கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 22.11.2020 (ஞாயிறு)...

 

🌹தேவை இல்லாமல்

பேசுவதை விட

அமைதியாகவே இருந்து விடலாம்

நம் மனது புரியாத யாருக்கும் நம் வார்த்தைகளும் புரியாது.!

🌹🌹கடந்து வந்த பாதையை திரும்பி ஒருமுறை பார்த்தேன் 

அதில் வலிகளை தந்தவர்களை விட 

வாழ்க்கையை கற்றுக் கொடுத்தவர்களே அதிகம்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍒🍒தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயற்குழுக் கூட்டம் 28.11.2020(சனிக்கிழமை) அன்று தஞ்சாவூரில் நடைபெறவுள்ளது.                                         

🍒🍒அரியர் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் எந்த விதிமீறலும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா விளக்கம் அளித்துள்ளார். பல்கலைக்கழகங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது. பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவுரைகளே, பல்கலைக்கழகங்களே அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🍒🍒 சென்னையில் 15 மண்டலங்களிலும் வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை எழிலகத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்துள்ளார். சென்னை தண்ணீர் தேங்கும் இடம் மிக கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

🍒🍒26.11.2020- ALL INDIA STRIKE - அன்று யாருக்கும் CASUAL LEAVE வழங்கக்கூடாது - விடுப்பு எடுப்பவர்களுக்கு No Work No Pay ஒரு நாள் ஊதிய பிடித்தம் செய்ய தலைமை செயலாளர் உத்தரவு.

🍒🍒பட்டய கணக்காளர் பயிற்சி அடுத்த மாதம் 23-ம் தேதி தொடங்குகிறது.

🍒🍒செட் தேர்வு முடிவுகள் நவ.27-ல் வெளியீடு

🍒🍒சர்வதேச காமன்வெல்த் கட்டுரைப் போட்டியில் இந்திய வம்சாவளி, இந்திய மாணவர்கள் வெற்றி

🍒🍒 நடப்பு கல்வியாண்டுக்கான 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும்; சிபிஎஸ்இ செயலாளர் தகவல்

🍒🍒புதிய பென்சன் திட்டத்தில் இதுவரை விதிகள் உருவாக்கவில்லை தமிழக அரசின் நிதித்துறை விளக்கம்

🍒🍒 தனியார் மருத்துவகல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் அறிவிப்பு

🍒🍒அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு தொடர்பான அறிவுரைகள் சார்பு : இயக்குநர் கடிதம் வெளியீடு.

🍒🍒வாடிக்கையாளர்களுக்கு மிரட்டல் விடுத்த 5 அப்ளிகேஷன்களை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள் நிறுவனம்

🍒🍒பிறப்பு சான்றிதழ்களில் பெயர்களை பதிவு செய்ய 5 ஆண்டு சிறப்பு சலுகை

🍒🍒மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.க ஏற்கும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

🍒🍒உலகத்தின் மிக தொன்மையான மொழி தமிழ்

“எனக்கு தமிழ் தெரியாது.. மன்னியுங்கள்”

மத்திய அமைச்சர் அமித்ஷா

🍒🍒மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளைப் பிராந்திய மொழிகளில் எழுத அனுமதிக்க பிரதமருக்குக் கோரிக்கை

🍒🍒ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்கள்: பெற்றோர், கிராமத்தினர் மகிழ்ச்சி

🍒🍒சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவின் மீது உரிய மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

🍒🍒பள்ளிக் கல்வி நீதிமன்ற வழக்குகள் நிலுவை உரிய காலத்தில் நீதிமன்ற விதிமுறைகளை பின்பற்றி எதிர்வாதவுரை மேல்முறையீடு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தல் காலதாமதம் தவிர்த்திட அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

🍒🍒ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்களுக்கு புதிய ஊதியம் நிர்ணயம் செய்து காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை 

🍒🍒கொரோனா தடுப்பு பணிகளில் பணியாற்றி உயிர்நீத்த முன்கள பணியாளர்களின் குடும்பங்களில் உள்ளோருக்கு மருத்துவ படிப்பிற்கு உள்ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது

🍒🍒 கல்வி தொலைக்காட்சி - மாணவர்களுக்கு இணைய தளம் மூலம் பாடங்களை வீடியோ வடிவில் பதிவு செய்து இணைய தளம் மூலமாக கல்வி தொலைக்காட்சி மற்றும் இதர தொலைக்காட்சிகளிலும் பாடங்கள் ஒளிபரப்பு செய்தல் - சார்பு - கல்வி தொலைக்காட்சி சிறப்பு அலுவலர் அவர்களின் செயல்முறைகள் வெளியீடு.

