கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 ஊதிய உயர்வு பெறுவதற்கான தகுதிகள், தேர்வுகள், பயிற்சிகள் குறித்த நடைமுறைகள் மற்றும் அரசாணைகள்...

(அ) தகுதிகாண் பருவக் காலத்தில் ஒருவருக்கு 1.4.1988 அன்று ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட தேர்வு தேறாத காரணத்தால் 1.4.1988 ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. 1.4.1989 மற்றும் 1.4.1990 ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை. இவர் 18.9.1990 அன்று நடைபெற்ற தேர்வில்தான் தேர்ச்சி பெறுகின்றார். இவருக்கு 1988, 1989, 1990 ஆகிய மூன்று ஊதிய உயர்வுகளும் சேர்ந்து 17.9.1990 அன்று ஒரு சேர வழங்கப்படும் என்று Rule of 28 of State and Subordinate Service Rules கூறுகிறது. இதனால் இவருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. நிரந்தரமாக Cumulative நிதி இழப்பு ஏற்படவில்லை.

(ஆ) தகுதிகாண் பருவக்காலத்தில் பயிற்சி முடிக்க வேண்டிய இளநிலை உதவியாளர்களுக்கு இரண்டாவது ஊதிய உயர்வு அப்பயிற்சி முடிந்த பின்னர் தான் வழங்கப்பட வேண்டும். அலுவலக நடைமுறை காரணமாக பயிற்சிக்கு அனுப்புவது தாமதப்பட்டால், அரசின் ஆணை பெற்று விதிகளைத் தளர்த்தி வழக்கமான நாளிலேயே ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt Letter No.6888/90-3, P&AR Dated 18.4.1990 மற்றும் G.O.Ms No. 71720 பணி-பி/92-1, P&AR Dated, 2.12.1992)

(இ) ஒரு பதவிக்கு பணி அமர்வு செய்வதற்கான தகுதிகள் அனைத்தும் ஒருவர் பெற்றிருக்கவேண்டும். ஏதேனும் ஒரு தகுதி குறைவாக இருந்தாலும் அவருக்கு ஊதிய உயர்வே கிடைக்காது. (Govt Letter No.16599A/FRI/74-3 Finance Dept, dated 21.3.1975 & G.O.Ms No.41, Finance Dept, Dated 11.1.1977)

🍁🍁🍁 ஆதரவற்ற மாணவர்கள் தங்கி பயில உதவும் பி.எஸ்.ஜி மாணவர் இல்லம் நேர்முகத் தேர்வு அக்டோபர் 21அன்று நடைபெறவுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 20-10-2020...


உலகெங்கும் குழந்தைகளின் கல்வி பெற்றோரின் ஆதரவைச் சார்ந்தே இருக்கிறது. பெற்றோரில் ஒருவரோ, அல்லது இருவருமே இறந்து போக நேர்ந்தால் அவர்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் கல்வியைத் தொடர இயலாத குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாகி அல்லற்பட நேர்கிறது. இப்படிப்பட்ட திக்கற்ற குழந்தைகளுக்கு கல்வியூட்டி, தொழிற்பயிற்சி அளித்து, அவர்களது எதிர்காலத்தை வளமாக்க உதவுவதற்காக தமிழகத்தில் சில நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் பி.எஸ்.ஜி & சன்ஸ் அறக்கட்டளை நடத்தும் மாணவர் இல்லம்.

இது ஜூன் – 1995-ல் பி.எஸ்.ஜி & சன்ஸ் அறக்கட்டளையின் அறங்காவலரான ஜி.ஆர். கார்த்திகேயன் அவர்களால் நிறுவப்பட்டது. இந்த இல்லத்தின் நோக்கம் ஒரு பெற்றோரையோ அல்லது இருவரையுமே இழந்த, தமிழ் வழிக்கல்வியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலும் படிக்க விரும்பும் வசதியற்ற மாணவர்களுக்கு உறைவிடமளித்து கல்வியளிப்பதுவே ஆகும்.

