பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 31-08-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 31-08-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
கேஸ் சிலிண்டர் e-KYC : ஆகஸ்ட் 31 வரை அவகாசம் நீட்டிப்பு.
வீட்டு உபயோக LPG சிலிண்டர் வாடிக்கையாளர்கள் e-KYC செய்வதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டு, 2026 ஆகஸ்ட் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆகஸ்ட் 23 வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் பலர் e-KYC செய்யாமல் இருப்பதால் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 85% வாடிக்கையாளர்கள் e-KYC முடித்துள்ள நிலையில், 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இன்னும் பதிவு செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
* e-KYC எப்படி செய்வது?
உங்கள் LPG நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலி மூலம் ஆன்லைனில் செய்யலாம்.
ஆதார் அடிப்படையிலான Face Authentication மூலம் சரிபார்ப்பு செய்யலாம்.
ஆன்லைனில் சிரமம் இருந்தால் அருகிலுள்ள LPG விநியோகஸ்தர் அலுவலகத்திற்குச் சென்று e-KYC செய்யலாம்.
நேரில் செல்லும்போது ஆதார் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்வது நல்லது.
ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் e-KYC-ஐ முடித்துக் கொள்ளுமாறு LPG வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு கல்வித்தகுதி போதும் - தபால் துறையில் 25,000+ வேலைவாய்ப்பு - தமிழ்நாட்டில் மட்டும் 2,095 பணியிடங்கள்
இந்திய தபால் துறையில் ВРМ, АВРM, Dak Sevak பணிகளுக்கு 25,000- மேற்பட்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; தமிழ்நாட்டில் மட்டும் 2,095 பணியிடங்கள் உள்ளன.
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; அடிப்படை கணினித் திறன், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது 18-40; 2026 செப்டம்பர் 21 அடிப்படையில் கணக்கிடப்படும். விதிமுறைப்படி வயது தளர்வு உண்டு.
OTR: ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 19 வரை; விண்ணப்பம் செப்டம்பர் 2 முதல், கடைசி நாள் செப்டம்பர் 21 மாலை 5 மணி.
10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலான மூலம் தேர்வு; பின்னர் ஆவண சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை நடைபெறும்.
BPM- . 12,000-.29,380, ABPM/Dak Sevak- ரூ.10,000-ரூ.24,470 வரை TRCA வழங்கப்படும்.
விண்ணப்பிக்க: https://indiapost.gov.in/
நேபாள வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.
நேபாள வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்கு மத்தியிலும், திரிசூலி ஆற்றில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கர் ஒன்றை உடைத்து, அதற்குள் இருந்த பணத்தை ஒரு கும்பல் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 29 பேரைப் பிடித்துள்ள போலீஸார், அவர்களிடமிருந்து 92 லட்சத்திற்கும் அதிகமான நேபாளி ரூபாயை மீட்டுள்ளது.
இந்தத் தொகை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 58 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரசுவாவிலிருந்து ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட அந்த வங்கி லாக்கர், தாடிங் மாவட்டத்தில் உள்ள பெல்குகோலா பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு வருவதற்குள், உள்ளூர் வாசிகள் சிலர் அந்த லாக்கரை உடைத்து பணத்தைக் திருடிச் சென்றதாகக் போலீஸார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, நேபாள் போலீஸார் மற்றும் ஆயுதப் படைப் பிரிவினர் இணைந்து நடத்திய சோதனையில் 29 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையின் போது அவர்களிடமிருந்து 92 லட்சத்திற்கும் அதிகமான நேபாளி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 29 பேரும் தாடிங் மாவட்டக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
லாக்கரில் எவ்வளவு பணம் இருந்தது என்பதை போலீஸார் இன்னும் உறுதி செய்யவில்லை. மேலும், அந்த லாக்கரின் உரிமையாளர் யார், அதிகாரிகள் வருவதற்கு முன்பு வேறு யாரேனும் பணத்தை எடுத்துச் சென்றார்களா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறது.
முன்னதாக வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்த தங்க காதணியை திருடியதாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உடலில் இருந்து நகையை அகற்றும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் - ஆசிரியர் கல்வி - பள்ளிகள் / விடுதிகள் - 01.03.2026 அன்றைய நிலையில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் /பட்டதாரி ஆசிரியர்கள்/ காப்பாளர் விவரங்கள் அனுப்பக்கோருதல் தொடர்பாக பழங்குடியினர் நலம் கூட்டமைப்பு திட்ட அலுவலர் கடிதம்
நாள் 28/08/2026
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
List of hospitals approved for medical treatment under NHIS 2026
01.07.2026 அன்று முதல் அரசு ஊழியர்களுக்கான புதிய உடல்நல காப்பீட்டு திட்டத்தில் NHIS 2026 மருத்துவம் மேற்கொள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் பட்டியல்
பக்க எண் 36 முதல் 192 வரை
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பாக்கெட் உணவுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை லேபிள்? – FSSAI புதிய திட்டம்
அதிக அளவு சர்க்கரை, உப்பு அல்லது செறிவூட்டப்பட்ட கொழுப்பு உள்ள பாக்கெட் உணவுகளின் முன்பக்கத்தில் கட்டாயமாக சிவப்பு நிற அறுகோண எச்சரிக்கை லேபிள் இடம்பெற வேண்டும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) முன்மொழிந்துள்ளது.
'HIGH SUGAR', ‘HIGH SALT', 'HIGH FAT' எச்சரிக்கைகள் பெரிய எழுத்துகளில் இடம்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
குழந்தைகளிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் தொடர்பாக உச்சநீதிமன்றம் எழுப்பிய கவலையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை வாசகத்தை இடம்பெறச் செய்யும் புதிய திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம்.
உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அதிகளவு சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு உள்ள பாக்கெட் உணவுகளின் முன்பக்கத்தில் சிவப்பு நிற அறுகோண எச்சரிக்கை லேபிள்களை (Red Hexagonal Warning Labels) கட்டாயமாக்கும் புதிய திட்டத்தை FSSAI (Food Safety and Standards Authority of India) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள compliance affidavit மூலம் அறிவித்துள்ளது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
சிவப்பு நிற அறுகோணம்: பாக்கெட் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் முன்பக்கத்தில் சிவப்பு நிறத்தில் அறுகோண வடிவிலான எச்சரிக்கை லேபிள் இடம்பெறும்.
எச்சரிக்கும் கூறுகள்: தயாரிப்புகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு (Fat) உள்ளதா என்பதை இது சுட்டிக்காட்டும்.