🍒🍒குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ள நிலையில் தமிழகத்தில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு

- வானிலை ஆய்வு மையம் 

🍒🍒வல்லரசு நாடுகளே ஆச்சரியம் கொள்ளும் அளவுக்கு மோடி ஆட்சி நடத்தி வருகிறார். 

கொரோனா அச்சுறுத்தலை போக்க அல்லும் பகலும் மோடி பாடுபடுகிறார். அவருக்கு தமிழக அரசு என்றும் துணை நிற்கும்

- முதல்வர் பழனிசாமி

🍒🍒கொரோனா தடுப்புப் பணியில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது

- மத்திய அமைச்சர் அமித்ஷா

🍒🍒தர்மபுரி , விருதுநகர் மாவட்டங்களில் மெகா டெக்ஸ்டைல் பூங்கா அமைக்க வேண்டும்.

தமிழ்நாடு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்க வேண்டும் 

- முதல்வர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விடம் கோரிக்கை

🍒🍒பெருந்தொற்று பரவல் தடுப்பு விதிகளுக்கு புறம்பாக சென்னையில் கூட்டத்தை சந்தித்த அமித் ஷாவை ஏன் போலீசார் கைது செய்யவில்லை? - நாகையில் காவல்துறையின் அனுமதியின்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

🍒🍒பேரறிவாளன் விடுதலை விவகாரம் அவருக்கும், ஆளுநருக்கும் இடையேயானது

இதில் முடிவு எடுக்க வேண்டியவர் ஆளுநர் மட்டுமே.

இதில் சிபிஐக்கு எந்த தொடர்பும் கிடையாது: உச்சநீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் பதில் மனு தாக்கல்

🍒🍒கொரோனா குறித்து மருத்துவ நிபுணர்

குழுவுடன் பிரதமர் நேற்று முக்கிய ஆலோசனை;

கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும்

கொள்முதல் குறித்து கருத்துகேட்பு.

🍒🍒உலகில் மக்களுக்கு சுகாதார சேவைகள் எளிதில் கிடைக்கச் செய்யும் நடவடிக்கைளில்  இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

🍒🍒தொற்றைக் கட்டுப்படுத்துவதில் ஜி -20 நாடுகள் ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

🍒🍒டெல்லியில் மூன்றாவது கொரோனா அலை உருவாவதைத் தடுக்க மத்திய அரசும் கெஜ்ரிவால் தலைமையிலான அரசும் கடுமையாகப் போராடி வருகின்றன.

🍒🍒கார்ப்ரேட் வரி துஷ்பிரயோகம் மற்றும் தனியார் வரி ஏய்ப்பு காரணமாக உலக நாடுகள் ஆண்டிற்கு, 31 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

🍒🍒ஏர் இந்தியா விமானங்கள் தங்கள் பிராந்தியத்திற்கு வர 14 நாட்களுக்கு, ஹாங்காங் 5வது முறையாக தடை விதித்துள்ளது.

🍒🍒கொரோனாவிற்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் – அஸ்ட்ராசெனிகா என்ற பிரிட்டிஷ் நிறுவனம் மற்றும் இந்தியாவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட்டுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டு வருகிறது.

🍒🍒ஐபிஎல் கிரிக்கெட் பாணியில் லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட்டை இலங்கை கிரிக்கெட் வாரியம் நடத்தவிருக்கிறது. எனினும் இந்தத் தொடருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட முன்னணி வீரர்கள் விலகி வருவது உள்ளிட்ட பிரச்னைகள் போட்டி அமைப்பாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

🍒🍒கடைசி 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கேப்டன் விராட் கோலி விளையாடாதது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக இருக்கும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பாா்டா் தெரிவித்துள்ளாா்.

