கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

6 முதல் 8 வகுப்பிற்கான முதல் பருவ தொகுத்தறி / காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களை EMIS வலைதளத்தில் உள்ளிடும் வழிமுறை - பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள், நாள் : 07-10-2024...

 

பள்ளிக்கல்வி / தொடக்கக்கல்வி - 2024 - 2025ஆம் கல்வியாண்டு - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பிற்கான முதல் பருவ தொகுத்தறி / காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களை EMIS வலைதளத்தில் உள்ளிடும் வழிமுறை - பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் இணை செயல்முறைகள் ந.க.எண் : 018919 / ஜெ2/ 2024, நாள் : 07-10-2024...


School Education / Elementary Education - Academic Year 2024 - 2025 - Procedure of Entry of First Term Summative / Quarterly Examination Marks for Class 6 to 8 in Government and Government Aided Schools in EMIS Website - Director of School Education and Director of Elementary Education Joint Proceedings Rc.No. : 018919 / J2/ 2024 , Date : 07-10-2024...



EMIS இணையதளத்தில் காலாண்டு தேர்வு மதிப்பெண்கள் பாடவாரியாக அக்டோபர் 15ஆம் தேதிக்குள் பதிவிட வேண்டும்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


காலாண்டு தேர்வு மதிப்பெண்களை அக்.15-க்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்ற உத்தரவு


பள்ளி மாணவர்களின் காலாண்டு தேர்வு மதிப்பெண்களை எமிஸ் வலைதளத்தில் அக்.15-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக்


 கல்வி அலுவலர்களுக்கும் இன்று (அக்.8) அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், “தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வில் 6 தல் 8-ம் வகுப்பு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை எமிஸ் வலைதளத்தில் ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும்.


விடைத்தாள்களை திருத்திய பின்னர் தொகுத்தறி மதிப்பெண்களை (100 மதிப்பெண்) அக்டோபர் 15-ம் தேதிக்குள் பதிவு செய்வது அவசியமாகும்.இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்துவித ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.


இதுசார்ந்து அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்க அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Live Webinar Link for Head Masters and English Teachers

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link  (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...