கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SLAS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SLAS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

SLAS அறிக்கை : 38வது ஆய்வுக்கூட்டம் தென்காசியில் நடைபெற்றது தொடர்பான அமைச்சர் அவர்களின் பதிவு

 


SLAS அறிக்கை : 38வது ஆய்வுக்கூட்டம் தென்காசியில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் உடனான கலந்தாய்வுக் கூட்டம், ஜூன் 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள் எனது தலைமையில் நடைபெற்றது. அதில் மாநிலத் திட்டக்குழு நடத்திய SLAS (State Level Achievement Survey) மூலம் பெறப்பட்ட ஆய்வறிக்கை குறித்தும் 38 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வித்துறை அலுவலர்களோடு ஆலோசித்தோம். அதன் அடுத்த கட்டமாக மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களைச் சந்தித்து ஆய்வுக்கூட்டம் நடத்த முடிவு செய்தோம். 


அதன்படி, முதல் ஆய்வுக்கூட்டம் ஜூன் 25ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் தொடங்கியது. பிற அலுவல்களுக்கு இடையிலும், தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வுக் கூட்டங்களை நடத்திய நிலையில், 38வது மாவட்ட ஆய்வுக் கூட்டம் தென்காசியில் இன்று நடைபெற்றது. 4 கல்வி வட்டாரங்களைச் சேர்ந்த 700 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். SLAS தரவுகளை முன்வைத்தும், தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினோம்.


SLAS அறிக்கை : 37வது ஆய்வுக்கூட்டம் தேனியில் நடைபெற்றது தொடர்பான அமைச்சர் அவர்களின் பதிவு



SLAS அறிக்கை : 37வது ஆய்வுக்கூட்டம் தேனியில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


 37வது மாவட்டமாக தேனியில் பள்ளித் தலைமையாசிரியர்களுடன் ஆய்வுக்கூட்டம் நிறைவுற்றது.


மாணவச் செல்வங்களின் கற்றல் அடைவு குறித்து SLAS அடிப்படையில் கலந்துரையாடி, தேவையான முன்னேற்றங்கள் பற்றி ஆலோசித்தோம்.


SLAS அறிக்கை : 34வது ஆய்வுக்கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு

SLAS அறிக்கை : 34வது ஆய்வுக்கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


SLAS2025 அடிப்படையில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனான ஆய்வுக்கூட்டம், 34வது மாவட்டமாக சிவகங்கையில் இன்று நடைபெற்றது. இதில் 3 கல்வி ஒன்றியங்களில் இருந்து 340 தலைமையாசிரியர்கள் பங்கேற்றார்கள். 


மாணவச் செல்வங்களை கற்றல் அடைவுகளை எட்டச் செய்வது, ஒவ்வொரு பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்காக முன்னெடுப்புகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினோம்.


@tnschoolsedu




SLAS அறிக்கை : 35வது ஆய்வுக்கூட்டம் இராமநாதபுரத்தில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு

 

SLAS அறிக்கை : 35வது ஆய்வுக்கூட்டம் இராமநாதபுரத்தில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


இராமநாதபுரம் மாவட்டத்தில் 8 கல்வி ஒன்றியங்களைச் சேர்ந்த 800 பள்ளித் தலைமையாசிரியர்களுடன் சந்திப்பு.


SLAS2025 ஆய்வறிக்கை அடிப்படையிலான 35வது மாவட்ட ஆய்வுக் கூட்டமாக அமைந்தது.




SLAS அறிக்கை : 21வது ஆய்வுக்கூட்டம் தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


 SLAS அறிக்கை : 21வது ஆய்வுக்கூட்டம் கடலூரில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


SLAS 2025 அடிப்படையில் 21வது மாவட்டமாக கடலூரில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.


4 கல்வி வட்டாரங்களைச் சேர்ந்த 470 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.



கடலூர் மாவட்டத்திற்கான அரசு மாதிரிப் பள்ளியின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. 


மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அப்பள்ளியை இன்று ஆய்வு செய்தோம்.



SLAS அறிக்கை : 20வது ஆய்வுக்கூட்டம் மயிலாடுதுறையில் : பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு

 


SLAS அறிக்கை : 20வது ஆய்வுக்கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


மாநில திட்டக்குழு நடத்திய கற்றல் அடைவுத் தேர்வு #SLAS - 2025 ஆய்வின் மூலம் பெறப்பட்ட ஆய்வறிக்கையின் அடிப்படையில், மாவட்ட வாரியாக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களைச் சந்தித்து வருகிறோம். 


