித்தொகை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது?


* வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் -2021 இணைய வழியில் அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு -2021


 * வெற்றி பெறுபவர்களுக்கு மாதந்தோறும் ஒரு வருடத்திற்கு உதவித்தொகை 


இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம் , விபா நிறுவனம் , என்.சி.இ.ஆர் , டி { NCERT , GOVT.OF INDIA ) இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது. அறிவியல் மனப்பான்மையை , மாணாக்கர்களிடம் வளர்ப்பதோடு அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் கொரோனா பேரிடரால் பள்ளிகள் திறக்காமல் இருப்பதால் வீட்டில் இருந்தே இத்தேர்வை மாணாவர்கள் எழுத திட்டமிடப்பட்டுள்ளது. இத்தேர்வு இந்தியா முழுவதும் 30-11-2021 ( செவ்வாய் மற்றும் 05-12-2021 ( ஞாயிறு ) ஆகிய இரு நாட்கள் இணையவழியில் நடைபெற உள்ளது. ஸ்மார்ட் போன் , டேப்லெட் , மடிக்கணினி , கணினி மூலம் தேர்வு நடைபெற உள்ளது . இந்த திறந்த புத்தகத்தேர்வினை ஆங்கிலம் தவிர தமிழ் , இந்தி , மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளிலும் மாணவர்கள் தேர்வு எழுத இயலும் முக்கியமாக தமிழ் வழியில் தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு தேசிய அளவிலான தேர்வு வரை அனைத்தும் தமிழிலேயே தேர்வு நடைபெறும். 


தேர்வின் முக்கியமான நோக்கங்கள் : 

* அறிவியல் மற்றும் ஆராய்ச்சித்துறையில் பள்ளி மாணாக்கர்களின் பங்கேற்பை அதிகரித்தல் " மிகப்பெரிய அறிவியல் ஆய்வில் பங்கேற்கலாம். இதில் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் நம் உணவுப் பழக்கம் ஏற்படுத்திய சுற்றுச்சூழல் தாக்கம் போன்றவற்றை அறியலாம். 


தேர்வுக் கட்டணம் : 100 ரூபாய் 


விண்ணப்பிக்க கடைசி தேதி : 30-10-2021 


தேர்வு நடைபெறும் நாள் : 30-11-2021 ( செவ்வாய் ) அல்லது 05-12-2021 ( ஞாயிறு ) 


தேர்வு நேரம் : 90 நிமிடங்கள் ( 1.30 மணி நேரம்) நேரம் : காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை எப்போது வேண்டுமானாலும் எழுதலாம். ( ஒரு மாணவர் ஒரு முறை மட்டுமே எழுத முடியும் )


யாரெல்லாம் தேர்வு எழுதலாம் ? 

 6 ம் வகுப்பு முதல் 11 ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் இத்தேர்வு எழுதலாம். 6 முதல் 8 வரை ஒரு பிரிவாகவும் 9 முதல் 11 வரை மற்றொரு பிரிவாகவும் தேர்வு நடைபெறும். 


தேர்விற்கான பாடத்திட்டம் : 

பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் பாடப்புத்தகத்தில் இருந்து 50 சதவீத வினாக்களும் , அறிவியல் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு ஆச்சர்யா பிரபுல்லா சந்திர ராய் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் இந்தியாவின் சுதந்திர போராட்டம் மற்றும் அறிவியல் ஆகிய புத்தகங்களில் இருந்து 40 சதவீத கேள்விகளும் , சிந்தித்து விடையளித்தல் என்ற தலைப்பில் 10 சதவீத கேள்விகளும் ஆக மொத்தம் 100 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.


எவ்வாறு பதிவு செய்வது ? 

www.vvm.org.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். 


பள்ளி வழியாக : 

பள்ளி மூலமாக விண்ணப்பிக்க இயலும் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.பள்ளி மூலமாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பள்ளி அளவிலான சான்றிதழ் வழங்கப்படும்.


தனித்தேர்வர்களாக : 

தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்க விரும்புவர்கள் இணையதளம் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.


பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் : 

பள்ளி அளவில் : பள்ளியில் ஒரு வகுப்புக்கு குறைந்தபட்சம் 10 மாணாக்கர்கள் பங்கேற்றால் வகுப்பிற்கு 3 மாணாக்கர்களுக்கு பள்ளி அளவிலான மின் சான்றிதழ்கள் வழங்கப்படும் , 


மாவட்ட அளவில் : மாவட்ட அளவில் ( 6 முதல் 11 ம் வகுப்புவரை ஒவ்வொரு வகுப்பிற்கும் 3 பேர் வீதம் 18 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர் . 


> அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் . - , மாவட்ட மண்டல அளவில் அருகில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.


