கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

HIGHER SECONDARY SCHOOL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
HIGHER SECONDARY SCHOOL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Hr. Sec. School HM Vacancies தொடர்பான முக்கிய தகவல்



மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் (Higher Secondary School Headmaster Vacant Places) தொடர்பான முக்கிய தகவல் 


பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் மூலம் பெறப்பட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, 25.05.2026 நிலவரப்படி மாநிலம் முழுவதும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களில் மொத்தம் 435 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்காக 230 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 205 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் முதுகலை ஆசிரியர்களுக்காக நிரப்பப்பட உள்ளன.


மேலும், கலந்தாய்வு நடத்துவதற்கான அட்டவணை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2020-21ஆம் ஆண்டில் 40 அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் அரசு மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது... அரசாணை (நிலை) எண்: 11, நாள்: 18-01-2021...

 2020-21ஆம் ஆண்டில் 40 அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் அரசு மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது...

40 High Schools to Hr Sec Schools Upgradation - Schools List Published...

GO NO : 11 , DATE : 18.01.2021

ஆணை : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , 13.03.2020 அன்று சட்டமன்றப் பேரவை விதி 110 - இன்கீழ் பள்ளிக் கல்வித்துறை சார்ந்து பிறவற்றினிடையே பின்வரும் அறிவிப்பினை அறிவித்துள்ளார் : 

" 30 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும் . இப்பள்ளிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் 55 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவிலும் , தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் 21 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவிலும் ஏற்படுத்தப்படும் " 

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , 20.03.2020 அன்று சட்டமன்றப் பேரவை விதி 110 - இன்கீழ் பள்ளிக் கல்வித்துறை சார்ந்து பிறவற்றினிடையே பின்வரும் அறிவிப்பினை அறிவித்துள்ளார் . " ஏற்கனவே அறிவித்த 15 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு பதிலாக , 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் , மேலும் , 30 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 உயர்நிலைப் பள்ளிகள் மேல் நிலைப் பள்ளிகளாகவும் , வரும் கல்வியாண்டில் உயர்த்தப்படும் ".

 பள்ளிக் கல்வி இயக்குநர் தனது கடிதத்தில் , தமிழகத்தில் உள்ள அனைத்து வயது பள்ளி குழந்தைகளும் மேல்நிலைக் கல்வி வரை தொடர்ந்து படிப்பதை உறுதி செய்யவும் , பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்தவும் , 2020-2021 - ஆம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி 50 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தி ஆணை வழங்குமாறும் , அப்பள்ளிகளுக்குத் தேவையான பணியிடங்கள் ஒப்பளிப்பு செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். 

பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை கவனமுடன் பரிசீலனை செய்து , முதற்கண் 40 உயர்நிலைப் பள்ளிகளை , மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்திடலாம் என முடிவு செய்து அவ்வாறே பின்வருமாறு அரசு ஆணையிடுகிறது : 

2020-21 - ஆம் கல்வியாண்டில் இவ்வாணையின் இணைப்பில் உள்ள / நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படுகிறது.

>>> அரசாணை (நிலை) எண்: 11, நாள்: 18-01-2021 மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள்

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் சென்னை திருவான்மியூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் காலை  உண...