உச்ச நீதிமன்றத்தின் தலையீடு: இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் (Obesity) மற்றும் பொது சுகாதாரப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நடைமுறைப்படுத்தும் கட்டங்கள்
முதற்கட்டம் (Phase I): இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆபத்தான ஊட்டச்சத்துக்கள் (உப்பு, சர்க்கரை, கொழுப்பு) அதிகம் உள்ள உணவுகள் மற்றும் குறிப்பிட்ட குளிர்பானங்கள் மீது இந்த லேபிள் கட்டாயமாக்கப்படும்.
இரண்டாம் கட்டம் (Phase II): ஏதேனும் ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்து மட்டும் அதிகமாக உள்ள உணவுப் பொருட்களுக்கும் இந்த எச்சரிக்கை முறை விரிவுபடுத்தப்படும்.
விலக்கு அளிக்கப்பட்டவை
ஒற்றைப் பொருள் கொண்ட உணவுப் பொருட்கள் (Single-ingredient food products).நெய், சமையல் எண்ணெய், உப்பு, சர்க்கரை, வெல்லம் மற்றும் தேன்.
OBC, EBC & DNT இன மாணவர்களுக்கான PM YASASVI கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை ஆணையரின் செயல்முறைகள்
Proceedings of the Commissioner of Backward Classes and Denotified Communities Welfare regarding applications for the PM YASASVI scholarship for students belonging to OBC, EBC, and DNT categories.
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
வாகனம் மோதி 4 சிறார்கள் உயிரிழப்பு
திண்டுக்கல் வடமதுரை அருகே வாகனம் மோதிய விபத்தில் 3 சிறுமிகள், 1 சிறுவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சோகம்
திண்டுக்கல்லில் வடமதுரை அருகே கொல்லம்பட்டி பிரிவில் வாகனம் மோதி 4 சிறார் உயிரிழப்பு.
கொல்லம்பட்டி பிரிவில் விளையாடிய சிறுவர்கள் மீது பால் வேன் மோதி உயிரிழப்பு.
விபத்தில் தனுஸ்ரீ (5), யோக வர்ஷி (11), அனன்யா (6) மற்றும் மோசிகீரன் (6) உயிரிழப்பு; காவல் துறை விசாரணை.
நேபாள வெள்ளம்: 1,643 மாணவர்களைக் காப்பாற்றிய ஆசிரியர்
நேபாளத்தில் நேர்ந்த பெருவெள்ளத்தில் ஆசிரியர் ஒருவர் தனது சாதுர்யமான நடவடிக்கையால் 1643 பள்ளி மாணவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். நேபாளத்தைச் சேர்ந்த பலரும் ஆசிரியரின் செயலை பாராட்டி வருகின்றனர்.
பள்ளியில் இருக்கும் மாணவர்களின் பாதுகாப்புக்கு தானே முழு பொறுப்பு என்பதை உணர்ந்து வெள்ளத்தின் கோரத்தன்மையை உணர்ந்து விரைந்து செயல்பட்டதாக ஆசிரியர் கூறுகிறார்.
நேபாளத்தில் திரிசூலி பள்ளத்தாக்கில் திரிபுவன் திரிசூலி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் ஆங்கில ஆசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் இருப்பவர் ராஜேந்திர தவாடி.
வெள்ளம் ஏற்பட்ட புதன்கிழமை காலை சுமார் 9.20 மணியளவில் ஆசிரியர் தவாடிக்கு அவரின் நண்பரிடம் இருந்து வெள்ளத்தின் கோரத்தன்மை குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. பனிக்கட்டி, களிமண், கலந்த வெள்ளநீர் மிகுந்த ஆக்ரோஷமாக நீர்வழித்தடத்தை உடைத்துக்கொண்டு வருவதாகவும் இதில் கட்டடங்கள், பாலங்கள், மின்நிலையங்கள் அடித்துச்செல்லப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து நொடியையும் வீணாக்காமல் சாதுர்யமாக செயல்பட்ட தவாடி, மற்ற இடங்களைக் காட்டிலும் பள்ளிக் கட்டடம் பாதுகாப்பானது என்பதை உணர்ந்தார்.
பள்ளியின் எச்சரிக்கை மணியை உடனடியாக அழுத்தி, மாணவர்களை பதட்டமடையச் செய்யாமல் பள்ளிக் கட்டடத்திற்கு மேலே அனைவரையும் அழைத்துச் செல்ல சக ஆசிரியர்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.
ஏனெனில் அந்த மூன்று மாடி கான்கிரீட் கட்டடம் ஆற்றிலிருந்து சுமார் 60 மீட்டர் உயரத்தில், கிராமத்தை கிழக்குக் கரையுடன் இணைக்கும் இரும்புப் பாலத்தின் அதே மட்டத்தில் அமைந்திருந்தது.
ஆசிரியரின் இத்தகைய உடனடி செயலால் 1,643 பள்ளி மாணவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. எனினும் சமூகவியல் ஆசிரியர் உயிரிழந்தார். பள்ளியின் மற்றொரு ஆசிரியர் கதவுகளைப் பூட்டிவிட்டுத் திரும்பும் போதுவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார்.
பள்ளிக்கு மாணவர்களை அனுப்பிவிட்ட பெற்றோர்கள் பரிதவிப்பில் இருக்கையில், சுயநலமாகச் செயல்படாமல் மாணவர்களின் உயிரைக் காக்கும் வகையில் செயல்பட்ட ஆசிரியர் தவாடியை உள்ளூர் மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
Everest, LG பெருங்காயம் தூளுக்கு FSSAI தடை
- EVEREST மற்றும் LG ஆகிய பிரபல நிறுவனங்களின் பெருங்காயத் தூளை விற்பனை செய்ய இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் FSSAI தடை விதித்துள்ளது.
- ஆய்வு முடிவில் இந்த இரு நிறுவனங்களின் பெருங்காயத் தூளும் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI),தரக் குறைபாடு காரணமாக, எவரெஸ்ட் மற்றும் எல்ஜி நிறுவனங்கள் கலப்புப் பெருங்காயப் பொருட்களை விற்பனை செய்வதற்குத் தடை விதித்து , ஆகஸ்ட் 2026-ல் உடனடித் தடை உத்தரவைப் பிறப்பித்தது .
