கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேர்வு ரத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்வு ரத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதில் உறுதி – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்...



 தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதில் திட்டவட்டமாக உள்ளோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


நீட் தேர்வு ரத்து:

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. ஆனால் தற்போது வரை நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை, நடைமுறையில் தான் உள்ளது. சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் திமுக நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்தது. அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். சமீபத்தில் டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து நீட் தேர்வை ரத்து செய்ய கோரிக்கை வைத்தார்.

மேலும் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு மக்களிடையே நீட் தேர்வு பற்றிய கருத்துக்களை கேட்டறிந்தது. இந்த நீட் தேர்வால் மாணவர்களின் மருத்துவர் கனவு கேள்விக்குறியாக உள்ளது என பலரும் தெரிவித்து உள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.


மேலும் நீட் தேர்வால் மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பெரும் சவாலாக உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்து 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை நடத்தப்படும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதில் நாங்கள் திட்டவட்டமாக உள்ளோம் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


கொரோனா சூழலில் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து - பிரதமர் மோடி...

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு...


கொரோனா சூழலில் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து - பிரதமர் மோடி...


CBSE Class XII Board Exams cancelled. Class XII results will be made as per a well-defined objective criteria in a time-bound manner. Decision on Class 12 CBSE Exams has been taken in the interest of students: PM Narendra Modi...












9,10,11 மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என ஊடகங்களில் வெளியாகிய செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு...

 9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு பொதுதேர்வு மற்றும் முழுஆண்டு தேர்வு இன்றி அனைவரும் தேர்ச்சி என தமிழக முதல்வர் அறிவித்தார் 


இந்நிலையில் 9,10,11 மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என ஊடகங்களில் வெளியாகிய நிலையில் .இந்த செய்திக்கு பள்ளி  கல்வி துறை மறுப்பு தெரிவித்துள்ளது.


எனவே 9,10,11 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு தொடர்ந்து பள்ளிவரவேண்டும் கால அட்டவணை படி வகுப்புகள் நடைபெறும் என பள்ளி கல்வி துறை விளக்கம் தெரிவித்துள்ளது . மேலும் தேர்வு மட்டுமே ரத்து செய்யபட்டுள்ளது. மாண்வர்களுக்கான மதிப்பெண் வழங்கும் வழிகாட்டுதல் நெறிமுறை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...