விண்ணப்பத்திலடங்கிய விவரம், உரிய ஆவணங்கள், நுழைவுத்தேர்வு, நேர்காணல் ஆகியற்றின் அடிப்படையில் குழந்தைகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு மாணவர் இல்லத்தில் உறைவிடம் அளித்து, கல்வி கற்க சர்வஜன மேல்நிலைப்பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள்.

இந்த ஆண்டு சேர்க்கைக்காக பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்கான நேர்முகத் தேர்வு அக்டோபர் 21 புதன் கிழமையன்று நடைபெறவுள்ளது. இதற்காக விண்ணப்பித்தவர் தவறாமல் கலந்து கொள்ளவும் என நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதிக மாணவர்கள் தங்கும் வகையில் சுமார் 2 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பி.எஸ்.ஜி நிறுவனங்களின் தற்போதைய நிர்வாக அறங்காவலரான  எல்.கோபாலகிருஷ்ணன் மாணவர் இல்லத்தின் வளர்ச்சியில் மிக்க ஆர்வம் கொண்டுள்ளார். மேலும் பலருக்கு இடமளிக்க தற்போதுள்ள கட்டிடத்தில் இன்னுமொரு அடுக்கு கட்டப்பட்டுள்ளது என்பதே இந்த அறக்கட்டளையின் அர்ப்பணிப்புக்குச் சான்றாகும்.

தரமான கல்வியும், தரமான உணவும், வீடு போன்ற சூழலையும் தருவதோடு மாணவர் இல்லவாசிகளுக்கு இலவச மருத்துவ வசதி, பயிற்சியாளர் உதவியுடன் பல்வேறு உள்ளரங்க, வெளி விளையாட்டு வசதிகள் ஆகியனவும் செய்து தரப்பட்டுள்ளன.

நன்கு பயிலக்கூடிய மாணவர்களுக்கு அறக்கட்டளையின் நிறுவனங்களின் மூலமாக சிறப்பான உதவிகளும் அளிக்கப்படுகின்றன.


🍁🍁🍁 பல்கலைக்கழக மானியக் குழு(UGC) 24 போலி பல்கலைக்கழகங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது...

 


🍁🍁🍁 RTE 2009 விதியின் கீழ் LKG வகுப்புக்கு முதல் கட்டமாக online மூலம் விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக online மூலம் விண்ணப்பிக்க 12-10-2020 முதல் 07-11-2020 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது...

 



🍁🍁🍁 மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டே இட ஒதுக்கீடு வழங்கப்படுமா - சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்...

 மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இடஒதுக்கீடு இந்த ஆண்டே வழங்கப்படுமா என்பது குறித்து, ஆளுநரிடம் ஒப்புதல் பெறும் கால அளவைப் பொறுத்தே முடிவு செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


சென்னை எழும்பூரில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு நிலையத்தில், "தேசிய தன்னார்வ ரத்ததான நாள் - 2020" என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1 புள்ளி 6 சதவீதத்தில் இருந்து, 1 புள்ளி 3 சதவீதமாக குறைந்துள்ளதாகத் தெரிவித்தார். மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு குறித்து ஆளுநரின் ஒப்புதலை பொருத்தே முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

🍁🍁🍁 புதிய கல்வி கொள்கைக் குறித்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர் இருமொழிக் கொள்கை தான் வேண்டுமென தெரிவித்துள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது...

புதிய கல்வி கொள்கைக் குறித்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர் இருமொழிக் கொள்கை தான் வேண்டுமென தெரிவித்துள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

உயர்கல்வித்துறை சார்பில் புதியக் கல்விக்கொள்கை தொடர்பாக, கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்பு கூட்டம் இணைய வழியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், தமிழக அரசு அறிவித்துள்ள இருமொழிக் கொள்கை தான் வேண்டுமென்று தெரிவித்தாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதே போன்று, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நுழைத்தேர்வு வேண்டாம் என்றும் பெற்றோர் மற்றும் மாணவர்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டதாக உயர்கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது. இந்த கருத்துகளின் அடிப்படையில், தலைமைச் செயலாளர் சண்முகம், மத்திய கல்வித்துறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு...07.10.2020 (புதன்கிழமை)...

