கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>> அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நிரம்பாத இடங்களுக்கான சேர்க்கையை 30-ம் தேதி வரை நீட்டித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது...

 தமிழ்நாடு முழுவதும் உள்ள 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 87,000 இடங்களில் சுமார் 72,000 இடங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். எஞ்சிய இடங்களை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கையை தொடர்ச்சியாக கல்லூரிகள் மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்கள் உடனடியாக தங்கள் அசல் சான்றிதழ்களுடன் கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்யலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.வரும் 30-ம் தேதி வரை புதிய மாணவர் சேர்க்கையை கல்லூரிகள் நடத்திக் கொள்ளலாம் என்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் ( 2020-2021 ) இளங்கலை (UG ) படிப்புகளில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு ஆகஸ்ட் 31 முதல் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இளங்கலை(UG) படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை செப். 30-ம் தேதியுடன் முடித்து விட்டு, அக்டோபர் முதல் முதுகலை ( PG ) படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

>>> சிறுபான்மையினர் நலம் - கல்வி உதவித் தொகை - கல்வி நிறுவனங்களுக்கு ஒருங்கிணைப்பாளர்(Institute Nodal Officer) நியமனம் செய்ய வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் ராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள்...


>>> Click here to Download Vellore Collector Proceedings...


>>> Click here to Download Ranipet CEO Proceedings...

>>> எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சிவகங்கை மாவட்ட வருவாய் அலகில் 45 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் (ஊதியம் ரூ.15,700/-)... விண்ணப்பிக்க கடைசி நாள்: 12-10-2020...

 


>>> கோடை விடுமுறையற்ற உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் பற்றிய விளக்கம்....

 





>>> இன்றைய செய்திகள் தொகுப்பு... 28.09.2020(திங்கட்கிழமை)...

 

🌹நிறைய பேசிக் கொண்டிந்தவர் திடீரென்று அமைதியாகி விட்டார் என்றால் 

அவர் ஊமையாகி விட்டார் என்று அர்த்தம் இல்லை.

இனி உங்களிடம் பேசக் கூடாது என்கிற அளவுக்கு நீங்கள் அவரை காயப்படுத்தி இருக்கின்றீர்கள்.!

🌹🌹ஒரே வார்த்தையில் எந்த உறவும் முறியலாம்.

ஆனால் ஓராயிரம் முறை மன்னிப்பு கேட்டாலும் மீண்டும் பழைய நிலைமைக்கு வராது.!!

🌹🌹🌹யாரையும் பார்த்து இவருக்கென்ன குறை என்று எடை போட்டு விடாதீர்கள்

இங்கு பல வலிகளோடு தான் வாழ்கிறார்கள் பலர்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⛑பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று சந்தேகம் கேட்க மட்டும் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

⛑⛑49 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கு தலைமையாசிரியா்களாகப் பதவி உயா்வு

⛑⛑ரேஷன் கடைகளில் அக்.1ம் தேதி பயோமெட்ரிக் முறை அமல்: இனி குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பொருட்களை பெற முடியும்.

⛑⛑மறைந்த இந்திய பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நினைவு இல்லம் கட்டப்படும் என்று அவரது மகன் எஸ்.பி.சரண் பேட்டியளித்துள்ளார்.

மேலும், எஸ்.பி.பி. உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பார்வையிட போலீசுடன் ஆலோசித்து மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்

⛑⛑வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல். மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து குடியரசுத்தலைவர் நடவடிக்கை. ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அரசிதழிலும் வெளியிட்டது மத்திய அரசு.

⛑⛑கேள்விக்குறியாகும் வெளிநாட்டு உயர்கல்வி? பட்டச் சான்றிதழ்களை விரைந்து வழங்குக: அன்புமணி வலியுறுத்தல்

⛑⛑கால்நடைப் பராமரிப்புத் துறையில் எழுத்துத் தேர்வு மூலம் உதவியாளர்களை நியமிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

⛑⛑அக்டோபர் 5 முதல் 10,12ம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம்.  :  புதுச்சேரி  முதல்வர் 

⛑⛑தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% வனத்துறையில் பணி வழங்கக்கோரிய வழக்கு: தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

⛑⛑தமிழ்நாட்டில் பள்ளி திறப்பு பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை

-அமைச்சர் செங்கோட்டையன் 

⛑⛑மத்திய அரசு கொண்டுவந்த விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பா.ஜனதா கூட்டணியிலிருந்து சிரோமணி அகாலிதளம் வெளியேறியுள்ளது.

