கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல் - பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை



கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல் - பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை


கேரளா அருகே கடலில் மூழ்கிய கப்பல் - ரசாயனம் பரவும் அபாயம்


திருவனந்தபுரம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி நோக்கி புறப்பட்ட சரக்குக் கப்பல் மூழ்கியது.


 கப்பலில்  25 பேர் இருந்த நிலையில் லைஃப் ஜாக்கெட் உதவியுடன் 9 பேர் கடலில் குதித்து தப்பித்தனர். 


கப்பலில் சிக்கிய 16 பேரை மீட்கும் பணி தீவிரம்.


கப்பலில் இருந்த கண்டெய்னர்களில் 367 மெட்ரிக் டன்  கந்தக எரிபொருள் உள்ளதால், அதனால் ஏதும் ஆபத்து நிகழலாம் என எச்சரிக்கை.


 கண்டெய்னர்கள் எங்காவது கரை ஒதுங்கும் போது மக்கள் யாரும் அருகே செல்ல வேண்டாம் என கேரள பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை.


கொச்சி செல்லவிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடல் அருகே மூழ்கி விபத்துக்குள்ளானது.


கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடலில் மூழ்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கப்பலில் லைபீரியா நாட்டின் கொடி இருந்ததாகக் கூறுகின்றனர்.


இந்தக் கப்பல் இன்றிரவு 10 மணிக்கு கொச்சி சென்றடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கொச்சியை தொடர்ந்து, தூத்துக்குடிக்கும் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.


இந்த விபத்தின்போது, கப்பலில் 24 பேர் இருந்ததாகவும், அவர்களில் 9 பேர் பாதுகாப்பு உடைகளின் மூலம் தப்பித்ததாகவும் தகவல் தெரிவிக்கிறது. மீதமுள்ளவர்களை மீட்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தென்மேற்கு பருவமழையின் காரணமாக, கடலில் ஏற்பட்ட பாதகமான நிலைமையால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.


அதுமட்டுமின்றி, கப்பலில் இருந்த கன்டெய்னர்களில் 367 மெட்ரிக் டன் அளவில் கந்தக எரிபொருள் இருந்ததாகக் கூறுகின்றனர். ஆகையால், அவை கரை ஒதுங்கும் சமயத்தில், அதனருகே மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று பேரிடர் மேலாண்மை எச்சரித்துள்ளது.


மேலும், கடற்கரையில் அடையாளம் தெரியாத எந்தப் பொருளையும் அணுக வேண்டாம் என்றும், 112 என்ற அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The secret of life: Be happy and helpful to others until the last moment

வாழ்வின் ரகசியம் : கடைசி நொடி வரையில் மகிழ்ச்சியாகவும், இயன்றவரை பிறருக்கு உதவிகரமாகவும் இருங்கள் The secret of life: Be happy and helpful t...