பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026 | School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026 | School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பல்லி விழுந்த காலை உணவை சாப்பிட்ட 30 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி - திட்டம் தொடங்கிய 2 நாட்களில் இப்படியா?
காமராஜர் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்ட இரண்டு நாட்களிலே, பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.
திருவள்ளூர் அருகே அரசு பள்ளியில் பல்லி விழுந்த காலை உணவு சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது
திருவள்ளூர் அடுத்த கொட்டையூரில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் விரிவாக்கப்பட்ட காமராஜர் காலை உணவு திட்டம் இந்தப் பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு காலை உணவு பரிமாறப்பட்டது. உணவை மாணவர்கள் காலை சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளனர். அதில் ஒரு மாணவரின் உணவில் பல்லி விழுந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்
அதனைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களும் சாப்பிடுவதை நிறுத்தியுள்ளனர். பின்னர் மூன்றுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் வரவைக்கப்பட்டு மாணவர்களை அனைவரையும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திமுகவின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான காலை உணவுத்திட்டம், தவெக ஆட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்டு காமராஜர் காலை உணவு திட்டம் என்று மாற்றப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை இந்த திட்டத்தை திருவான்மியூரில் உள்ள அரசுப் பள்ளியில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு நன்றாகவும் சுவை மற்றும் சுகாதாரமிக்கதாகவும் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இந்தத் திட்டம் தொடங்கிய இரண்டு நாட்களிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஊதியத் தேதி மாற்றம் தொடர்பாக PA(TC), DTA-விடமிருந்து பெறப்பட்ட செய்தி
URGENT : SALARY SETTLEMENT
Message received from PA(TC), DTA regarding change of salary settlement date from 30-09-2026 to 25-09-2026. All are requested to convey the above message to the concerned DDOs for submitting pay bills immediately for settlement on the revised date
- TO, ALL DTO
கருவூலக் கணக்குத் துறை இயக்குநரின் உத்தரவு.
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டுத்தேர்வு விடுமுறை முடிந்து பள்ளித் திறக்கும் நாள் அறிவிப்பு சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்
Quarterly Holidays and School Reopening Day – DSE & DEE Joint Proceedings
பள்ளிக் கல்வித்துறை - முக்கிய அறிவிப்பு: காலாண்டு விடுமுறை மற்றும் பள்ளி திறப்பு நாள் :
தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் சுற்றறிக்கையின்படி:
* காலாண்டுத் தேர்வு விடுமுறை: 26.09.2026 முதல் 04.10.2026 வரை.
* பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நாள்: 05.10.2026 (திங்கட்கிழமை).
முக்கிய வழிகாட்டுதல்கள்:
* பாடநூல்கள் வழங்கல்: பள்ளி திறக்கும் நாளன்றே (05.10.2026) 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவப் பாடநூல்கள் விநியோகிக்கப்பட வேண்டும்.
* விடைத்தாள்கள் & மதிப்பெண் பதிவு: மாணவர்களுக்கு விடைத்தாள்களை வழங்கி, மதிப்பெண்களைப் பதிவேடுகள் மற்றும் EMIS தளத்தில் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* விஜயதசமி மாணவர் சேர்க்கை: விஜயதசமி அன்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, விவரங்களை EMIS தளத்தில் உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலாண்டு விடுமுறை மற்றும் பள்ளி திறப்பு நாள் - இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
காலை உணவுத் திட்டம் : தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் : தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்- தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Smart class room , Hi tech lab நிறுவப்பட்டுள்ள பள்ளிகளில் தொடர் விடுமுறை நாட்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்
Smart class room , Hi tech lab நிறுவப்பட்டுள்ள பள்ளிகளில் தொடர் விடுமுறை நாட்களில் இணைப்பில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது .
முதன்மை கல்வி அலுவலர் - கரூர்.
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
எது சிறிய பாவம்? எது பெரிய பாவம்? - இன்றைய சிறுகதை
ஒரு ஞானியிடம் இரண்டு பேர் வந்தனர். ஒருவன் வருத்தத்தோடு கேட்டான்!!
"நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன். என் மனம் அதை நினைத்து தினமும் துடிக்கிறது. நான் செய்த பாவத்துக்கு மீட்சி உண்டா?"
அடுத்தவன் ஞானியிடம் சொன்னான்,
"நான் இவர் அளவுக்குப் பெரிய பாவம் எதுவும் செய்யவில்லை. சின்னச் சின்னப் பொய்கள், சிறு ஏமாற்றுக்கள் இப்படி நிறைய செய்துள்ளேன். தண்டிக்கும் அளவுக்கு இவை எல்லாம் பெரிய பாவங்களா என்ன?"
ஞானி சிரித்தார்!!
முதல் ஆளிடம்,
”நீ போய் பெரிய பாறை ஒன்றைத் தூக்கிவா,” என்றார்.
