கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணி நிரவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பணி நிரவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவலுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்



இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவலுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்


Stay on the Surplus Counseling of Secondary Grade Teachers – Madras High Court


ஒரு ஒன்றியத்தில் காலிப் பணியிடங்கள் அதிகமாக இருக்கும் போது கட்டாயப்படுத்தி பணிநிரவல் செய்யக்கூடாது என தொடுக்கப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 


விசாரணையில் அரசு தரப்பில் கலந்தாய்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதனை தடை செய்ய முடியாது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.


வழக்கு தொடுத்தவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் திரு ஜி.சங்கரன் மாநிலங்கள் முழுவதும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளது, அதனால் கட்டாயப்படுத்தி பணிநிரவல் செய்ய கூடாது என வாதிட்டத்தின் அடிப்படையில், கலந்தாய்வு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இதில் ஆசிரியர்கள் இடங்களை தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கு பணி நிரவல் ஆணை வழங்கக்கூடாது.


செப்டம்பர் மாதம் மீண்டும் 01.08.2026 மாணவர்கள் சேர்க்கையின் அடிப்படையில் மீண்டும் சரிபார்க்கப்பட்டு, தற்போது நடைபெறும் சிறப்பு தகுதி தேர்வு முடிந்த பின்னர் பதவி உயர்வு வழங்கி, அதன் பின் பணி நிரவல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல் மற்றும் இடைக்காலத்தடை பிறப்பித்துள்ளது.


DEE - Surplus Counselling 2026-2027



தொடக்கக்கல்வி இயக்ககம் - பணி நிரவல் கலந்தாய்வு 2026-2027 - வழிகாட்டு நெறிமுறைகள்


DEE - Surplus Counselling 2026-2027 


DEE - Revised Deployment Guidelines


தொடக்கக் கல்வி இயக்ககம் - பணி நிரவல் கலந்தாய்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Aided School Deployment - DEE Proceedings

 


உபரி ஆசிரியர்களைப் பணி நிரவல் செய்தல் / மாற்றுப்பணி வழங்குதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 


அரசு உதவி பெறும் பள்ளிகள் பணியாளர் நிர்ணயம் செய்தல் - DEE Proceedings 


Aided School Deployment - DEE Proceedings 


Deployment and Deputation Teachers details



அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் படிவங்கள்



>>> செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> படிவங்கள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



OnePlus Nord Buds 3r TWS Earbuds up to 54 Hours Playback, 2-mic Clear Calls, 3D Spatial Audio, AI Translation, 12.4mm Drivers, Dual-Device Connectivity, 47ms Low Latency - Aura Blue


https://amzn.to/4rQFMdh




பணி நிரவல் கலந்தாய்விற்கு பின் இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட வேண்டிய ஆசிரியர் பணியிடங்கள்



2024 - 2025 ஆம் கல்வியாண்டில் பணி நிரவல் மாறுதல் கலந்தாய்விற்கு பின் தொடக்க கல்வி இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட வேண்டிய ஆசிரியர் இன்றி உபரி காலிப் பணியிடம் (Surplus post without Teacher - இடைநிலை ஆசிரியர்) உள்ள பள்ளியின் பெயர் , ஒன்றியம், மாவட்டம் மற்றும் பணியிடம் அனுமதிக்கப்பட்ட அரசாணை எண் மற்றும் நாள் 



Name of the Schools, Union, District and Posts, G.O. & Date in the Surplus Post without Teacher - Surplus Post without Teacher - Secondary Grade Teacher 




Name of the school, union, district and Government Order number and date of sanction of the post, where there is a surplus vacancy without a teacher to be handed over to the general collection of the Director of Elementary Education after the surplus transfer counselling.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பணி நிரவல் செய்யப்படும் முறை - RTI தகவல்


பணி நிரவல் செய்யப்படும் முறை - தகவல் அறியும் உரிமை சட்ட RTI பதில் 


பணி நிரவல் கலந்தாய்வில் (surplus) கலந்து கொள்ள, பள்ளியில் பணிபுரியும் மூத்த (senior most) ஆசிரியரின் பெயர் இடம் பெற வேண்டுமா? அல்லது இளையவரின் (Junior most) பெயர் இடம் பெற வேண்டுமா? - RTI Reply 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




உபரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வில் முன்னுரிமை (Priority)

 


Teachers Surplus Deployment Counselling Priority


உபரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வில் முன்னுரிமை (Priority)


1. மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்.

2. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், டையாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்பவர்கள்,

இதய அறுவை சிகிச்சை அறுவை சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோயாளிகள்.

3. இராணுவத்தில் பணிபுரிவர்களின் மனைவியர்.

4. விதவைகள் / மனைவியை இழந்தவர்கள் மற்றும் 40 வயதை கடந்த திருமணம் செய்து கொள்ளாத பெண் பணியாளர்கள் மற்றும் சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண் ஆசிரியை.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பணி நிரவல் கலந்தாய்வு - CEO Proceedings


பணி நிரவல் கலந்தாய்வு - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு - தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


//மின்னஞ்சல் வழியாக//
தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறை ஆணை

திருவள்ளுவராண்டு 2056/விசுவாவசு வருடம்/ஆனி -19

ந.க.எண்.4812/ஆ4/2024 , நாள் .03.07.2025


பொருள் : தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி - அரசு மற்றும் நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் 01.08.2024 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயன் செய்து ஆசிரியருடன் உபரி பட்டியல்-கலந்தாய்வில் கலந்து கொள்ள அறிவுறுத்துதல் - தொடர்பாக.

பார்வை : 

1. அரசாணை எண்.525 பள்ளிக்கல்வித்துறை, நாள் : 29.12.1997.


2. அரசாணை எண்.46 பள்ளிக்கல்வித்துறை நாள்.14.05.2004.


3. அரசாணை எண்.231 பள்ளிக்கல்வித்துறை நாள்.11.08.2010.


4. அரசாணை எண்.180 பள்ளிக்கல்வித்துறை நாள்.17.07.2012.


5. அரசாணை எண்.217 பள்ளிக்கல்வித்துறை நாள்.20.06.2019.


6. அரசாணை எண்.176 பள்ளிக்கல்வித்துறை நாள்.17.12.2021.


7. அரசாணை எண்.12 பள்ளிக்கல்வித்துறை நாள்.03.02.2022,


8. அரசுக் கடித எண் .3835/1.5.5 (1) 12024-1., நாள் 29.04.2024.


9. சென்னை-06, பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்.048350/சி3/இ1/2024, நாள் : 05.08.2024.


10. சென்னை-06, பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்.037584/சி3/இ1/2025, நாள் : 26.06.2025.


=========


தருமபுரி மாவட்டத்தில் அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் 2024-2025 ஆம் கல்வியாண்டின் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுவதற்கு பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் பெறப்பட்டு 01.08.2024 நிலவரப்படி பார்வை(1) முதல் பார்வை(7) வரை உள்ள அரசாணைகள் மற்றும் பார்வை(9)-இல் காணும் செயல்முறைகளை பின்பற்றி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.
01.08.2024 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டதில்
ஆசிரியருடன் உபரி என கண்டறியப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு நடத்துவது சார்ந்து பார்வை(10)-இல் காணும் 26.06.2025 நாளிட்ட செயல்முறை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் சம்மந்தப்பட்ட உபரி ஆசிரியர்களின் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பணி நிரவல் குறித்த தொடக்கக் கல்வி இயக்குநரகச் செய்தி


பணி நிரவல் குறித்த தொடக்கக் கல்வி இயக்குனரகச் செய்தி (வாட்ஸ் அப் தகவல்)


இன்று மற்றும் நாளை (03 & 04/07 / 2025/ இடைநிலை ஆசிரியர்க்கான பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற உள்ளது, பணி நிரவல் கலந்தாய்வில் பணி நிரவலுக்குட்பட்ட ஆசிரியர்களை விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி  ஆணை பெறுமாறு வற்புறுத்தக்கூடாது. அது போல் வற்புறுத்தி பணிநிரவல் ஆணை ஏதேனும் வழங்கப்பட்டதாக புகார் பெறப்படின் சார்ந்த DEO மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக அறிவுறுத்தப்படுகிறது. நேற்றைய முன்தினம் மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக நடைபெற்ற இணையவழி கூட்டத்தில் இது சார்ந்து குறிப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டதை கவனத்தில் கொள்ளுமாறும் DEO's கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் declaration form எதுவும் பெற வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது.


