கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ரமேஷ் பொக்ரியால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரமேஷ் பொக்ரியால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியோருக்கு அரசின் புதிய திட்டம்...



 பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியோரின் விபரங்களை சேகரித்து, அவர்கள் மீண்டும் படிப்பை தொடர நிதியுதவி அளிக்கும் திட்டத்தை, அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.


பல்வேறு காரணங்களால் படிப்பை பாதியில் கைவிட்டோர் குறித்த தகவல்களை சேகரிக்க,  கல்வி அமைச்சகம், 'பிரபந்த்' என்ற வலைதளத்தை துவக்கியுள்ளது. இது குறித்து, இந்தியாவின் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டு உள்ள செய்தி: அரசு, ஒவ்வொரு மாணவரின் நலனுக்கும் முன்னுரிமை அளிக்கிறது. அதன்படி, பிரபந்த் என்ற வலைதளம் துவக்கப்பட்டுள்ளது. இதில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவை, பள்ளி மற்றும் சிறப்பு பயிற்சி மையங்களில் படிப்பை பாதியில் நிறுத்திய, 6 - 18 வயது வரை உள்ளோரின் விபரங்களை பதிவேற்ற வேண்டும். அதன் அடிப்படையில், 6 - 14 வயது வரையிலான மாணவர்கள், 'சமக்ரா சிக்ஷா' திட்டத்தின் கீழ், பள்ளிகளில் மீண்டும் சேர்க்கப்படுவர். அவர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்படும்.


அதேபோல, சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய, படிப்பை பாதியில் நிறுத்திய, 16 - 18 வயதினருக்கு, திறந்தவெளி பல்கலையில் படிப்பை தொடர ஏற்பாடு செய்யப்படும். அவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்படும். இந்த திட்டம், இந்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மாநில அரசுகளின் கருத்துகளை ஆராய்ந்து பிளஸ் 2 தேர்வு குறித்து ஜூன் 1-ம் தேதிக்குள் முடிவு: மத்திய கல்வி அமைச்சர் தகவல்...

 


மாநில அரசுகளின் கருத்துகளை ஆராய்ந்து பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ஜூன் 1-ம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.


நாடு முழுவதும் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனால், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, ஆன் லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே, பள்ளி பொதுத் தேர்வுகள், உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளை நடத்துவது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் பல்வேறு கட்டமாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.


மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கடந்த 23-ம் தேதி காணொலி காட்சி வழியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்துகொண்டார். தமிழக அரசு சார்பில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


அப்போது, நோய்த் தொற்று குறைந்த பிறகு பொதுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று மாநிலங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆசிரியர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.


இந்நிலையில், மாநில அரசுகளின் கருத்துகளை முழுமையாக ஆராய்ந்து, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து ஜூன் 1-ம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். முன்னதாக, சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வை ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.


2 கட்டங்களாக தேர்வு?

இதனிடையே, கல்வித் துறையின் பொதுவான செயல்பாடுகள் குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை தலைமைச் செயலகத்தில் உயரதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தினார். துறை முதன்மைச் செயலர் தீரஜ்குமார், பள்ளிக் கல்வி ஆணையர் கே.நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது:


பிளஸ் 2 பொதுத் தேர்வை இரண்டு கட்டங்களாக நடத்தப் போவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. அதே போல தமிழக பள்ளிக்கல்வியில் 2 கட்டமாக தேர்வு நடத்தப்படுமா என்று கேட்கிறீர்கள். இது தொடர்பாக முதல்வருடன் ஆலோசிக்கப்படும்.


பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக உத்தேச திட்டங்களை உருவாக்கியுள்ளோம். அதை முதல்வரிடம் தெரிவித்து, அவரது ஆலோசனைக்கு ஏற்ப உரிய திருத்தங்கள் செய்து, மத்திய அரசுக்கு செவ்வாய்க்கிழமை  அனுப்ப உள்ளோம்.


கரோனா பாதிப்பு ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுமாதிரியாக உள்ளது. அந்த சூழலையும் மத்திய அரசுக்கு சுட்டிக் காட்டுவோம்.


மாணவர் சேர்க்கை


தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதாக கூறுகிறீர்கள். அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஏற்கெனவே மாணவர் சேர்க்கை தொடர்பான தற்காலிக அட்டவணையை தயாரித்து வைத்திருந்தோம். கரோனா சூழல் காரணமாக அதை நடைமுறைப்படுத்த முடிய வில்லை.


தற்போது தமிழக அரசின் முழு கவனமும் கரோனாவைத் தடுப்பதில் இருக்கிறது. எனவே, கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டதும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படும்.


பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடத்தை ரத்து செய்திருப்பது தொடர்பாக ஆசிரியர் சங்கங்களிடம் இருந்து எதிர்ப்பும், ஆதரவும் வரப்பெற்றுள்ளது. அவர்களின் கருத்துகள் குறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, நிர்வாக ரீதியில் முடிவெடுக்கப்படும்.


10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் அளிப்பது குறித்து நான்கைந்து முறைகளை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் மதிப்பெண் வழங்கும் முறை முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.


