கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாட்டிற்கு 9 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை - இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்...



 புனேவில் இருந்து விமானம் மூலம் 75 பார்சல்களில் 9 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சுகாதாரத்துறைக்கு கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் தடுப்பூசி பெற ஆர்வமாக உள்ள தடுப்பூசிகள் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என்று சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது. கரோனாவை தடுப்பூசியால் மட்டுமே முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதால், மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. அதனடிப்படையில், தமிழ்நாட்டுக்கு தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.


மக்களும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் புனேவில் இருந்து விமானம் மூலம் 75 பார்சல்களில் ஒன்பது லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தமிழ்நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிறுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் மூன்றாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் திட்டமிட்டபடி நடந்து முடிந்துள்ளது. செப்டம்பரில் இதுவரை 1,38,60,328 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்ரமணியன், மத்திய அரசிடம் மொத்தம் 50 லட்சம் தடுப்பூசிகள் கேட்டிருந்தோம், ஆனால் 28 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே வந்து இருந்தது. அதை மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பி 24 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக கூறினார். 3 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO arrested for getting Rs 2 lakh bribe from teacher

ரூ.2 லட்சம் லஞ்சம் - மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கைது District Education Officer arrested for getting Rs 2 lakh bribe from teach...