அந்த வகையில், 20வது மாவட்டமாக மயிலாடுதுறையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 4 கல்வி வட்டாரங்களில் இருந்து 420 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


மாணவச் செல்வங்களுக்கான அடிப்படை வாசிப்பு, கணிதத்திறன் ஆகியவற்றை மேம்படுத்த பள்ளிகள் அளவில் செயல் திட்டங்களை உருவாக்கிடவும், பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் தலைமை ஆசிரியர்களைக் கேட்டுக் கொண்டோம்.


SLAS அறிக்கை : 19வது ஆய்வுக்கூட்டம் கரூரில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு

 SLAS அறிக்கை : 19வது ஆய்வுக்கூட்டம் கரூரில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


கரூர் மாவட்டத்தில் 4 கல்வி வட்டாரங்களைச் சேர்ந்த 470 பள்ளித் தலைமையாசிரியர்களுடன் சந்திப்பு.


#SLAS 2025 அடிப்படையிலான இந்த 19வது ஆய்வுக் கூட்டத்தில் மாணவச் செல்வங்களைச்


🎯 கற்றல் அடைவு இலக்குகளை எட்டச் செய்வதற்கான திட்டமிடல்


📈 தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான முன்னெடுப்புகள் குறித்து ஆலோசித்தோம்.



SLAS அறிக்கை : 18வது ஆய்வுக்கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


SLAS அறிக்கை : 18வது ஆய்வுக்கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


SLAS - 2025 முடிவுகள் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட வாரியான நடத்தப்பட்டுவரும் ஆய்வுக் கூட்டங்களின் 18வது கூட்டம் நாமக்கல் மாவட்டத்தில் இன்று நடைபெற்றது.


இதில் 4 கல்வி வட்டாரங்களைச் சேர்ந்த 300 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றார்கள்.




SLAS அறிக்கை ஆய்வுக்கூட்டம் 17 ஈரோட்டில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு

SLAS அறிக்கை ஆய்வுக்கூட்டம் 17 ஈரோட்டில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


 ஈரோடு மாவட்டத்தின் 4 கல்வி வட்டாரங்களைச் சேர்ந்த 400 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டோம்.


மாநில அளவிலான கற்றல் அடைவுத் தேர்வு SLAS - 2025 ஆய்வறிக்கையின் தரவுகள் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் வாரியாக கற்பித்தல் - கற்றல் முறைகளில் புதிய செயல் திட்டங்களை மேற்கொள்வது பற்றி கலந்துரையாடினோம். மேலும், பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்தும் ஆலோசித்தோம். 


பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை தந்த ஈரோட்டில் 17வது மாவட்ட ஆய்வினை நிறைவு செய்துள்ளோம்.



SLAS அறிக்கை - ஆய்வுக்கூட்டம் 16 சென்னையில் - பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு



SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 16 சென்னையில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க மாவட்டம் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களைச் சந்தித்து பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். 


அவ்வரிசையில் 16வது மாவட்டமாக சென்னையில் எனது தலைமையில் இன்று


Action Plans Templates : SLAS 2025



மாநில அளவிலான அடைவுத் தேர்வு 2025 இல் சோதிக்கக்கப்பட்ட கற்றல் விளைவுகளுக்கான செயல் திட்ட வார்ப்புருக்கள்


 Action Plans Templates : for the Learning Outcomes Surveyed in SLAS 2025 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


SLAS Report ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை



SLAS Report ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை


அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு


தங்கள் பள்ளியில் SLAS Report யினை அனைவரும் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். பின்வருவனவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.


1. தங்கள் பள்ளி  ஒன்றிய அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் எத்தனையாவது Rank ல் உள்ளது என அனைத்து ஆசிரியர்களும் அறிந்திருக்க வேண்டும்.

2. மாணவர் Report Card னை download செய்து அதில் ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு பாடத்திலும் எத்தனை சதவீதம் உள்ளனர் என அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.

3. SLAS தேர்வானது கற்றல் விளைவின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதால், எந்த கற்றல் விளைவில் மாணவன் பின் தங்கியுள்ளான் என அனைத்து ஆசிரியர்களும் அறிந்திருக்க வேண்டும்.

4. இதற்கான மாவட்ட Action plan குழுவில் ஏற்கனவே பதிவேற்றம் செய்துள்ளோம். அதனை பதிவிறக்கம் செய்து அதனடிப்படையில் கற்பித்தல் செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டும்



>>> SLAS - District Action Plan - Tamil, English & Mathematics...