இவ்வாறு அமைச்சர் கூறினார்.

"பி.ஆர்க்" படிப்பு - சேர்க்கைக்கான மதிப்பெண் தகுதியை மத்திய கல்வி அமைச்சகம் மாற்றி அமைத்துள்ளது...



B.Arch., படிப்பு - '2021 - 2022க்கான மதிப்பெண் தகுதியை மத்திய கல்வித் துறை குறைத்துள்ளது'.


 கொரோனா தொற்று பரவல் காரணமாக, பி.ஆர்க் படிப்பு சேர்க்கைக்கான மதிப்பெண் தகுதியை மத்திய கல்வி அமைச்சகம் மாற்றி அமைத்துள்ளது. இளநிலை கட்டிடக்கலை படிப்பாக கருதப்படும் பி.ஆர்க் படிப்புக்கு வழக்கமாக, பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய 3 பாடங்களிலும் குறைந்தப்பட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே, விண்ணப்பிக்க முடியும். தேசிய அளவில் நடத்தப்படும் தகுதி தேர்விலும் வெற்றி பெற வேண்டும்.


 இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் நடத்தப்படாமல், ஆன்லைன் மூலம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதனால், அவர்களால் படிப்பில் முழு அளவில் கவனம் செலு்த்த முடியவில்லை. இதனால், 2021 - 2022க்கான மதிப்பெண் தகுதியை மத்திய கல்வித் துறை குறைத்துள்ளது.


பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல், கணித பாடத்துடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது:


இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டிவிட்டரில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘2021-2022ம் ஆண்டுக்கான பி.ஆர்க் படிப்புக்கான மதிப்பெண் தகுதியாக, பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல், கணித பாடத்துடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இவற்றில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க தேவையில்லை.


10ம் வகுப்புக்குப் பிறகு 3 ஆண்டுகள் டிப்ளமோ படிப்பு :

அதேபோல், 10ம் வகுப்புக்குப் பிறகு 3 ஆண்டுகள் டிப்ளமோ படிப்பு முடித்தவர்களும் தேர்ச்சி பெற்றிருந்தாலும் போதுமானது,’ என கூறியுள்ளார்

நீட் தேர்விற்கு நீக்கப்பட்ட பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்படாது – மத்திய கல்வி அமைச்சர் தகவல்...

 


மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கேந்திரிய வித்யாலயா மாணவர்களுடன் வெபினாரில் உரையாடி மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைத்தார்.


சிபிஎஸ்சி மாணவர்களுக்கு வர இருக்கும் பொதுத்தேர்வுகள் திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுமா? என்ற மாணவர்களின் கேள்விக்கு, மாணவர்கள் திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே பொதுத்தேர்வுகளுக்கு படிக்க வேண்டும். நீக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து எந்த கேள்விகளும் நீட் தேர்விற்கு கேட்கப்பட மாட்டாது என்று உறுதியளித்தார்.


மேலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அனைத்தும் ஒரே கட்டமாக மீண்டும் விரைவில் திறக்கப்படும் என்றும் கூறினார். மாணவர்கள் கொரோனா காலமான தற்போதைய கால கட்டத்தில் தேர்வு மையங்களுக்கு பயணிப்பது தொடர்பாக பயம் ஏதும் கொள்ளக்கூடாது என்றும் கூறினார்.


தொற்று நோய் பரவி வந்த 2020ம் ஆண்டிலேயே நாடு முழுவதும் நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத்தேர்வுகள் மத்திய அரசால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடியை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திறம்பட எதிர்கொண்டதாக பாராட்டினார்.


மேலும் மாணவர்கள் கொரோனா காலத்தில் நீண்ட நேரம் வீட்டிலேயே இருந்ததன் விளைவால் ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை குறைத்து, அவர்களின் மன ஆரோக்கியம் மேம்பட ஆரம்பிக்கப்பட்டுள்ள மனோதர்பன் தளத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.

நாடு முழுவதும் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு ஜூலை 3-ம் தேதி நடைபெறும் - அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்...

 நாடு முழுவதும் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு ஜூலை 3-ம் தேதி நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஜேஇஇ முதன்மை தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் அட்வான்ஸ் தேர்வு எழுத தகுதி பெறுவார்கள்.



ஜேஇஇ மெயின் தேர்வு இனி தமிழ், மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் -மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்...

 


நீட் தேர்வைப் போலவே, ஜேஇஇ மெயின் தேர்வும் இனி தமிழ், மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.


2021 ஆம் ஆண்டில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஜேஇஇ மெயின் தேர்வு நடத்தப்படும் என்றும், முதற்கட்ட தேர்வு பிப்ரவரி 23 முதல் 26-ம் தேதி வரை நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


தேர்வு முடிந்த 4 நாட்களிலேயே முடிவுகள் வெளியிடப்படும் என்றும், கணினிவழித் தேர்வாக நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


பிஆர்க், படிப்பில் சேருவதற்கான ஜேஇஇ மெயின் தேர்வு மட்டும் எழுத்துத் தேர்வாக நடத்தப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...