கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழகத்தில்‌ உள்ள 13 பல்கலைக்கழகங்களில் நடப்பு செமஸ்டருக்கான ஆன்லைன் தேர்வு கால அட்டவணை வெளியீடு...

 தமிழகத்தில்‌ உள்ள 13 பல்கலைக்கழகங்களில் நடப்பு செமஸ்டருக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த தேர்வுகள்‌ அனைத்தும்‌ ஆன்லைன்‌ மூலமாகவே நடக்க இருக்கிறது.

தேதிகளை பயிலும் கல்லூரியில் உறுதிப்படுத்திக் கொள்ளவும்...


🎯அண்ணா பல்கலைக்கழகம்‌ -

02.1.2021 முதல்‌ 20.1.2021 வரை,


🎯அண்ணாமலை பல்கலைக்கழகம்‌ - 10.12.2020 முதல்‌ 26.12.2020 வரை,


🎯அழகப்பா பல்கலைக்கழகம்‌ - 12.12.2020 முதல்‌ 20.12.2020 வரை,


🎯பாரதியார்‌ பல்கலைக்கழகம்‌ - 23.12.2020 முதல்‌ 31.12.2020 வரை,


🎯பாரதிதாசன்‌ பல்கலைக்கழகம்‌ -09.12.2020 முதல்‌ 24.12.2020 வரை,


🎯சென்னை பல்கலைக்கழகம்‌ - 21.12.2020 முதல்‌ 6.1.2021 வரை,


🎯மதுரை காமராஜர்‌ பல்கலைக்கழகம்‌ -14.12.2020 முதல்‌ 31.12.2020 வரை,


🎯மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்கழகம்‌ - 14.12.2020 முதல்‌ 31.12.2020 வரை,


🎯அன்னை தெரசா மகளிர்‌ பல்கலைக்கழகம்‌ - 16.12.2020 முதல்‌ 23.12.2020 வரை,


🎯பெரியார்‌ பல்கலைக்கழகம்‌ - 21.12.2020 முதல்‌ 31.12.2020 வரை,


🎯திருவள்ளுவர்‌ பல்கலைக்கழகம்‌ - 14.12.2020 முதல்‌ (அனைத்து தேர்வுகளையும்‌ முடிக்க 23 வேலை நாட்கள்‌ தேவை) 


🎯தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்‌ - 17.12.2020 முதல்‌ 31.12.2020 வரை,


🎯தமிழ்நாடு ஆசிரியர்‌ கல்வியியல்‌ பல்கலைக்கழகம்‌ - 16.12.2020 முதல்‌ 31.12.2020 வரை.

TEACHERS WANTED - For CBSE & MATRIC SCHOOLS, ALSO WANTED OFFICE STAFF...

 


TEACHERS WANTED - Last Date To Apply: December 14...

 


ஆசிரியர்கள் தேவை (Aided School) - இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், சிறப்பு ஆசிரியர்...

 ஆசிரியர்கள் தேவை - இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், சிறப்பு ஆசிரியர்...



இன்றைய செய்திகள் தொகுப்பு... 08.12.2020 (செவ்வாய்)...

 🌹கேட்டால் மட்டுமே கொடுங்கள் 

பணமோ அல்லது பாசமோ 

இலவசமாக கொடுக்கப்படும் எதுவாயினும் ஒருநாள் உதாசீனம் செய்யப்படும்.!

🌹🌹அதிகாரம் செய்யும் இடத்தில் இருந்தாலும்,அன்பாய் பேசுங்கள்.

அதிகார போதையில் வாழ்ந்தவர்களை விட,

வீழ்ந்தவர்களே இங்கு அதிகம்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌄🌄தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் சென்ற ஆண்டு கொடுத்த பஸ் பாஸை பயன்படுத்தலாம்.

🌄🌄அரசுத் தேர்வுகள் இயக்ககம் - கல்வி மாவட்டம் மாறியுள்ள பள்ளிகளின் விபரங்களை அனுப்பி வைக்கக் கோரி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு                        

🌄🌄அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனிலேயே நடைபெறும் என அறிவிப்பு.

🌄🌄SPD  - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி-2020-21 ஆம் ஆண்டிற்கான “பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு ” (Shaala Siddhi) உட்கூறு சார்ந்த - சுயமதிப்பீடு மற்றும் புறமதிப்பீடு (Self and External Evaluation) - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

🌄🌄இன்று நடைபெற இருந்த CA தேர்வு ஒத்திவைப்பு

🌄🌄DGE - புதிதாக தயாரிக்கப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அதனை சார்ந்த மாவட்ட கல்வி அலுவலகங்களின் பட்டியல் - அரசு தேர்வு இயக்குநர் உத்தரவு                                             

🌄🌄வரும் டிச.9ந்தேதி வரை பருவமழை இருப்பதால் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்- கல்வி அமைச்சர்  செங்கோட்டையன் பேட்டி.

🌄🌄கல்லூரி மாணவர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31ஆம் தேதி வரை கால நீட்டிப்பு

🌄🌄புதிய பள்ளிகள் தொடங்க மாவட்ட வாரியாக பட்டியல் தயாரிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.

🌄🌄நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் பதவி உயர்வு வழங்க கோரிக்கை

🌄🌄வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் பட்டதாரிகள் பெயரை பதிவு செய்துகொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

🌄🌄உண்டு உறைவிட பள்ளிகளில் இடைநிலை பட்டதாரி முதுகலை ஆசிரியர்கள் நியமனம் இயக்குனர் உத்தரவு

🌄🌄கொரோனா குறைகிறது என சாதாரணமாக எண்ணிவிடக் கூடாது : அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

🌄🌄இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கோரி ஃபைசர் நிறுவனம் விண்ணப்பம்

🌄🌄"விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்"

திமுக துணை பொதுச் செயலாளர்  ஐ.பெரியசாமி MLA  பிரச்சார பயணம் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார்  தலைமையில் பிரச்சாரம் துவங்கியது

பழனி அடிவாரம் பாத விநாயகர் கோயிலில்   ஐ. பெரியசாமி அவர்கள் சாமி தரிசனம்  செய்தபின்பு பொதுமக்களை சந்தித்து உரையாடினார்.

