கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

07-12-2020 முதல் செயல்பட உள்ள இறுதியாண்டு மாணவர்களுக்கான கல்லூரி திறப்பு குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...

 07-12-2020 முதல் செயல்பட உள்ள இறுதியாண்டு மாணவர்களுக்கான கல்லூரி திறப்பு குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை எண்: 707, நாள்: 05-12-2020 வெளியீடு...

G.O.(Ms.) No.707, Dated: 05-12-2020...

>>> கல்லூரி திறப்பு குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை எண்: 707, நாள்: 05-12-2020 ...


இன்றைய செய்திகள் தொகுப்பு... 05.12.2020 (சனி)...

🌹நிறைய பேசிக் கொண்டிந்தவர் திடீரென்று அமைதியாகி விட்டார் என்றால் 

அவர் ஊமையாகி விட்டார் என்று அர்த்தம் இல்லை

இனி உங்களிடம் பேசக் கூடாது என்கிற அளவுக்கு நீங்கள் அவரை காயப்படுத்தி இருக்கின்றீர்கள்.!

🌹🌹ஒரே வார்த்தையில் எந்த உறவும் முறியலாம்.

ஆனால் ஓராயிரம் முறை மன்னிப்பு கேட்டாலும் மீண்டும் பழைய நிலைமைக்கு வராது.!!

🌹🌹🌹யாரையும் பார்த்து இவருக்கென்ன குறை என்று எடை போட்டு விடாதீர்கள்

இங்கு பல வலிகளோடு தான் வாழ்கிறார்கள் பலர்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍒🍒தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி 01-01-2021  நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு / பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய- தகுதி வாய்ந்தோர் பட்டியலை தயார் செய்தல்- விவரங்களை கோருதல் சார்பு-  பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு. DATE 04.12.2020

🍒🍒பட்டதாரி ஆசிரியர் பதவிக்குத் தகுதியானவர்களின் விவரங்களை அனுப்ப- பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவு

🍒🍒ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள ஊரகத்  திறனாய்வுத் தேர்வு (TRUST Exam) குறித்த அறிவிக்கை  வெளியீடு

🍒🍒Specific Concept Oriented programme ( SCOPE ) மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடத்துதல் சார்பு- மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் வெளியீடு.

🍒🍒 ஜனவரி முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதியுங்கள்: அனைத்து மாநில முதல்வர்களுக்கும் சிஐஎஸ்சிஇ கடிதம்

🍒🍒DGE - NTSE Exam - தேசிய திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 2020 - பள்ளிகளிடமிருந்து Summary Report - ஐ பெறுதல் - தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கக செய்தி வெளியீடு

தேசிய திறனாய்வு தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செலுத்த முடியாத பள்ளிகள் வங்கி வரைவோலையாக செலுத்தலாம் என அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் உத்தரவு

🍒🍒மாணவர்களுக்கு  "போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்" -கல்வி உதவித் தொகையை நிறுத்தக் கூடாது, முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.           

🍒🍒10,11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு "சட்டசபை தேர்தல்" முடிந்த பிறகு நடத்த திட்டம்

🍒🍒சிதம்பரம் நடராஜர் கோவில் உட்புறம் தண்ணீரில் மூழ்கியது

கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. வடிகால் வசதிகளை சரியான முறையில் தூர்வாராதால் தண்ணீர் வடிய வழியில்லை என  குற்றம்சாட்டு. 

🍒🍒மழை காரணமாக சென்னை உயர்நீதிமன்ற கம்யூட்டர் ஆப்ரேட்டர்,டைப்பிஸ்ட் பணிகளுக்கான

திறனாய்வு தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு.

நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கபட்டு இன்று டிசம்பர் 5ல் நடைபெற இருந்த நிலையில் மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

🍒🍒நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஹிந்தியில் பேசியதற்கு திமுக சார்பில் கலந்துகொண்ட திருச்சி சிவா எதிர்ப்பு.

அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இருக்கும் போது ஹிந்தியில் பேசினால் ஒன்றுமே புரியவில்லை என பிரதமரிடம் கோரிக்கை.

🍒🍒இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி ஒத்திவைப்பு 

தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஐசிசி அறிவிப்பு.                                                 

  🍒🍒ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி : 11 ரன்கள் வித்யாசத்தில் இந்திய அணி வெற்றி. 

தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி தமிழக வீரர் நடராஜன் அபார பந்துவீச்சு

🍒🍒சர்வதேச கிரிக்கெட்டில் ஆட்ட நாயகன் விருதை வென்ற முதல் Concussion Substitute என்ற சிறப்பினை பெற்றார் இந்திய வீரர் சாஹல்.

🍒🍒வேளாண் சட்ட எதிர்ப்பு: 

டிச. 8ம் தேதி அகில இந்திய முழு அடைப்பு போராட்டத்துக்கு டெல்லியில் போராட விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு

🍒🍒கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள், முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பது பற்றி பதிலளிக்க மத்திய, மாநில அரசுகள் வருகிற 7ந்தேதிக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

🍒🍒விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் உறுதி அளித்துள்ளார்.

🍒🍒அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் இந்தியாவை வலுப்படுத்தும் விதமாக அடுத்த ஆண்டில் பட்ஜெட் அமையும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

🍒🍒கொரோனா தடுப்பூசி நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என்று பிரான்ஸ் பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

🍒🍒ஓபிசி வகுப்பினருக்கான வருமான உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்திட வேண்டும் - மத்திய அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கடிதம்.

🍒🍒முகக்கவசம் அணியாதவர்கள் கரோனா சிகிச்சை மையத்தில் கட்டாயம் பணி செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

ஜனவரியில் பள்ளிகளை திறக்க வேண்டும் - சிஐஎஸ்சிஇ கடிதம்...

 மத்திய அரசின் பள்ளித் தேர்வு சான்றிதழ் கவுன்சில் மூலமாக 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த அமைப்பின்கீழ் நாடு முழுவதும் ஏராளமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகள் அனைத்திலும் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்புகளை நடத்தும் வகையில் ஜனவரி 4-ந் தேதிக்குள் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும் என்று இந்திய பள்ளி தேர்வு சான்றிதழ் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இது சம்பந்தமாக இந்த அமைப்பின் இயக்குநர் ஆராதோன், அனைத்து மாநில முதல் -மந்திரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

எங்கள் அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளிகள் அனைத்திலும் 10-வது, பிளஸ்-2 வகுப்புகள் ஜனவரி 4-ந் தேதிக்குள் திறக்க வேண்டும். தற்போது ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மாணவர்கள் உரிய விளக்கங்களை பெறுவதற்கும், புராஜெக்ட், பிராக்டிகல் செய்வதற்கும் பள்ளிகளை திறந்தால்தான் முடியும். எனவே குறிப்பிட்ட காலத்திற்குள் பள்ளிகளை திறக்க வேண்டும். அதேநேரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.

ஆசிரியர்களிடம் மாணவர்கள் நேரடியாக கேள்வி கேட்டு விளக்கங்களை பெற்றால் தான் அவர்கள் தேர்வுக்கு தயாராக முடியும்.

இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் ஏப்ரல், மே மாதத்தில் தேர்வுகளை நடத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த மாதங்களில் பொதுத் தேர்தல் ஏதேனும் குறுக்கிடுகிறதா என்பதை அறிவதற்காக தேர்தல் கமி‌ஷனிடமும் தகவல் கேட்கப்பட்டு இருக்கிறது.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி - Specific Concept Oriented Programme - ( SCOPE ) மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடத்துதல் சார்பு - மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்...

 ஒருங்கிணைந்த பள்ளி கல்வி - Specific Concept Oriented Programme - ( SCOPE ) மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடத்துதல் சார்பு - மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்...

>>> மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2020-21ஆம் கல்வியாண்டு - அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்ட வாரியான, பாட வாரியான காலிப் பணியிடங்கள் விவரம்...

 


2020-21ஆம் கல்வியாண்டில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பு ஊதியத்தில் நிரப்புதல் தொடர்பாக இயக்குனர் செயல்முறைகள்...

 2020-21ஆம் கல்வியாண்டில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பு ஊதியத்தில் நிரப்புதல் தொடர்பாக பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் செயல்முறைகள்...

>>> பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


01.01.2019 நிலவரப்படியான அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு/ பணி மாறுதலுக்கு தகுதியானோர் முன்னுரிமைப் பட்டியலில் உள்ள எஞ்சிய நபர்களின் விவரம்...

 01.01.2019 நிலவரப்படியான அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு/ பணி மாறுதலுக்கு  தகுதியானோர் முன்னுரிமைப் பட்டியலில் உள்ள எஞ்சிய நபர்களின் விவரம்...

>>> Click here to Download High School HM PANEL as on 01-01-2019...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...