கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Exemption லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Exemption லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு துறைத் தேர்வில் தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்களித்து (குறிப்பிட்ட சில நிபந்தனைகளுடன்) அரசாணை (நிலை) எண்: 11, நாள்: 13-08-2024 வெளியீடு...

 



மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு துறைத் தேர்வில் தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்களித்து (குறிப்பிட்ட சில நிபந்தனைகளுடன்) அரசாணை (நிலை) எண்: 11, நாள்: 13-08-2024 வெளியீடு...


Exemption (subject to certain conditions) for differently abled Government servants from passing the departmental examination - Ordinance G.O. (Ms) No: 11, Dated: 13-08-2024 issued...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


53 வயதை கடந்த இளநிலை உதவியாளர்கள்/ உதவியாளர்கள் பவானிசாகர் அடிப்படை பயிற்சி பெறுவதிலிருந்து விலக்கு - மனித வள மேலாண்மைத் (பயிற்சி-1) துறை அரசு செயலாளரின் கடிதம் ந.க.எண்: 3696890/ பயிற்சி 1/ 2022-2, நாள்: 13-07-2023 (Exemption of Junior Assistants/Assistants above 53 years of age from Bhavanisagar Basic Training - Department of Human Resource Management (Training-1) Secretary's letter Rc.No: 3696890/ Training 1/ 2022-2, Dated: 13-07-2023)...


>>> 53 வயதை கடந்த இளநிலை உதவியாளர்கள்/ உதவியாளர்கள் பவானிசாகர் அடிப்படை பயிற்சி பெறுவதிலிருந்து விலக்கு - மனித வள மேலாண்மைத் (பயிற்சி-1) துறை அரசு செயலாளரின் கடிதம் ந.க.எண்:  3696890/ பயிற்சி 1/ 2022-2, நாள்: 13-07-2023 (Exemption of Junior Assistants/Assistants above 53 years of age from Bhavanisagar Basic Training - Department of Human Resource Management (Training-1) Secretary's letter Rc.No: 3696890/ Training 1/ 2022-2, Dated: 13-07-2023)...


சிறப்புத் தேர்வுகள் / துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளித்தல் - மனிதவள மேலாண்மைத் (எஸ்) துறை அரசாணை (நிலை) எண்: 41, நாள்: 09-05-2023 வெளியீடு (Exemption from appearing in Special Examinations / Departmental Examinations - Department of Human Resource Management (S) G.O. (Ms) No: 41, Dated: 09-05-2023 Issued)...


>>> சிறப்புத் தேர்வுகள் / துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளித்தல் - மனிதவள மேலாண்மைத் (எஸ்) துறை அரசாணை (நிலை) எண்: 41, நாள்: 09-05-2023 வெளியீடு (Exemption from appearing in Special Examinations / Departmental Examinations - Department of Human Resource Management (S) G.O. (Ms) No: 41, Dated: 09-05-2023 Issued)...


2013ஆம் ஆண்டுக்கு முன் ஆசிரியர் தேர்வு வாரியம் & வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்யப் பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்க முடிவு என தகவல் (Decision to exempt Teachers from writing the TET Exam recruited by the Teacher Recruitment Board & Employment Office before 2013)...

 2013ஆம் ஆண்டுக்கு முன் ஆசிரியர் தேர்வு வாரியம் & வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்யப் பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்க முடிவு  என தகவல் (Decision to exempt Teachers from writing the TET Exam recruited by the Teacher Recruitment Board & Employment Office before 2013)...



பள்ளிகளில் பணி நியமனம் பெறும் ஆசிரியர்கள் கட்டாயம் TET தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற நிபந்தனை கடந்த 23/8/2010 முதல் அமலாக்கம் செய்யப்பட்டது.


ஆனால் தமிழகத்தில் இது சற்றே தாமதமாக அரசாணை எண் 181 மூலம் நடைமுறைப் படுத்தப்பட்டது. 