🌄🌄திமுக ஆட்சிக்கு வரவேண்டும், மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் 

திமுக எம்.பி. கனிமொழி

🌄🌄போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு                                                                              

🌄🌄கொரோனா பாதிப்பு இல்லாத பக்தர்கள் மட்டுமே திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சனிப்பெயர்ச்சிக்கு காரைக்கால் வரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என கூறினார்.

🌄🌄நான் அறிக்கை நாயகன் என்றால், முதல்வர் பழனிசாமி ஊழல் நாயகன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

👉யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும், பிறகு கருத்து தெரிவிக்கிறேன் என கூறினார்.

👉மேலும் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தை ஒடுக்க முயற்சி செய்த தமிழக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக குரல் கொடுத்து இருந்தது.வேளாண் சட்டத்துக்கு எதிராக திமுக வாக்களித்தது என கூறினார்

🌄🌄புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான பூமி பூஜை நடத்தினாலும் கட்டுமான பணியை தொடங்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

👉முன்னதாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் அமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. நாடாளுமன்ற கட்டடம் குறித்த வழக்கு நிலுவையில் இருக்கும் பொது கட்டுமானங்களை தொடங்குவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளது. கட்டுமானங்கள் நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த சொலிசிட்டர் ஜெனரலுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல். டிசம்பர் 10 -ல் புதிய நாடாளுமன்ற கட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ள நிலையில் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

🌄🌄புதிய கட்சி தொடங்கவுள்ள நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய சகோதரர் சத்யநாராயணாவிடம் ஆசி பெற்றார்

🌄🌄அரசுப் பணிகளை ஒழுங்குமுறை படுத்துவதில் உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியீடு

🌄🌄திமுகவோடு கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டேன் என ரஜினி சொன்னதாக எனக்கு தகவல் வரவில்லை

தமிழருவி மணியனை தவறாக அருகில் வைத்துக்கொண்டுவிட்டோமே என ரஜினி சொன்னதாகதான் எனக்கு தகவல் வந்துள்ளது.

- மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்

🌄🌄புயல் பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக இன்று கடலூர் மாவட்டத்திலும், நாளை திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத்திலும் முதலமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.

🌄🌄SC, ST & SCA பிரிவினருக்கான மருத்துவக் கலந்தாய்வு.

வரும் 11 முதல் 14-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.

பெரும்பாலான இடங்கள் ஒதுக்கப்பட்டு விட்டதால், கலந்தாய்வில் பங்கேற்றால் இடம் கிடைக்கும் என்று உறுதியளிக்க முடியாது.

- மருத்துவக் கல்வி இயக்ககம்.

🌄🌄அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணிக்க தமிழக அரசு அனுமதி 

-அரசாணை வெளியீடு

🌄🌄சுற்றுலாத் தளங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என்று அறிவித்த நிலையில் அதற்கான நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.

🌄🌄மத்தியப்பிரதேச மாநிலத்தில் 2021 மார்ச் வரை 1 - 8 வகுப்பு  மாணவர்களுக்கு  பள்ளிகளை திறக்கவும், தேர்வுகளை நடத்தவும் தடை : 10 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த அனுமதி.

🌄🌄அரசின் ஒதுக்கீட்டு பணியிடங்களில் தற்காலிக பணியாளர்களை பணியமர்த்தக் கூடாது . விதிகளை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை செயலாளர் சண்முகம் எச்சரிக்கை. 

🌄🌄நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் கல்வித்துறை முதன்மை செயலர் அபூர்வா, அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் நேரில் ஆஜராகினர்.

🌄🌄கல்வி உதவித் தொகை 2020-2021 – புதுப்பித்தல் ( Renewal ) விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விரைந்து முடிக்க  கல்வி நிலையங்களுக்கு அறிவுறுத்தல்.

🌄🌄TN EMIS New Version update Available - கற்போம் எழுதுவோம் இயக்கம் வருகைப் பதிவு முறை அறிமுகம் 

🌄🌄தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தமிழகத்தில் வாய்ப்பு வழங்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

🌄🌄பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு; கச்சா எண்ணெய் விலையை உயர்த்த சவுதி அரேபியா திட்டம்: இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை உயர வாய்ப்பு.

🌄🌄கரோனா நோய் நெருக்கடி காரணமாக உலகம் முழுவதும் வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டக்கூடும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.

🌄🌄பிரிட்டனில் Pfizer, BioNTech நிறுவனங்கள் தயாரித்துள்ள COVID-19 நோய்த்தொற்றுத் தடுப்பு மருந்து விநியோகம் இந்த வாரம் தொடங்கவுள்ளது. அந்தத் தடுப்பு மருந்தைப் பெரிய அளவில் பயன்படுத்தவிருக்கும் முதல் நாடு பிரிட்டன். 

🌄🌄ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியது. முதல்கட்டமாக மருத்துவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட நோய்த்தொற்று அபாயம் அதிகம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

🌄🌄ஓராண்டாக நடைபெற்று வந்த எவரெஸ்டின் உயரத்தை அளவிடும், பணியின் முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளன. 8,848 மீட்டர் உயரத்துடன், உலகின்  உயரமான சிகரமாக எவரெஸ்ட் கருதப்படுகிறது.

🌄🌄அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜோ பைடன், தன்னுடைய நிர்வாகம் அமைச்சரவையிலும், வெள்ளை மாளிகையிலும், இருந்ததைவிட மிகவும் மாறுபட்டதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

🌄🌄2021 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது கூகுள் பே, போன்பே மூலம் பணம் அனுப்பவும் 30 சதவீதம் கட்டணம்.

