கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வூதிய குழுவின் ஓய்வூதியத் திட்டங்கள் குறித்த இடைக்கால அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்பு


திரு.ககன்தீப்சிங்பேடி IAS அவர்கள் தலைமையிலான ஓய்வூதிய குழுவின் ஓய்வூதியத் திட்டங்கள் குறித்த இடைக்கால அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்பு - விரைவில் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்கும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண் : 2326, நாள் : 30-09-2025


Submission of interim report on pension schemes by the Pension Committee headed by Mr. Gagandeep Singh Bedi IAS to the Government - Complete report will be submitted soon - Government of Tamil Nadu Press Release No. : 2326, Date : 30-09-2025


தமிழ்நாடு அரசின் ஓய்வூதியத் திட்டக் குழுவின் இடைக்கால அறிக்கை (30.09.2025) 


தமிழ்நாடு அரசு, பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, நடைமுறைப்படுத்தத்தக்க ஓய்வூதிய முறை குறித்துப் பரிந்துரைக்க, திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., (அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை) அவர்களின் தலைமையில் மூன்று அதிகாரிகள் கொண்ட குழுவை பிப்ரவரி 2025-இல் அமைத்தது. இக்குழு செப்டம்பர் 2025-க்குள் அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.  


குழுவின் செயல்பாடுகள்:

மாநில அரசின் நிதிநிலை மற்றும் பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகள் இரண்டையும் கருத்தில் கொண்டு குழு ஆய்வு செய்து வருகிறது.  

குழு இதுவரை 194 அரசுப் பணியாளர் சங்கங்களுடன் ஒன்பது சுற்றுகள் கூட்டங்களை நடத்தியுள்ளது.  

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) மற்றும் தொடர்புடைய நிதி நிறுவனங்களுடன் பல்வேறு கலந்தாய்வுக் கூட்டங்களையும் நடத்தியுள்ளது.  

துல்லியமான ஆய்வுகளுக்காக காப்பீட்டுக் கணிப்பாளர் மற்றும் நிதி வல்லுநர்களின் சேவையைப் பயன்படுத்திக் கொண்டது.  

கடந்த எட்டு மாதங்களில், 7.36 இலட்சம் பணியாளர்கள் மற்றும் 6.75 இலட்சம் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உட்பட ஓய்வூதியதாரர்களின் தரவுகளைச் சேகரித்து, அவற்றில் இருந்த தவறுகளை நிவர்த்தி செய்து, சரிபார்த்தல் உள்ளிட்ட விரிவான பணிகளை கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையின் மூலம் குழு மேற்கொண்டுள்ளது.  


கால அவகாசத் தேவை மற்றும் இடைக்கால அறிக்கை:

சேகரிக்கப்பட்ட தரவுகளின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், ஒன்றிய அரசு, தொடர்புடைய நிதி நிறுவனங்கள் மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஆகியவற்றுடன் மேலும் கலந்தாய்வுகள் நடத்தவேண்டியிருப்பதாலும், குழுவிற்கு தனது பணியை இறுதி செய்து அறிக்கை அளிக்கச் சற்று கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.  


எனவே, குழுவானது இன்று (30.09.2025) ஓய்வூதியத் திட்டங்கள் குறித்த தனது இடைக்கால அறிக்கையினை அரசுக்குச் சமர்ப்பித்துள்ளது. தேவையான கலந்தாய்வுகளை முடித்த பின்னர், குழு தனது இறுதி அறிக்கையினை விரைவில் அரசுக்குச் சமர்ப்பிக்கும்.



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வூதிய குழுவின் ஓய்வூதியத் திட்டங்கள் குறித்த இடைக்கால அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்பு

திரு.ககன்தீப்சிங்பேடி IAS அவர்கள் தலைமையிலான ஓய்வூதிய குழுவின் ஓய்வூதியத் திட்டங்கள் குறித்த இடைக்கால அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்பு - விரைவில...