இரண்டாமவனிடம்,
நீ போய் இந்த கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கி வா என்றார்.
இருவரும் அவ்வாறே செய்தனர்.
முதல்வன் ஒரு பெரிய பாறையைத் தூக்கி வந்தான். அடுத்தவன் கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கிக் கொண்டு வந்தான.
இப்போது ஞானி சொன்னார்,
”சரி, இருவரும் கொண்டு வந்தவற்றை சரியாக எந்த இடத்தில் எடுத்தீர்களோ, அங்கேயே திரும்பப் போட்டுவிட்டு வாருங்கள்,” என்றார்.
முதலாமவன் பாறையை எடுத்துக் கொண்டுபோய் எடுத்த இடத்தில் வைத்து விட்டுத் திரும்பினான். இரண்டாமவன் தயக்கத்துடன்,
"இவ்வளவு கற்களை நான் எப்படி சரியாக அவை இருந்த இடத்திலேயே வைக்க முடியும்?” என்று கேட்டான்.
ஞானி சொன்னார்,
"முடியாதல்லவா, அவன் பெரிய தவறு செய்தான். அதற்காக வருந்தி அழுது மன்னிப்புக் கேட்டு அவன் மாற்றுப் பரிகாரம் செய்து அவன் மீட்சி அடையலாம்.
நீ சின்னச் சின்னதாக ஆயிரம் தவறுகள் செய்தும் அவை பாவம் என்று கூட உணராதவன். யாரெல்லாம் பாதிக்கப் பட்டவர்கள் என்பது கூட உனக்கு நினைவிருக்காது.
அவனுக்கு மீட்சி சுலபம். உனக்குத்தான் மீட்சி என்பது மிகக் கடினம்!" என்றார்.
சிறு துளிகள்
பெரும் வெள்ளம்..!
அலைபேசியில் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கிய அரசு பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம்
ராமநாதபுரம் அருகே அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர்
* செல்போனில் பேசியபடியும் ஒற்றைக் கையால் பேருந்தை இயக்கியதாகவும் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் ஒரு கையில் செல்போனை வைத்துக்கொண்டு பேசிக்கொண்டே, மற்றொரு கையால் பேருந்தை இயக்கியதாக தெரிகிறது. இதனை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
* தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
* மேலும், சம்பவம் தொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, விதிமீறல் உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் வலியுறுத்தி இருந்தனர்.
்
IOBயின் கிளைகளும், டிஜிட்டல் சேவைகளும் வேலைநிறுத்தத்தின் பொழுது இயங்கும்
அன்பார்ந்த வாடிக்கையாளரே,
ஐக்கிய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு செப்டம்பர் தேதி 28-30 வேலைநிறுத்தம் அறிவித்தபோதிலும் IOBயின் கிளைகளும், டிஜிட்டல் சேவைகளும் இயங்கும் - IOB
Dear Customer,
Banking services through branches and digital channels remain available on *27th September 2026(Sunday)* and strike period of *28 to 30 September 2026*-Indian Overseas Bank.
Bank strike
Tomorrow payment day
வங்கி வேலை நிறுத்தம் காரணமாக நாளை (25-09-2026) தமிழ்நாடு அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள்/ ஓய்வூதியர்களுக்கு ஊதியம் வரவு வைக்கப்படும்
வங்கி வேலை நிறுத்தம் காரணமாக நாளை (25.09.2026 அன்றே) தமிழ்நாடு அரசு ஊழியர்கள்/ ஆசிரியர்கள்/ ஓய்வூதியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான கருவூலக் கணக்குத் துறை இயக்குநரின் உத்தரவு.