மாநில அளவில் : மாநில அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் 20 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு 120 பேர் இரண்டாம் கட்ட தேர்விற்கு அழைக்கப்படுவர் . அத்தேர்வு செயல்முறை வடிவில் அமைந்து இருக்கும் . 


- இதில் தேர்வு செய்யப்படும் 120 மாணாக்கர்களுக்கும் சான்றிதழ்கள் , கேடயங்கள் வழங்கப்படும்.


- 120 மாணாக்கர்களில் வகுப்பிற்கு 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு ரொக்கப்பரிசாக முறையே ரூ .5000 , ரூ .3000 , ரூ .2000 வழங்கப்படும்.


தேசிய அளவில் : 

- ஒவ்வொரு வகுப்பிலும் ( 6 முதல் 11 ம் வகுப்பு வரை ) முதல் 2 இடங்களை பெறும் மாணாக்கர்கள் தோவு செய்யப்பட்டு தேசிய அளவிலான முகாமிற்கு அழைக்கப்படுவார்கள்.


- தேசிய அளவில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்படும். இந்த ஆண்டு முதல் தேசிய அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கு மாதந்தோறும் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.


 - மேலும் ஸ்ரீஜன் என்ற பெயரில் தேசிய மற்றும் மண்டல அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையங்களில் ஒன்று முதல் 3 வாரங்களுக்கு பயிற்சி பெறும் வாய்ப்பை பெறுகிறார்கள்.


- தேசிய அளவிலான முகாமில் நடைபெறும் பல்வேறு வகையான அறிவியல் சார் நிகழ்வுகளில் பங்கேற்பர் . அதில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய மாணாக்கர்களில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் ( 6 முதல் 11 ம் வகுப்பு வரை 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள் , கேடயங்கள் மற்றும் முதல் இரண்டாம் , மூன்றாம் இடம் பெறும் மாணாக்கர்களுக்கு முறையே ரூ .25000 , ரூ .15000 , ரூ .10000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் . 


> மண்டல அளவிலும் ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாக செய்த மாணாக்கர்களுக்கு ரூ .5000 , ரூ .3000 , ரூ , 2000 என ரொக்கப்பரிசு வழங்கப்படும் . - அனைத்து மாணாக்கர்களும் ஒவ்வொரு விஞ்ஞானி அல்லது ஆராய்ச்சியாளருடன் இணைக்கப்பட்டு அவர்கள் படிக்க , கருத்துக்களை தெரிந்து கொள்ள வழிகாட்டப்படுவார்கள் , இதுபோன்ற தோவுகளால் மாணவர்களின் திறமைகள் கண்டறியப்பட்டு அவர்கள் ஊக்குவிக்கப்படுவதோடு எதிர்காலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க வாய்ப்பாக அமையும் . மேலும் இந்த வருடம் பதிவு செய்யும் மாணாக்கர்கள் அனைவரும் இந்திய அளவிலான மிகப்பெரிய அறிவியல் ஆய்வில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது.


 மேலும் விவரங்களுக்கு .. 

கண்ணபிரான் , 

மாநில ஒருங்கிணைப்பாளர் , 

வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் , 

Cell : 8778201926 

Email : vvmtamilnadu@gmail.com

தேர்ச்சி பெற்றவர்களுக்கும் மறுதேர்வு இன்ஜினியரிங் கல்லூரிகள் மீது புகார்...

 


தேர்ச்சி பெற்ற பாடங்களுக்கு மீண்டும் தேர்வு எழுதும்படி, இன்ஜினியரிங் கல்லுாரிகள் கட்டாயப்படுத்துவதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, பிப்ரவரியில் 'ஆன்லைன்' வழி தேர்வு நடந்தது. மாணவர்கள் ஆன்லைனில் இருந்தபடி, மொபைல்போன் மற்றும் 'லேப்டாப்' வாயிலாக தேர்வு எழுதினர்.

 

ஆன்லைனில் மாணவர்களின் முகம் மற்றும் கண் அசைவுகள், அப்போது கேட்கும் ஒலி ஆகியவை பதிவாகும் வகையில், 'சாப்ட்வேர்' பயன்படுத்தப் பட்டது.



அறிவிப்பு

இந்த தேர்வில், பல மாணவர்களின் கண் அசைவுகள் மற்றும் அருகில் கேட்ட சத்தங்களின் அடிப்படையில், பலர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், காப்பி அடித்ததாகவும், சாப்ட்வேர் பதிவு செய்தது. அதனால், 30 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.