SLAS Report card download செய்ய புதிய முறை

 



SLAS Assessment Report card download செய்ய புதிய முறை


தங்கள் பள்ளியின் EMIS  Website-ல் State Level Achievement Survey ASSESSMENT REPORT DOWNLOAD செய்வதற்கான வழிமுறை


Website: emis.tnschools.gov.in (School Login)


தங்களின் பள்ளி user ID and password மூலம் login செய்து கொள்ளவும்


அதன் பின்னர் Menu-வில்

⬇️

SLAS ASSESSMENT 

⬇️

SLAS 2024-25


Click செய்து தங்களின் பள்ளி SLAS Assessment Report download செய்து கொள்ளவும்..


SLAS Exam 2025 - FIELD INVESTIGATORS கவனத்திற்கு


SLAS Exam 2025 - FIELD INVESTIGATORS (ஆய்வாளர்கள் கவனத்திற்கு)


அனைத்து கள ஆய்வாளர்களும் SLAS பரீட்சை அன்று பள்ளிக்கு சென்று அந்த தேர்வினை நடத்திவிட்டு மறுபடியும் நீங்கள் தங்கள் இல்லங்களுக்கு சென்று விடலாம்.


நோடல் பாயிண்ட் சென்று OMR உள்ளிட்ட மூன்று கவர்களை நீங்கள் சென்று சமர்ப்பிக்க தேவையில்லை.


 நீங்கள் பள்ளிக்கு சென்று  தேர்வு நடந்தி முடிந்தவுடன் வீட்டிற்கு சென்று விடலாம்.


 நன்றி வணக்கம்.


 


மாநில அளவிலான அடைவு ஆய்வுத் தேர்வு 2025 - கள ஆய்வாளர்களுக்கான FIs வழிகாட்டுதல் பயிற்சி


SLAS 2025 - Training PPT for Field Investigators


தமிழ்நாட்டில் 414 ஒன்றியங்களில் உள்ள 45,924 பள்ளிகளில் பயிலும் 15 லட்சம் மாணவர்களுக்கு நடத்துவது குறித்து முழு வழிகாட்டுதல்


SLAS - 2025 State Level Achievement Survey Training for Field Investigators (FIs) 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


SLAS Exam 2025 - OMR Sheet Model




மாநில அளவிலான அடைவு ஆய்வுத் தேர்வு SLAS Exam 2025 - OMR Sheet Model



>>> OMR sheet PDF தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Things to note while filling SLAS 2025 - OMR Sheet

 

 

📝 மாநில அளவிலான அடைவு ஆய்வுத் தேர்வு  SLAS EXAM 2025


🆕 3, 5 & 8-ஆம் வகுப்பு மாணவர்கள் SLAS EXAM க்கான  OMR Fill  செய்தல் & விடையளித்தல்.


➡️ SLAS 2025 - OMR Sheet நிரப்பும் பொழுது கவனிக்க வேண்டியவை


▪️மாணவர்களின் பெயரை ஆங்கிலத்தில் Capital Letter -யில் எழுதவும்.


▪️Black /Blue colour பந்துமுனைப் பேனா மட்டுமே பயன்படுத்தவும்.


▪️ Ink pen / gel pen பயன்படுத்தக் கூடாது.


▪️OMR - ஐ மடக்கவோ,கசக்கவோ, கிறுக்கவோ கூடாது.


▪️தவறான விடைகளை Whitener / பிளேடு மூலம் திருத்தம் செய்ய முயற்சி செய்யக்கூடாது.


▪️ஒரே வினாவிற்கு இரண்டு விடைகளை தேர்வு செய்யக் கூடாது


*வரும் 04.02.2025, 05.02.2025 மற்றும் 06.02.2025 ஆகிய மூன்று நாட்கள் முறையே 3,5,8 ஆம் வகுப்புகளுக்கு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநில அளவிலான அடைவு ஆய்வு (SLAS)  நடைபெற உள்ளது.


*இதற்கான மாதிரித் தேர்வு வினாத்தாள் பயிற்சியினை அனைத்து பள்ளிகளிலும் வழங்கிட அனைவரிடமும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


*இதில் 3 ஆம் வகுப்பு மாணவர்கள் SLAS வினாத்தாளில் வினாவிற்கான விடையினை  வட்டமிட்டு கொடுத்தால் அதனை வைத்து தேர்வு நடத்துபவர் OMR SHEET ல் பூர்த்தி செய்து கொள்வார்.


*5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் வினாத்தாளில் விடையினை வட்டமிட்டு பின்னர் மாணவர்கள் தான் OMR SHEET ல் பூர்த்தி செய்ய வேண்டும்.


 *எனவே இது சார்ந்த பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்கவும் SLAS வினாத்தாளில் அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும் மாணவர்களை பழக்கப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.