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-09-2026 | School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 125 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு IFHRMS ல் கணக்குத் தலைப்பு பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
தர ஊதியம் Grade Pay 5400 தொடர்பாக சென்னை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களின் நேர்முக உதவியாளரின் குரல்வழிச் செய்தி
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
38 மாவட்டங்களுக்கும் புதிய கண்காணிப்பு அலுவலர்கள் (Monitoring Officers) நியமனம்
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகள், மக்கள் குறைதீர்ப்பை கண்காணிக்க, பேரிடர் மற்றும் வடகிழக்கு பருவ மழை உள்ளிட்ட பல்வேறு ஒருங்கிணைப்பு பணிகள் ஆகியவற்றுக்கு
IAS அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வ.எண் மாவட்டம் கண்காணிப்பு அலுவலர்
1. *அரியலூர் Dr. C. Palani, IAS - Director of Employment and Training.*
2. *செங்கல்பட்டு Tmt. S.P. Karthikaa, IAS - CEO, கிம்டா.*
3. *கோயம்புத்தூர் Thiru. A.R. Rahul Nadh, IAS - Member Secretary, கிம்டா.*
4. *கடலூர் Thiru D Mohan, IAS - Additional Secretary, Home Dept.*
5. *சென்னை Thiru. P.N. Sridhar, IAS - MD, TN Green Energy corp.*
6. *தருமபுரி Tmt. I.S Mercy Ramya, IAS - JMD (Finance), TNPDCL & TANTRANSCO.*
7. *திண்டுக்கல் Dr. S. Aneesh Sekhar, IAS - Mission Director, NHM.*
8. *ஈரோடு Thiru. T.N. Venkatesh, IAS - Principal Secretary / MD, TUFIDCO.*
9. *கள்ளக்குறிச்சி Tmt. B. Priyanka, IAS - Director of Town Panchayats.*
10. *காஞ்சிபுரம் Thiru. K.S. Kandasamy, IAS - MD, TN Minerals Ltd.*
11. *கன்னியாகுமரி Thiru Prashant M Wadnere, IAS - Secretary, Water Resources Dept.*
12. *கரூர் Thiru. Dinesh Ponraj Oliver, IAS - MD, TWAD Board.*
13. *கிருஷ்ணகிரி Tmt. Shilpa Prabhakar Satish, IAS - MD, Tamil Nadu Civil Supplies Corpn.*
14. *மதுரை Thiru K Veera Raghava Rao, IAS - Secretary, Labour Welfare Dept.*
15. *மயிலாடுதுறை Tmt. Kavitha Ramu, IAS - MD, TN Skill Development Corpn.*
16. *நாகப்பட்டினம் Dr S. Suresh Kumar, IAS - CEO, TN Khadi & Village Industries Board.*
17. *நாமக்கல் Tmt. M. Asia Mariam, IAS - Commissioner, Minorities Welfare.*
18. *பெரம்பலூர் Tmt. M. Lakshmi, IAS - Commissioner, Welfare of the Differently Abled.*
19. *புதுக்கோட்டை Thiru. Ajay Yadav, IAS - Director, Civil Supplies.*
20. *ராமநாதபுரம் Dr. M. Vallalar, IAS - Commissioner of Labour.*
21. *ராணிப்பேட்டை Tmt. Mariam Pallavi Baldev, IAS - Secretary, Social Welfare Dept.*
22. *சேலம் Dr. (Tmt.) M. Aarthi, IAS - MD, TN Women Development Corp.*
23. *சிவகங்கை Dr V P Jeyaseelan, IAS - MD, MTC (Chennai).*
24. *தென்காசி Thiru A John Louis, IAS - MD, Tamil Nadu Warehousing Corpn.*
25. *தஞ்சாவூர் Thiru. H.Krishnanunni, IAS - Director, Animal Husbandry.*
26. *நீலகிரி Thiru M. Pradeep Kumar, IAS - Director, Backward Classes Welfare.*
27. *தேனி Thiru M. Govinda Rao, IAS - MD, TN Power Generation Corp.*
28. *தூத்துக்குடி Dr. K. V. Muralidharan, IAS - Director, Agriculture.*
29. *திருச்சி Thiru Kiran Gurrala, IAS - Commissioner, Town & Country Planning.*
30. *திருநெல்வேலி Thiru. Sandeep Nanduri, IAS - Secretary, Youth Welfare & Sports Dept.*
31. *திருப்பத்தூர் Tmt.R.Gajalakshmi, IAS - Commissioner, Prohibition and Excise.*
32. *திருப்பூர் Thiru. L. Nirmalraj, IAS - Secretary, Transport Department.*
33. *திருவள்ளூர் Dr. K.P. Karthikeyan, IAS - MD, ELCOT.*
34. *திருவண்ணாமலை Dr Tmt R Brindha Devi, IAS - Director, Social Welfare.*
35. *திருவாரூர் Thiru. Chandra Sekhar Sakhamuri, IAS - Director, Agri Marketing.*
36. *வேலூர் Dr. S. Uma, IAS - Project Director, TN Health System Project.*
37. *விழுப்புரம் Thiru. S.A. Raman, IAS - MD, SIPCOT.*
38. *விருதுநகர் Tmt. R.V. Shajeevana, IAS - MD, TN Textbook Corporation.*
நோயாளிகளிடம் நடக்கும் பகல் கொள்ளையை அரசும், அதிகாரிகளும் கண்டும் காணாமல் அமைதியாக இருப்பதா? - உச்சநீதிமன்றம் காட்டம்
புற்றுநோய்க்கான அத்தியாவசிய மருந்தை விற்பனையாளருக்கு ரூ.2,700, நோயாளிக்கு ரூ.27,000 என்று விற்பதா?
நோயாளிகளிடம் பட்டப்பகலில் நடக்கும் கொள்ளையை அரசும், அதிகாரிகளும் கண்டும் காணாமல் அமைதியாக இருப்பதா?