🍒🍒சமூக வலைத்தளத்தில் தனிநபர் மீது அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை, அபராதம்.

👉கேரள அரசின்  சட்டத்திருத்த அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்

🍒🍒EVM மெஷின் இருக்கும் வரை தேர்தல்களில் போட்டியிடமாட்டேன்

நடிகர் இயக்குநர் டி.ராஜேந்தர்

🍒🍒திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது

கூட்டணியில் கடந்த முறை 5 தொகுதியில் போட்டியிட்டோம்

கூட்டணியில் பேரம் பேசமாட்டோம். நாங்கள் கொள்கை ரீதியாக கூட்டணி வைத்துள்ளோம்

அபுபக்கர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்ய பணி நாடுநர்களுக்கான வயது வரம்பு நீக்கியும், ஏற்கனவே வயது விதி வரம்பு கடந்து செய்யப்பட்ட பணி நியமனங்களை முறைப்படுத்தவும் ஆணை வெளியிடப்படுகிறது... அரசாணை (நிலை) எண்:174, நாள்: 12-10-2001...

 

>>> அரசாணை (நிலை) எண்:174, நாள்: 12-10-2001 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளியில் ஆசிரியர் பணிநிரவலின் போதும் / புதிய பணியிடம் உருவாக்கும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குநரிடம் பெற்ற RTI தகவல் - பள்ளிக் கல்வித்துறை துணை இயக்குநர் (மின் ஆளுமை) அவர்களின் கடிதம் ஓ.மு.எண்: 66334/சி3/இ1/2017, நாள். 10.10.2017...

 



பள்ளியில் ஆசிரியர் பணிநிரவலின் போதும் / புதிய பணியிடம் உருவாக்கும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குநரிடம் பெற்ற RTI தகவல்...


>>> பள்ளிக் கல்வித்துறை துணை இயக்குநர் (மின் ஆளுமை) அவர்களின் கடிதம் ஓ.மு.எண்: 66334/சி3/இ1/2017, நாள். 10.10.2017...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


SCA உள் ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத பொறியியல் இடங்களுக்கு விருப்பமுள்ள SC மாணவர்கள் 24.11.2020 முதல் நடைபெறும் இணையதள கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் - TNEA செயலாளர்...

 


தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் - நிரந்தர ஆதார் சேர்க்கை மையம் - தரவு உள்ளீட்டாளர்களுக்கு ஆதார் பதிவு, திருத்தம் செய்வது சார்பான சுற்றறிக்கை...

 

ந.கோ.எண் 9514/TACTV/Csc/2017

சுற்றறிக்கை

ஆதார் Mandatory Biometric Automatlcally என இருந்தால் அந்த பரிவர்த்தனைக்கு
பொதுமக்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கக்கூடாது.
ஒரு வாடிக்கையாளருக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் ஆதார்
எடுக்கப்பட்டு Reject ஆகியிருக்கலாம். அவர்களிடம் முன்னர் ஆதார் பதிவு செய்த
Receipt-ஐ கேட்க வேண்டும், Receipt இல்லாத நேர்வில் இன்னொருமுறை ஆதார்
பதிவு செய்யலாம். இதனால் தரவு உள்ளீட்டாளரின் IDயில் Error எண்ணிக்கை
வராது. இதனால் Blacklist செய்யப்பட மாட்டார்கள்.
ஆதார் பதிவு செய்யும் பொது Proof Document சரியாக Scan செய்ய வேண்டும் Printerல்
 (wL or wD) என்ற Option Click செய்து Upload செய்ய வேண்டும். இவ்வாறு
செய்தால் Document Scanning Error வருவதை தவிர்க்கலாம்.
ஆதாரில் பிறந்த தேதி மாற்றம் செய்வதற்கு Group A (Gazetted officer மட்டும்)
 Gazetted Officer: Gazetted Officer is an officer in Indlan government service whose Signature, stamp & with an official seal is required for attesting certificate copies & photographs of a person.

