கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புகைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புகைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இன்று (09.10.2024) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட புகைப்படங்கள் வெளியீடு...

 


கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று (09.10.2024) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட புகைப்படங்கள் வெளியீடு...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


126வது மலர் கண்காட்சி - அரசு தாவரவியல் பூங்கா, ஊட்டி...

126வது மலர் கண்காட்சி - அரசு தாவரவியல் பூங்கா, உதகமண்டலம்...


126th Flower Show - Government Botanical Gardens, Ooty...
































உலகின் உயரமான செனாப் ரயில் பாலம் - பிரமிப்பூட்டும் படங்களை பகிர்ந்த இந்திய ரயில்வே(World's Highest Chenab Rail Bridge - Indian Railways Shares Stunning Pictures)...



 உலகின் உயரமான செனாப் ரயில் பாலம் - பிரமிப்பூட்டும் படங்களை பகிர்ந்த இந்திய ரயில்வே(World's Highest Chenab Rail Bridge - Indian Railways Shares Stunning Pictures)...


ரியாசி: உலகின் மிக உயரமான ரயில் பாலம் என அறியப்படும் செனாப் பாலத்தின் பிரமிப்பூட்டும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது இந்திய ரயில்வே. மேகங்கள் புடை சூழ வேற்றுலகில் பயணிக்கும் அனுபவத்தை இந்த பாலத்தில் பயணிக்கும் ரயில் பயணிகள் அனுபவிப்பார்கள் எனத் தெரிகிறது. பொறியியலின் அற்புதம் என சமூக வலைதளப் பயனர் ஒருவர் இந்தப் பாலத்தின் கட்டுமான பணியை பார்த்து கமென்ட் செய்துள்ளார்.



உதம்பூர்-ஸ்ரீநகர்-பாராமுல்லா ரயில் இணைப்பின் முக்கிய மைல்கல்லாக இந்த பாலம் அமைந்துள்ளது. செனாப் நதியின் மீது இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. 1315 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலத்தின் கட்டுமான பணியை மேற்கொண்ட ஊழியர்கள் மழை, குளிர் என சவாலான வானிலை சூழலை எதிர்கொண்டுள்ளனர்.


செனாப் பாலம் ஆற்றுப் படுகையின் மட்டத்திலிருந்து சுமார் 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபிள் டவரை காட்டிலும் சுமார் 35 மீட்டர் உயரம் என தெரிகிறது. ஸ்டீல் மற்றும் கான்கிரீட் வளைவு பாலம். இந்தப் பாலத்தின் கட்டுமான பணிக்கு டெக்லா எனும் தொழில்நுட்பத்தை ரயில்வே பயன்படுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை இந்தப் பாலத்தின் ஸ்டீல் தாங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



ட்விட்டர் தளத்தில் மொத்தம் நான்கு படங்களை பகிர்ந்துள்ளது இந்திய ரயில்வே. அந்த நான்குமே சினிமா காட்சிகளில் வருவதை போல கவித்துவமாக உள்ளன. மேக கூட்டங்களுக்கு நடுவில், சூரிய ஒளியை பின்புலமாக கொண்டு என அந்தப் படங்கள் உள்ளன.


Riasi: Indian Railways has shared a stunning photo of Chenab Bridge, which is known as the world's highest railway bridge. It seems that train passengers traveling on this bridge will experience the experience of traveling in another world surrounded by clouds. A social media user commented on the construction of this bridge as a marvel of engineering.


The bridge is a major landmark of the Udhampur-Srinagar-Baramulla rail link. This bridge is built over river Chenab. The construction workers of this 1315 meter long bridge faced challenging weather conditions like rain and cold.


The Chenab Bridge is situated at a height of about 359 meters above the river bed level. It seems to be about 35 meters taller than the Eiffel Tower in France. Steel and concrete arch bridge. It is said that the Railways has used Tekla technology for the construction of this bridge. It is reported that the steel of this bridge can withstand temperatures ranging from minus 10 degrees Celsius to 40 degrees Celsius.


Indian Railways shared a total of four pictures on Twitter. All four are as poetic as they come in cinematic scenes. The pictures are of sunlight in the middle of clouds.







ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் - சமூக வலைதளங்களில் வைரலான வேலம்மாள் பாட்டி...















 ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் - சமூக வலைதளங்களில் வைரலான வேலம்மாள் பாட்டி...


சமூக வலைதளங்களில் வைரலான நாகர்கோவிலைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டியின் புகைப்படத்தை எடுத்த நண்பர் ஜாக்சன் (Jackson Herby) அந்த பாட்டியிடம், "பாட்டி இந்த பணத்தை என்ன செய்யப் போறீங்க" என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த பாட்டி இந்த பணத்தை வைத்து நல்லதாக சேலையும் தேவையான பொருட்களும் வாங்க போகிறேன்" என்று மகிழ்ச்சியில் நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார். பின்னர் பாட்டியின் புகைப்படம் வெளியாகி வைரலாகி இருக்கிறது.


அதன்பின் இன்று தமிழ்நாடு அரசால் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபாய் நிவாரணத் தொகை ஜாக்சனுக்கு கிடைத்திருக்கிறது. அதிலிருந்து 2000 ரூபாயை அந்த பாட்டியைத் தேடி அவரின் வீட்டிற்கு சென்று கொடுத்து உதவியிருக்கிறார்.


இந்த பாட்டியின் புகைப்படத்தை முதலமைச்சர் தனது ட்வீட்டர் தளத்தில் பகிர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் தொழில்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களும் பகிர்ந்திருந்தார்.


>>> இச்செய்தி குறித்த காணொளி...




ஐ நா சபை பன்னாட்டு புகைப்படப் போட்டி - கடைசி தேதி 15-08-2021...

 


ஐக்கிய நாடுகள் அவையின் ஆதரவுத் திட்டமாக, மனிதநேயத்திற்கான புகைப்படம் எடுத்தல் (போட்டோகிராபி 4 ஹியூமானிட்டி எனும் பன்னாட்டுப் பரிசுப் போட்டிக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.)


உலகெங்குமிருக்கும் புகைப்படக் கலைஞர்களின் புகைப்படங்கள் வாயிலாக மனித உரிமைகளின் சக்தியை உயிர்ப்பிக்க முடியும் என்பதை உணர்த்துவதற்காக இப்போட்டி அமைக்கப் பட்டிருக்கிறது. 


வலைதள முகவரி:

https://www.photography4humanity.com/#firsthomenew


மேலும் தகவலுக்கு...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...