🌄🌄 டெட் தேர்வு அறிவிப்பு எப்போது? - தேர்வாளர்கள் எதிர்பார்ப்பு.

🌄🌄இன்று டிசம்பர் 8 முழு கடை அடைப்பு போராட்டம்

இது கடை அடைப்புக்காக அல்ல விவசாயிகளின் வாழ்வு அனைந்து போய் விட கூடாது என்பதுக்காக

வியாபாரிகள் இன்று டிசம்பர் 8 கடை அடைத்தால் உங்கள் கடை வாசலில் எழுதி ஒட்டுங்கள் என் ஆதரவு விவசாயிகள்ளுக்காக 

நாடு தழுவிய முழு அடைப்பு - பாதுகாப்பை பலப்படுத்தி அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

சென்னையில் இன்று 7000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

🌄🌄பொதுமக்களே ஊழல் வாதியாக மாறிவிட்டனர்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

அரசுப் பணியாளர்கள் சொத்துகள் வாங்கும் பொழுது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்...

அரசுப் பணியாளர்கள் தங்களது பெயரிலோ, தங்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை வாங்குவது, விற்பனை செய்வது, மற்றும் காலிமனை வாங்கும் போது அதற்கு உண்டான நிதி ஆதாரங்களை சமர்பிப்பது போன்ற விதிமுறைகளை அரசுப் பணியாளர்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973 விதி எண் 7-ல் சொல்லப்பட்டதைப் பார்ப்போம்.


அசையும், அசையா மற்றும் விலை மதிப்புள்ள சொத்துக்கள் விதி (Movable, Immovable and Valuable Property)

(அ) அரசு பணியாளர் எவரும் தங்களுடைய பெயரிலோ, தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ, உரிய அலுவலருக்கு அறிவிக்காமல் குத்தகை அடைமானம் வாங்குதல் விற்பனை பரிசில் பரிமாற்றம் அல்லது பிற வழிகளில் இடம் பெயராச் சொத்து எதையும் பெறவோ தீர்வு செய்யவோ கூடாது.

அரசுப் பணியாளருடைய நிதி ஆதாரங்களிலிருந்து அவருடைய குடும்ப உறுப்பினர் எவராலும் பெறப்படும் ஏதேனுமொரு இடம் பெயராச் சொத்துக்கும் அத்தகையதொரு அறிவிப்பு தேவைப்படுவதாகும்.

மேலும், இந்நடவடிக்கையானது அரசு பணியாளருடனான அலுவல்முறைத் தொடர்பு கொண்டுள்ளவருடனான நடவடிக்கையெனில் உரிய அதிகாரியின் முன் ஒப்பளிப்புப் பெறப்பட வேண்டும்.

இருப்பினும், அரசால் அரசுப் பணியாளருக்கு வீட்டுமனை உரிமை மாற்றம் செய்யப்படும் நேர்வில் அந்த இடம்பெயராச் சொத்தினை பெற உரிய அதிகாரியின் முன் ஒப்பளிப்புத் தேவையில்லை.

விளக்கம்:- இடம்பெயராச் சொத்தானது தொடர்புடைய அரசுப் பணியாளருடைய நிதி ஆதாரங்களிலிருந்து பெறப்படாத நேர்வில், தன்னுடைய குடும்ப உறுப்பினர்களால் இடம் பெயராச் சொத்துகள் கையகப்படுத்தப்படுதற்கு அல்லது தீர்வு செய்யப்படுவதற்கு அந்த அரசுப் பணியாளர் உரிய அதிகாரிக்கு அறிவிக்கவோ உரிய அதிகாரியின் முன் அனுமதியைப் பெறவோ தேவையில்லை. [அரசாணை எண். 409 ப. 9(ம) நி.சீ.துறை நாள். 24.12.1992 (G.O.Ms.No.409, P&AR dated 24.12.92) இல் சேர்க்கப்பட்டது.]


(ஆ. ஒரு வீட்டைக் கட்டுவதற்கு அல்லது விரிவுப்படுத்துவதற்கு அல்லது உடைமையாக்கிக் கொள்வதற்கு அரசுப் பணியாளர் ஒவ்வொருவரும் உரிய அதிகாரிக்கும் பின்வரும் முறையில் அறிவிக்க வேண்டும்.


அரசிடமிருந்து அல்லது மற்றவர்களிடமிருந்து கடன் அல்லது முன்பணம் அல்லது பொதுவைப்பு நிதியிலிருந்து பகுதி இறுதி பெறுகையைத் கொண்டு வீடு கட்டுவதற்கு அல்லது விரிவுபடுத்துவதற்கு அல்லது உடைமையாக்கிக் கொள்வதற்கான நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன் அவர் நேர்வுக்கேற்ப உரிய அதிகாரியின் முன் ஒப்பளிப்பினைப் பெற வேண்டும்.

கட்டுமானம் அல்லது விரிவாக்கம் முடிந்ததும், அவர் உரிய அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும்.

இயலுமிடத்து, இவ்விவரங்கள் அளிக்கப்பட வேண்டும். இருப்பினும், விவரங்களை அளிக்க இயலாதவிடத்து கட்டடம் எழுப்பப்பட்டுள்ள அல்லது எழுப்பக் கருதப்பட்டுள்ள பரப்பளவையும், கட்டடத்தின் மதிப்பீட்டுச் செலவு விவரத்தையும் அரசுப் பணியாளர் குறிப்பிட வேண்டும்.


(இ) கூட்டு நிதியிலிருந்து பிரிக்கப்படாத கூட்டுக் குடும்பச் சொத்துக்களின் பழுதுபார்ப்பு செலவில், இந்து கூட்டு குடும்ப உறுப்பினராகவுள்ள அரசுப் பணியாளரின் பங்கானது ரூ.50,000/-க்கு மிகையாகும் போது அப்பழுதுபார்ப்புகள் தன்னுடைய கவனத்திற்கு வரும்போதெல்லாம் அரசுப்பணியாளர் அவ்விவரத்தை உரிய அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். [அரசாணை எண். 39 ப. 9(ம) நி.சீ.துறை நாள். 9.3.2010 (G.O.Ms.No.39, P&AR dated 9.3.2010) இல் சேர்க்கப்பட்டது.]