இது அப்பட்டமான பகல் கொள்ளை, அக்கிரமம். இது மிரட்டி பணம் பறிக்கும் செயல் இல்லையெனில் வேறு என்ன?
நோயாளிகளிடம் இருந்து பணத்தை பறிக்கும் இந்தச் செயலைத் தடுக்க வேண்டிய அரசும், அதிகாரிகளும் அமைதியாக இருப்பது ஏன்?
புற்றுநோய் மருந்துகளின் விலை மற்றும் அவற்றுக்கான காப்புரிமை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்.
மாணவியை குச்சியால் அடித்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளியில், 5-ஆம் வகுப்பு மாணவியை குச்சியால் அடித்ததாக கூறப்படும் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வீட்டுப்பாடம் எழுதாமல் வந்ததாக கூறி மாணவி மீது நடவடிக்கை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மாணவிக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது பணியிடை நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதல் பருவத் தேர்வு / காலாண்டுத் தேர்வு, கடைசி வேலை நாள், விடுமுறை நாட்கள் குறித்த தகவல்
Information regarding the quarterly exam/ first term examination, the last working day, and holidays
முதல் பருவ தேர்வு செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் முதல் 24 ஆம் தேதி வியாழக்கிழமை வரை நடைபெறுகிறது.
25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பள்ளி வேலை நாள் ஆகும்.
இயக்குநர் வெளியிட்டுள்ள திருத்திய பள்ளி நாள்காட்டியின் படி முதல் பருவத்தின் கடைசி வேலை நாள் செப்டம்பர் 25 ஆம் தேதி ஆகும்.
முதல் பருவ தேர்வு விடுமுறை
முதல் பருவ தேர்வு முடிந்து செப்டம்பர் 26 ஆம் தேதி சனிக்கிழமை முதல் அக்டோபர் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை விடப்படுகிறது.
இரண்டாம் பருவம்
மீண்டும் இரண்டாம் பருவத்தில் பள்ளியின் முதல் வேலை நாள் அக்டோபர் 5 ஆம் தேதி திங்கள் கிழமை ஆகும்.
வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி ஞாயிறன்று அனைத்து வங்கிகளும் செயல்படும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு
செப்டம்பர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து பொதுத்துறை மற்றும் கிராம வங்கிகள் செயல்படும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
அனைத்து பொதுத்துறை வங்கிகளும் (Public Sector Banks) மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளும் (Regional Rural Banks) வழக்கம்போல இயங்கும்.
செப்டம்பர் 28 முதல் 30 வரை அறிவிக்கப்பட்ட மூன்று நாள் தேசிய வங்கி வேலைநிறுத்தம் மற்றும் விடுமுறை நாட்களைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களின் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வங்கி கிளைகள், அலுவலகங்கள், ஏடிஎம் இணைப்பு கிளைகள் மற்றும் கரன்சி செஸ்ட்கள் (Currency Chests) முழுமையாகச் செயல்பட இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அனுமதி அளித்துள்ளது.
இந்த உத்தரவு பொதுத்துறை வங்கிகளுக்கானது; தனியார் வங்கிகளின் இயக்கம் குறித்து அந்தந்த வங்கி நிர்வாகத்தின் அறிவிப்பைப் பொறுத்தது
டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக DSE & DEE இணைச் செயல்முறைகள்
Dengue Fever Instuctions
Precautionary measures to prevent the spread of Dengue fever | DSE & DEE Joint Proceedings
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு நலனை உறுதி செய்தல் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் & தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்
Students Safety & Security in Schools | DSE & DEE Joint Proceedings
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2027 - மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்
SSLC Public Examination March 2027 – Preparation of Student Name List: Proceedings of the Director of Government Examinations
2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - பள்ளி மாணவர்கள் பெயர்ப் பட்டியல் தயாரித்தல் - முன்னிலைப் பணியாக EMIS வலைதளத்தில் மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் அத்திருத்தங்கள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பிறப்புச் சான்றிதழில் உள்ளது போன்று மாணவர்களின் பெயரை பதிவேற்ற வேண்டும் - அரசு தேர்வுகள் துறை.
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வுக்கான பெயர்ப் பதிவு; பிறப்புச் சான்றிதழில் உள்ளது போன்று மாணவர்களின் பெயரை பதிவேற்ற வேண்டும்.
பெயருக்கும், இனிஷியலுக்கும் இடையே புள்ளி கூடாது; விவரங்களில் தவறு ஏற்பட்டால் வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியரே பொறுப்பு - அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுகள் துறை இயக்குநர் கடிதம்.
* ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றத்தில் (Legislative Assembly) ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) விலக்கு கோரி தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது
* எதிர்க்கட்சியான பாஜக அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆனால் விவாதம் நடத்தக் கோரியது.