Following is the tentative list of Gazetted Officers in india:
Class I or Group A (Gazetted Officer):
1. Officers Of Armed Forces, Magistrate & Above In Judicial Services
2. Scientists (In Govt. Funded Research Org)
3. Vice-Chancellor To Assistant Registrars, Principals & Faculty Members of
Central & State Universities
4. Central & State Gant. Employees With Group A Service Rules (IAS, IES, IFS, SDPO, DIB, CP, DGP, JCP, IGP, ADLCP, DIG, DCP, SSP, DCP, SP, ASP, ACP, DSP, Colonel ect.)
5. Doctors, Engineers & Drug Controller (Govt., Central & State Services)

Class II or Group B (Gazetted Officer):
1. Drugs inspector (State Govt Service)
2. SDO/RDO/Sub-collector (Sub Divisional Officer), BDO (Block Development Officer)
3. Circle Inspector, Tahsildars etc. in State Administration
4. Principal of Govt Schools
5. Income Tax & Revenue Officers
6. Senior & (AAO) Asst Audit/Accts Officers of (IA&AD) (Cag) indian P&T
Accts & Fin Services & Section Officers.





Non-Gazetted Officer:
1. Office Assistants,
Accountant, Bank Managers, Govt. School Teachers. Junior Pharmacist &
Junior Engineers etc.
2. Special Executive Officer, MLA, Councillor, Nagarsevik, Mayor, Advocates.
3. Police Inspectors/Sub-Inspectors & Foreman Central Excise & Custom
Senior Stenographer, MBBS
Doctor,
Charted
Inspectors

Gazetted Format Form Fill செய்து வரும்போது அதில் அடித்தல் மற்றும் திருத்தம், எழுத்தின் மீது எழுத்து எழுதியிருக்கவோ அல்லது Whitener பயன்படுத்தி எழுதியிருக்கவோ கூடாது. அவ்வாறு வருகின்ற Customer களிடம் புதியதாக மற்றொரு Form-ல் மேற்சொன்ன தவறுகள் இல்லாமல் FII செய்து வருமாறு கூறி ஆதார் திருத்தம் மேற்கொள்ளவும். அவ்வாறு மேற்கொள்ளாமல் தவறுகள் உள்ள Form ஐ- Upload செய்தால் தரவு உள்ளீட்டாளரின் ID Blacklist செய்யப்படும்.

Gazetted Form Signature செய்பவரின் முழு விபரமும் சரியாக எழுதி இருக்க வேண்டும். பெயர், பதவி, முகவரி, தொலைபேசி எண்) ஆகிய அனைத்தும் சரியாக தெரியும் படி இருக்க வேண்டும். சரியாக இல்லாத நேர்வில் மீண்டும் சரியாக Fill செய்து வந்த பிறகு Upload செய்யுங்கள். அவ்வாறு FiIl செய்யாமல் Seal and Signature மட்டும் வைத்து Upload செய்து விடாதீர்கள். அவ்வாறு தவறுகள் உள்ள Form-ஐ Upload செய்தால் தரவு உள்ளீட்டாளரின் 1D Blacklist செய்யப்படும்.
Gazetted Form -ல் Customer Photo ஒட்டும் இடத்தில் கண்டிப்பாக Customer Photo மீது Gazetted officer Seal and Signature இருக்க வேண்டும். Photo மீது Seal and Signature இல்லாமல் இருந்தால் திருத்தம் செய்து , கொண்டுவருமாறு கூறவேண்டும். அதன் பின்னரே ஆதார் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு தவறுகள் உள்ள Form-ஐ Upload செய்தால் தரவு உள்ளீட்டாளரின் ID Blacklist செய்யப்படும்.

அனைவரும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் எடுக்க வேண்டும். யாரையும் எடுக்க முடியாது என்று திருப்பி அனுப்பக்கூடாது.

ஆதார் புதியதாக எடுக்கும் பொழுது மற்றும் திருத்தம் மேற்கோள்ளும் பொழுது அதற்குண்டான Proof and Document சரியாக Scan செய்ய வேண்டும். தவறாக Scan செய்துவிட்டால் தரவு உள்ளீட்டாளரின் ID Blackllst செய்யப்படும். அதாவது Empty Document or Paper, TC - Select செய்து விட்டு Mark sheet Scan செய்வது, இது போல மற்ற தவறான Document செய்து Upload செய்யக்கூடாது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் கண்டிப்பாக தரவு உள்ளீட்டாளரின் ID Blacklist செய்யப்படும்.