 

🌹புகழ்ச்சியில் வளர்பவனுக்கு தான் பிறர் துணை தேவை.

முயற்சியில் வளர்பவனுக்கு தன்னம்பிக்கையே துணை.!

🌹🌹இருப்பவர் கோடியில் புரண்டாலும் இல்லாதவர் தரையில் புரண்டாலும்                      முடிவு என்னவோ இருவருக்கும் ஆறடிதான்.!!

🌹🌹🌹ஒருவர் நம்மை மதிக்கவில்லை என்று நினைப்பதை விட அவருக்கு நம் மதிப்பு தெரியவில்லை என்பதே உண்மை.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍒🍒பள்ளிகள் திறப்பை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம்.

பள்ளிகள் திறப்பு குறித்து மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தான் முடிவு எடுப்பார் - மாண்புமிகு அமைச்சர் திரு.  செங்கோட்டையன் அவர்கள் பேட்டி.

👉மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதன் மூலம் 300க்கும் அதிகமாக அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் மாணவர்களுக்கு கண்பரிசோதனை செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அரசு சார்பாக தொலைக்காட்சிகளில் எடுக்கும் பாடங்களையொட்டியே பொதுத்தேர்வுகளில் கேள்விகள் இடம்பெறும் என்று கூறிய அவர் தனியார் பள்ளிகளிலிருந்து 2.5 லட்சம் மாணவர்கள் அரசுபள்ளிகளில் சேர்ந்துள்ளதாக தெரிவித்தார்

🍒🍒ஆசிரியர் பணியிடம் - கல்வி - பள்ளிகள் - அனைத்து மாவட்டங்கள் - ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின் காலிப்பணியிடத்தை நிரப்பிடும் பொருட்டு - பதவி உயர்வுக்கு 01.03.2020 அன்றைய நிலையில் இறுதி பணிமூப்பு பட்டியல் வெளியிடுதல் தொடர்பாக - ஆதிதிராவிடர் நல ஆணையர் அவர்களின் செயல்முறைகள் - நாள்.05.10.2020

🍒🍒கால்நடை மருத்துவப் படிப்புகள்: 14,000 பேர் விண்ணப்பம்

🍒🍒கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பொறியியல் கல்லூரிகள்: விசாரணை நடத்த குழு அமைப்பு.

🍒🍒மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு தொடர்பான  தமிழக அரசின் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் தர தாமதிப்பதால் இந்த ஆண்டு உள்ஒதுக்கீடு அமலாவதில் சிக்கல்.

🍒🍒தோ்வு எழுதாமல் மாணவா்களின் கற்றல் தகுதியை எவ்வாறு தீா்மானிக்க முடியும் : உயா் நீதிமன்றம் சரமாரி கேள்வி

🍒🍒ஆந்திர மாநிலத்தின் விஜயநகரத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றில் ஆசிரியர்களிடம் சந்தேகங்கள் கேட்க வந்த 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டது.

🍒🍒இன்று காலை 10 மணிக்கு நல்ல செய்தி வரும். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டி. பேச்சுவார்த்தை அதிகாலை 3:30 மணி வரை நீடித்தது.

🍒🍒ஐபிஎல் 2020: டி20 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி                          

  🍒🍒சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகளை (Children With Special Need) கொண்ட அரசு ஊழியர்களுக்கு ஒரு நாட்காட்டி ஆண்டில் ஆறு நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதித்து பணியாளர் மற்றும் நிருவாகச்  சீர்திருத்தத் துறை அரசாணை வெளியீடு - நாள்: 01.10.2020.