முக்கிய சோதனை கண்டுபிடிப்புகள்
குறைந்த சாறு அளவு: கலக்கப்பட்ட பெருங்காயத்தில் குறைந்தபட்சம் 5% ஆல்கஹாலில் கரையக்கூடிய சாறு இருக்க வேண்டும். எவரெஸ்ட் மாதிரிகளில் இது 0% முதல் 4.4% வரை பதிவாகியுள்ளது.
அதிகப்படியான ஸ்டார்ச்:
LG மாதிரிகளில் 32% வரை ஸ்டார்ச் இருந்தது, இது 1% என்ற அதிகபட்ச வரம்பை விட மிகவும் அதிகம்.
தரநிலைகளில் தோல்வி: தயாரிப்புகள் தரம் குறைந்தவை என்பதை ஆய்வகப் பரிசோதனைகள் உறுதிப்படுத்தின.
தேவையான நடவடிக்கைகள்
உடனடித் தடை: இரு பிராண்டுகளின் கலப்புப் பெருங்காயத் தூள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
தன்னார்வத் திரும்பப்பெறல்: சந்தையில் உள்ள தரமற்ற சரக்குகளைத் திரும்பப் பெறுமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இது குறித்த செய்தி வெளியீடு
நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்கவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), மெஸ்ஸர்ஸ் எவரெஸ்ட் ஃபுட் ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் மெஸ்ஸர்ஸ் லால்ஜி கோதூ அண்ட் கம்பெனி (எல்ஜி பிராண்ட் யூனிட்) ஆகிய இரண்டு முன்னணி மசாலாப் பொருட்கள் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் கலப்புப் பெருங்காயத்தை விற்பனை செய்யத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட பிராண்டின் கலப்பு பெருங்காயத்தின் தரம் குறித்து நுகர்வோர் அளித்த புகாரைத் தொடர்ந்து, FSSAI சந்தையில் உள்ள அனைத்து முக்கிய பிராண்டுகளையும் உள்ளடக்கிய ஒரு விரிவான சந்தைக் கண்காணிப்பைத் தொடங்கியது. இந்தக் கண்காணிப்பின் முதன்மை ஆய்வகப் பரிசோதனை அறிக்கைகள், எவரெஸ்ட் மற்றும் எல்ஜி ஆகிய இரு நிறுவனங்களின் கலப்பு பெருங்காயப் பொருட்களும் தரம் குறைந்தவையாக இருந்தன என்பதைக் குறிப்பிட்டன.
FSSAI, மும்பையில் அமைந்துள்ள மெஸ்ஸர்ஸ் எவரெஸ்ட் ஃபுட் ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எல்ஜி பிராண்ட் யூனிட் ஆகியவற்றின் மத்திய உரிமம் பெற்ற அலகுகளிலிருந்து நேரடியாக சட்டப்பூர்வ மாதிரிகளைச் சேகரித்தது. இந்த மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக ஒரு முதன்மை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. மேலும், FSSAI குஜராத் மாநில FDA உடன் இணைந்து, குஜராத்தின் உம்பர்காவ்னில் உள்ள எவரெஸ்ட் ஃபுட் ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் மாநில உரிமம் பெற்ற அலகில் ஒரு கூட்டு ஆய்வு மற்றும் மாதிரி சேகரிப்பை நடத்தியது. இந்த நடவடிக்கைகளின் போது சேகரிக்கப்பட்ட கலப்பு பெருங்காயத்தின் அனைத்து சட்டப்பூர்வ மாதிரிகளும் தரம் குறைந்தவை என்பதை முதன்மை ஆய்வகம் உறுதி செய்தது.
2011 ஆம் ஆண்டின் FSS (உணவுப் பொருட்கள் தரநிலைகள் மற்றும் சேர்க்கைகள்) ஒழுங்குமுறைகளின் கீழ், பதப்படுத்தப்படாத பெருங்காயம், அரேபிய கோந்து, ஸ்டார்ச்சுகள் மற்றும் மாவு வகைகளைக் கலப்பதன் மூலம் உருவாக்கப்படும் கலப்புப் பெருங்காயம் ஒரு அனுமதிக்கப்பட்ட வகையாகும். இறுதி கலப்புப் பெருங்காயத் தயாரிப்பில் குறைந்தபட்சம் 5% ஆல்கஹாலில் கரையக்கூடிய சாறு இருப்பதை உறுதிசெய்ய, பதப்படுத்தப்படாத பெருங்காயத்தை குறைந்தபட்சம் சேர்க்க வேண்டும் என்று இந்த ஒழுங்குமுறைகள் வலியுறுத்துகின்றன. ஆய்வகக் கண்டுபிடிப்புகள் இந்த பாதுகாப்புத் தரநிலைகளிலிருந்து குறிப்பிடத்தக்க விலகல்களை வெளிப்படுத்தின:
கலவைப் பெருங்காயத்தின் பல தொகுப்புகள், நிர்ணயிக்கப்பட்ட தர விதிமுறைகளுக்கு இணங்காதது கண்டறியப்பட்டதால், மும்பையைச் சேர்ந்த மெஸ்ஸர்ஸ் எவரெஸ்ட் ஃபுட் ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எல்ஜி பிராண்ட் யூனிட் ஆகியவற்றுக்கு FSSAI முறைப்படி விற்பனைத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த நிர்வாக நடவடிக்கை, பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் நுகர்வோர் நலன்களைக் காக்கவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.
மேலும், இந்த முறைகேடுகளை எவ்வாறு சரிசெய்வார்கள் மற்றும் நுகர்வோருக்குத் தரமான கலப்புப் பெருங்காயத்தின் உற்பத்தியை எவ்வாறு உறுதி செய்வார்கள் என்பதை விவரிக்கும் ஒரு விரிவான செயல் திட்டத்தைச் சமர்ப்பிக்குமாறு, சம்பந்தப்பட்ட உணவு வணிக நிறுவனங்களுக்கு FSSAI உத்தரவிட்டுள்ளது. தற்போது சந்தையில் உள்ள தரம் குறைந்த அனைத்துப் பொருட்களையும் தாமாகவே திரும்பப் பெறும் நடவடிக்கையைத் தொடங்குமாறும் உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
***
சுப்ரியா கெய்டடக்/யாஷ் ரானே/பர்சுராம் கோர்
2026-2028ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் மறுகட்டமைப்பு - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெறுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் உத்தேச செலவினங்களுக்கான நிதி விடுவித்தல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
SPD Proceedings for the SMC Reconstitution 2026 - Including Budget & Phase wise school list
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
மாநிலத் திட்ட இயக்ககம், சென்னை-600 006
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி
அனுப்புநர்
மாநிலத் திட்ட இயக்குநர்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,
பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்
நுங்கம்பாக்கம், சென்னை-06.