A. அரசுப் பணியாளர் எவரும் அரசு நிலங்களை அத்துமீறி கைப்பற்றக்கூடாது.


A- தொகுதி அலுவலர்களைப் பொறுத்து ரூ.80,000, B-தொகுதி அலுவலர்களை பொறுத்த ரூ.60,000, C-தொகுதி அலுவலர்களைப் பொறுத்து ரூ.40,000 மற்றும் D-தொகுதி அலுவலர்களைப் பொறுத்து ரூ. 20,000 ரூபாய்க்கு மேற்பட்ட விலைமதிப்புள்ள இடம் பெயர் சொத்துத் தொடர்பான விற்றல் வாங்கல் நடவடிக்கையில் ஈடுபடும் அரசுப் பணியாளர் அத்தகு நடவடிக்கை ஒவ்வொன்றும் நடைபெற்ற நாளிலிருந்து ஒரு திங்களுக்குள் இது குறித்த விவரத்தை உரிய அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும்.


மேலும், அந்நடவடிக்கையானது அரசுப் பணியாளருடன் அலுவல்முறைத் தொடர்பு கொண்டுள்ளவருடனானது எனில் உரிய அதிகாரியின் முன் அனுமதி பெறப்பட வேண்டும். இருப்பினும், தன்னுடைய அலுவல் சார்ந்த அதிகாரியின் எல்லையிலிருந்து வெளியேறவுள்ள அரசுப் பணியாளர், உரிய அதிகாரிக்குத் தெரிவிக்காமல், தன்னுடைய இடம் பெயர் சொத்து எதையும் அவற்றின் பட்டியல்களைப் பொதுவான முறையில் பொதுமக்களிடையே சுற்றறிக்கை விடுவதன் மூலம் அல்லது பொது ஏலத்தில் விற்பனை செய்தவன் மூலம் தீர்வு செய்யலாம்.


இந்த உள் விதியின் நோக்கங்களுக்கான ‘இடம் பெயர் சொத்து” என்னும் சொற்றொடரானது பின்வரும் சொத்துகளை உள்ளடக்கியதாகும். அவையாவன:-


(அ) நகைகள், ஈட்டுறுதி ஆவணங்கள், பங்குகள், பிணையங்கள் மற்றும் கடனீட்டு ஆவணங்கள்.


(ஆ) சீருந்து, மிதி இயக்கிகள், குதிரைகள் அல்லது பிற வகை ஊர்திகள்


(இ) குளிர்பதனிகள், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் காணொலி பதிவுக் கருவிகள் (VCR)


ஒப்பளிப்பு / அனுமதி வேண்டி அரசுப் பணியாளரிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பத்தினை உரிய அதிகாரியானவர், அவ்விண்ணப்பம் பெறப்பட்ட நாளிலிருந்து ஆறு மாத கால அளவுக்குள் தீர்வு செய்ய வேண்டும். விளக்கங்கள் அல்லது விவரங்கள் எவையேனும் அரசுப் பணியாளரிடம் கேட்கப்பட்டிருந்தால், மேற்கூறப்பட்ட ஆறு திங்கள் கால அளவென்பது கேட்கப்பட்ட விளக்கங்கள் அல்லது விவரங்கள் பெறப்பட்ட நாளிலிருந்து கணக்கிடப்படும். அவ்வாறான ஒப்பளிப்பு அல்லது அனுமதி அளிப்பு ஆணை எதுவும் மேற்குறிப்பிடப்பட்ட ஆறு மாத கால அளவுக்குள் அளிக்கப்படவில்லையெனில், மேற்குறிப்பிடப்பட்ட ஆறு மாத கால அளவு முடிந்தவுடன் உரிய அதிகாரி தனது ஒப்பளிப்பினை வழங்கியதாக அல்லது அனுமதியளித்ததாக கருதி, இடம் பெயராச் சொத்தினை பெறலாம் அல்லது விற்பனை செய்யலாம். இடம் பெயர் சொத்தினை வாங்கலாம் அல்லது விற்கலாம் அல்லது வீட்டின் கட்டுமான/ விரிவாக்கப் பணியினை தொடங்கலாம்.


அரசுப் பணியாளர் ஒவ்வொருவரும் பின்வருவன தொடர்பில் முழுமையான விவரங்களுடன் 31.12.1980ஆம் நாளன்று உள்ளவாறான சொத்துகள், கடன் பொறுப்புகள் குறித்த விவர அறிக்கையினை 31.3.1981 ஆம் நாளன்றோ அதற்கு முன்போ அளிப்பதுடன் அதன் பிறகு ஐந்தாண்டுகளுக்கொருமுறை, அவ்வறிக்கைக்குத் தொடர்புடைய ஆண்டுக்கு மறு ஆண்டு மார்ச் மாதம், 31-ஆம் நாளன்றோ அதற்கு முன்போ அளிக்க வேண்டும்.


(அ) தமக்கு மரபுரிமையாகக் கிடைத்த அல்லது தமக்கு சொந்தமான அல்லது அடையப்பெற்ற அல்லது குத்தகை அல்லது அடமானம் மூலம் தமது பொறுப்பிலுள்ள, தன்னுடைய குடும்ப உறுப்பினரின் அல்லது மற்றொருவரின் பெயரில் உள்ள இடம் பெயராச் சொத்து.


(ஆ) தமக்கு மரபுரிமையாகக் கிடைத்த அல்லது இதே போன்று சொந்தமான, அடையப்பெற்ற அல்லது தம் வசமுள்ள பங்குகள், கடனீட்டு ஆவணங்கள் மற்றும் வங்கி வைப்புகள் உட்பட ரொக்கம்.


