வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு மே 16-ல் மாறுதல் கலந்தாய்வு
Transfer Counseling for Block Education Officers held today, May 16th
வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு மே 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தக் கலந்தாய்வில்... தற்போது பணியாற்றும் ஒன்றியத்தில், 30.04.2025 தேதியில், 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்கள் கட்டாயமாகக் கலந்து கொள்ள வேண்டும். அதேவேளையில் 30.06.2025 தேதிவரை ஓய்வு பெறவுள்ள வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. கலந்தாய்வில் கலந்து கொள்வோா் தற்போது பணிபுரியும் ஒன்றியம் மற்றும் அதற்கு முன்னா் பணிபுரிந்த ஒன்றியத்துக்கு மீண்டும் மாறுதல் கோரக் கூடாது. நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியராக கடைசியாகப் பணிபுரிந்த ஒன்றியத்துக்கு மாறுதல் கோரக் கூடாது.
மாறுதல் முன்னுரிமைப் பட்டியல், தகுதி வாய்ந்தோா் பட்டியல் மற்றும் காலிப் பணியிடங்கள் விவரம் மே 15-ஆம் தேதி வெளியிடப்படும்.
இதற்கு முந்தைய பொது மாறுதல் கலந்தாய்வில் முதலில் மாவட்டத்துக்குள்ளும், பின்னா் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வும் நடத்தப்பட்டது. அதே முறை இந்த ஆண்டும் பின்பற்றப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.