பெறுநர்
முதன்மைக் கல்வி அலுவலர்.
அனைத்து மாவட்டங்கள்.
ந.க.எண்:1338/A11/பமேகு/ஒபக/2026, நாள் : 24.08.2026
பொருள்: பள்ளிக் கல்வித் துறை - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2026-2028ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் மறுகட்டமைப்பு - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெறுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் உத்தேச செலவினங்களுக்கான நிதி விடுவித்தல் சார்பு
பார்வை 1) அரசாணை (நிலை) எண். 144. பள்ளிக் கல்வித் (அகஇ.2) துறை நாள்: 28.06.2024,
2) அரசாணை (நிலை) எண். 143, பள்ளிக் கல்வித் (அக.இ2) துறை நாள்: 19.08.2026.
3) ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குதிரின் செயல்முறைகள் நகஎண்: 1338/A11/பமேகு/ஓபக/2026, நாள். 24/08/2026
பார்வை-1இல் அரசாணையில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி குழந்தைகளின் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம். 2009 மற்றும் தமிழ்நாடு குழந்தைகளின் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகள். 2011 அடிப்படையில் அனைத்து வகை அரசு தொடக்கநிலை. நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2024ஆம் ஆண்டில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போதைய உறுப்பினர்களின் பதவிக் காலம் 2026 ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் நிலையில் பார்வை-2இல் கண்டுள்ள
அரசாணையில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாவட்டங்களில் உண்டு உறைவிடப் பள்ளிகள் (NSCBAV/KGBV/பழங்குடியினர் நலத்துறைப் பள்ளிகள் வனத்துறைப் பள்ளிகள் தவிர ஏனைய அனைத்துவகை அரசுப் பள்ளிகளிலும் 2026ஆம் ஆண்டு செப்டெம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் 2026-2028ஆம் ஆண்டுகளுக்கனப் பள்ளி மேலாண்மைக் குழுவானது புதிய உறுப்பினர்களைக் கொண்டு மறுகட்டமைப்பு செய்யப்படவுள்ளது.
(அ) பெற்றோர்கள் விழிப்புணர்வுக் கூட்டத்திற்கான வழிகாட்டுதல்கள்:
பார்வை-2இன்படி முதற்கட்டமாக மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு சார்ந்து பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டம் 29.08.2026, சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை அனைத்துவகை அரசுப் பள்ளிகளிலும் நடத்தப்பட வேண்டும்.
இதன்படி, பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துவது தொடர்பாக பார்வை 2இல் கண்டுள்ள அரசாணை பக்கம் 22 முதல் 25 வரை கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கூட்டத்திற்கான அழைப்பிதழை பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு 27.08.2026 வியாழக்கிழமைக்குள் மாணவர்கள் மூலம், புலனக் குழுச் (வாட்சப்) செய்திகள், துண்டுப் பிரசுரங்கள் மூலமாக தலைமையாசிரியர்கள் அனுப்பி வைக்கவேண்டும்.
மேலும், பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டத்தை பள்ளியின் தலைமையாசிரியர் தலைமையில் பள்ளி மேலாண்மைக் குழுவின் தற்போதைய உறுப்பினர்கள். பள்ளி ஆசிரியர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள். வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்திட வேண்டும்.
ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகளில் தலைமையாசிரியர் இல்லாத நேர்வுகளில் அப்பள்ளிகளில் பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் மற்றும் மறுகட்டமைப்பு நிகழ்வுகள் பார்வை-3இல் கண்டுள்ள மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகளில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மேற்கொள்ள வேண்டும்.
இந்த விழிப்புணர்வு கூட்டதில் பங்கேற்கும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரது வருகை பதிவு விவரத்தினை பெற்றோர் கூட்டம்
நடைபெறும் 29.08.2026 அன்று பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி தலைமையாசிரியர் தவறாது பதிவு செய்ய வேண்டும்.
Login to School Login https://emis.tnschools.gov.in
Select "School" Tab
Select "SMC Reconstitution 2026-2028" Module
Select Meeting Type "Parents Awareness meeting attendance"
விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்கும் ஆண் மற்றும் பெண் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை பதிவிட வேண்டும்.
விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்றவர்களின் குழு புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இறுதியாக Submit Attendance தேர்வு செய்தவுடன் பதிவு செய்யப்பட்ட ஆண் மற்றும் பெண் பங்கேறப்பாளர்களின் எண்ணிக்கையுடன் மொத்த பங்கேறப்பாளர்கள் எண்ணிக்கை காண்பிக்கப்படும். அதனை சரிபார்த்து சரியாக இருப்பின் மீண்டும் Submit தேர்வு செய்தவுடன் தங்கள் பள்ளியின் பள்ளிமேலாண்மைக் குழு விழிப்புணர்வு கூட்டதில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உறுதிசெய்யப்படும்.
பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைத்துவகை அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்களுடைய பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்பதை உறுதிசெய்திட அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (ஆ) பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நிகழ்வு பின்பற்ற வேண்டிய அட்டவணை
பார்வை-2இல் கண்டுள்ள அரசாணையின்படி மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வினை அரசாணை வழிகாட்டு நெறிமுறைகள் பக்கம் 4, பத்தி x இல் உள்ள முன்மொழியப்பட்ட கால அட்டவணையில் உள்ளவாறு நடத்திட அனைத்து வகைப் அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (CEO) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
பள்ளி மேலாண்மை குழு (SMC) மறு கட்டமைப்பு 2026-2028 கூட்டம் | அனைத்து படிவங்கள் தொகுப்பு
School Management Committee Reconstitution 2026-2028 Meeting Formats
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு 2026-2028 பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் தொடர்பான பேனர்கள், போஸ்டர்கள், காணொளிகள், வழிகாட்டுதல் செயல்முறைகள் மற்றும் அரசாணைகள் தொகுப்பு
A compilation of banners, posters, videos, Procedures guidelines, and government orders regarding the parent awareness meeting for the School Management Committee Reconstitution (2026–2028).
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு 2026-2028 பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் Banner Model
School Management Committee Reconstitution 2026-2028 Parents Awareness Meeting Banner Model
Sir / Madam,
Please note that the banner design is common for both the Parents Awareness Meeting and SMC Reconstitution Day. The School Name and Date may be changed accordingly.