(இ) தமக்கு மரபுரிமையாகக் கிடைத்த அல்லது இதே போன்று சொந்தமான, பெறப்பட்ட அல்லது தம் வசமுள்ள பிற இடம் பெயர் சொத்து.


(ஈ) நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ தம்மால் ஏற்பட்ட கடன்கள் மற்றும் பிற கடன் பொறுப்புகள்.


மேலும், அரசுப்பணியாளர் ஒவ்வொருவரும் தாம் எந்தவொரு பணிக்கேனும் அல்லது பணியிடத்திற்கேனும் முதலில் நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதத்திற்குள் தாம் பணியில் சேர்ந்த காலத்தில் தமக்கிருந்த சொத்துகள் மற்றும் கடன்கள் பற்றிய விவர அறிக்கையினை மேற்கண்ட படிவங்களில் அளிக்க வேண்டும். அதன் பின்னர் மேலே குறிப்பிடப்பட்டவாறு, தமது முதல் நியமனத்தின்போது தமது சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவர அறிக்கை அளிக்கப்பட்டு ஐந்தாண்டுகள் முடிவடையாத நிலையிலும் காலமுறைப்படி சொத்துகள் மற்றும் கடன்கள் விவர அறிக்கையை அளிக்க வேண்டும்.


இருப்பினும், அரசுப் பணியாளர் ஒவ்வொருவரும் ஐந்தாண்டுகள் இடைவெளிகளில், ஆண்டுதோறுமான தன்னுடைய சொத்துகள் மற்றும் கடன்கள் பற்றிய விவர அறிக்கையினை அளித்த பின்னர், தன்னுடைய வயது முதிர்வு ஓய்வு நாளுக்கு முந்தைய கடந்த ஐந்தாண்டுகளுக்கான தன்னுடைய ஆண்டுதோறுமான சொத்துகள் மற்றும் கடன்கள் பற்றிய விவர அறிக்கையினை உரிய அதிகாரிக்கு அளித்தல் வேண்டும்.


இருப்பினும், உரிய அதிகாரியானவர், அரசுப் பணியாளர்களிடமிருந்து அத்தகைய அறிக்கைகள் பெறப்பட்ட நாளிலிருந்து இரு மாதத்திற்குள், அவர்களுடைய சொத்துகள் மற்றும் கடன்கள் பற்றிய முந்தைய விவர அறிக்கை நாளுக்கு பிறகு அனுமதியளிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை மறு ஆய்வு செய்து நேர்வுக்கேற்ப முந்தைய ஐந்தாண்டுகளில்/ ஆண்டுதோறும் அளிக்கப்பட்ட அறிக்கைகளுடன் அவை ஒத்திசைவாக உள்ளனவா என்பதை சரிபார்க்க வேண்டும். [(அரசாணை எண்.149. ப (ம) நி.சீ.துறை நாள்.15.3.1996 (Added vide G.O.Ms.No.149, P&AR (A) Dept., dt.15.3.96)இல் சேர்க்கப்பட்டது)]


எடுத்துக்காட்டு: 1980 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 25ஆம் நாளன்று பணியில் சேர்ந்தவர். தமது முதல் நியமன நாளன்று உள்ளபடியான தமது சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவர அறிக்கையினை 25.4.1980-க்கு முன்னர் அளிக்க வேண்டும். அதன் பின்னர் அறிக்கைகளை 31.12.1980, 31.12.1985, 31.12.1990 நாளின்படியான சொத்துக்கள், பொறுப்புகள் ஆகியவற்றுக்கான விவர அறிக்கையினை 31.3.1981, 31.3.1986, 31.3.1991 ஆம் நாளன்றோ அவ்வாறே தொடர்ந்து அளிக்க வேண்டும்.


விளக்கம்:- எல்லா அறிக்கைகளிலும் ரூ.50,000/-க்குக் குறைந்த விலை மதிப்புடைய இடம் பெயர் சொத்துகளின் மதிப்புத் தொகையாவும் ஒன்றாகக் கூட்டப்பட்டு ஒட்டுமொத்தத் தொகையாகக் காண்பிக்கப்பட வேண்டும். துணிகள், பாத்திரங்கள், மண்பாண்டங்கள், புத்தகங்கள் முதலிய அன்றாடப் பயன்பாட்டிற்குரிய பொருள்களின் விலை மதிப்புகள் அவ்விவர அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டியதில்லை. அரசு பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்களுடைய சொந்த ஆதாரங்களின் மூலம் இடம் பெற்ற இடம் பெயர் மற்றும் இடம் பெயராச் சொத்துகளின் விவரங்கள் இவ்விவர அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டியதில்லை. [ (அரசாணை எண். 39 ப(ம) நி.சீ. துறை நாள். 09.03.2010), அரசாணை எண். 409 ப(ம) நி.சீ. துறை நாள். 14.12.1992)]


(3A) உள்விதி (3)-இல் குறிப்பிடப்பட்டுள்ள இவ்விவர அறிக்கையினை மறைவடக்க ஆவணமாகக் (secret document) கொள்ள வேண்டும். 10-ஆவது விதியின் காப்புரைகள் இயன்றவரையில் இவ்விவர அறிக்கைக்கும் பொருந்தும்.


(4)அரசு மற்றும் ஆவணக்குழு எதுவும் அல்லது இதன்பொருட்டு அவற்றால் அதிகாரமளிக்கப்பட்டுள்ள அலுவலர் எவரும் அல்லது உரிய அதிகாரி ஒருவர் அரசு பணியாளர் அல்லது அவருடைய குடும்ப உறுப்பினர் எவரும் உடைமையாகக் கொண்டிருக்கும் அல்லது தேடிக் கொண்டிருக்கும் இடம் பெயர் அல்லது இடம் பெயராச் சொத்துப் பற்றிய அனைத்து முழு அறிக்கையினை ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறிப்பிடப்பட்டுள்ள கால அளவுக்குள் அளிக்குமாறு எத்தருணத்திலும் பொது அல்லது சிறப்பு ஆணை மூலம், கேட்டுக் கொள்ளலாம். அரசால் அல்லது ஆணைக்குழுவால் அல்லது இதன்பொருட்டு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அலுவலரால் அல்லது உரிய அதிகாரியால் வேண்டப்பட்டால் அச்சொத்து அடையப் பெற்றமைக்குரிய வழிவகை அல்லது ஆதாரம் பற்றி விவரம் அவ்விவர அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டும்;.