இந்த சட்ட நடைமுறையில் ஆசிரியர்கள் பணி நிரப்புதல் தொடர்பாகவும், நிரந்தர பணியிடங்களில் பணி நியமனம் பெறும் ஆசிரியர்களுக்கு TET கட்டாயம் என்ற பள்ளிக்கல்வி இயக்கக செயல்முறைகள் 16/11/2012 அன்று தான் வெளிவந்தது என்பதாலும், இந்த தேதிக்கு முந்தைய காலகட்டத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, பல்வேறு வழிகளில் தமிழக அரசிடமிருந்து TET லிருந்து விலக்கு வேண்டி கோரிக்கைகள் வைத்து வந்த நிலையில், விலக்கு தருவதில் பல்வேறு குழப்பங்களும் இருந்து வந்தன. அதை தீர்க்கும் விதமாகவும், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களைப் பாதுகாக்கும் விதமாகவும், பத்தாண்டுகளுக்கு மேல் கல்வி கற்றல் கற்பித்தலில் உள்ளதையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைவில் அரசாணை வெளியிடும் எனவும் பள்ளிக்கல்வி துறை ஆணையகம் வழியாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 


நிரந்தரமாக பணியிடத்தில் பணி நியமனம் பெற்று இன்று வரை TET லிருந்து விலக்கு தொடர்பான தெளிவான அரசாணை இல்லாமல் தமிழக அரசிடமிருந்து ஒரு நல்ல விடியல் வரும் என காத்துக் கொண்டு இருப்பவர்கள்: 



1) 23/8/2010 க்கு பிறகு (TRB / வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில்) நிரந்தர பணியிடங்களில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்




2) 23/8/2010 க்கு பிறகு அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறுபான்மை / சிறுபான்மையற்ற பள்ளிகளில் நிரந்தர பணியிடங்களில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள். 




3) ஆசிரியர் அல்லாத அரசு பணியிடங்களில் பணி நியமனம் பெற்று, 23/08/2010 க்குப் பிறகு பதவி உயர்வு மூலமாக இடைநிலை (TET PAPER 1) / பட்டதாரி (TET PAPER 2) ஆசிரியர்களாக பணியில் தொடருபவர்கள். 




4) சத்துணவுத் துறையில் அரசு பணியிடங்களில் பணி நியமனம் பெற்று, 23/08/2010 க்குப் பிறகு பதவி உயர்வு மூலமாக இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் தொடருபவர்கள். 



5) 23/8/2010 க்கு பிறகு அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறுபான்மை / சிறுபான்மையற்ற பள்ளிகளில் நிரந்தர பணியிடங்களில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் ஒரு சிலர் தற்போது நீதிமன்ற வழிகாட்டல் அடிப்படையில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாக / தலைமை ஆசிரியர்களாக பணி புரிந்து வருபவர்கள். 



தற்போதைக்கு TET விலக்கு தொடர்பான பெரும்பாலான வழக்குகள் நிறைவுற்று இருப்பதால், பெரும்பாலான ஆசிரியர்கள் பத்தாண்டுகளுக்கு மேல் பணி புரிந்த அனுபவசாலிகள் என்பதாலும், 50 வயதிற்கும் மேற்பட்டவர்கள் என்பதாலும், ஏற்கனவே ஊதியம் பெற்று வருவதால் அரசிற்கு புதிய செலவினங்கள் ஏதுமில்லை என்பதாலும், TET க்கு நிகரான புத்தாக்கப் பயிற்சி ஒன்றைத் தந்து விரைவில் TET பாதிப்பிலிருந்து விடுபட வழிவகை செய்யப்படும் எனவும் கல்வித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.





தேர்தல் பணியில் இருந்து எவருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும்? (Who will be exempted from the Election Duty?) - சுற்றறிக்கை U.L.B.Election.C.No./E8/2548/2022 - நாள் : 29.01.2022



>>> நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்து எவருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும்? (Who will be exempted from the Urban Local Body Election Duty?) - சுற்றறிக்கை U.L.B.Election.C.No./E8/2548/2022 - நாள் : 29.01.2022...


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவோர்...

  1. எஞ்சிய பணிக்காலம் 6 மாதங்கள் உள்ளவர்கள், 
  2. கர்ப்பிணிகள்,  பாலூட்டும் தாய்மார்கள், 
  3. மாற்று திறனாளிகள் மற்றும் 
  4. கடும் நோயுற்றவர்களுக்கு (Cancer, dialysis) உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்து விதி விலக்கு....