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
செப்டம்பர் மாதம் நடைபெறும் மறுகட்டமைப்பு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள 24 உறுப்பினர்கள் யார் யார் என்ற விபரம்
SMC Parents Awareness Meeting குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் CEO தகவல்
அனைவருக்கும் வணக்கம்.
*தமிழ்நாடு அரசுப் பள்ளிகளுக்கான பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் தொடர்பான சுற்றறிக்கை*
முதற்கட்டமாக மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு சார்ந்து பெற்றோருக்கான விழிப்புணர்வுக் கூட்டம் 29.08.2026, *சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை* அனைத்துவகை அரசுப் பள்ளிகளிலும் நடத்தப்பட வேண்டும்.
இதன்படி, பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துவது தொடர்பாக *பார்வை-2இல் கண்டுள்ள அரசாணை பக்கம் 22 முதல் 25 வரை* கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி *கூட்டத்திற்கான அழைப்பிதழை* பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு 27.08.2026 வியாழக்கிழமைக்குள்ளாக மாணவர்கள் மூலம்,
*புலனக் குழுச் (வாட்ஸ்அப்) செய்திகள், துண்டுப் பிரசுரங்கள்* மூலமாக தலைமையாசிரியர்கள் அனுப்பி வைக்கவேண்டும்.
மேலும், பெற்றோர்களுக்கான *விழிப்புணர்வுக் கூட்டத்தை பள்ளியின் தலைமையாசிரியர் தலைமையில்* பள்ளி மேலாண்மைக் குழுவின் தற்போதைய உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்திட வேண்டும்.
இந்த விழிப்புணர்வுக் கூட்டத்தில் பங்கேற்கும் *பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரது வருகை பதிவு விவரத்தினை* பெற்றோர் கூட்டம் நடைபெறும் 29.08.2026 அன்று பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி தலைமையாசிரியர் தவறாது பதிவு செய்ய வேண்டும்.
*Login to School Login - https://emis.tnschools.gov.in*
*Select "School" Tab*
*Select "SMC Reconstitution 2026-2028" Module*
*Select Meeting Type - "Parents Awareness meeting attendance*
"விழிப்புணர்வுக் கூட்டத்தில் பங்கேற்கும் ஆண் மற்றும் பெண் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை பதிவிட வேண்டும்.
விழிப்புணர்வுக் கூட்டத்தில் *பங்கேற்றவர்களின் குழு புகைப்படத்தை* பதிவேற்றம் செய்ய வேண்டும்.இறுதியாக *'Submit Attendance'* தேர்வு செய்தவுடன் *பதிவு செய்யப்பட்ட ஆண் மற்றும் பெண் பங்கேற்பாளர்களின்* எண்ணிக்கையுடன் *மொத்த பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை* காண்பிக்கப்படும்.
அதனை சரிபார்த்து சரியாக இருப்பின் *மீண்டும் 'Submit'* தேர்வு செய்தவுடன் தங்கள் பள்ளியின் பள்ளிமேலாண்மைக் குழு விழிப்புணர்வுக் கூட்டத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உறுதிசெய்யப்படும்.
*முதன்மை கல்வி அலுவலர் தஞ்சாவூர்*
பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு 2026-2028
பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் மறு கட்டமைப்பு நாள் வருகைப்பதிவு செய்யும் வழிமுறை
Attendance - Demo of Web module
📌 EMIS – SMC Parents Awareness Meeting Attendance Update
🔐 Login to emis.tnschools.gov.in
🏫 Select School
📋 Select SMC Reconstitution 2026–2028
👥 Select Parents Awareness Meeting Attendance
👨👩👧 Enter Male & Female Attendance
📸 Upload Group Photo
✅ Click Submit Attendance → Submit
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
Transfer counseling for Kallar Reclamation School teachers begins on 02.09.2026 – Circular from the Joint Director
கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு 02.09.2026 முதல் தொடங்குகிறது - இணை இயக்குநரின் சுற்றறிக்கை
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-08-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-08-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
யானையிடம் இருந்து நொடியில் உயிர் தப்பிய இளைஞர்கள்
மைசூர்-பண்ணாரி சாலை ஆசனூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களை யானை தாக்க முயன்ற அதிர்ச்சி காட்சி
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
ஒவ்வொரு பிரச்சனையும் ஒரு வாய்ப்பு - இன்று ஒரு சிறுகதை
Every Problem is an Opportunity - Today’s Short Story
தினம் ஒரு குட்டி கதை -
"ஒரு ஊரில் , ஒரு ராஜா !"
ஒரு நகரத்தில் ஒரு சட்டமிருந்தது.
அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும்.
ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டும்தான்.!
ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.
அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே.!
மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும்...
இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது.
இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன்.
ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.
இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது.
இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு.
அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.. இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது.
அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும்.
அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.
மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான்.
மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''
தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான்,
''மன்னன் செல்லும் படகா இது!
பெரிய படகைக் கொண்டு வாருங்கள்!
நான் நின்றுகொண்டா செல்வது!
சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''
கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன!
சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.
மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.
மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டி தான்.!
காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை.
அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான.
படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான்
''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''
''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''
''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''
''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை.!''
''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''
''அதுவா.!
நான் என்ன செய்தேன் தெரியுமா?
ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்...!
இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்;
இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்...
மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர்.
இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்...!
நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது.
இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.
இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்...!
சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்...!
அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்...!
உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு...!'' என்றான் மன்னன்.
கருத்து: சூழ்நிலை எதுவாயினும் மனம் தளராமல் சிந்தனை செய்தால் தீர்வு நிச்சயமாக கிடைக்கும்.
🌹🌹🌹🌹🌹🌹
கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் வரலாறும், சிறப்புகளும்
நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் நீங்கவும், பித்ரு தோஷம், நாக தோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷங்கள் நீங்கவும் மன நோய்களை நீக்கி மனஅமைதி தரும் தலமாக உள்ளது கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம். கொடுமுடி மகுடேஸ்வரரை வழிபட்டால் சகல பிணிகளும் நீங்கும், பேய், பிசாசு, பில்லி சூன்யம் போன்ற பாதிப்புகளும் விலகும் என்பது நம்பிக்கை.
