கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மக்களவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மக்களவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மக்களவைத் தேர்தலுக்கான புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் - இறுதி செய்தல் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் கடிதங்கள்...


 தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் - வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய வேண்டும் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்...



 மக்களவைத் தேர்தலுக்கான புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் - இறுதி செய்தல் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் கடிதங்கள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 - நடைபெறும் தேதிகள் அறிவிப்பு...



 பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 - தேதிகள் அறிவிப்பு...



>>> Click Here to Download Parliamentary Lok Sabha Election 2024 Schedule...



Parliamentary Lok Sabha Election 2024 - Dates Annouced...


ஏழு கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு.



மக்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு..


💥தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது...


💥ஜூன் 4 வாக்கு எண்ணிக்கை


டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ்.சாந்து கூட்டாக செய்தியாளர் சந்திப்பு


உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது...


மக்களவைத் தேர்தலில் 98.6 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 


நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.


1.5 கோடி அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர் - ராஜீவ் குமார், தலைமை தேர்தல் ஆணையர்


ஆண் வாக்காளர்கள் - 49.7 கோடி, 

பெண் வாக்காளர்கள் - 47.1 கோடி, 

மூன்றாம் பாலினம் - 48,044 பேர் உள்ளனர்.


கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை விட தற்போதைய தேர்தலில் வாக்காளர்கள் 6% அதிகம் - தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.


தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ல் நாடாளுமன்ற தேர்தல்:



வேட்பு மனுத்தாக்கல் துவக்கம்: மார்ச் 20


வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள்: மார்ச் 27


வேட்பு மனுபரிசீலனை: மார்ச் 28


திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 30


வாக்குப்பதிவு: ஏப்ரல் 19


வாக்கு எண்ணிக்கை: ஜூன் 4



*நாடாளுமன்றத் தேர்தல் தேதி விவரங்களை தலைமை தேர்தல் ஆணையர் திரு. ராஜீவ் குமார் வெளியிட்டார்.*

*இரண்டு தேர்தல் ஆணையர்களும் உடன் இருக்கின்றனர்.*

*தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பை தொடங்கிய உடனே தேர்தல் ஆணைய விதிகள் நடைமுறை வந்துவிட்டது.*

*மக்களவைத் தேர்தல் மற்றும் 4 மாநில சட்டமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது.*

*2024 மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும்.*

*தமிழ்நாட்டின் விளவங்கோடு உள்ளிட்ட   13 மாநிலங்களில் உள்ள 26 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.*

*முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டிற்கு தேர்தல்.*

*தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது.*

*வாக்கு எண்ணிக்கை ஜூன் 4  செவ்வாய்க்கிழமை*

*2100 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்.*

*2024 தேர்தலில் 96.88 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.*

*ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி.*
*பெண் வாக்காளர்கள் 47.1 கோடி.*

*1.82 புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.*

*புதிய வாக்காளர்களில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம்.*

*ஏப்ரல் 1ஆம் தேதி 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள்.*

*2.10 கோடி வாக்காளர்கள் 100 வயதை கடந்தவர்கள்.*

*85 வயதை கடந்தவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.*

*1.50 கோடி ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள உள்ளனர்.*

*10.50 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.*

*82 லட்சம் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உள்ளனர்.*

*55 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.*

*800 மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசிக்கப்பட்டு தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது.*

*தேர்தல் முறைகேடுகள் குறித்து சி.விஜில் செயல் மூலம் புகார் அளித்தால் 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.*

*KYC APP மூலம் வாக்காளர்கள் தங்கள் முழு விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.*

*1)பண பலம் .*
*2)ஆள்பலம்,*
*3)வதந்திகள்,*
*4)விதிமீறல்கள்*
.*இந்த நான்கும் தேர்தல் ஆணையம் முன் உள்ள நான்கு சவால்கள்.*

*எல்லைப் பகுதிகள் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும்.*
*போதிய பாதுகாப்பு படை போலீசார் பணியில் இருப்பர்.*

*வங்கிகள் சூரிய அஸ்தமனத்திற்கு பின் பணம் எடுத்துச் செல்லக்கூடாது.*

*டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ED& IT  கண்காணிக்கும்.*

*வாக்குக்கு பணம்,பொருள், மது வழங்குதல்  தீவிரமாக கண்காணிக்கப்படும்*
*சமூக விரோதிகளுக்கு. எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.*

*தேர்தல் பரப்புரையில் சிறார்கள் ஈடுபடுத்தக் கூடாது.*

*சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யலாம் போலீஸ் செய்திகளை பரப்ப கூடாது.*

*நட்சத்திர பேச்சாளர்கள் கண்ணியம் காக்க வேண்டும்.*

*சாதி ரீதியாகவோ, மத ரீதியாகவோ தனிப்பட்ட முறையில் விமர்சித்தோ பரப்புரையில் ஈடுபடக்கூடாது.*

*மதுபான ஆலைகளில் உற்பத்தி அளவு, விற்பனை அளவு,  கண்காணிக்கப்படும்.*

*17 ஆவது மக்களவைத் தேர்தல் ஆயுட்காலம்  வரும் ஜூன் 16ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.*


மக்களவை தேர்தல் நடைபெறும் நாள் குறித்த செய்திகள் போலியானது - தேர்தல் ஆணையம்...

 மக்களவை தேர்தல் நடைபெறும் நாள் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் போலியானது.


தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பின் மூலம் வெளியிடும்.


- இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு...



பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் கருத்துரு எதுவும் பரிசீலனையில் இல்லை - இந்திய நிதித்துறை அமைச்சகம் (To Implement Old Pension Scheme, there is no Proposal under consideration of Government of India - Ministry of Finance) Answer to Lok Sabha Unstarred Question No.2009 on 14-03-2022...



>>> பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் கருத்துரு எதுவும் பரிசீலனையில் இல்லை - இந்திய நிதித்துறை அமைச்சகம் (To Implement Old Pension Scheme, there is no Proposal under consideration of Government of India - Ministry of Finance) Answer to Lok Sabha Unstarred Question No.2009 on 14-03-2022...



2003 ஆம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான NDA அரசாங்கம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) ரத்து செய்து, ஏப்ரல் 1, 2004 முதல் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) அறிமுகப்படுத்தியது. 


காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் எடுத்த முடிவுகளின் படி, அரசு ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (என்பிஎஸ்) ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்புவதற்கான நோக்கத்தை திங்களன்று மத்திய அரசு மறுத்துள்ளது.


பட்ஜெட் கூட்டத்தொடரில், இரண்டாம் கட்டத்தின் முதல் நாளில்,  சத்தீஸ்கரின் பஸ்தாரின் காங்கிரஸ் எம்.பி., என்.பி.எஸ்-ஐ ரத்து செய்து, மத்திய அரசின் அனைத்து அதிகாரிகளையும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (ஓ.பி.எஸ்.) கீழ் திரும்பப் பெறுவதற்கு ஏதேனும் எண்ணம் உள்ளதா என்று அரசாங்கத்திடம் கேட்டார். கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர் பகவத் காரத் கூறுகையில், இந்திய அரசின் கீழ் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்தும் எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை என்றார். 


அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, அது ஆட்சியில் இருந்து வெளியேறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை 2003-ல் ரத்து செய்துவிட்டு, தற்போதுள்ள தேசிய ஓய்வூதிய திட்டத்தை ஏப்ரல் 1, 2004 அன்று அறிமுகப்படுத்தியது.  மத்திய அரசின் ஓய்வூதியப் பொறுப்புகளிலிருந்து விடுபடுவதற்காக தேசிய ஓய்வூதியத் திட்டம் தொடங்கப்பட்டது. பயனாளிகள் அதாவது அரசு ஊழியர்கள் தங்கள் பணத்தை எங்கு முதலீடு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய இது அனுமதிக்கிறது. அவர்களின் பணிக்காலம் முழுவதும் ஓய்வூதியக் கணக்கில் தவறாமல் பங்களிப்பதன் மூலம் இதைச் செய்யலாம். ஓய்வு பெற்ற பிறகு, அவர்கள் ஓய்வூதியத் தொகையில் ஒரு பகுதியை திரும்பப் பெறலாம். 


இதற்கு மாறாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு மற்றும் பணியாளர்கள் ஓய்வூதிய நிதிக்கு சமமான பங்களிப்பை வழங்கினர். விதிகளின்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஒரு அரசு ஊழியரின் ஓய்வூதியத் தொகையாகக் கடைசியாக கொடுக்கப்பட்ட சம்பளத்தில் 50 சதவீதம் அடங்கும். தற்போது, ​​ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள், அடுத்த நிதியாண்டு முதல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை புதுப்பிக்க முடிவு செய்துள்ளன. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ராகுல் காந்தியிடம், கேரளா, ஆந்திரா மற்றும் பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநில அரசுகள் கூட ஓபிஎஸ் குழுவை அமைத்துள்ளதாகக் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரபிரதேச தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றால், பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உறுதியளித்திருந்தார்.


நன்றி: Hindustan Times


The NDA government under Atal Bihari Vajpayee in 2003 had scrapped the Old Pension Scheme (OPS) and introduced the National Pension Scheme (NPS) from April 1, 2004.


The Centre on Monday denied intentions of scrapping the existing National Pension Scheme (NPS) for the government employees and reverting to the old pension scheme, along the lines of decisions taken by Congress-ruled Rajasthan and Chhattisgarh.On the first day of the second leg of the budget session, Congress MP from Chhattisgarh's Bastar asked the government whether it had any intentions of scrapping the NPS and revert all the officials of central government under the Old Pension Scheme (OPS).Replying to the question, union minister of state for finance Dr Bhagwat Karad said there was no proposal under consideration under the government of India.It was the NDA government under Atal Bihari Vajpayee that had scrapped the old pension scheme in 2003 and had introduced the existing national pension scheme on April 1, 2004, just a month before it was voted out of power.


The National Pension Scheme was initiated for the central government to get rid of pension liabilities. It allows the beneficiaries i.e government employees to decide where they want to invest their money. This can be done by contributing regularly in a pension account throughout their career. After retirement, they can withdraw a part of the pension amount.


Contrary to this, the old pension scheme had government and employees contribute an equal portion towards the pension fund. As per rules, the old pension scheme involved 50 per cent of the last drawn salary as the pension amount to a government employee.


At present, Rajasthan and Chhattisgarh have announced the decision to revive the old pension scheme from the next financial year. According to reports, Rajasthan chief minister Ashok Gehlot told Rahul Gandhi that the state governments of Kerala, Andhra Pradesh and even BJP-ruled Assam had formed committees on the OPS.


Samajwadi Party president Akhilesh Yadav had promised to bring back old pension scheme had his alliance won the Uttar Pradesh polls.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Centennial Schools - District wise

  நூற்றாண்டு பள்ளிகளின் பட்டியல் - மாவட்ட வாரியாக  List of Centennial Schools - District wise  >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவு...