கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி உட்பட முதல்வர் அறிவித்த 5 திட்டங்கள் - முழு விவரம் (5 schemes announced by the Chief Minister including breakfast for government school students - Full details)...

 


முதல்வர் அறிவித்த 5 திட்டங்கள்.

*5 முக்கிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவை 110 விதியின் கீழ் அறிவித்தார்.*

*முதல் திட்டம்.*

அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி காலை நேரத்தில் சிற்றுண்டிகள் வழங்கப்படும்

1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டிகள் வழங்கப்படும்,படிப்படியாக அனைத்து வகுப்புகளுக்கும் இத்திட்டம் கொண்டு செல்லப்படும்.

*இரண்டாவது திட்டம்.*

6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்துத் திட்டம் செயல்படுத்தப்படும்.

*மூன்றாவது திட்டம்.*

Skills of excellence டெல்லியில் உள்ளது போல் தமிழகம் முழுவதும் "தகைசால் பள்ளி" யாக மேம்படுத்தப்படும்.

*நான்காவது திட்டம்.*

21 மாநகராட்சிகள்,61 நகராட்சிகளில் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும்.

*5 வது திட்டம்.*

234 தொகுதிகளில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்.தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் நடைமுறைக்கு வர உள்ளது.

நிறைவேற்றப்படாத தேவைகள் குறித்து அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைப்படி, சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட ஆட்சியர்கள் உடன் இணைந்து முன்னுரிமை அடிப்படையில் தேவைகளை நிறைவேற்றித் தரப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மக்களின் முக்கியமான 10 திட்டங்களை மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைக்க வேண்டும்

இத்திட்டத்திற்கு முதற்கட்டமாக ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...