மலையத்துவச பாண்டியனின் மகனுக்கு பிறவியிலேயே விரல்கள் சரியாக வளராமல் இருந்தன. கொடுமுடிநாதரிடம் வேண்டியபின் இக்குறை தீர்ந்தது. எனவே பாண்டியன் இக்கோவிலுக்கு மூன்று கோபுரங்களையும், மண்டபங்களும் கட்டி, பல திருப்பணிகளைச் செய்தான். பாண்டிய மன்னனால் திருப்பணிகள் செய்யப் பெற்றதால் இத்தலம் பாண்டிக்கொடுமுடி ஆயிற்று.
இன்றைக்கு பல பேருக்கு திருமணம் நடைபெறாமல் தடை ஏற்படுகிறது. சிரமப்பட்டு திருமணம் நடைபெற்றாலும் புத்திரபாக்கியம் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ராகு கேது தோஷம் திருமணம், புத்திர பாக்கிய தடையைத் தருகிறது. இந்த தோஷங்களும் தடைகளும் நீங்க சிறந்த பரிகார தலமாக உள்ளது கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம்.
சிவன், பிரம்மா, விஷ்ணு:
இது சிவன், பிரம்மா, திருமால் ஆகிய மும்மூர்த்திகளும் கோவில் கொண்டிருக்கும் ஒரே ஆலயமாக இது விளங்குகிறது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக இருப்பதாக ஐதீகம். அதுபோல இங்கு மலையின் முடியே சிவலிங்கமாக காட்சியளிப்பதால், இது கொடுமுடி என்று அழைக்கப்படுகிறது. இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமானை மகுடேஸ்வரர் என்று அழைக்கிறார்கள். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாவார்.
தல வரலாறு
மகுடேஸ்வரரின் திருக்கல்யாணத்தைக் காண்பதற்காக, படைப்புக் கடவுளான பிரம்மதேவனும், காக்கும் கடவுளான திருமாலும் இந்தத் திருத்தலத்திற்கு வந்ததாக தல வரலாறு சொல்கிறது. ஒரு முறை ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும், தங்களில் யார் பெரியவர்? என்ற போட்டி எழுந்தது. அவர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்க மேரு மலையை கையாண்டனர்.
ஆதிசேஷன் மேரு மலையை சுற்றி வளைத்துக் கொள்ள, வாயு பகவான் தனது வேகத்தால் ஆதிசேஷனிடமிருந்து மேரு மலையை விடுவிக்க முயற்சித்தார். இந்த போட்டியில் மேரு மலை சிறு சிறு துண்டுகளாகி, நாலா பக்கமும் சிதறியது. அவை ஒவ்வொன்றும் சிவலிங்கமாக மாறியது. அப்படி உருவானதே கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் என்று சொல்லப்படுகிறது.
அமுதபுரி ஆலயம்
பிரம்மன் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டதால் ‘பிரம்மபுரி' என்றும், திருமால் பூஜித்ததால் ‘அரிகரபுரம்' என்றும், கருடன் இத்தல இறைவனை பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததால் ‘அமுதபுரி' என்றும் இந்த தலத்துக்கு பல பெயர்கள் உள்ளன.
திருமண வரம் கிடைக்கும்
வடக்கிலிருந்து தெற்காக ஓடிவரும் காவிரி நதி கொடுமுடி சிவஸ்தலத்தில் கிழக்கு நோக்கி திரும்பி ஓடுகிறது. காவிரி நதியின் மேற்குக் கரையில் கொடுமுடிநாதர் கோவில் அமைந்துள்ளது. கொடுமுடியில் இருந்துதான் காவிரி கிழக்கு நோக்கி திரும்பி பாய்ந்து செல்கிறது.
இந்த ஆற்றில் பக்தர்கள் புனித நீராடியபின் கோவிலுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. தோஷங்கள் நீக்கும் தலமாகவும் இது விளங்குகிறது. இந்தக் கோவிலில் வேப்பமரமும், அரச மரமும் இணைந்துள்ள மரத்தடியில் விநாயகர் வீற்றிருக்கிறார். இவருக்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண வரமும் குழந்தை வரமும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ஆலய வழிபாடு:
கிழக்குப் பார்த்து அமைந்துள்ள இக்கோவில் சுமார் 640 அடி நீளமும், சுமார் 484 அடி அகலமும் உடையதாய் அமைந்திருக்கிறது. இக்கோவிலில் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவருக்கும் தனித்தனி கோபுரங்களும், தனித்தனி சந்நிதிகளும் அமைந்துள்ளன.
இக்கோவிலுக்கு மூன்று வாயில்கள் கிழக்குப் பக்கம் அமைந்துள்ளன. நடு கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் விஷ்ணு மற்றும் பிரம்மாவின் சந்நிதிகளுக்குச் செல்லலாம். நடு வாயிலுக்கு வடபுறம் உள்ள கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் மூலவர் கொடுமுடிநாதர் சந்நிதிக்குச் செல்லலாம். நடு வாயிலுக்கு தென்புறம் உள்ள கோபுர வாயில் வழியாக இறைவி வடிவுடை நாயகியின் சந்நிதிக்குச் செல்லலாம்.
சுயம்பு லிங்கம்:
இக்கோவிலில் உள்ள சிவலிங்கம் சுயம்பு லிங்கம் ஆகும். குட்டையான சிவலிங்கத்தின் ஆவடையார் சதுர வடிவில் உள்ளது. பாணத்தின் மீது விரல் தடயங்களைக் காணலாம். அகத்தியர் இத்தல இறைவனை பூஜை செய்தபோது ஏற்பட்ட விரல் தடயங்கள் என்பது ஐதீகம்.
மூலவர் சந்நிதி கோஷ்டங்களில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோரைக் காணலாம். சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. இதுபோன்று அமைந்துள்ள தலங்கள் கல்யாண தலங்கள் என்று போற்றப்படும்.
அம்பாள் சந்நிதி உட்பிரகாரத்தில் வல்லப கணபதி, சோழீஸ்வரர், விஸ்வேசர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சப்தமாதர்கள் ஆகியோரை தரிசிக்கலாம். அம்பாள் சந்நிதியில் சரஸ்வதிக்கும் தனி சந்நிதி உள்ளது.
பிரம்மா:
இங்குள்ள வன்னிமரம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சிலர் இந்த மரம் அதையும் விட பழமையானது, இதன் வயதை கணக்கிட முடியவில்லை என்றும் சொல்கிறார்கள். வன்னி மரத்தடியில் பிரம்மாவின் சந்நிதி உள்ளது.
இந்த வன்னி மரத்தின் ஒரு பகுதியில் முட்களும், மற்றொரு பகுதி முட்கள் இல்லாமலும் உள்ளது. ஆண் மரமாக கருதப்படும் இந்த வன்னி மரத்தில் பூக்கள் பூப்பதில்லை, காய்கள் காய்ப்பதில்லை என்பது சிறப்பம்சம்.
இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாட்களானாலும் தண்ணீர் கெடுவதில்லை. பழநி பங்குனி உத்திர விழாவிற்கு தீர்த்தக்காவடி கொண்டு செல்லும் போது காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளை போட்டுத் தான் பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு செல்கிறார்கள்.
மகாலட்சுமி அருள்:
பிரம்மாவின் கோவிலுக்கு வடமேற்கில் பெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள பெருமாளின் பெயர் பள்ளிகொண்ட பெருமாள் மற்றும் வீரநாரயண பெருமாள். பெருமாள் கோவிலுக்கு வெளியே திருமங்கை நாச்சியாருக்கும், ஹனுமானுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. இக்கோவிலில் உள்ள பிரம்மாவும், பெருமாளும் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்.
மன நோய் தீர்க்கும் ஆலயங்கள்:
காவிரி நதி, வன்னிமரம் அருகிலுள்ள தேவ தீர்த்தம், பாரத்வாஜ தீர்த்தம், மடப்பள்ளிக்கு அருகிலுள்ள பிரம்ம தீர்த்தம் ஆகியவை இக்கோவிலின் தீர்த்தங்களாகும். காவிரி மற்றும் தேவ தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும், மகா விஷ்ணுவையும் வழிபட பிணிகளும், பேய், பிசாசு, பில்லி சூன்யம் போன்ற குற்றங்களும், மனநோயும் நீங்கும்.
நாக தோஷங்கள் நீங்கும்:
ஆதிசேஷனால் உருவான ஆலயம் என்பதால், இங்கு நாகர் வழிபாடு மிகவும் விசேஷம். இந்த ஆலயத்தைச் சுற்றிலும் நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது தற்போதும் நடைபெற்று வருகிறது. வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக பக்தர்கள் இதுபோன்று செய்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் ராகு-கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபாடு செய்தால், அந்த தோஷங்கள் விரைவில் நீங்கும். மேலும் திருமணத் தடை உள்ளவர்களும் இங்கு வந்து வழிபடுகிறார்கள். குழந்தைப் பேறு கிடைக்கவும் வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். நாக தோஷம் இருப்பவர்கள், வன்னி மரத்தடியில் கல்லால் செய்யப்பட்ட நாகரை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
எங்கு எப்படி செல்வது:
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய 3 பேராலும் பாடப்பட்ட இந்த ஆலயம், தேவாரப் பாடல்கள் பெற்ற 274 சிவாலயங்களில், 210-வது திருத்தலமாகத் திகழ்கிறது. கரூர் - ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் கொடுமுடி உள்ளது. கோவிலின் அருகிலேயே ரயில் நிலையம் அமைந்து உள்ளதால், வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் எளிதாக வந்து செல்லலாம்.
26.08.2026 புதன் கிழமை --
ஓணம் பண்டிகை
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
மகாபலி சக்கரவர்த்தி என்ற அரசன் மக்களுக்கு நல்லது செய்து வந்தான். ஆனால் அவரை ஏன் அழிக்க பகவான் விஷ்ணு வாமன அவதாரம் எடுத்தார் தெரியுமா?... வாருங்கள் புராண கதையைப் பார்ப்போம்...
🕉 அசுரர்களிலேயே மக்கள் மிகவும் நேசிக்கக்கூடிய, வளமாக, திறமையாக ஆட்சி செய்து வந்த மகாபலி சக்கரவர்த்தி, ஒவ்வொரு ஆண்டும் மக்களை வந்து பார்த்து வளமோடு, செழிப்பாக வாழ்கிறார்களா என பார்த்து செல்வதாக கொண்டாடப்பட்டு வரும் நிகழ்வு தான் ஓணம் பண்டிகை.
🕉 ஓணம் பண்டிகை
மலையாள சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்திலிருந்து திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் வரை கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைதான் ஓணம் பண்டிகை. கடைசி நாளான திருவோணம் நட்சத்திரத்தின் போது மகாபலி மக்களை காண வருவதாக ஐதீகம்.
🕉 எலியாக இருந்த மகாபலி சக்கரவர்த்தி:
மகாபலி சக்கரவர்த்தி முற்பிறவியில் எலியாக இருந்தார். அப்போது சிவன் கோயிலில் திரிந்து கொண்டிருந்த பொழுது, அங்கு சிவபெருமானுக்கு அருகில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த ஒரு விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அந்த விளக்கின் திரியின் மீது எலியின் வால் தற்செயலாக பட்டு தூண்டப்பட்டு மீண்டும் சுடர்விட்டு பிரகாசமாக எரிந்தது.
தன்னையும் அறியாமல் நற்காரியம் செய்ததால், அந்த எலியை அடுத்த பிறவில் சிறந்த மன்னராக மகாபலி சக்கரவர்த்தியாக படைத்தார் இறைவன்.
🕉 ஓணம் பண்டிகை எப்போது கொண்டாடப்படுகின்றது, எப்படி கொண்டாட வேண்டும் தெரியுமா?
மகாபலி சக்கரவர்த்தி பெருமைகள்:
புராண கதைகளின் கூற்றுப்படி, கேரளாவை மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு வந்ததாகவும், அவர் மக்களை மிகவும் அரவணைப்புடன் கவனித்துக் கொண்டதாகவும், அவரின் ஆட்சியின் கீழ் நாடு செழிப்பாகவும், மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தனர்
வேள்வி :
இந்நிலையில் நாட்டு மக்களின் நலனுக்காக ஒரு மாபெரும் வேள்வி ஒன்றை நடத்தவும், வேள்வியின் இறுதியில் நாட்டு மக்களுக்கு தான, தர்மம் வழங்க முடிவு செய்தார் மகாபலி சக்கரவர்த்தி.
இந்த வேள்வியை அசுர குரு சுக்ராசாரியார் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதையறிந்த தேவர்கள் மகாபலி சக்கரவர்த்தியுடன் போரிட்டனர். இதில் மகாபலி வென்றார். இதனால் அச்சமடைந்த தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர்.