மேலும், குறிப்பிட்ட ஊழல் விசாரணை ஒன்றுக்கு சொத்து விவர அறிக்கை தேவைப்பட்டால் உரிய அதிகாரி, அதனைப் பெற உள்விதியின் கீழ் அதிகாரத்தைப் பயன்படுத்தலாம்.


(5) (அ) இவ்விதியின் நோக்கங்களுக்காக ‘உரிய அதிகாரி” எனப்படுவர்.


(i) துறைத்தலைவர் நேர்வில் ‘அரசு’


(ii) (அ) மாவட்ட ஆட்சியர் அனைவரும்.


(ஆ) மாவட்ட நீதிபதிகள்


(இ) மாவட்டக் குற்றவியல் நீதிபதிகள்


(ஈ) சென்னை மாநகர் உரிமையியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி


(உ) தலைமை நீதிபதி, சிறுவழக்குகள் நீதிமன்றம், சென்னை.


(ஊ) மாநகர முதன்மை நீதிபதி, சென்னை


(எ) தங்கள் நிருவாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ‘இ” மற்றும் ‘ஈ” பிரிவைச் சார்ந்த அரசு பணியாளர்களை பொறுத்தவரையில் மாநகரிலுள்ள (அலுவல் முறையிலான ஒப்படை பெற்றவர் நீங்கலாக) சட்ட அலுவலர்கள் அனைவரும்.


(iii) மாவட்டங்களிலுள்ள நில அளவை மற்றும் பதிவுருக்கள் துறையிலுள்ள பின்வரும் பணியிட வகைகளைப் பொறுத்தவரையில் மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும், சென்னையிலுள்ள துத்தநாகத் தகடச்சு நிறழ்பட அச்சகம் உள்பட நில அளவை மற்றும் பதிவுருக்கள் இணை இளநிலை இயக்குநர் அலுவலகங்கள் மற்றம் மைய நில அளவை அலுவலகத்திலுள்ள மேற்குறிப்பட்ட வகைகளைப் பொறுத்தவரையில் நில அளவை மற்றம் நிலவரித் திட்ட இயக்குநர்.


1. இளநிலை வரைஞர்கள், நிலைகள் - I மற்றும் II


2. நில அளவர்கள்


3. துணைஅளவர்கள்


4. இளநிலை உதவியாளர்கள்


5. உதவியாளர்கள்


(iv) மற்ற நேர்வுகளில் தொடர்புடைய துறைத் தலைவர்


இருப்பினும் துறைத்தலைவர், தாம் பொருத்தமெனக் கருதுகின்ற காப்பு அதிகாரங்களைத் தம்மிடம் வைத்துக் கொண்டு, இவ்விதியின் கீழ் அமைந்த தன்னுடைய அதிகாரங்களை தமது துறையிலுள்ள இரண்டாம் நிலை அலுவலர்களுள் ஒருவரிடம் ஒப்படைக்கலாம்.


(ஆ) அயல் பணிக்கு அல்லது வேறு ஏதேனும் அரசுப் பணிக்கு வேற்றுப்பணி முறையில் அனுப்பப்பட்டுள்ள அரசுப் பணியாளரைப் பொருத்தவரையில் உரிய அதிகாரி என்பது அவ்வரசுப் பணியாளர் முன்னர் பணியாற்றிய தாய்த்துறையை குறிப்பிடுவதாகும்.


(6) அரசுப்பணியாளர் தாம் பணிபுரியும் மாவட்டத்திலுள்ள இடம் பெயராச் சொத்துக்கு மரபுரிமை, வழியுரிமை அல்லது விருப்ப ஆவணம் வாயிலாக உரிமை பெறுமிடத்து அல்லது இவ்வதியில் கருதப்படுகின்றவாறு அந்த இடம் பெயராச் சொத்தில் சட்டப்படி உரிமைகொள்ளுமிடத்து அவர் அது பற்றிய விவரங்கள் அனைத்தையும் வழக்கமான வழிமுறையில் உரிய அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.


(7) நீக்கப்பட்டது (அரசாணை நிலை எண். 638, பணியாளர் (ம) நிர்வாகச் சீர்த்திருத்தத் துறை (பணி.அ) நாள். 16.5.1980.)


(8) அரசுப் பணியாளர் தமது உடைமையாக உள்ள அல்லது தாம் சட்டப்படி உரிமை கொண்டுள்ள இடம் பெயராச் சொத்து அமைந்துள்ள மாவட்டத்திற்கு மாறுதல் பெறுமிடத்து அவர் அவ்விவரத்தினைத் தன்னுடைய உடனடி மேலுள்ளவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.


(9) பணியாளர்களின் மந்தணக் கோப்புகளையும் (Personal files) பதிவுருத் தாள்களையும் பராமரிக்கும் அலுவலர், தமது நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அனைத்து அரசுப் பணியாளர்கள் குறித்து பிரிவு வாரியாக பதிவேடுகளைப் பராமரிக்கவேண்டும். அப்பதிவெடுகளில் அவர்கள் ஒவ்வொருவரிடமும் உள்ள இடம் பெயராச் சொத்துக்களின் விவரங்களைப் பதிவு செய்வதுடன் துணை விதி (3)-இல் குறிப்பிட்டவாறு அரசு பணியாளரால் அடுத்தடுத்து அளிக்கப்படும் விவர அறிக்கைகளின்படி அப்பதிவேட்டிலுள்ள பதிவுகளைத் தக்கவாறு திருத்திக் கொள்ளவும் வேண்டும்.