Mandatory Biometric பதிவு செய்ய வரும் வாடிக்கையாளர்களுக்கு (Demographic Update, Mobile No, Biometric ஆகிய அனைத்து சேவைகளுக்கும் எந்தவித கட்டணமும் வசூலிக்க கூடாது. மீறி கட்டணம் வதூல் செய்தது தெரியவந்தால் தரவு உள்ளீட்டாளரின் ID Blacklist செய்யப்படும்.

ஆதார் முகவரி திருத்தம் மேற்கொள்ள VAO Signed Proof வாங்க வேண்டாம். கிராம பஞ்சாயத்து தலைவரிடம் Sign வாங்கிக்கொண்டு வர சொல்லி பதிவினை மேற்கொள்ளலாம். VAO Proof செல்லாது. தவறும் பட்சத்தில் தரவு உள்ளீட்டாளர்களே முழு பொறுப்பாவதுடன் அவர்களது ID Blacklist செய்யப்படலாம்.

ஆதாரில் Mobile Number மட்டும் திருத்தம் செய்பவர்களுக்கு Online -ல் Updation Successfully என்று வந்துவிடும். இருந்தாலும் அவர்களுடைய Mobile Number-க்கு OTP வராது. அவ்வாறு உள்ள Customer-ன் ஆதார் திருத்தம் மேற்கொண்டதற்கான Receipt-ஐ சரியாக Scan செய்து Assistant Manager-இடம் அனுப்பி தகவல் தெரிவிக்கவும். பின்னர் தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பிரச்சனைகள் சரிசெய்யப்படும்.

Notary Public Signature -ஐ வைத்து எந்த ஆதார் திருத்தமும் மேற்கொள்ள முடியாது. எனவே அவ்வாறு கையொப்பம் வாங்கி வருகின்ற Customer-ன் பதிவுகளை மேற்கொள்ள வேண்டாம். தவறும் நேர்வில் தரவு உள்ளீட்டாளரின் ID Blacklist செய்யப்படும்.




கல்வி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை அனைவரின் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லுதல் குறித்த கல்வி தொலைக்காட்சி சிறப்பு அலுவலரின் செயல்முறைகள்...

 >>> கல்வி தொலைக்காட்சி சிறப்பு அலுவலரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஏழு நாட்களுக்குப் பிறகு வாட்ஸ் அப்பில் "தானாக மறைந்து போகும் செய்திகள்" ( Disappearing Messages) ON மற்றும் OFF செய்வது எப்படி?

 WhatsApp இல் Disappearing Messages; ON மற்றும் OFF செய்வது எப்படி?

வாட்ஸ்ஆப் சில நாட்களுக்கு முன்பு Disappearing Messages எனும் ஒரு புதிய அம்சத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது, இந்த அம்சம் இப்போது இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கிறது.

மறைந்துபோகும் மெசேஜஸ் 

வாட்ஸ்ஆப்பின் இந்த "மறைந்துபோகும் மெசேஜஸ்" அம்சம் ஒருமுறை இயக்கப்பட்டதும், குறிப்பிட்ட மெசேஜ் அனுப்பப்பட்ட நேரத்திலிருந்து ஏழு நாட்களுக்குப் பிறகு, அது மீடியா கோப்புகளாக இருந்தாலும் சரி, ஆடியோ கோப்புகளாக இருந்தாலும் சரி அல்லது சாதராண டெக்ஸ்ட் மெசேஜாக இருந்தாலும் சரி அது தானாகவே மறைந்துவிடும்.

இந்த புதிய வாட்ஸ்ஆப் அம்சமானது இப்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமின்றி iOS பயனர்களுக்கும் அணுக கிடைக்கிறது. இந்த புதிய வாட்ஸ்ஆப் அம்சத்தைப் பயன்படுத்த நீங்கள் முதலில் வாட்ஸ்ஆப்பை அதன் சமீபத்திய பதிப்பிற்கு அப்டேட் செய்ய வேண்டும். வாட்ஸ்ஆப்பின் மறைந்துபோகும் மெசேஜஸ் அம்சமானது iOS இல் வெர்ஷன் 2.20.121 உடன் வருகிறது, இது புதிய storage management tool மற்றும் mute a chat always போன்ற அம்சங்களையும் கொண்டுவருகிறது, Mute a chat always என்பது எப்போதுமே குறிப்பிட்ட ஒரு சாட்டை ம்யூட் செய்ய உதவுகிறது.