🍒🍒 இளநிலை அறிவியல் அதிகாரி பதவிக்கான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்க: TNPSC அறிவிப்பு

🍒🍒பள்ளிகள் திறப்பில் தமிழகத்தைப் பின்பற்றுக: புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்

🍒🍒வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவது எப்படி? நீதிமன்றம் சரமாரி கேள்வி

🍒🍒வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது ஒரு சீர்திருத்த முயற்சியே: மத்திய நிதியமைச்சர் பேட்டி

விலை மற்றும் யாருக்கு விற்பது என்று உற்பத்தியாளர்களே தீர்மானித்து கொள்ளலாம்

பெரும்பாலான மாநிலங்களில் வேளாண் விளைபொருட்களை விற்க கட்டுப்பாடு உள்ளது

புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும்  இருக்காது: மத்திய நிதியமைச்சர்

வேளாண் சட்டத்தால் விவசாயிகளே விலை நிர்ணயம் செய்து விற்க முடியும்

புதிய வேளாண் சட்டங்களால் தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு விவசாயிகளுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.  

 🍒🍒செம்மொழி வரிசையில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றச்சாட்டியுள்ளார்.

மத்திய தொல்லியல் துறையின் பட்டய மேற்படிப்புக்கான கல்வித் தகுதியில் செம்மொழி வரிசையில் தமிழ் இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🍒🍒அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார்.

கொரோனாவில் இருந்து மீண்ட ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.

ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.

விரைவில் அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பார் என வெள்ளை மாளிகை தகவல்.

🍒🍒மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்

மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் உணவு பாதுகாப்பு அமைப்பை சிதைத்துவிடும். மேலும் உணவு பாதுகாப்பு சட்டங்களால் பஞ்சாப் மாநில விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார்.

🍒🍒விசாரணையை துரிதமாக்கும் உலக சுகாதார அமைப்பு; விழிபிதுங்கும் சீனா     

👉உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து குரானா வைரஸ் தாக்கம் குறித்து உலக நாடுகளை எச்சரித்து வருகிறது.

👉தற்போது உலகம் முழுவதும் பத்தில் ஒருவருக்கு கொரோனா தாக்கம் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

👉உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால உதவி நிபுணர் மைக் ரயான் இதுகுறித்து கூறுகையில் மத்திய தரைக்கடல் நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஆசிய நாடுகளை ஒப்பிடுகையில் அதிகமாகவே கொரோனா தாக்கம் காணப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார். 

👉உலக மக்கள்தொகை கிட்டத்தட்ட 700 கோடி. இதில் 10 சதவீதம் பேருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேறுபடுகிறது.

👉சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் எவ்வாறு உலகிற்கு பரவியது என உலக சுகாதார நிறுவனம் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்ய உள்ளது. இந்த குழுவின் உறுப்பினர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

👉இது சீனாவுக்கு பெரும் நெருக்கடி ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை வைரஸ் பரவல் குறித்து இந்த குழு புதிதாக உண்மைகளை சிலவற்றை கண்டுபிடித்தால் சீனா உலக நாடுகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும்.

🍒🍒டாக்டர். A.P.J. அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் 15.10.2020 அன்று நிகழ்ச்சிகள் சார்ந்த விவரங்கள் அனுப்புதல் - தொடர்பாக - கல்வி தொலைக்காட்சி சிறப்பு அலுவலர் அவர்களின் செயல்முறைகள் - நாள்:05.10.2020

🍒🍒அரசு நிதி உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 30.9.2020 அன்றைய நிலையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பாக இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு

🍒🍒சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலங்களில் கட்டுப்பாடு பகுதிகள் தொடர்ந்து அதிகரிப்பு. தற்போது வரை 42 கட்டுப்பாடு பகுதிகள் உள்ளாதாக மாநகராட்சி அறிவிப்பு.