வாமன அவதாரம் :
தேவர்களை காப்பது தனது கடமை என கருதிய மகாவிஷ்ணு, வாமன அவதாரம் எடுத்தார். மண்ணுலகில் விஷ்ணுவின் 5வது அவதாரமாக காஸ்யப முனிவர், திதி தம்பதிக்கு மகனாக வாமனர் அவதரித்திருந்தார்
மகாபலி சக்கரவர்த்தி தன் வேள்வி நிறைவு செய்யும் விதமாக, மக்களுக்கு தான, தர்மங்கள் செய்ய தொடங்கினார். இதில் தான தர்மங்கள் செய்து முடிக்கும் போது வாமனன் அங்கு வந்தார்.
மூன்றடி மண்:
வாமனனைப் பார்த்ததும், மகாபலி தாமதமாக வந்துவிட்டீர்க்ளே. இப்போது தான் தானம் கொடுப்பதை நிறைவு செய்தேன் என்றார்.
அதற்கு வாமனனோ, நானோ மூன்றடி உயரம் கொண்ட சிறுவன். நான் பெரிதாக எதையும் கேட்க மாட்டேன், என் உயரத்தைப் போலவே மூன்றடி நிலம் மட்டும் கொடுத்தால் போதும் என்றார்.
அப்போது அசுர குரு சுக்ராசாரியார், இவர் விஷ்ணுவின் அவதாரமாக தோன்றுகிறது. அவருக்கு தானம் அளிப்பதற்கு முன் சற்று யோசியுங்கள் என்றார்.
ஆனால் மகாபலி சக்கரவர்த்தியோ, மகாவிஷ்ணுவே என்னிடம் தானம் பெற வந்துள்ளார் என்றால் எந்தளவிற்கு, நான் சிறந்தவன். நான் தானம் கொடுத்தே தீருவேன் என்றார்
தானம் கொடுக்க கமண்டலத்திலிருந்து நீரை வார்க்க மகாபலி சக்கரவர்த்தி முயன்ற போது, நீர் வராத மாதிரி, வண்டு அவதாரம் எடுத்து சுக்ராச்சாரியர் கமண்டலத்தை அடைத்துக் கொண்டார்.
அப்போது வாமனன் அங்கிருந்த ஒரு குச்சியை எடுத்து கமண்டல நீர் வரும் குழாயை குத்தினார். இதனால் சுக்ராச்சாரியரின் ஒரு கண் பறிபோனது.
வரம் பெற்ற மகாபலி சக்கரவர்த்தி:
அதன் பின் ஒரு அடியால் மண்ணுலகையும், மற்றொரு அடியால் விண்ணுலகத்தையும் அளந்தார் வாமனன். மூன்றாவது அடியை எங்கு வைப்பது என கேட்க, மகாபலி தன் தலை மீது வைக்குமாறு சொன்னார்.
மகாபலியின் தலையில் வாமனன் கால் வைத்ததும், மகாபலி பாதாளலோகம் சென்றார்
அசுரராக இருந்தாலும், மக்களுக்கு நல்லனவற்றை செய்த மகாபலிக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டார். அதற்கு மகாபலி சக்கரவர்த்தி, என் மக்களை நான் ஆண்டுக்கு ஒருமுறை வந்து பார்த்து, அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என பார்த்து செல்ல விரும்புகிறேன் என கூறினார்.
அதற்கு அப்படியே ஆகட்டும். நீ உன் மக்களை வந்து பார்ப்பதை மக்கள் பண்டிகையாக கொண்டாடுவார்கள் என மகாவிஷ்ணு வரம் அளித்தார் 🕉
🕉 நாமும் அன்றைய தினம் வாமன மூர்த்தியான உலகளந்த பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வணங்குவோமாக🕉
🕉ஒம் நமோ நாரயணாய🕉
🙏இனிய ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்🙏
🌄🎈🌄🎈🌄🎈🌄🎈🌄
2026-2028 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள் - பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துதல் 29.08.2026 (சனிக்கிழமை) வழிகாட்டுதல்கள் வழங்குதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
Reconstitution of School Management Committees for the years 2026–2028 : Guidelines for conducting a parent awareness meeting on 29.08.2026 (Saturday) – Proceedings of the State Project Director
மாநிலத் திட்ட இயக்ககம், சென்னை-600 006 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி
மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
ந.க. எண். : 1338/A11/பமேகு/ஒபக/2026, நாள். 24/08/2026
பொருள்:
பள்ளிக் கல்வி - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, 2026-2028 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள் - பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துதல் 29.08.2026 (சனிக்கிழமை) வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு.
பார்வை:
(1) அரசாணை (நிலை) எண்.144, நாள்: 28.06.2024, பள்ளிக் கல்வித் (அகஇ2) துறை.
(2) அரசாணை (நிலை) எண். 143, நாள்: 19.08.2026, பள்ளிக் கல்வித் (அகஇ2) துறை.
பார்வை-1இல் காணும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி 2024-2026 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுவானது கடந்த 2024 ஆகஸட் மாதம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு உறுப்பினர்களின் பதவிக் காலம் 2026 ஆகஸ்ட் மாதம் நிறைவடைகிறது. இந்நிலையில அனைத்துவகை அரசுப் பள்ளிகளிலும் 2026-2028 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுவானது புதிய உறுப்பினர்களைக் கொண்டு மறுகட்டமைப்பு செய்யப்படவுள்ளது.
பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம்
பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகளில் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் முழுமையாகப் பங்கேற்பை உறுதிசெய்யும் வகையில் 2026-2028ஆம் ஆண்டுகளுக்கானப் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள் சார்ந்து பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் 29.08.2026, சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும்
1
பார்வை-2இல் காணும் அரசாணையில் பக்கம்-22இல் கண்டுள்ள "மறுகட்டமைப்பு நாளுக்கு முன்னதாக செய்ய வேண்டியவை" தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்திடவும்,
மேலும், பார்வை-2இல் கண்டுள்ள அரசாணையின்படி மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வினை அரசாணை வழிகாட்டு நெறிமுறைகள் பக்கம் 9-இல் உள்ள கால அட்டவணைக்கு மாற்றாக, பக்கம் 4, பத்தி x.-இல் உள்ள முன்மொழியப்பட்ட கால அட்டவணையில் உள்ளவாறு நடத்திட அனைத்து வகைப் அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (CEO) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
>>> செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
boAt Wave Call 3 Smartwatch 1.83” HD Display with Animated Watch Faces; BT Calling, Functional Crown, Multiple Sports Modes, IP68, HR, SpO2 Monitor, Smart Watches for Men & Women (Timber Brown)
பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நாள் - வருகைப்பதிவு செய்யும் வழிமுறை SMC Reconstitution Day - Attendance Marking Procedure >>...