வாட்ஸ்ஆப்பின் Disappearing Messages அம்சத்தினை பயன்படுத்துவது எப்படி? (Android OS) 

வழிமுறை 01 : அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்ஆப்பை ஓப்பன் செய்யவும்.

வழிமுறை 02: நீங்கள் இந்த டிஸ்அப்பியரிங் மெசேஜஸ் அம்சத்தை இயக்க விரும்பும் காண்டாக்ட்-ஐ தேர்வு செய்ய, குறிப்பிட்ட காண்டாக்-ஐ திறக்கவும், அதாவது அவரக்ளின் ப்ரோபைலுக்குள் செல்லவும், அதாவது சாட்டிற்குள் நுழைந்து குறிப்பிட்ட காண்டாக்டின் பெயரை கிளிக் செய்யவும்.

வழிமுறை 03 : அங்கே டிஸ்அப்பியரிங் மெசேஜஸ் எனும் புதிய அம்சத்தினை என்க்ரிப்ஷன் விருப்பத்திற்கு மேலே காண்பீர்கள். அதை கிளிக் செய்து பின்னர் குறிப்பிட்ட அம்சம் சார்ந்த தகவலை படித்துவிட்டு தொடரவும்.

வழிமுறை 04 : டிஸ்அப்பியரிங் மெசேஜஸ் என்கிற விருப்பதிற்குள், இது இயக்கப்பட்டதும், குறிப்பிட்ட மெசேஜ் அனுப்பப்பட்ட நேரத்திலிருந்து ஏழு நாட்களுக்குப் பிறகு அது தானாகவே மறைந்துவிடும் என்கிற குறிப்பு இடம்பெறும் அதன் கீழே ஆன் மற்றும் ஆப் என்கிற இரண்டு விருப்பங்கள் அணுக கிடைக்கும். 


இந்த புதிய அம்சம் டீபால்ட் ஆகவே ஆப்-இல் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் நீங்கள் ஆன் என்கிற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அவ்வளவுதான்.

குறிப்பிட்ட விருப்பத்தை இயக்கிய பிறகு வாட்ஸ்ஆப் “நீங்கள் disappearing messages அம்சத்தினை இயக்கியுள்ளீர்கள். 7 நாட்களுக்குப் பிறகு சாட்டில் இருந்து புதிய மெசேஜ்கள் மறைந்துவிடும். இதை மாற்ற இங்கே கிளிக் செய்யவும்" என்கிற தகவல் குறிப்பிட்ட சாட்டில் அணுக கிடைக்கும்.

இந்த disappearing messages அம்சத்தினை நீங்கள் விரும்பும் போதெல்லாம் மாற்றுவதற்கான விருப்பமும் உங்களுக்கு இருக்கும். புதிய disappearing messages அம்சத்தை முடக்க மேற்குறிப்பிட்ட அதே செயல்முறையை மீண்டும் செய்யவும். ஆனால் கடைசியாக ஆன் என்பதற்கு பதில் ஆப் என்பதை கிளிக் செய்யவும். அவ்வளவுதான்.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இந்த அம்சம் இயக்கப்படும் போது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற செய்திகள் உள்ளிட்ட அனைத்து செய்திகளும் சாட்டிலிருந்து தானாகவே நீக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இருப்பினும், ஸ்மார்ட்போனில் சேமிக்கப்பட்ட மீடியா கோப்புகள் அப்படியே இருக்கும். forwarded அல்லது quoted மெசேஜ்கள் தானாக நீக்கப்படாது என்பதையும் பயனர்கள் கவனிக்க வேண்டும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LIC Website Wholely Changed to Hindi Language - “Should LIC give up business and impose Hindi..?” - Strengthening condemnations

 LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...