தொடக்கக் கல்வி இயக்குனர்


Deployment of surplus teachers - DSE Proceedings


2024-2025ஆம் கல்வி ஆண்டு பணியாளர் நிர்ணயத்தின் படி அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் -  பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 050640/ டி1/ இ4/ 2024, நாள் : 06-05-2025 வெளியீடு


அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை மே மாதத்திற்குள் பணி நிரவல் செய்ய பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு


Deployment of surplus teachers in government aided schools as per the staff fixation for the academic year 2024-2025 - Instructions issued - Proceedings of the Director of School Education Rc. No.: 050640/ D1/ E4/ 2024, Dated: 06-05-2025 Released 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பணி நிரவல் அடிப்படையில் ஆணை வழங்கப்பட்ட ஆசிரியர்களை மாற்றுப்பணியில் இருந்து பணி விடுவிக்க கூடாது - மாவட்டக்கல்வி அலுவலர்


பணி நிரவல் அடிப்படையில் ஆணை வழங்கப்பட்ட ஆசிரியர்களை மாற்றுப்பணியில் இருந்து பணி விடுவிக்க கூடாது - மாவட்டக்கல்வி அலுவலர்


Teachers who have been given deputation orders on the basis of surplus should not be relieved from deputation work - District Education Officer


அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 01-08-2023 ன் படி உபரி ஆசிரியர்கள் என கண்டறியப்பட்டு பணி நிரவல் என்ற அடிப்படையில் மாற்றுப்பணி ஆணை வழங்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மாற்றுப்பணியில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதால் அவர்களை மாற்றுப்பணியில் இருந்து பணி விடுவிக்க கூடாது - திருவண்ணாமலை மாவட்டக்கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி ) செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் பணியிட மாறுதல் செய்தல் - பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண் : 146, நாள்: 28-06-2024 வெளியீடு...

 


G.O. Ms. No. 146, Dated: 28-06-2024 


அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் பணியிட மாறுதல் செய்தல் - பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண் : 146, நாள்: 28-06-2024 வெளியீடு...


அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் மாவட்டத்திற்கு உள்ளேயும் அதன் பின்னரும் உபரி ஆசிரியர் இருந்தால் மாவட்டத்திற்கு வெளியேயும் பணியிட மாறுதல் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு...



>>> அரசாணை (நிலை) எண் : 146, நாள்: 28-06-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பள்ளிக் கல்வி - அரசு உதவிபெறும் பள்ளிகள் - 2023-2024ஆம் கல்வி ஆண்டிற்கான பணியாளர் நிர்ணய அறிக்கையின்படி அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் உபரிப் பணியிடங்களில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.

இன்று (13-06-2024) நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வில் வழங்கப்பட்ட மாறுதல் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள்...



இன்று (13-06-2024) நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வில் வழங்கப்பட்ட மாறுதல் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள்...


The conditions mentioned in the transfer order issued today (13-06-2024) in the Secondary Grade Teachers Surplus Deployment Counseling...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



மேற்கண்ட விதிகளின் அடிப்படையில் இன்று  ஆசிரியர்களுக்கு பணி நிரவல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இன்று ஆணை பெற்ற ஆசிரியர்கள் G.O.Ms.No.: 176, Dated: 17-12-2021 இன் படி 3 ஆண்டுகளுக்கு பணி நிரவலுக்கு உட்படுத்தப்படமாட்டார்கள். பள்ளியில் உபரி ஏற்பட்டாலும் அவர்கள் மூன்றாண்டுகளுக்கு அதே பள்ளியில் பணிபுரிவார்கள்...


உபரி இடைநிலை ஆசிரியர்களை ஒன்றியத்திற்குள் ( Within Block ) பணிநிரவல் மாறுதல் செய்ய அறிவுரைகள் - இயக்குநரின் செயல்முறைகள்...


 12-06-2024 அன்று 7 மாவட்டங்களில் மலை சுழற்சி கலந்தாய்வு நடைபெறும்...