(10) அறிக்கைகளில் தவறான வழிகாட்டும் எந்த முயற்சியும் முழுமையான மற்றும் சரியான தகவல்தருவதில் எந்த தவறுகையும், தொடர்புடைய அரசு பணியாளரைக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைக்குட்படுத்தும்.


(11) வருவாய்த் தண்டல் அல்லது நீதி நிர்வாகப் பணியிலுள்ள அல்லது அதற்கு தொடர்புடையவருக்கு எந்த வணிக நோக்கத்திற்கும் இந்தியாவின் எப்பகுதியிலும் நிலம் வாங்குவதற்கும் அனுமதி அளிக்கக் கூடாது.


(12) இடம் பெயராச் சொத்தினைக் கையகப்படுத்துதலுக்கும் உடமையாகக் கொள்ளுதலுக்கும் உரிய வரையறைகள், அச்சொத்தின் மீதான எந்த ஒரு உரிமைக்கும் மற்றும் வேறொருவர் பெயரில் அரசுப் பணியாளர் அச்சொத்தினைக் கையகப்படுத்தி உடைமையாக்கிக் கொள்ளுதலுக்கும் பொருந்தும். ஆனால் அவை பொறுப்பாட்சியாக நிறைவேற்றுவராக, நிர்வாகியாக அச்சொத்தினைக் கையகப்படுத்துதலுக்கு அல்லது உரிமையாக்கிக கொள்ளுதலுக்குப் பொருந்தாது.


(13) வருவாய் வாரிய நிலை ஆணைகளுக்கு இணக்கமில்லாமல் அரசு நிலம் எதுவும் நிலையாகவோ தற்காலிகமாகவோ பணிக்கமர்த்தப்பட்டுள்ள அரசுப் பணியாளர் எவருக்கும் விற்கப்படவோ குத்தகைக்கு விடப்படவோ கூடாது.


(14) (அ) அரசுப் பணியாளர், தாம் பணியாற்றும் வருவாய் மாவட்டத்திற்குள் வீட்டுமனையை அல்லது கட்டப்பட்ட வீட்டினை வாங்கும் நோக்கத்திற்காக அன்றி வேறெந்த நோக்கத்திற்காகவும் நிலத்தை உடைமையாக்கிக் கொள்ள அனுமதிக்கப்படமாட்டார். அம்மாவட்டத்திலிருந்து அவர் மாற்றப்பட்ட பின்னரும், அவருடைய பணி மாற்றல் நாளிலிருந்து ஈராண்டுகள் வரை, அம்மாவட்டத்தில் வீட்டுமனையை அல்லது கட்டப்பட்ட வீட்டினை வாங்கும் நோக்கத்திற்காக அன்றி பிற நோக்கங்களுக்காக நிலத்தை உடைமையாக்கிக் கொள்ள அவர் அனுமதிக்கப்படமாட்டார்.


இருப்பினும் உள் விதி (1)-இன் பிரிவுக்கூறு (அ)க்குட்பட்டு, அரசுப்பணியாளர் தாம் பணிபுரியும் அல்லது பணிபுரிந்த வருவாய் மாவட்டத்தில் வீட்டுமனையை அல்லது கட்டப்பட்ட வீட்டை வாங்கலாம்.


(ஆ) பொதுவாக, அரசு பணியாளர் தாம் பணிபுரியும் வருவாய் மாவட்டத்திற்கு வெளியே இடம் பெயராச் சொத்தினை உடைமையாக்கிக்கொள்ள அனுமதிக்கப்படலாம். ஆனால், அந்த இடம் பெயராச் சொத்தினை உடைமையாகக் கொண்டுள்ள மாவட்டத்திற்கு அரசுப் பணியாளர் மாற்றப்படுகையில் உள் விதி (17)-இல் கோரியுள்ள அறிக்கையை அளித்தவுடன் உரிய அதிகாரி அவரை வேறு மாவட்டத்திற்கு மாற்றுவார்.


இருப்பினும் ஒரு வருவாய் மாவட்டத்திலிருந்து மற்றொரு வருவாய் மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட அரசு பணியாளர், அவர் எந்த வருவாய் மாவட்டத்திலிருந்து மாற்றப்பட்டாரோ அந்த வருவாய் மாவட்டத்திற்குள், அவருடைய மாற்றல் நாளிலிருந்து ஈராண்டுகள் எந்தவொரு நோக்கத்திற்காகவும் வீட்டுமனை அல்லது கட்டப்பட்ட வீடு அல்லாத வேறு நிலத்தை உடைமையாக்கிக் கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்.


(இ) வருவாய் வாரியமும், அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள துறைத் தலைவர்களும், அரசுப்பணியாளர் மாற்றப்பட்டுள்ள மாவட்டத்தில் அவருக்குரிய இடம் பெயராச் சொத்தினை தக்கவைத்துக் கொள்வதற்கு, அத்துறை தலைவர்களால் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதிகளின் நேர்வுகள் பற்றி ஒவ்வோராண்டும் மார்ச் 31-ஆம் நாளுக்குள் அரசுக்கு ஆண்டு அறிக்கை அனுப்பப்பட வேண்டும்.


இதே போன்ற ஒப்பளிப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட்ட சார்நிலை அலுவலர்களாலும் இவ்வறிக்கைகள் வருவாய் வாரியத்திற்கு அல்லது துறைத்தலைவர்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.


வருவாய் வாரியத்தாலும்; துறைத்தலைவர்களாலும் அனுப்பப்படும் இவ்வறிக்கைகளில், அவர்களுக்குச் சார்நிலையிலுள்ள அலுவலர்கள் தீர்வு செய்த நேர்வுகளைக் குறிப்பிட வேண்டியதில்லை.


(ஈ) கூறுகள் (அ), (ஆ) மற்றும் (இ) இல் உள்ள ‘வருவாய் மாவட்டம்” மற்றும் ‘மாவட்டம்” எனும் சொற்றாடரானது.


