இடுகைகள்

Photos லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

126வது மலர் கண்காட்சி - அரசு தாவரவியல் பூங்கா, ஊட்டி...

படம்
126வது மலர் கண்காட்சி - அரசு தாவரவியல் பூங்கா, உதகமண்டலம்... 126th Flower Show - Government Botanical Gardens, Ooty...

உலகின் உயரமான செனாப் ரயில் பாலம் - பிரமிப்பூட்டும் படங்களை பகிர்ந்த இந்திய ரயில்வே(World's Highest Chenab Rail Bridge - Indian Railways Shares Stunning Pictures)...

படம்
 உலகின் உயரமான செனாப் ரயில் பாலம் - பிரமிப்பூட்டும் படங்களை பகிர்ந்த இந்திய ரயில்வே(World's Highest Chenab Rail Bridge - Indian Railways Shares Stunning Pictures)... ரியாசி: உலகின் மிக உயரமான ரயில் பாலம் என அறியப்படும் செனாப் பாலத்தின் பிரமிப்பூட்டும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது இந்திய ரயில்வே. மேகங்கள் புடை சூழ வேற்றுலகில் பயணிக்கும் அனுபவத்தை இந்த பாலத்தில் பயணிக்கும் ரயில் பயணிகள் அனுபவிப்பார்கள் எனத் தெரிகிறது. பொறியியலின் அற்புதம் என சமூக வலைதளப் பயனர் ஒருவர் இந்தப் பாலத்தின் கட்டுமான பணியை பார்த்து கமென்ட் செய்துள்ளார். உதம்பூர்-ஸ்ரீநகர்-பாராமுல்லா ரயில் இணைப்பின் முக்கிய மைல்கல்லாக இந்த பாலம் அமைந்துள்ளது. செனாப் நதியின் மீது இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. 1315 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலத்தின் கட்டுமான பணியை மேற்கொண்ட ஊழியர்கள் மழை, குளிர் என சவாலான வானிலை சூழலை எதிர்கொண்டுள்ளனர். செனாப் பாலம் ஆற்றுப் படுகையின் மட்டத்திலிருந்து சுமார் 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபிள் டவரை காட்டிலும் சுமார் 35 மீட்டர் உயரம் என தெரிகிறது. ஸ்டீல் மற்ற

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் - சமூக வலைதளங்களில் வைரலான வேலம்மாள் பாட்டி...

படம்
 ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் - சமூக வலைதளங்களில் வைரலான வேலம்மாள் பாட்டி... சமூக வலைதளங்களில் வைரலான நாகர்கோவிலைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டியின் புகைப்படத்தை எடுத்த நண்பர் ஜாக்சன் (Jackson Herby) அந்த பாட்டியிடம், "பாட்டி இந்த பணத்தை என்ன செய்யப் போறீங்க" என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த பாட்டி இந்த பணத்தை வைத்து நல்லதாக சேலையும் தேவையான பொருட்களும் வாங்க போகிறேன்" என்று மகிழ்ச்சியில் நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார். பின்னர் பாட்டியின் புகைப்படம் வெளியாகி வைரலாகி இருக்கிறது. அதன்பின் இன்று தமிழ்நாடு அரசால் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபாய் நிவாரணத் தொகை ஜாக்சனுக்கு கிடைத்திருக்கிறது. அதிலிருந்து 2000 ரூபாயை அந்த பாட்டியைத் தேடி அவரின் வீட்டிற்கு சென்று கொடுத்து உதவியிருக்கிறார். இந்த பாட்டியின் புகைப்படத்தை முதலமைச்சர் தனது ட்வீட்டர் தளத்தில் பகிர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொழில்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களும் பகிர்ந்திருந்தார். >>> இச்செய்தி குறித்த காணொளி...

ஐ நா சபை பன்னாட்டு புகைப்படப் போட்டி - கடைசி தேதி 15-08-2021...

படம்
  ஐக்கிய நாடுகள் அவையின் ஆதரவுத் திட்டமாக, மனிதநேயத்திற்கான புகைப்படம் எடுத்தல் (போட்டோகிராபி 4 ஹியூமானிட்டி எனும் பன்னாட்டுப் பரிசுப் போட்டிக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.) உலகெங்குமிருக்கும் புகைப்படக் கலைஞர்களின் புகைப்படங்கள் வாயிலாக மனித உரிமைகளின் சக்தியை உயிர்ப்பிக்க முடியும் என்பதை உணர்த்துவதற்காக இப்போட்டி அமைக்கப் பட்டிருக்கிறது.  வலைதள முகவரி: https://www.photography4humanity.com/#firsthomenew மேலும் தகவலுக்கு...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...