The  categories of employees for whom exemption can be given by the employer are  as follows, 

i) Any official to be retired within 6 months may be exempted from  election related duty.

ii) All pregnant women and lactating mothers (child less than 1 year),  whether on maternity leave or not or who mare otherwise on  medical advice not to undertake any rigorous or hazardous work,  may be exempted from election related duty, 

iii) Persons  with Disabilities - Physically challenged persons with  disabilities may be exempted from the election related duty,  

iv) Serious Medical Ailments such as Cancer, dialysis etc.

கொரோனா தொற்று பாதிப்பால் பெற்றோர்களை இழந்த 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் தேர்வு & பதிவுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு - CBSE அறிவிப்பு(Exemption from payment of examination & registration fees for 10th and 12th Standard students, who lost their parents due to corona infection in the current academic year - CBSE Announced)...

 கொரோனா தொற்று பாதிப்பால்  பெற்றோர்களை இழந்த 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் தேர்வு & பதிவுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக நடுவண் மேல்நிலைக்கல்வி வாரியம் (CBSE) அறிவிப்பு...




நிரந்தர விலக்குப் பெறும் வகையில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா: சட்டப்பேரவையில் தாக்கல்...

 


நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் புதிய மசோதாவை சட்டசபையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.


தமிழகத்தில் நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது.


இந்த குழு தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் தமிழக சட்டசபையில்  மசோதா தாக்கல் செய்யப்பட்டது..



 சட்டசபை கூட்டத்திற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்புப் பட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை தந்தனர்.நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட தனுஷ் மறைவுக்காகவும், வாணியம்பாடியில் சமூக ஆர்வலர் வெட்டிக் கொல்லப்பட்டதற்காகவும் கருப்பு பட்டை அணிந்து வந்ததாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகவல் தெரிவித்தனர்.


 சட்டசபை கூடியதும்  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. கஞ்சா விற்பனை குறித்து காவல் துறையில் புகாரளித்த வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார் 


நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக சட்டசபையில்  தி.மு.க. - அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில்  இருந்து வெளிநடப்பு செய்தனர்.


நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் புதிய மசோதாவை சட்டசபையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து பேசியதாவது;-


நீட் தேர்வை ஆரம்பம் முதலே தி.மு.க. எதிர்த்து வருகிறது.


தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.


அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடும் தொடரும் வகையில் மசோதா இருக்கும். நீட்டில் நிரந்தர விலக்கு பெறும் சட்டமசோதாவை நிறைவேற்றி குடியரசு தலைவர் ஒப்புதலை பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.


12ம் வகுப்பு தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்.


நீட் தேர்வை எதிர்ப்பதற்கான எந்த திராணியும் அ.தி.மு.க.வுக்கு இல்லை.


சமூக நீதியை உறுதி செய்யவும் சமத்துவம் மற்றும் சமவாய்ப்பை நிலை நிறுத்தவும், மாணவர்களிடம் பாகுபாடு காட்டுவதில் இருந்து பாதுகாக்கவும் நீட் விலக்கு சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது.


கட்டாயமாக எதிர்கொள்ளும் கூடுதல் தேர்வானது சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தி உள்ளது.


நீட் தேர்வு சமத்துவமின்மையை வளர்க்கிறது; சிறப்பு பயிற்சி பெறக்கூடிய சமூகத்தின், பொருளாதார மற்றும் அதிக சலுகை பெற்ற வகுப்பினரை ஆதரிக்கிறது.


நீட் தேர்வு காரணமாக கடந்த 4 ஆண்டுகளில் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் நம்பிக்கையும் கனவுகளும் தகர்ந்துள்ளது.


நீட் ஒரு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழுவினர்  அறிக்கையிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு(Duty Exemption to Differently Abled Teachers) அளிக்க கோரும் விண்ணப்ப (Application) மாதிரி...



அனுப்புனர்;


______________ஆசிரியர், 

__________________.பள்ளி,

____________

____________மாவட்டம்.


பெறுநர்;

முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள்,

 முதன்மைக் கல்வி அலுவலகம் ,

_____________மாவட்டம்.


வழி:

 தலைமை ஆசிரியர்,

_________________.பள்ளி,

 _________________.


பொருள்:

        மாற்றுத்திறனாளிகள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க  கோருதல் சார்பு..


