கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்வி கட்டணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி கட்டணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விதிகளை மீறி ரூ.100 கோடி கல்வி கட்டணம் வசூல் - மத்திய பிரதேச மாநிலத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 11 தனியார் பள்ளிகள் மீது வழக்கு பதிவு...

 


விதிகளை மீறி ரூ.100 கோடி கல்வி கட்டணம் வசூல் - மத்திய பிரதேச மாநிலத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 11 தனியார் பள்ளிகள் மீது வழக்கு பதிவு...



சட்டவிரோதமாக பள்ளிக் கட்டணம் அதிகரிப்பு: ம.பி.யில் 11 வழக்குகள் பதிவு; 20 போ் கைது


ஜபல்பூா்: மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பள்ளிக் கட்டணம் மற்றும் பாடநூல்களின் விலையை உயா்த்தியதாக பள்ளி நிா்வாகிகள், கடை உரிமையாளா்கள் மீது 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 20 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.


இதுகுறித்து ஜபல்பூா் மாவட்ட ஆட்சியா் தீபக் சக்ஸேனா, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஆதித்ய பிரதாப் சிங் ஆகியோா் கூறுகையில், ‘மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி பெறாமல் சில பள்ளிகள் 10 சதவீதத்துக்கு மேல் பள்ளிக் கட்டணத்தை உயா்த்தின. சில பள்ளிகள் மாநில அரசால் அமைக்கப்பட்ட குழுவை அணுகாமல் 15 சதவீதத்துக்கு மேல் பள்ளிக் கட்டணத்தை அதிகரித்தன.


மொத்தம் 11 பள்ளிகள் விதிமுறைகளைப் பின்பற்றாமல் சட்டவிரோதமாக ரூ.81.3 கோடி கட்டணம் வசூலித்தன. இதையடுத்து அந்தப் பள்ளிகளுக்கு ரூ.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல பாடநூல்களின் விலையும் சட்டவிரோதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பள்ளி நிா்வாகிகள், கடை உரிமையாளா்கள் மீது 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 20 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்’ என்று தெரிவித்தனா்.



போபால்: மத்திய பிரதேசம் ஜபல்பூரில் உள்ள 11 தனியார் பள்ளிகள் ரூ.100 கோடி வரை கூடுதல் கல்விக்கட்டணம் வசூலித்தது தெரியவந்துள்ளது.




இந்த தனியார் பள்ளிகளுக்கு தலா ரூ.2 லட்சம் அபராதம் விதித்து ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் தீபக்சக்சேனா உத்தரவிட்டார். கட்டண விதிகளை மீறி வசூலித்த தொகையை பெற்றோரிடம் 30நாட்களுக்குள் திருப்பி செலுத்தும்படியும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கட்டளையிட்டார்.


இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட பள்ளிகளின் வாரிய உறுப்பினர்கள், பள்ளி முதல்வர்கள், நிர்வாகிகள் என 51 நபர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். அவர்களில் 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஜபல்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு உட்பட்ட ஒன்பது காவல் நிலையங்களில் இந்த 11 தனியார் பள்ளிகள் மீது 11 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.



இதுகுறித்து ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் தீபக் சக்சேனா செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய பிரதேசத்தில் பள்ளிகள் மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவேமுதல்முறையாகும். கல்விக்கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி முறைகேடாக அதனை வசூலித்து இந்த பள்ளிகள் ரூ.100 கோடி வரை ஊழலில் ஈடுபட்டுள்ளன.


