கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் - சமூக வலைதளங்களில் வைரலான வேலம்மாள் பாட்டி...















 ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் - சமூக வலைதளங்களில் வைரலான வேலம்மாள் பாட்டி...


சமூக வலைதளங்களில் வைரலான நாகர்கோவிலைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டியின் புகைப்படத்தை எடுத்த நண்பர் ஜாக்சன் (Jackson Herby) அந்த பாட்டியிடம், "பாட்டி இந்த பணத்தை என்ன செய்யப் போறீங்க" என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த பாட்டி இந்த பணத்தை வைத்து நல்லதாக சேலையும் தேவையான பொருட்களும் வாங்க போகிறேன்" என்று மகிழ்ச்சியில் நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார். பின்னர் பாட்டியின் புகைப்படம் வெளியாகி வைரலாகி இருக்கிறது.


அதன்பின் இன்று தமிழ்நாடு அரசால் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபாய் நிவாரணத் தொகை ஜாக்சனுக்கு கிடைத்திருக்கிறது. அதிலிருந்து 2000 ரூபாயை அந்த பாட்டியைத் தேடி அவரின் வீட்டிற்கு சென்று கொடுத்து உதவியிருக்கிறார்.


இந்த பாட்டியின் புகைப்படத்தை முதலமைச்சர் தனது ட்வீட்டர் தளத்தில் பகிர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் தொழில்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களும் பகிர்ந்திருந்தார்.


>>> இச்செய்தி குறித்த காணொளி...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teachers suffer as online training links are not available - Daily News

 இணையதள பயிற்சி இணைப்பு கிடைக்காதால் ஆசிரியர்கள் தவிப்பு - நாளிதழ் செய்தி  Teachers suffer as online training links are not available - Dail...