🍒🍒அதிமுக அவைத்தலைவராக நான்தான் நீடிப்பேன்; இதில் எந்த மாற்றமும் இல்லை

உடல்நிலை காரணமாக அவைத்தலைவர் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் மதுசூதனன் விளக்கம்

அவைத்தலைவர் பதவி ஜெயலலிதா கொடுத்தது; நான் இருக்கும் வரை அவைத்தலைவராகத்தான் இருப்பேன்

ஓ.பி.எஸ். எந்த நோக்கத்திற்காக தர்மயுத்தம் செய்தாரோ அதை நிறைவேற்றுவார்

- அவைத்தலைவர் மதுசூதனன்

🍒🍒உலக மக்கள் தொகையில் 70% பேருக்கு கொரோனா தடுப்பூசி : 2022-ம் ஆண்டு வரை பொறுத்திருக்க வேண்டும் 

- உலக சுகாதார அமைப்பு 

🍒🍒தமிழகம் முழுவதும் நடைபெற்ற கிசான் திட்ட முறைகேடு விவகாரம் காரணமாக அத்திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் 1000 ஊழியர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவிற்கு   இடைக்கால தடை 

- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

🍒🍒தமிழகம் முழுவதும் அக்.9-ம் தேதி முடிதிருத்தும் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்போவதாக சவரத் தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் அருகே சவரத் தொழிலாளியின் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளனர். இதனை தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்க மாநில பொருளாளர் ராஜா நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கூறியுள்ளார்.

🍒🍒மருத்துவ மேற்படிப்பு பயில்வோர் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் 2 ஆண்டு பணிபுரிய வேண்டும் என்ற தமிழக அரசு உத்தரவு செல்லும் - உயர்நீதிமன்றம்

🍒🍒பிராந்திய ஒருமைப்பாடு & இறையாண்மையை மதித்தல் மற்றும் நாடுகள் இடையிலான மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜப்பானில் நடைபெற்ற கூட்டத்தில் பேச்சு.

🍒🍒பண்டிகை கால வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு:

👉பண்டிகை நிகழ்வுகளுக்கு கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் அனுமதி கிடையாது. 

👉65 வயதுக்கு மேற்பட்டவர்கள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

👉விழாக்களை நடத்த முன் முழுமையாக திட்டமிடுதல் அவசியம்

👉கூட்டங்களை ஒழுங்குபடுத்துதல் சமூக இடைவெளி ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். 

👉முக கவசங்களை அணிவது கட்டாயம் நாடகம் மற்றும் சினிமா கலைஞர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மேடை கலைஞர்களுக்கு முழுமையாகப் பொருந்தும். 

👉உடல் வெப்ப சோதனை பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

தேவையான இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவை நிறுத்த வேண்டும்.

🍒🍒பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் துறை சம்பந்தப்பட்ட 3 சட்டங்கள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சீர்திருத்த முயற்சி

ஏற்கனவே இருந்த சட்டத்தில் விவசாயிகள் பொருட்களை விற்க கட்டுப்பாடுகள் இருந்தன

- நிர்மலா சீதாராமன் 

🍒🍒பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 122 இடங்களில் போட்டியிடுகிறது. மேலும் நிதிஷின் கூட்டணி கட்சியான பாஜக 121 இடங்களிலும் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா 7 இடங்களிலும் போட்டியிடுகிறது. 3 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் கூட்டணி தொகுதி உடன்பாடு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🍒🍒தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் 25% இடங்களுக்கான மாணவர் சேர்க்கை.

முதற்கட்ட ஒதுக்கீட்டில் நிரம்பாத எஞ்சிய இடங்களில் சேர, விருப்பம் உள்ளவர்கள் வரும் 12-ம் தேதி முதல் நவம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

- பள்ளிக் கல்வித்துறை

🍒🍒மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட முடிவு என  தகவல்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...