* இன்று விவாதம் நடைபெறும்
* தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே சூழல். மத்திய அரசுதான் நாடாளுமன்றத்தில் இதற்கு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் NHIS பிடித்தம் மேற்கொள்வதில் உள்ள மாற்றங்கள் தொடர்பான விளக்கம்
மனைவி மத்திய அரசும் கணவன் மாநில அரசு அலுவலர் அல்லது ஓய்வூதியராக இருந்தால் என்ன செய்ய வேண்டும்.
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2026 இல்
IFHRMS இல் பிடித்தம் மேற்கொள்வதில் கணவன் மனைவி என இருவரும் அரசு பணியாளர்கள் எனில் இருவரில் எவர் இளையவரோ அவரிடம் மட்டுமே பிடித்த மேற்கொள்ளப்படும்
IFHRMS இல் கணவன் அல்லது மனைவி spouse employee என்று தேர்வு செய்து பதிவேற்றம் செய்தவுடன் மாத ஊதியத்தில் வயதில் மூத்தவருக்கு பிடித்த மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது automatic ஆக நிறுத்தம் செய்யப்படும்.
செப்டம்பர் மாத ஊதியத்தில் NHIS இல் மாற்றங்கள் ஏற்படும்.
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தயாரித்துள்ள Translucent Gas Cylinder
பாரமான இரும்புச் சிலிண்டரை
ஆட்டிப் பார்த்து,
சமையல் முடியுமளவிற்கு
எரிவாயு இருக்கிறதா என்று
ஊகிக்கும் காலம் இனி இல்லை!
ஐக்கிய அரபு அமீரகம் (UAE),
வீட்டு உபயோக எரிவாயு பாதுகாப்பில்
ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது.
Translucent Composite பொருளால்
உருவாக்கப்பட்ட நவீன சிலிண்டர்கள்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தச் சிலிண்டர்களின் வழியாக
உள்ளே இருக்கும் LPG-யின் அளவை
வெளியில் இருந்தே
ஒரே பார்வையில் அறிந்துகொள்ள முடியும்.
இதனால்,
சமையலுக்கு நடுவில்
திடீரென எரிவாயு தீர்ந்துபோகும்
சிக்கலைத் தவிர்க்கலாம்.
மேலும், இவற்றின் சிறப்பான
கைப்பிடி அமைப்பும், குறைந்த எடையும்
பயன்பாட்டை மிகவும் எளிதாக்குகின்றன.
பழைய இரும்புச் சிலிண்டர்களைவிட
சுமார் 40% குறைந்த எடை கொண்டதால்,
வீட்டுக்குள் எடுத்துச் செல்வதும்,
வெளிப்புற முகாம்களுக்குக்
கொண்டு செல்வதும் எளிதாகிறது.
லேசான தோற்றத்திற்குப் பின்னால்
வியக்க வைக்கும் அறிவியல் உள்ளது.
வலிமையான Fiberglass அமைப்புகளும்,
நீடித்து உழைக்கும் Polymer அடுக்குகளும்
இவற்றின் உருவாக்கத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், தீப்பற்றும் நேரங்களில்
பழைய இரும்புச் சிலிண்டர்களைப் போல
சிதறித் துண்டுகளாக மாறாமல்,
அழுத்தத்தைப் பாதுகாப்பாகக் குறைக்கும் வகையில்
இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
துருப்பிடித்தல்,
கடற்கரையோர உப்புக்காற்றால் ஏற்படும்
பாதிப்புகள் போன்றவற்றையும்
இவை எதிர்க்கும் தன்மை கொண்டவை.
ஒரு சிலிண்டரில்
எரிவாயு எவ்வளவு உள்ளது என்பதை
ஊகிக்க வேண்டிய நிலையை மாற்றி,
கண்களால் பார்த்தே அறிந்துகொள்ளும் வசதி!
பாதுகாப்பு,
எளிதான பயன்பாடு,
குறைந்த எடை,
நவீன வடிவமைப்பு…
இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும்
இந்த புதிய தலைமுறை சிலிண்டர்கள்,
அன்றாட வாழ்க்கையிலும்
எரிவாயு பாதுகாப்பிலும்
ஒரு புதிய பாதையைத் திறக்கின்றன. 🔥
1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் முதல் பருவத்தேர்வு மதிப்பெண்களை EMIS இணையத்தில் பதிவு செய்வதற்கான Option Enable செய்யப்பட்டுள்ளது
>>> EMISல் மதிப்பெண்கள் பதிவு செய்யும் வழிமுறை
▪️வகுப்பு 1-5 மாணவர்களின் மதிப்பெண் உள்ளீடு செய்வதற்கான வசதி தற்போது Enable செய்யப்பட்டுள்ளது.
▪️அனைத்து தேர்வும் முடிந்த பிறகு உள்ளீடு செய்யும் பணியை தொடங்கலாம்.
