SLAS அறிக்கை ஆய்வுக்கூட்டம் 17 ஈரோட்டில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு
ஈரோடு மாவட்டத்தின் 4 கல்வி வட்டாரங்களைச் சேர்ந்த 400 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டோம்.
மாநில அளவிலான கற்றல் அடைவுத் தேர்வு SLAS - 2025 ஆய்வறிக்கையின் தரவுகள் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் வாரியாக கற்பித்தல் - கற்றல் முறைகளில் புதிய செயல் திட்டங்களை மேற்கொள்வது பற்றி கலந்துரையாடினோம். மேலும், பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்தும் ஆலோசித்தோம்.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை தந்த ஈரோட்டில் 17வது மாவட்ட ஆய்வினை நிறைவு செய்துள்ளோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.