இது குறித்து, மாணவர்கள் தரப்பில் பரவலாக புகார் எழுந்ததால், மறு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மறு தேர்வு, ஜூன் 14ல் துவங்க உள்ளது.'ஏற்கனவே நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், விருப்பம் இருந்தால், மீண்டும் மறு தேர்வு எழுதலாம்; அவர்களுக்கு மறு தேர்வு கட்டாயமில்லை. மற்ற மாணவர்கள் கட்டாயம் மறுதேர்வில் பங்கேற்க வேண்டும்' என, அமைச்சர் பொன்முடி அறிவித்து உள்ளார்.


கோரிக்கை

இந்நிலையில், பல தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகள், தங்கள் மாணவர்கள், ஏற்கனவே நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், மீண்டும் தேர்வை எழுதும்படி கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்தன.புதிய மாணவர் சேர்க்கை நடக்க உள்ளதால், தங்கள் மாணவர்களின் மதிப்பெண்ணை உயர்த்தி காட்டுவதற்காக, மீண்டும் தேர்வு எழுத வற்புறுத்துவதாக, பெற்றோரும் குற்றம் சாட்டுகின்றனர்.


இது குறித்து, உயர் கல்வித் துறை சார்பில், கல்லுாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மறு தேர்வுக்கு கட்டாயப்படுத்தும் கல்லுாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான துறைத் தேர்வு - இணையவழி மாதிரித் (Objective Type Questions Only) தேர்வு...

 


ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான துறைத் தேர்வு - கீழ்க் குறிப்பிட்ட இணைப்பை பயன்படுத்தி இணையவழி மாதிரித் (Objective Type Questions Only) தேர்வினை எழுதலாம் - Thanks to Mr.G.Murugan Sir, HS Head Master, Virudhunagar District...


>>> ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான துறைத் தேர்வு - இணையவழி மாதிரித் (Objective Type Questions Only) தேர்வு...



பொறியியல் மாணவர்களுக்கு மறு தேர்வு - தமிழக அரசு...

 💥பொறியியல் மாணவர்களுக்கு மறு தேர்வு.


💥கடந்த நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டருக்கு மறு தேர்வு.


💥முறைகேடுகள் நடைபெற்றதன் காரணமாக மறு தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவிப்பு.


செய்தி வெளியீடு எண் : 028, நாள் : 10.05.2021 


செய்திக் குறிப்பு 


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நவம்பர் | டிசம்பர் 2020 க்குண்டான பருவத் தேர்வுகள் ஒழுங்கு நிகழ்நிலைத் தேர்வாக ( Proctored Online Examination ) 2021 பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இத்தேர்வில் மாணாக்கர்கள் தங்களுக்கு அதிக முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அதனால் தங்களுக்கு அதிக சிரமங்கள் ஏற்பட்டதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது கவனத்துக்கு கொண்டு வந்தனர் . இதில் மாணாக்கர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு அவர்களது வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத்தைக் கருதியும் , நன்குப் படிக்கும் சில மாணாக்கர்கள் தங்களுக்கு மதிப்பெண்கள் வெகுவாக குறைந்துவிட்டதாக தெரிவித்ததையும் கருத்தில் கொண்டு , மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் , மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் , உயர்கல்வித்துறைச் செயலாளர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மாணாக்கர்களின் நலன் கருதி கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்துள்ளார்கள் . 




1 பிப்ரவரி 2021 - இல் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதைக் கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வுகள் நடத்தப்படும் . 


2. இம்மாணக்கர்கள் இத்தேர்வுக்கு தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை . 


3 . பிப்ரவரி மாதம் நடந்த தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணாக்கர்கள் விரும்பினால் அவர்களும் இத்தேர்வினை எழுதலாம் . 


4 . தேர்வு 3 மணிநேரம் நிகழ்நிலைத் தேர்வாக ( Online Examination ) நடைபெறும் . பல்கலைக்கழகம் கொரோனாவிற்கு முன்பு பின்பற்றிய பழைய வினாத்தாட்கள் முறையே கடைபிடிக்கப்படும் . இத்தேர்வுகள் , தமிழகத்திலுள்ள மற்ற பல்கலைக்கழகங்கள் நடத்தியது போலவே நடத்தப்படும் .


 5 . எதிர்வரும் ஏப்ரல் / மே 2021 பருவநிலைத் தேர்வுகளும் மேற்கண்ட முறையிலேயே நடத்தப்படும் . பிற பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் தற்போது ஊரடங்குக் காரணமாக் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் மே 25 முதல் தொடர்ந்து நடத்தப்படும் . அதற்கான அறிவுப்புகளை அந்தந்தப் பல்கலைக்கழகங்களே வெளியிடும் . மாணாக்கர்கள் ஊரடங்குக் காலத்தைப் பயன்படுத்தி தேர்வுக்குத் தயாராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை -9






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...