(i) பதிவுத்துறையிலுள்ள துணைப்பதிவாளர்கள், எழுத்தர்கள், பதிவுரு எழுத்தர்கள், அடிப்படை அரசுப் பணியாளர்கள் ஆகியோரைப் பொறுத்தவரையில் ‘பதிவுத்துணை மாவட்டம்” என்றும் பதிவுத் துறையிலுள்ள மாவட்ட பதிவாளர்களைப் பொறுத்தவரையில் ‘பதிவு மாவட்டம்” என்றும்,


(ii) ஆயத்துறை அல்லது மதுவிலக்குத் துறையின் தடுப்புக் கிளைகளிலுள்ள துணை ஆய்வாளர்களைப் பொறுத்தவரையில் ‘ஆயத்துறை அல்லது மதுவிலக்கு வட்டம்” என்றும்,


(iii) தமிழ்நாடு பொது சார்நிலைப் பணித் தொகுதி மற்றும் தமிழ்நாடு அடிப்படைப் பணித் தொகுதிப் பணி உறுப்பினர்களல்லாத பொதுப்பணித்துறை சார்நிலைப் பணி உறுப்பினர்களைப் பொறுத்தவரையில் ‘பொதுப்பணித்துறை உட்கோட்டம்’  என்றும்,


(iv) தமிழ்நாடு வனப்பணித் தொகுதி மற்றும் தமிழ்நாடு வனச் சார்நிலைப் பணிப் தொகுதி உறுப்பினர்களைப் பொறுத்தவரையில் ‘வனக்கோட்டம்” என்றும் பொருள்படும்.


(உ) (அ) முதல் (ஈ) வரையிலான பிரிவுக்கூறுகளில் இடம்பெறாத எதுவும், 1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில வீட்டுவசதி வாரியச் சட்டம் (1961ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 17) அல்லது மேற்குறிப்பிடப்பட்ட வாரியத்தால் நிறுவப்பட்ட எந்தவொரு வீட்டுவசதிப் பிரிவு அல்லது 1961ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச்சங்கங்கள் சட்டத்தின் கீழ் (1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 53) பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்டதாகக் கருதப்பட்ட சங்கம் வாயிலாக கையகப்படுத்தப்பட்ட வீட்டுமனைகள் உள்ளிட்ட நிலத்திற்கு பொருந்தாது.


(ஊ) குறிப்பிட்ட சொத்தானது அரசுப் பணியாளரால் கட்டப்பட்ட அல்லது மரபுரிமையாகப் பெறப்பட்ட வீடாக இருப்பின், பிரிவுக்கூறு (ஆ)-இல் உள்ள எதற்கும் பொருந்தாது.


(15) மருமக்கள் தாயம் அல்லது அளிய சந்தான சட்டத்தினால் முறைப்படுத்தப்படும் குடும்பத்தைப் பொறுத்தவரையில் அக்குடும்பத்தின் சார்பில் மேலாண் உறுப்பினரால் இடம் பெயராச் சொத்து வாங்கப்படுகையில், பொதுவாக இளநிலை உறுப்பினராக உள்ள அரசுபணியாளர், இதற்கான அனுமதியினைப் பெற தேவையில்லை. ஆனால் கையகப்படுத்துகை ஏதேனும் கர்ணவான் அல்லது எஜமான் பெயரில் செய்யப்பட்டிருந்து உள்ளபடியே அது அவ்வரசுப்பணியாளரின் சொந்தக் சொத்தாகக் கருத இடமளிக்கப்பட்டால் அது தொடர்பில் இவ்விலக்கு பொருந்தாது.


(16) வருவாய் அல்லது நீதித்துறையில் அரசுப் பணியாளர், அரசின் அனுமதியின்றி தாம் அப்போதைக்குப் பணியாற்றும் மாவட்டத்தில் அரசுக்கு சேர வேண்டி நிலுவைகள் காரணமாக அல்லது நீதிமன்றஆணைகளின்படி விறப்னைக்குரிய இடம் பெயர் அல்லது இடம் பெயராச் சொத்து எதனையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாங்குதல் இதன்மூலம் தடை செய்யப்படுகிறது.


(17) அரசுப் பணியாளர் தன்னுடைய சொந்த கணக்கில் அல்லது பொறுப்பாட்சியர் நிறைவேற்றுநர் அல்லது நிருவாகி அல்லது கோயில் மிராசுதாரர் எனும் முறையில் உடைமையாகக் கொள்ளப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட அல்லது அவரது மனைவி அல்லது அவருடனுள்ள குடும்ப உறுப்பினர் எவரேனும் ஒருவர் அல்லது எவ்வகையிலேனும் அவரைச் சார்ந்தவராக உள்ள எவரேனும் ஒருவர் பெயரி; உரிமையாக் கொள்ளப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட ல்லத அவர்களால் மேலாண்மை செய்யப்படும் இடம் பெயராச் சொத்து விவரம் அனைத்தும் ஆண்டு விவர அளிக்கையில் இடம் பெற்றிருக்க வேண்டும். மருமக்கள் தாயம் அல்லது அளிய சந்தானம் சட்டத்தைப் பின்பற்றும் அரசுப் பணியாளர் நேர்வில் அவரது வாழ்க்கை துணைவரால் உடைமையாக கொள்ளப்பட்ட இடம் பெயராச் சொத்தானது விவர அறிக்கையில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் / ஆசிரியர்கள் - துறைத் தேர்வுகள் - எழுதத் தேவையான புத்தகங்கள்...

 தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் / ஆசிரியர்கள் - துறைத் தேர்வுகள் - எழுதத் தேவையான புத்தகங்கள்... 

Tamilnadu Government Officers / Teachers - Department Examinations - Books to Download...

List of Books

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Part-time teachers transfer counselling - Date of joining service on revised transfer priority norms - SPD's letter, Dated : 24-12-2024

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேரப் பயிற்றுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட மாணாக்கர்கள் விகிதாசாரப்படி த...