கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
🍁🍁🍁 கல்லூரிகள் திறந்தால் மாணவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் - UGC அறிவிப்பு...
கல்லூரிகள் திறந்தால் விடுதிகளில் செய்ய வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து யுஜிசி அறிவுறுத்தல்கள் வெளியீடு.
அதன்படி, ஒரு அறைக்கு ஒரு மாணவர் மட்டுமே தங்கி இருக்க வேண்டும். மாணவர்கள் கொரோனா இல்லை என்று சான்றிதழ் வழங்கினாலும் 14 நாட்கள் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் நவம்பர் 16ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா ? என்பது குறித்து வரும் 12ஆம் தேதி அறிவிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
🍁🍁🍁 16-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுமா? அல்லது தள்ளிவைக்கப்படுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாக வாய்ப்பு...
வரும் 16-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுமா? அல்லது தள்ளிவைக்கப் படுமா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என தகவல்
🍁🍁🍁 SGT / BT பணித்தெரிவு போட்டித் தேர்வு மூலம் மேற்கொள்ளப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் - CM CELL Reply...
நிராகரிக்கப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடைமுறையிலுள்ள விதிகளின்படியே தெரிவு பணிகளை மேற்கொள்ளுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள அரசாணையின் படி SGT / BT பணித்தெரிவு போட்டித் தேர்வு மூலம் மேற்கொள்ளப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் தற்போது உள்ள அரசாணையின்படி வழங்கப்பட்ட நாளிலிருந்து ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். எனினும் சான்றிதழ் தகுதி சார்ந்து வேறு அரசாணை வெளியிடப்படின் உரிய தகவல் இணையதளம் மூலம் தெரிவிக்கப்படும் கனிவுடன் தெரிவிக்கலாகிறது .
ஆ.தே.வா. ஓ.மு.எண். 5305 /இ4/ 2020, நாள் : 31-10-2020...
🍁🍁🍁 கல்வித்துறை தொடர்பாகவே அதிக வழக்குகள் பதிவாகின்றன – உயர்நீதிமன்றம்...
கல்வித்துறை தொடர்பாகவே அதிக வழக்குகள் பதிவாகின்றன என மதுரை உயர்நீதிமன்றக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.பள்ளிக்கல்வித்துறையை எதிர்த்து அதிக எண்ணிக்கையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குள் தொடரப்படுகின்றன. எனவே ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு சட்ட ஆலோசகரை நியமித்தால் என்ன? என்று நீதிமன்றம்
கேள்வி எழுப்பியுள்ளது. இதன் மூலம் வழக்குககள் தேங்குவதையும், மேல்முறையீடு செய்வதையும் விரைவுபடுத்தலாம் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🍁🍁🍁 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு ரூ.10,000, கல்வி மாவட்ட அதிகாரிகளுக்கு ரூ.15,000 அபராதம் - உயர்நீதிமன்றம்...
குமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு ரூ.10,000, குழித்துறை கல்வி மாவட்ட அதிகாரிகளுக்கு ரூ.15,000 அபராதம் விதித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராதத் தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பளத்தில் பிடித்தம செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...