கூட்டணியிலிருந்து விலகிய அக்கட்சி அக்டோபர் ஒன்றாம் தேதி மிகப்பெரிய விவசாய பேரணி ஒன்றை நடத்தப் போவதாக தெரிவித்துள்ளது.

⛑⛑மத்திய அரசின் வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் உரிமைகளை கேள்விக்குள்ளாக்கும் வகையில் இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், எட்டு வழிச் சாலை திட்டம் என ஏற்கனவே இருக்கும் திட்டங்கள் மூலம் தமிழக விவசாயிகள் வயிற்றில் அடித்த அரசு, விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமல் புதிய சட்டத்திற்கு ஆதரவு அளித்திருப்பதன் மூலம் விவசாயிகளுக்கு மேலும் ஒரு துரோகத்தை செய்துள்ளதாகக்  குற்றம் சாட்டியுள்ளார். 

விவசாயிகள் நலனை பாதுகாக்கும் சட்ட திருத்தங்களுடன், வேளாண் மசோதா சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.

⛑⛑நாடாளுமன்றம் நிறைவேற்றிய மூன்று வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

⛑⛑அண்ணா பல்கலை. பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நடைபெறவிருந்த பல்கலை. பேராசிரியர்களின் மனித சங்கிலி போராட்டம் ஒத்திவைப்பு. அக்டோபர் 1-ம் தேதிக்குப் பின் நடைபெறும் என்று தகவல்.

⛑⛑ஐபிஎல் 2020: டி20 போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

⛑⛑அக்டோபர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களைப் பெற டோக்கன் இன்று முதல் 3 நாட்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

⛑⛑69வது முறையாக மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார்.

⛑⛑நாட்டிலேயே முதல் மாநிலமாக அக்டோபர் 1ம் தேதி முதல், கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை திறக்க, மேற்கு வங்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

⛑⛑அக்டோபருக்கான ரேஷன் பொருட்கள்; இன்று முதல் 3 நாள்கள் வழங்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு.

⛑⛑இந்தியா-இலங்கை இடையேயான பௌத்த உறவை மேம்படுத்த, 1.5 கோடி டாலர் நிதி வழங்கப்படும்  - பிரதமர் மோடி

⛑⛑2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் நடப்பது உறுதி - ஜப்பான் பிரதமர் திட்டவட்டம்.

⛑⛑இங்கிலாந்தில் கொரோனா பரவலின் 2-வது அலையை தொடர்ந்து அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவலைத் தவிர்ப்பதற்காக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டால், கொரோனா அல்லாத வேறு பிரச்சினைகளால் சுமார் 75,000 பேர் உயிரிழக்கலாம் என 188 பக்க ரகசிய ஆவணம் ஒன்று தெரிவிக்கிறது.

⛑⛑அமெரிக்க அதிபராக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சீனாவை சார்ந்திருப்பதை முடிவுக்கு கொண்டு வருவதாக டிரம்ப் கூறியுள்ளார்.

⛑⛑அக்டோபர் 1 முதல் 10,11,12 ஆம் வகுப்பு விருப்பம் உள்ள மாணவர்கள் பெற்றோரின் அனுமதி பெற்று பள்ளிகளுக்கு வந்து ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டறியலாம் :  தலைமையாசிரியர்கள் பள்ளிக்கு வரும் மாணவர்களிடம் பெற்றோர்களின் விருப்பக்கடிதம் பெற்று அனுமதிக்க உத்தரவு.

⛑⛑வருவாய்த்துறை, பள்ளி கல்வித்துறை, பொது சுகாதாரத்துறை போன்றவர்களிடம் முதலமைச்சர் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு பள்ளி திறப்பது பற்றிய உறுதியான முடிவை அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

⛑⛑தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு, நாடு முழுவதும் நேற்று தொடங்கியது.நாடு முழுவதும் 1.6 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு.

⛑⛑மாணவர்கள், க்யூ ஆர் கோட் அதிகம் பயன்படுத்த, ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டுமென, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கூறியுள்ளது

⛑⛑வெள்ளி விழாவைக் கடந்து பொன்விழாவைக் கண்டுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழாவைச் சிறப்பிக்கும் வகையில் பொன்விழா கட்டுரைத் தொகுப்பினை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக உலகத் தமிழர்களிடையே கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

⛑⛑அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் - எதிர்கட்சி தலைவர்  ஸ்டாலின்

⛑⛑கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை 12,889 போ் இணைய வழியே விண்ணப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

>>> புதுச்சேரி, காரைக்காலில் அக்டோபர் 5 முதல் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை தெளிவு பெறுவதற்கு ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம்...



>>> ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆக்சிஜன் வசதி - அமைச்சர் சி.விஜயபாஸ்கர்...

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...