▪️விடுப்பு எடுத்த மாணவர்களுக்கு எவ்வாறு உள்ளீடு செய்ய வேண்டும் என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது.
▪️இறுதியாக மதிப்பெண் பட்டியல் EXCEL (OR) PDF வடிவில் DOWNLOAD செய்து கொள்ளலாம்.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-09-2026 | School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள்
சென்னை திருவான்மியூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள்
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மத்தியில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-09-2026 | School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
EMIS தளத்தில் காலாண்டு மதிப்பெண் உள்ளீடு செய்யும் வழிமுறை, இயக்குநரின் செயல்முறைகள் இணைப்பு...
முக்கியத் தகவல்:
*1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களின் முதல் பருவத் தேர்வு மதிப்பெண்களை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து*
2026-27 ஆம் கல்வியாண்டிற்கான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி (ந.க.எண். 018341/இ1/2026, நாள்: 21.09.2026), அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு:
* மதிப்பெண் உள்ளீடு: அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் முதல் பருவத் தேர்வு மதிப்பெண்களை (100 மதிப்பெண்கள்) பாடவாரியாக ஆசிரியர்கள் EMIS தளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.
* கடைசி நாள்: விடைத்தாள்களைத் திருத்திய பின்னர், மதிப்பெண்களை அக்டோபர் 09-க்குள் தவறாமல் உள்ளீடு செய்திட அறிவுறுத்தப்படுகிறது.
* வகுப்பு 1 முதல் 5 வரை: செயல்முறைகளுடன் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி உள்ளீடு செய்ய வேண்டும்.
* வகுப்பு 6 முதல் 8 வரை: ஏற்கனவே உள்ள நடைமுறைகளைப் பின்பற்றி அக்டோபர் 9-க்குள் பதிவேற்ற வேண்டும்.
அனைத்து ஆசிரியர்களும் குறித்த காலத்திற்குள் மதிப்பெண்களை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்🙏
முதல் பருவ மதிப்பெண்களை அக்டோபர் 9ஆம் தேதிக்குள் EMISல் உள்ளீடு செய்யும் வழிமுறை மற்றும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
*2026 -2027 ஆம் கல்வியாண்டிற்கான வகுப்பு 1 முதல் 5 வரை முதல் பருவ மதிப்பெண்களை EMIS தளத்தில் உள்ளிடுதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்*
*STEP 1:*
EMIS தளத்தில் உங்கள் emis id & password ஐ பயன்படுத்தி உள் நுழையவும்.
`Login through
https://emis.tnschools.gov.in/auth/login
*STEP 2:*
உள் நுழைந்தவுடன் “Activity” ஐகான் ஐ க்ளிக் செய்து “Assessment Grade (1-5) Mark entry” க்ளிக் செய்க.
*STEP 3:*
Academic year, Term மற்றும் Class – Section ஐ தேர்ந்தெடுத்து “Load students” ஐ க்ளிக் செய்க.
எ.கா: 2026-2027 – TERM 1 CLASS 1
*STEP 4*
தேர்ந்தெடுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களின் பட்டியல் காட்டப்படும்.
*STEP 5:*
பாடவாரியாக மாணவர் மதிப்பெண்களை உள்ளீடு செய்து “Save” ஐ கிளிக் செய்யவும்.
*Step 6*
மதிப்பெண்களை உள்ளீடு செய்த பின் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் “Edit” ஐ கிளிக் செய்து திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
*Step 7*
அனைத்து மாணவர்களின் மதிப்பெண்களைச் சேமிக்க “Save All Valid Rows” என்பதை கிளிக் செய்யவும்.
*Step 8*
ஒரு மாணவர் எந்த பாடத் தேர்விலும் பங்கேற்கவில்லை எனில் சிவப்பு நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறியீட்டை கிளிக் செய்யவும்.
ஏதேனும் குறிப்பிட்ட பாடத் தேர்வில் மட்டும் பங்கேற்கவில்லை எனில் “AB” என குறிப்பிட்ட கட்டத்தில் மட்டும் உள்ளிடவும்.
*STEP 9*
அனைத்து மாணவர்களின் மதிப்பெண்களையும் உள்ளீடு செய்து முடித்த பின் வகுப்பிற்கான ஒருங்கிணைந்த அறிக்கையை பதிவிறக்கம் செய்ய “Download Excel” அல்லது “Download PDF”ஐ கிளிக் செய்யவும்.
*STEP 10*
தரவு சேமிக்கப்பட்ட மாணவர்கள் அவர்கள் மதிப்பிடப்பட்டதைக் குறிக்கும் வகையில் பட்டியலின் மேலே “Saved” என மாற்றப்படும்.
நண்பர்களே வணக்கம் 🙏
ஏற்கனவே 22/9 RH என இருந்தது.