கடந்த ஏப்ரல் 1-ம் தேதி இதுதொடர்பான விசாரணை தொடங்கியது. முதல் கட்டமாக சோதனைநடத்தப்பட்ட 11 தனியார் பள்ளிகளும் பள்ளிகள் கட்டண ஒழுங்குமுறை சட்டத்தை மீறி செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. பள்ளிகள் கல்விக் கட்டணத்தை 10 சதவீதத்துக்கும் மேல் அதிகரிக்க நினைத்தால் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயம். அதுவே 15 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க முயன்றால் மாநில அளவிலான கமிட்டியின் ஒப்புதல் அவசியம். ஆனால் இதுபோன்ற எத்தகைய விதிகளையும் சம்மந்தப்பட்ட பள்ளிகள் பின்பற்றவில்லை. ரூ.81.3 கோடி முறைகேடாக இந்த பள்ளிகள் வசூலித்திருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.


பாடநூல் முறைகேடு: இதுபோக போலி மற்றும் நகல் எடுக்கப்பட்ட ஐஎஸ்பிஎன் எண் கொண்ட நூல்கள் பள்ளிபாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. முன்னறிவிப்பின்றி பாடத்திட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் பெற்றோருக்கு கடைசி நேரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புத்தக சந்தையில் புதிய பாடத்திட்டத்தில் குறிப்பிட்ட நூல்கள் கிடைக்காத சூழல் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது. பின்னர் பள்ளிகளுடன் தொடர்பில் இருக்கக்கூடிய கடைகளில் மட்டும் குறிப்பிட்ட நூல்கள் அதிகபட்சசில்லறை விலையைக் காட்டிலும் 2மடங்கு விலையில் விற்கப்பட் டுள்ளன. இத்தகைய புத்தக ஊழல் திட்டத்தின் மூலம் இந்த 11 பள்ளிகள் பெற்றோரிடமிருந்து ரூ.4 கோடி கூடுதலாக வசூலித்துள்ளன. இதுதவிர பள்ளி நிர்வாக கணக்கு வழக்கிலும் பொய் கணக்கு காட்டி நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வந்திருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.



நன்றி : தினமணி & இந்து தமிழ் திசை 

கல்விக் கட்டண நிர்ணயம்(School Fees Fixation) - பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம்...



 கல்விக் கட்டணம் தொடர்பாக, தனியார் பள்ளிகள் விண்ணப்பங்களை அனுப்ப, கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் சுயநிதியில் செயல்படும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க, சுயநிதி பள்ளிகள் கல்விக் கட்டண கமிட்டி செயல்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், கல்விக் கட்டணம் தொடர்பாக விண்ணப்பங்களை அனுப்புவதற்கான அவகாசம் ஏற்கனவே முடிந்து விட்டது.


இந்நிலையில், தனியார் பள்ளிகள் தரப்பில் எழுந்த கோரிக்கையை தொடர்ந்து, வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி, கல்விக் கட்டண கமிட்டி தனி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.


கூடுதல் கல்விக் கட்டணம்: முதன்மைக்கல்வி அலுவலர் எச்சரிக்கை...



 கூடுதல் கல்விக்கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை முதன்மைக்கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இது குறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில், “மதுரை வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை தனியார் மெட்ரிகுலேசன் / நர்சரி & பிரைமரி / பிறவாரிய (CBSE / ICSE / IGCSE) பள்ளிகளில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் ஆகஸ்ட் 31 2021 முடிய 40% கல்விக் கட்டணமும், மீதம் 35% கட்டணத்தை மேற்படி கல்வியாண்டிற்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்ட இரண்டு மாத காலங்களில் வசூல் செய்ய வேண்டும்.”


“2021–2022ஆம் கல்வியாண்டுக்கு மொத்தம் 75% கல்விக்கட்டணம் மட்டுமே வசூல் செய்யவேண்டும். கூடுதல் கல்விக்கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கூடுதல் கல்விக்கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது தகுந்த ஆதாரத்துடன் மாணவர்களின் பெற்றோர்கள் மின்னஞ்சல் (feesgrievancecellmdu@gmail.com) வழியாக புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்றுக்கு பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக் விரைவில் திறக்கப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: நியூஸ்7


75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும், மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது” - தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை...

 அரசின் உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்; 75% கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும், கட்டணம் செலுத்தாத மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது” - தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...