கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கர்ப்பிணிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கர்ப்பிணிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

"கர்ப்பிணிப் பெண்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்" -சுகாதார அமைச்சகம் அறிவிப்பு...



 "கர்ப்பிணிப் பெண்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்" -சுகாதார அமைச்சகம் அறிவிப்பு...


இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் கிடைக்கின்றன. இந்த இரண்டுமே கர்ப்பிணி பெண்களிடம் ட்ரையல் பார்க்கப்படவில்லை என்பதால் மத்திய அரசு இவர்களுக்கு இந்தத் தடுப்பூசிகளை பரிந்துரை செய்யாமல் இருந்தது. இந்த நிலையில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் தடுப்பூசி போடுவது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

 

அப்போது பேசிய ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் டாக்டர் பலராம் பார்கவா, கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருப்பதாகவும், இனி கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் எனவும் கூறினார். மேலும் அவர், குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி குறித்து பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பரில் பரிசோதனை முடிவுகள் தெரியவரும் என்றும் தெரிவித்தார்.

 

நாடு முழுவதும் 25.37 கோடி பேருக்கு முதல் டோஸும், 5.42 கோடி பேருக்கு 2-வது டோஸும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்டது.


கர்ப்பிணிகளுக்கு அவரசகால வாட்ஸ்ஆப் உதவி எண் – தேசிய பெண்கள் ஆணையம் அறிமுகம்...

 நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணிகளுக்காண அவசர கால உதவி எண்ணை புதிதாக அறிமுகப்படுத்தியுளளது தேசிய பெண்கள் ஆணையம். இந்த எண் எல்லா நேரங்களிலும் செயல்பாட்டில் இருக்கும் என அறிவித்துள்ளது.


அவசர கால உதவி எண்:

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் பாதிப்பும் புதிய உச்சம் அடைகிறது. கொரோனா இரண்டாம் அலை 



தற்போது இந்தியாவில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த வருடத்தை விட இந்த கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை உருவாக்கியுள்ளது.


இதனால் மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. போதுமான படுக்கை வசதிகள் 



இல்லாததால் தரையில் படுக்கும் அவல நிலை ஏற்படுகிறது. கொரோனா வைரஸ் பரவியதில் இருந்தே மருத்துவமனைகளில் மற்ற நோய்களுக்கு சிகிக்சை அளிப்பதில்லை.


அதே போல் கர்பிணிகளையும் சில தனியார் மருத்துவமனைகள் அனுமதிப்பதில்லை. இதனால் கர்ப்பிணிகளுக்கு உரிய நேரத்தில் சிகிக்சை அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. தற்போது நாடு முழுவதும் இரவு நேர மற்றும் வார இறுதி ஊரடங்குகள் இருப்பதால் 



கர்ப்பிணிகளுக்கு அவசரமான நேரங்களில் போக்குவரத்து சேவைகள் கிடைப்பதில்லை. இதனை கருத்திற்கொண்டு இந்திய தேசிய பெண்கள் ஆணையம் கர்ப்பிணிகளுக்கு என அவசர உதவி வாட்ஸ் ஆப் எண்ணை 9354954224 மேலும் helpatnew@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எண் எல்லா நேரங்களிலும் செயல்பாட்டில் இருக்கும் எனவும் பெண்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...