13-06-2024 அன்று அனைத்து மாவட்டங்களிலும் (சென்னை தவிர்த்து,) ஒன்றியத்திற்குள்  இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் நடைபெறும்...


Surplus Deployment Counseling Within Block - DEE Proceedings...


உபரி இடைநிலை ஆசிரியர்களை ஒன்றியத்திற்குள் ( Within Block ) பணிநிரவல் மாறுதல் செய்ய அறிவுரைகள் - இயக்குநரின் செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பணி நிரவல் & பொது மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக்கல்வி & தொடக்கக்கல்வித்துறை - உத்தேச கால அட்டவணைகள் அறிவிப்பு - DSE செயல்முறைகள்...


2024-2025ஆம் கல்வியாண்டிற்கான மாறுதல் கலந்தாய்வு (பதவி உயர்வு கலந்தாய்வு தற்போதைக்கு கிடையாது) அறிவிப்பு - DSE செயல்முறைகள்...


2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பணி நிரவல் & பொது மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக்கல்வி & தொடக்கக்கல்வித்துறை - உத்தேச கால அட்டவணைகள் அறிவிப்பு - DSE செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> தெளிவான கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - - Teachers General Transfer Counseling 2024 Schedule (தொடக்கக் கல்வி - Elementary Education) - அட்டவணை...


1. பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களைத் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (EMIS) வாயிலாகப் பதிவேற்றம் செய்தல் - 13.05.2024 06.00AM முதல் 17.05.2024 06.00PM வரை.


2. பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் கோரும் விண்ணப்பங்களின் முன்னுரிமைப் பட்டியல் (Seniority List)மற்றும் காலிப்பணியிட விவரங்கள் (Vacancy List) வெளியிடுதல் - 20.05.2024 10.00 AM திங்கள்


3. முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதும் இருப்பின் (Claims and objections)‌-2105.2024 05.00PM செவ்வாய்


4. மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு (Release off seniority list) Release of Vacancy List Final) - 23.05.2024 (வியாழன்)


5. மலைச் சுழற்சி மாறுதல் கலந்தாய்வு-24.05.2024 (வெள்ளி)


6. இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு - 28.05.2024 (செவ்வாய்)


7. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) - 31.05.2024 (வெள்ளி)


8. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)-01.06.2024(சனி) (முற்பகல்)


9. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) - 01.06.2024 (சனி)(பிற்பகல்)


10. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) - 03.06.2024 (திங்கள்)


11. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)- 06.06.2024 (வியாழன்)


12. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)-07.06.2024 வெள்ளி (முற்பகல்)


13. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)-07.06.2024 வெள்ளி (பிற்பகல்)


14. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)-08.06.2024 (சனி)


15. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)-10.06.2024 (திங்கள்)


16. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)-11.06.2024 (செவ்வாய்)(முற்பகல்)


17. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) - 11.06.2024 செவ்வாய் (பிற்பகல்)


18. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)-12.06.2024


19. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற் - 13.06.2024 (வியாழன்)


20. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)- 14.06.2024 (வெள்ளி)(முற்பகல்)


21. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்). - 15.06.2024.


தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியருடன் உபரியாக உள்ள 2236 இடைநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நிரவல் கலந்தாய்வு - 30-4-2024க்குள் கூடுதல் மாணவர்களை சேர்த்துவிட்டால் பணிநிரவலில் இருந்து தவிர்ப்பு வழங்கப்படும் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 020254/ இ1/ 2023, நாள்: 23-04-2024...


 தொடக்கக்கல்வி துறையில் ஆசிரியருடன் உபரியாக உள்ள 2236 இடைநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நிரவல் கலந்தாய்வு - Surplus Teacher with Post...


30-4-2024க்குள் கூடுதல் மாணவர்களை சேர்த்துவிட்டால் பணிநிரவலில் இருந்து தவிர்ப்பு வழங்கப்படும் - தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்...



>>> தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 020254/ இ1/ 2023, நாள்: 23-04-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

களஞ்சியம் செயலியில், தங்களது மின்னணு பணிப்பதிவேடு ESR ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Kalanjiyam News * களஞ்சியம் செயலியில், தங்களது மின்னணு பணிப்பதிவேடு ESR ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.