ஐயா/அம்மா,

        நான் ______________ ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். மாற்றுத்திறனாளியான எனக்கு, பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண் 004010/ஜெ1/2020, நாள் 26/7/21 இன் படி, மேற்குறிப்பிட்டுள்ளவாறு 02/08/2021 இருந்து பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

                  நன்றி

                                                 இப்படிக்கு,

                                     தங்கள் உண்மையுள்ள

                                          _____________________


இணைப்பு:

1) மாற்றுத்திறன் அடையாள அட்டை நகல்.


தேதி:     /08/2021

இடம்:

தினமும் பள்ளிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் (Exemption from Duty - Teachers list)- ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்(CEO Proceedings) ந.க.எண்:2345/இ4/2020, நாள்: 04-08-2021...



 >>> தினமும் பள்ளிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் - ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்:2345/இ4/2020, நாள்: 04-08-2021...



மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வருவதில் இருந்து விலக்கு பெற Mail அனுப்பினால் போதும் - CEO...



மாற்றுத்திறன் ஆசிரியர்கள் தினசரி பள்ளிக்கு வருவதில் இருந்து, விலக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், முதன்மை கல்வி அலுவலகத்திற்கு நேரில் சென்று ஒப்புதல் ஆணை பெற வேண்டுமென, சில அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள், கறாராக தெரிவிப்பதாக, புகார் எழுந்துள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கடந்த 2ஆம் தேதியில் இருந்து, தினசரி பள்ளிக்கு வருகைப்புரிய வேண்டுமென, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்று சிகிச்சையில் இருப்பவர்கள், இதய நோயாளிகள், புற்றுநோய் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் மட்டும், பள்ளிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே(CEO), விலக்கு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நடைமுறையில், சில தலைமையாசிரியர்கள் கடுமையாக நடந்து கொள்வதால், மாற்றுத்திறன் ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 

மாவட்ட உடல் ஊனமுற்றோர் நலவாரிய ஆலோசனை குழு உறுப்பினர் சீனிவாசன் கூறுகையில், 

''கோவை மாவட்டத்தில், 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் ஆசிரியர்கள், அரசுப்பள்ளிகளில் பணிபுரிகின்றனர். பள்ளிக்கு தினசரி வருவதில் இருந்து விலக்கு பெற, முதன்மை கல்வி அலுவலர் ஒப்புதல் பெற வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. நேரடியாக சென்று, சி.இ.ஓ., விடம் விலக்கு ஆணை பெற வேண்டும். அதே வேளையில், பள்ளி நேரத்தில், கல்வி அலுவலகத்திற்கு செல்ல, அனுமதிக்க முடியாது என சில தலைமை ஆசிரியர்கள் கடுமையாக நடந்து கொள்கின்றனர். விடுப்பு எடுத்து சென்றாலும், முதன்மை கல்வி அலுவலரை நேரடியாக பார்க்க முடியாமல், தகவல் பெட்டியில் தான், அனுமதி கடிதத்தை போட வேண்டிய நிலை உள்ளது. அந்தந்த பள்ளியிலே ஆவணங்கள் சமர்ப்பித்தால் போதுமென, முதன்மை கல்வி அலுவலர்  உத்தரவிட்டால், வீண் அலைச்சலை தவிர்க்கலாம்,'' என்றார்.

முதன்மை கல்வி அலுவலர்  ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, '' பள்ளிக்கு தினசரி வருவதில் இருந்து, விலக்கு பெற தகுதி உள்ளவர்களின் ஆவணங்களை, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், இ-மெயில் மூலம் அனுப்பினால் போதும். யாரையும் கல்வி அலுவலகங்களுக்கு, அலைக்கழிக்க கூடாதென, தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்துள்ளேன்,'' என்றார்.


பள்ளியில் என்ன வேலை?

தற்போது பள்ளிகளுக்கு வருகை தரும் ஆசிரியர்கள், கல்வி தொலைக்காட்சிக்கு வீடியோ தயாரிப்பது, இதில் ஒளிபரப்பாகும் பாடங்களுக்கு ஏற்ப, அசைன்மென்ட் வழங்கி, மதிப்பீடு செய்வது, அதை அறிக்கை வடிவில் தயாரிப்பது, நலத்திட்ட பொருட்கள் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளிக்கு வருகை புரிவதில் இருந்து விலக்கு (Exemption) அளிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள்...

 



தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சிகள் மூலமாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் 02.08.2021 முதல் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என பள்ளிக் கல்வி ஆணையர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 


ஆனால்  மாற்றுத்திறன் ஆசிரியர்கள் புற்றுநோய் மற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆசிரியர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்ட உரிய ஆவணங்களை மாவட்ட முதன்மை அலுவலரிடம் சமர்ப்பித்தால் நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.


>>> தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களும் 02.08.2021 முதல் பள்ளிக்கு வரவேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு...




மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் 20.06.2021 வரை அலுவலகம் வருவதிலிருந்து முழுமையாக விலக்களி்த்து அரசாணை வெளியீடு...

 


மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் 20.06.2021 வரை அலுவலகம் வருவதிலிருந்து முழுமையாக விலக்களி்த்து அரசாணை எண்: 88, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நாள்: 16-06-2021 வெளியீடு...


>>> அரசாணை எண்: 88, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நாள்: 16-06-2021...



மாற்றுத்திறனாளி பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழு விலக்கு அளிப்பதை 06-06-2021 வரை கால நீட்டிப்பு செய்து அரசாணை வெளியீடு...



 மாற்றுத்திறனாளி பணியாளர்கள்  அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழு விலக்கு அளிப்பதை 06-06-2021 வரை கால நீட்டிப்பு செய்து அரசாணை (வாலாயம்) எண்: 84, நாள்: 31-05-2021 வெளியீடு...


>>> அரசாணை (வாலாயம்) எண்: 84, நாள்: 31-05-2021...



ஓய்வூதியர்கள் தங்கள் வாழ்நாள் சான்றை (Life Certificate) சமர்ப்பிக்க (For the Year 2021) விலக்களித்து அரசாணை வெளியீடு...



 ஓய்வூதியர்கள் தங்கள் வாழ்நாள் சான்றை (Life Certificate) சமர்ப்பிக்க (For the Year 2021) விலக்களித்து அரசாணை வெளியீடு...


G.O.Ms.No.134, Dated 26thMay 2021.


PENSION/FAMILY PENSION – Furnishing of Life Certificate, Non-employment Certificate and Non-remarriage/Non-marriage Certificate by the Pensioners/Family Pensioners including Digital Life Certificate thro’ Jeevan Pramaan Portal – Exemption from Annual Mustering Process for the year 2021 as a special case due to Covid-19 - Orders – Issued...


>>> Click here to Download G.O.Ms.No.134, Dated: 26-05-2021...



மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் 06.05.2021 முதல் 20.05.2021 வரையிலான காலத்தில் அலுவலகம் வருவதற்கு முழுமையாக விலக்களித்து அரசாணை வெளியீடு...


G.O.01, Dated: 05-05-2021 - Differently Abled Employees Duty Exemption...


 மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் 06.05.2021 முதல் 20.05.2021 வரையிலான காலத்தில் அலுவலகம் வருவதற்கு முழுமையாக விலக்களித்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அரசாணை (நிலை) எண்: 01, நாள்: 05-05-2021 வெளியீடு...


>>> அரசாணை (நிலை) எண்: 01, நாள்: 05-05-2021...


மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 2021 தேர்தலில் பணிபுரிவதில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கடிதம் ஓ.மு.7588/ 2020/பு.பி. நாள்: 11-01-2021...

 


மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 2021 தேர்தலில் பணிபுரிவதில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கடிதம் ஓ.மு.7588/ 2020/பு.பி. நாள்: 11-01-2021... & Tamilnadu Chief Electoral Officer Email/ Letter No./ 7000/ 2020-11, Dated: 25-01-2021...


>>> தேர்தல் ஆணையத்தின் கடிதம் ஓ.மு.7588/ 2020/பு.பி. நாள்: 11-01-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


>>> Click here to Download Tamilnadu Chief Electoral Officer Email/ Letter No./ 7000/ 2020-11, Dated: 25-01-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Why does heel pain occur?

குதிகால் வலி ஏற்படுவது ஏன்? - கு.கணேசன், மருத்துவர் Why does heel pain occur? தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்குக் குதிகால் வலியால் சி...