கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து மற்றொரு ஆய்வு செய்யப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...

பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து மற்றொரு ஆய்வு செய்யப்படும் என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் கோபியில், அவர் கூறியதாவது: தமிழகத்தில் இந்த அரசு பொறுப்பேற்ற பின்தான், தேர்வு முறையில் ரேங்க் சிஸ்டம் குறைக்கப்பட்டது. மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே ரேங்க் சிஸ்டம் தற்போது இல்லை. நீட் தேர்வுக்காக, கடந்தாண்டில், 3,942 பேருக்காக, 96 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில், 17 ஆயிரத்து 820 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு இரண்டு கோடி ரூபாய் செலவாகும்.

கொரோனா சூழலில், 60 சதவீத பாடங்களை போதித்து, 40 சதவீத பாடத்தை குறைத்து கொள்ள முடிவு செய்தோம். ஆனால், கொரோனா சூழலில், நாட்கள் ஓடிக்கொண்டே உள்ளது. பள்ளியை திறக்க இயலவில்லை. எனவே, பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து மற்றொரு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

20 துறைகளில் உள்ள 52 பிரிவுகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை மறுசீரமைப்பு செய்ய உத்தரவு - டிசம்பர் 15க்குள் மறுசீரமைப்பு செய்து அறிக்கையை கருவூலத்துறைக்கு சமர்ப்பிக்க அறிவுறுத்தல்...

 





அரசு ஒதுக்கீட்டு பணியிடங்களில் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய கூடாது - தலைமை செயலாளர் எச்சரிக்கை...

 


சிறப்பு காலமுறை ஊதியத்தில் (Special Time Scale of Pay) பணியாற்றும் ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் CPS சந்தா தொகையை உடனடியாக நிறுத்தம் செய்ய நிதித்துறை சிறப்பு செயலாளர் கடிதம்...



 சிறப்பு காலமுறை ஊதியத்தில் (Special Time Scale of Pay) பணியாற்றும் ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் CPS சந்தா தொகையை உடனடியாக நிறுத்தம் செய்ய நிதித்துறை சிறப்பு செயலாளர் கடிதம்...

நிதித்துறை சிறப்பு செயலாளர் கடிதம் Letter No.57113/ Fin (PGC-I) / 2017-3, Dated: 31-10-2020...

>>> Click here to Download Finance Department Special Secretary Letter...


சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் CPS சந்தா தொகையை உடனடியாக நிறுத்தம் செய்ய அரசு தகவல் தொகுப்பு மைய ஆணையர் கடிதம்...

 சிறப்பு காலமுறை ஊதியத்தில் (Special Time Scale of Pay) பணியாற்றும் ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் CPS சந்தா தொகையை உடனடியாக நிறுத்தம் செய்ய அரசு தகவல் தொகுப்பு மைய ஆணையர் கடிதம்...

அரசு தகவல் தொகுப்பு மைய ஆணையர் கடிதம் ந.க. எண்: 4938/J/2019, நாள்: 23-11-2020...

>>> அரசு தகவல் தொகுப்பு மைய ஆணையர் கடிதம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வருமான வரி பிடித்தம் பழைய முறை - புதிய முறை ஒப்பீடு...( Comparison of Income Tax for F.Y. 2020-21 under Existing & New Regime...)

 Income Tax- 2020-21

வருமான வரி பிடித்தம் 2020-21ல் இரண்டு விதமாக கணக்கீடு செய்து கொள்ளலாம்.

Option-1 - Old Regime

👉Old Tax calculation

சென்ற வருடம் போலவே கணக்கீடு செய்து வரி பிடித்தம் செய்து கொள்ள்ளலாம்.

இதில் HRA, Housing loan interest, Professional Tax, Savings (Rs.1,50,000) and others போன்றவற்றை கழித்த பின்னர் வரும் தொகைக்கு (Taxable Income) வரி பிடித்தம் செய்யும் முறையாகும். 

Tax Rate for Taxable income

2,50,000 lakhs - Nil

2,50,001 to 5,00,000- 5%

5,00,001 to 10,00,000-20%

10,00,001 above - 30%

(If taxable income below 5 lakh Rebate u/s 87A 12,500 eligible)


Option-2 New Regime

👉புதிய முறையில் மொத்த வருமானத்தில் எந்த கழிவும் செய்யக் கூடாது.

Tax for Gross income

2,50,000 lakhs - Nil

2,50,001 to 5,00,000- 5%

5,00,001 to 7,50,000-10%

7,50,001 to 10,00,000-15%

10,00,001 to 12,50,000- 20%

12,50,001 to 15,00,000-25%

15,00,001 Above- 30%

👉மேற்கண்ட இரண்டு முறையிலும் கணக்கீடு செய்து பாருங்கள். எதில் வரி குறைவாக வருகிறதோ அதை எடுத்துக் கொள்ளலாம்.

👉மார்ச்-20 to பிப்-21 சம்பளம் மற்றும் ஊதிய நிலுவையை கூட்டி வருமான வரி கணக்கீடு செய்யுங்கள்.

👉 இது வரை சம்பளத்தில் பிடித்தம் செய்தது போக மீதி வரும் வரியை  டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி  மாதத்தில் பிடித்தம் செய்யலாம்.

>>> Click here to Download Ready Reckoner - Comparison of Income Tax for F.Y. 2020-21 under Existing & New Regime...


வருமான வரி - ஊதியத்தில் பிடித்தம் செய்தல் - Challan மூலம் செலுத்துதல் - குறித்த தகவல்கள்...

Challan மூலம் வருமான வரி செலுத்த உள்ளீர்கள் எனில், ஒரு நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே, இந்த நிதி ஆண்டில் நமக்கு தோராயமாக எவ்வளவு ஊதியம் வரும் என்பதை கணக்கிட்டு, அதற்கான தோராயமான வருமான வரியையும் கணக்கிட்டு, கீழ்க்கண்ட தேதிக்குள், குறிப்பிடப் பட்டுள்ள சதவீத வரித் தொகையை Advance Tax ஆக கட்ட வேண்டும்.

  • June 15 க்குள்- 15%
  • September 15க்குள் - 45%
  • December 15 க்குள்- 75 %
  • March 15 க்குள்- 100%

கட்டத் தவறினால், வருமான வரி சட்ட எண் 234 b & 234 c இன் படி, E-filing செய்யும் பொழுது, வருமான வரித் துறை இணைய தளம் வட்டியை கணக்கிட்டு காண்பிக்கும்.

இந்த வட்டியை தனியாக செலுத்திய பின்னரே, e-filing செய்ய முடியும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

 உதாரணமாக ரூ.50000 வருமான வரியை பிப்ரவரி மாதம் Challan மூலம் செலுத்தியவர்களுக்கு தோராயமாக ரூ.2,500/- Penalty வருகிறது.

ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்பவர்களுக்கு E-filing செய்யும்பொழுது இந்த Penalty தொகை வருவதில்லை.

இதனை தவிர்க்க வருமான வரியை முன்கூட்டியே திட்டமிட்டு, மேற்கண்ட தேதிக்குள் வரியை ஊதியத்தில் பிடித்தம் செய்வது நல்லது.

இயன்ற வரை ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்யுங்கள். 

தற்போது வரை பிடித்தம் செய்யாதவர்கள், தோராயமாக கடந்த ஆண்டு வருமான வரி தொகையை 3ஆகப் பிரித்து இம்மாதம் முதல் பிடித்தம் செய்ய தொடங்கலாம். பிப்ரவரி மாதம் கணக்கீடு செய்தபின் பிடித்தம் செய்து கொள்ளலாம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...