இஸ்லாமிய பண்டிகை பிறையின் அடிப்படையில் என்பதால்
24/9/26 அன்று தான் Graveen of Mohideen Abdul khader
RH/RL
( இன்று 22/9/2026 வரையறுக்கப்பட்ட விடுப்பு இல்லை)
தகவலுக்காக...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-09-2026 | School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு சீருடை
டாஸ்மாக் ஊழியர்களுக்கு சீருடை அறிவிப்பு; நவம்பர் 15 முதல் சீருடை அணிதல் அமல்.
3 செட் சீருடைக்கு தலா ரூ.2,000 வீதம் ரூ.6.000 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
மேற்பார்வையாளருக்கு லைட் புளு சட்டை, நேவி புளு பேண்ட்; துணை விற்பனையாளருக்கு Beige கலர் சட்டை, டார்க் புளு பேண்ட்.
சீருடையில் இடது நெஞ்சில் TASMAC லோகோ இடம்பெறும்.
தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் வினாத்தாள்கள் பாதுகாப்பாக உள்ளதா என ஆய்வு
நேற்று முன்தினம் வகுப்பு 1, 2 ஆங்கில வினாத்தாள்கள் கசிந்ததால் நேற்று மதிப்புமிகு தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் அடையாறு வட்டாரம், காந்திகிராமம், சென்னை நடுநிலைப் பள்ளியில் முதல் பருவத் தேர்வுக்கான வினாத்தாள்கள் பாதுகாப்பாக உள்ளதா என ஆய்வு செய்தார்
நேரில் வருகையில்லா முறையில் ஆவணப்பதிவு செய்தல் (Presenceless Registration) - பதிவுத்துறை தலைவரின் கூடுதல் தெளிவுரை நாள்:16-09-2026 வெளியீடு
பதிவுத்துறைத் தலைவர் அலுவலகம்
சென்னை
சுற்றறிக்கை
ந.க.எண்.9644/சிஎஸ்1/2026 நாள்:16-09-26
ஐயா/அம்மையீர்,
பொருள்:
பதிவுத்துறை STAR 3.0 Anywhere Registration மனைப்பிரிவின் முதல் மனை, மற்றும் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் விற்பனை உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு (Deposit of Title Deeds) மற்றும் இரசீது ஆவணம் நேரில் வருகையில்லா ஆவணப்பதிவு முறையில்(Presenceless Registration) பதிவு செய்தல் கூடுதல் தெளிவுரை வழங்குதல் - தொடர்பாக.
பார்வை:
1. பதிவுத்துறைத் தலைவர் கடித எண். 14210/சி1/2020. நாள்.23.09.2022 மற்றும் Tamil Nadu Online Registration Rules, 2022.
2. பதிவுத்துறைத் தலைவர் கடித எண். 6830/1/2020, நாள் : .15.09.2022.
3. பதிவுத்துறைத் தலைவர் கடித எண். 22482/1/2022, நாள் : 02.02.2023.
4. பதிவுத்துறைத் தலைவர் சுற்றறிக்கை :23225/1/2024, நாள் : 11.01.2025.
5. அரசாணை (நிலை) στσστ.69, வணிகவரி, பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் (J2) துறை. நாள் : 07.07.2026.
6. பதிவுத்துறைத் 6:17581/2013/2026, தலைவர் சுற்றறிக்கை நாள் : 18.08.2026.
7. மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்களால் 07.09.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு.
8. அரசாணை (நிலை) எண்.129, வணிகவரி மற்றும் பதிவுத்துறை (J2) துறை, நாள் 11.09.2026.
9. பதிவுத்துறைத் தலைவர் சுற்றறிக்கை எண்:9644/1/2026, நாள் : 12.09.2026.
10. பதிவுத்துறைத் தலைவர் சுற்றறிக்கை எண்:18223/1/2013-4, நாள் : 13.11.2013.
பார்வையில் கண்ட அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கை வழி நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு தொடர்பாக போதுமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பதிவுத்துறை உயர் அலுவலர்கள், சார்பதிவாளர்கள், கட்டுமான நிறுவனங்கள், நில விற்பனையாளர்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கோரிக்கைக்கு ஏற்ப கீழ்க்கண்ட கூடுதல் தெளிவுரைகள் வழங்கப்படுகிறது.
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
வினாத்தாள் வழங்குதல் தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் தகவல்
Kind attention DEOs,
Please ensure smooth conduct of Quarterly examination in English paper tomorrow with no room for complacency.
Timely reach of Qn paper is a critical element in the whole excercise and Beos and HMs need to be taken into confidence.
All the best.
