கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு (Interim stay on conducting Promotion Counseling of Middle School HeadMaster - High Court Madurai Branch Order)...



 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை  - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு (Interim stay on conducting Promotion Counseling of Middle School HeadMaster - High Court Madurai Branch Order)...


நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கு (24.05.2023)  வரை மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை  உத்தரவு வழங்கியுள்ளது...


 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி  ஆசிரியர்களில்  ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்குத்தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவில் மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது...


 வழக்கு எண் W.P.MD No. 11278 / 2023


  இந்தத் தடை சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் சேர்ந்து தொடர்ந்த வழக்குக்கு விதிக்கப்பட்ட தடை என தகவல்.


முழு விவரம் விரைவில்...


*நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கு (24.05.2023)  வரை மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை  உத்தரவு வழங்கியுள்ளது...


 *நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி  ஆசிரியர்களில்  ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்குத்தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவில்  சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது...


 *நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு  நடத்துவது நிறுத்தப்பட்டால் மலை சுழற்சி மாறுதல்களைத் தவிர வேறு எதையும் நடத்த இயலாத சூழ்நிலை உருவாகும்...


  *நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பள்ளிக் கல்வித்துறை நிர்வாகத்தால்  தடைபடவில்லை.  ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)  தேர்ச்சி பெற்றவர்களுக்கும், ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெறாதவர்களுக்கும் பதவி உயர்வு பெறுவது தொடர்பாக நடைபெறுகின்ற நீதிமன்ற வழக்கினால் ஏற்பட்ட விளைவாகும்...



 *சென்னை உயர்நீதிமன்றம் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெற்றவர்களைத்தான் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்களாக் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்ற அதே தீர்ப்பைத்தான் இப்போது நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று தடைவிதித்துள்ளார்கள்.



*இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி ஆண்டுக்கு இரண்டு தகுதித் தேர்வுகள் (TET) நடத்தியிருக்க வேண்டும்.  ஆனால் இதுவரை ஆறு தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.


 *ஆசிரியர்கள்  தகுதித் தேர்வு (TET) எழுதுவதற்கும் வாய்ப்பில்லை...



 *சென்னை, மதுரை, கோவை  மாநகராட்சிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தவிர மற்ற மாநகராட்சிகளில் மாறுதல் விண்ணப்பம் அளிப்பதற்கு தடையின்மை சான்று தேவையில்லை என்று தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்...



>>> ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி எனும் குறைந்தபட்சத் தகுதி கட்டாயமாகும் - எந்த ஒரு தனிநபரும் எந்த விலக்கும் கோர முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு (W.P. (MD) NO.11317 OF 2022 AND W.M.P. (MD) NO.8078 OF 2022...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...