*மேலும் 3 மற்றும் 5 ஆம் வகுப்பு குழந்தைகளில் 20 மாணவர்களுக்கும் 8 ஆம் வகுப்பு மாணவர்களில் 30 மாணவர்களும் ( அனைத்து பிரிவுகளில் இருந்தும்) SLAS  தேர்விற்காக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.


*மேற்கண்ட எண்ணிக்கைக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்வில் பங்கேற்க வேண்டும்.


*மேற்கண்ட எண்ணிக்கைக்கு அதிகமான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் எந்த மாணவர்கள் SLAS தேர்வில் பங்கேற்க வேண்டும் என்பதனை EMIS Server  மூலமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. இதனை தேர்வு நடைபெறும் நாள் அன்று பள்ளியின் EMIS தளத்தில் பதிவிறக்கி அந்த மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்பதனை இதன்மூலம் அனைவருக்கும் அன்புடன் தெரிவிக்கப்படுகிறது.



>>> OMR sheet PDF தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

Instructions to Headmasters regarding SLAS 2025 Examination - DIET Principal's letter

 

மாநில அளவிலான அடைவு ஆய்வுத் தேர்வு (SLAS 2025) தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் -  மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன (DIET) முதல்வரின் கடிதம் 


Instructions to Headmasters regarding SLAS 2025 Examination - DIET Principal's letter


Instructions to Head Masters regarding State Level Achievement Survey Examination (SLAS 2025) - Letter from Principal of District Institute of Education and Training (DIET)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


SLAS 2025 - Training for Field Investigators

 


மாநில அளவிலான அடைவு ஆய்வுத் தேர்வு 2025 - கள ஆய்வாளர்களுக்கான FIs வழிகாட்டுதல் பயிற்சி


SLAS 2025 - Training PPT for Field Investigators


தமிழ்நாட்டில் 414 ஒன்றியங்களில் உள்ள 45,924 பள்ளிகளில் பயிலும் 15 லட்சம் மாணவர்களுக்கு நடத்துவது குறித்து முழு வழிகாட்டுதல்


SLAS - 2025 State Level Achievement Survey Training for Field Investigators (FIs) 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


SLAS Exam - Tasks of Headmaster and Teachers

 

 


SLAS தேர்வு - தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பணிகள்


SLAS Exam - Tasks of Headmaster and Teachers


அனைவருக்கும் வணக்கம்


SLAS தேர்வு நடைபெறும் நாட்கள்:

4.2.2025 - Tuesday -3 rd std

5.2.2025 - Wednesday -5th std

6.2.2025 - Thursday - 8th  std 


தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பணிகள்


🎯 தேர்வுக்கு நடைபெறுவதற்கு முதல் நாள் வட்டார வளமையத்தில் வினாத்தாள்களை பெற்று பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லுதல். 


🎯 ஒவ்வொரு நாளும் தேர்வு மாணவர்கள் எழுதி முடித்த பிறகு வினாத்தாள்கள் மற்றும் OMR  தாள்களை பெற்று வட்டார வளமையத்தில் ஒப்படைத்தல். 


🎯 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான இருக்கை வசதி வகுப்பறை வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் இருப்பதை உறுதி செய்தல். 


🎯 தேர்வு எழுதும் மாணவர்கள் Blue colour ball point pen அல்லது Black colour ball point pen பயன்படுத்துவதை உறுதி செய்தல். 


🎯 தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தேர்வு எழுதும் நாள் அன்று EMIS - School Login ல் வெளியாகும்.அந்த மாணவர்களின் பெயர் பட்டியலை பள்ளிகளுக்கு வரும் Field Invigilator வழங்கி தேர்வு நடைபெறுவதை உறுதிசெய்தல். 


🎯 தேர்வு முடிந்து வினாத்தாள்களை அலுவலகத்தில் ஒப்படைக்க வரும் பொழுது Std,Section மற்றும் medium  வாரியாக Boys & Girls குறித்து தனியாக ஒரு தாளில் குறித்து வட்டார வளமையத்தில் ஒப்படைத்தல் வேண்டும். 


🎯 தேர்வு நடைபெறும் நாளன்று காலை Field Invigilator பள்ளிக்கு வருகை புரிந்ததை உறுதி செய்தல் இல்லை என்றால் ஆசிரியர் பயிற்றுநர்களிடம் தகவல் தெரிவித்தல். 


🎯 தேர்வு எழுதும் நாளன்று தேர்வு எழுதும் மாணவர்களை புகைப்படம் எடுத்தல் குழுவில் பதிவு செய்தல் முதலியவற்றை தவிர்த்தல் வேண்டும். 


🎯 குறிப்பு  அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வு நடைபெறும் என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது.


நன்றி.🙏💐


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்