ஆண்டுக்கு 2 முறை ஆசிரியர் தகுதித் தேர்வு Teacher Eligibility Test நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தகவல் - நாள்: 03.08.2026
TET Press Release PIB
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்-2026
✍️இணைய வழியில் அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு-2026
✍️வெற்றி பெறுபவர்களுக்கு மாதந்தோறும் ஒரு வருடத்திற்கு உதவித்தொகை
🏮 மேலும் விவரங்களுக்கு👇
VIDYARTHI VIGYAN MANTHAN
India's Largest Science Talent Search Examination
An Initiative of VIBHA in collaboration with NCERT and NCSM
REGISTRATION WINDOW
Register as early as possible to avoid the last-minute rush!
Please ensure your registration is completed as early as
possible to secure your slot for the examination window.
Registration Opens: 03rd April, 2026
Registration Closes: 30th September, 2026
Registration Fee: 200/- per student
(Classes VI to XI)
Need a Duplicate Scorecard?
If your NTA scorecard is lost, stolen, damaged or destroyed, you can apply for re-issuance as per the prescribed process.
Please visit the official NTA website for details and required documents.
🔗 https://nta.ac.in
ஒன்றாம் வகுப்பு ஆங்கில பாட வினாத்தாள் கசிந்ததாக தகவல் - மாற்று வினாத்தாள் தயாரித்து வழங்க தொடக்கக் கல்வித் துறை உத்தரவு - நாளிதழ் செய்தி
கசிந்த ஒன்றாம் வகுப்பு ஆங்கில பாட வினாத்தாள் - மாற்று வினாத்தாள் தயாரித்து வழங்க உத்தரவு
Census 2027 Phase II Training : மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி அட்டவணை அறிவிப்பு : மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு 2ஆம் கட்டம் (Population Enumeration): கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்குப் பயிற்சி அறிவிப்பு
Census phase 2 கணக்கெடுப்பாளார் , மேற்பார்வையாளர் பயிற்சி 21.12.2026 முதல் 15.01. 2027 க்குள் வழங்கப்பட வேண்டும்.
பயிற்சி 3 நாட்கள்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவாளர் மற்றும் ஆணையரின் சுற்றறிக்கை
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
மீன் குழம்பு லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர் (VAO) பணியிடை நீக்கம் Suspension
கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே சிட்டா வழங்க விவசாயியிடம் மீன் குழம்பு பார்சல் வாங்கி வரும்படி கூறிய புகாரில் தேவர்மலை கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் பணியிடை நீக்கம்
சிட்டா வழங்க லஞ்சமாக பொரித்த மீன் கேட்ட விஏஓ பணியிடை நீக்கம்
கடவூா் அருகே சிட்டா வழங்குதற்கு லஞ்சமாக பொரித்த மீன், நாட்டுக்கோழி குழம்பு கேட்ட கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்.
கடவூா் அருகே சிட்டா வழங்குதற்கு லஞ்சமாக பொரித்த மீன், நாட்டுக்கோழி குழம்பு கேட்ட கிராம நிா்வாக அலுவலா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே தேவா்மலை ஊராட்சிக்கு உட்பட்ட அய்யம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் தேவராஜ். இவா், வங்கியில் விவசாய கடன் பெறுவதற்காக நிலத்துக்கு சிட்டா, அடங்கல் கேட்டு தேவா்மலை கிராம நிா்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில் செப்டம்பர் 17ஆம் தேதி கிராம நிா்வாக அலுவலா் காா்த்திக்கிடம், தேவராஜ் கைப்பேசியில் சிட்டா குறித்து கேட்டுள்ளாா். அப்போது காா்த்திக், தேவராஜிடம் பாளையத்தில் உள்ள ஒரு உணவகத்தின் பெயரைக் குறிப்பிட்டு அங்கிருந்து பொரித்த மீன், நாட்டுக்கோழி குழம்பு வாங்கி வருமாறு கூறியுள்ளாா்.
இதையறிந்த தேவராஜ் மகன், விஏஓ காா்த்திக்கை கைப்பேசியில் அழைத்து, உங்களுக்கு அரசாங்கம் சம்பளம் தரவில்லையா என லஞ்சம் குறித்து கேட்டுள்ளாா். இதனால் அதிா்ந்து போன காா்த்திக், உங்க அப்பாவை அலுவலகத்துக்கு வரச் சொல்லுங்கள் எனக்கூறி இணைப்பை துண்டித்துள்ளாா். இந்த உரையாடல் சமூகவலைதளங்களில் வெள்ளிக்கிழமை வைரலாக பரவியது.
இந்நிலையில், குளித்தலை சாா்-ஆட்சியா் சேஷத்ரிமயும் தீபிசானு, கிராம நிா்வாக அலுவலா் காா்த்திக்கிடம் சனிக்கிழமை விசாரணை நடத்தினாா்.
இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து சாா்- ஆட்சியா் உத்தரவிட்டாா்.
உள்ளூர் விடுமுறை 💢💢💢💢💢💢 திருவாரூர் மாவட்டத்திற்கு அக்டோபர் 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவை...