கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

"பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு" (Safety & Security at School Level) என்ற தலைப்பில் பள்ளி ஒன்றுக்கு ரூ.500/- வீதம் நிதி ஒதுக்கீடு...

 


பார்வையில் காணும் மாநில திட்ட இயக்குநர் அவர்களின் கடிதத்தின்படி, 2020-2021 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பாதுகாப்பு உணர்வுடன் கல்வி கற்கும் சூழலை உருவாக்குவதற்காக, “பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு" (Safety & Security at School Level) என்ற தலைப்பில் பள்ளி ஒன்றுக்கு ரூ.500/- வீதம் திட்ட ஏற்பளிப்புக் குழுவால் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

இதன் உயரிய நோக்கம், உலக அளவில் கோவிட் - 19 கிருமியின் காரணமாக நோய்த் தொற்று பரவும் அசாதாரணமான தற்போதைய சூழலில், பள்ளி மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பள்ளிக்கு வருவதை உறுதிபடுத்துவதும், தன்சுத்தத்துடனும், பாதுகாப்பு உணர்வுடனும் கல்வி கற்கும் சூழலை பள்ளிகளில் ஏற்படுத்துவதும் ஆகும். எனவே பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்காக, பள்ளி ஒன்றுக்கு ரூ.500/- வீதம் அனைத்து வட்டார வளமையங்களுக்கு 1758 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்காக இணைப்பில் காணும் அட்டவணைப்படி நிதி விடுவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.


வழிகாட்டுதல்கள்

மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டியவை:

மாவட்ட திட்ட அலுவலகத்திலிருந்து நிதி விடுவிக்கப்பட்டவுடன் சார்ந்த பள்ளிகள் திறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு நிதியை விடுவித்து பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் அனைத்தும் செய்யப்பட வேண்டும்.

மேலும், அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு" சார்ந்து குறிப்பாக கோவிட் - 19 நோய்த் தொற்று பற்றிய விழிப்புணர்வு சார்ந்து ஒருநாள் பயிற்சியும் அதற்கான பயிற்சி கட்டகமும் வழங்கப்பட உள்ளது. அது குறித்த விரிவான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

பயிற்சி முடிந்தவுடன் மேற்காண் பொருள் சார்ந்த விழிப்புணர்வை மாணவர்கள் அவர்களின் பெற்றோர் ஆகியோரிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

4. கோவிட் - 19 குறித்து அரசின் சுகாதாரத்துறை வாயிலாக வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.

மேற்காணும் வழிகாட்டுதல்கள் மற்றும் அனைத்து நடைமுறைகளையும் முறையாக பின்பற்றவும் விடுவிக்கப்பட்ட நிதியினை ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.500/- வீதம் வட்டார வளமையத்திலிருந்து PFMS வாயிலாக தொகை விடுவித்தல் வேண்டும். தொகை விடுவிக்கப்பட்ட விவரத்தினை 23.12.2020 க்குள் மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

இணைப்பு : Safety & Security Block wise Fund Released Abstract

>>> முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


>>> ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...



ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதே போதுமானதா? - முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்...

முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையவழி கோரிக்கைப்பதிவு.

விரிவான விளக்கம்

முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையவழி கோரிக்கைப்பதிவு மற்றும் பராமரிப்பு,

தமிழ்நாடு

அய்யா, வணக்கம். ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதே போதுமானதா?

அல்லது

 அந்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா ஆணைநகல் பராமரிக்காத பட்சத்தில், பணிப்பதிவேட்டின் பதிவையே ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படுமா? என்ற விவரம் வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


C.No.20887/P&AR (FR.III)Dept., datedo8.09.2020 தனியர் மனுவில் கோரியுள்ள பணிப்பதிவேடு பராமரித்தல் மற்றும் உரிய பதிவுகள் மேற்கொள்வது குறித்து அடிப்படை விதிகள் 74(iv) பின்ணினைப்பு-I, பகுதி-III-ல் (Ruling under FR.74 (iv) Annexure-II-Part-lil)-ல் உள்ளது. இதனை காணலாம். மேலும் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை தொடர்பான

ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது போதுமானது. அதன் நகல்களை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

மேலும் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டதை ஆதாரமாக கொள்ளலாம்...



அதிகமாக விடுமுறை எடுக்கும் ஆசிரியர்களின் பட்டியல் கேட்கிறது உயர்கல்வித்துறை...

 ''தேவையில்லாமல் அதிகமாக விடுமுறை எடுத்துள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பட்டியலை அனுப்ப கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.''

அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கொரோனோ தொற்று மற்றும் உடல் நலன் சார்ந்த காரணங்களைத் தவிர அதிகமாக விடுமுறை எடுத்து நிர்வாகப் பணிகளை ஒழுங்காக மேற்கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை கல்லூரி கல்வி இயக்குநருக்கு அனுப்ப வேண்டுமென கல்லூரி கல்வி இயக்குநர் ராமலட்சுமி அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தேவையற்ற காரணங்களுக்காக அதிகமாக விடுமுறை எடுத்துள்ளவர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் பலர் உடல்நலன் சார்ந்த காரணங்களைத் தவிர்த்து பலர் தேவையில்லாமல் விடுமுறை எடுப்பதன் காரணமாக அரசுக் கல்லூரிகளில் கற்பித்தல் மற்றும் நிர்வாக பணிகளில் தொய்வு ஏற்படுவதாக வந்த புகாரையடுத்து கல்லூரிக் கல்வித் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கொரோனோ காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு மேல் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில், கடந்த 7ம் தேதி முதல் நேரடியாக மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பல பேராசிரியர்கள் கல்லூரிகள் திறக்கப்பட பிறகும் விடுமுறையில் இருந்து வருவது கல்லூரி கல்வி இயக்ககத்தின் கவனத்திற்கு வந்தது. இதனால் சிறப்பு விடுமுறை தவிர்த்து தேவையில்லாமல் விடுமுறை எடுத்துள்ள பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பட்டியல் சேகரிக்கப்படுகிறது.

பேராசிரியர் மற்றும் பேராசிரியர் அல்லாத பணியாளர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்ட பின்னர், அதிக விடுமுறை எடுப்பதற்கான விளக்கம் கேட்கப்படும். உரிய விளக்கம் அளிக்காத பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைை எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக கல்லூரி கல்வி இயக்குநரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பட்டியல் தயாரிக்கும் பணியை அரசுக் கல்லூரி முதல்வர்கள் துவக்கியுள்ளதால் விரைவில் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவையற்ற விடுமுறை எடுத்துள்ள நாட்களுக்கான ஊதியத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்புள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு வழக்குத் தொடா்ந்த மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்க நீதிமன்றம் உத்தரவு...

 


மாநில அரசுக்கு திருப்பி அளிக்கப்பட்ட அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மறு கலந்தாய்வு நடைமுறையை மேற்கொள்ளவும், மறு கலந்தாய்வில் வழக்குத் தொடா்ந்த மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு தமிழக அரசு அரசானை வெளியிட்டது.

 ''கடலூா் மாணவிகள் தா்ஷினி, இலக்கியா ஆகியோருக்கு கலந்தாய்வில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. ஆண்டுக்கு ரூ.7 லட்சம் முதல் 8 லட்சம் வரை கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருவரும் இருந்ததால் காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டனா். 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவா்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும்'' என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அறிவிப்பு வெளியான பின்னரும் மாணவிகளுக்கு மருத்துவ இடம் வழங்கப்படவில்லை. இதனை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், ‘அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழகத்தில் இருந்து வழங்கப்பட்ட இடங்களில் 227 இடங்கள் மீண்டும் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ், 26 இடங்கள் கிடைக்கும். 

இந்த இடங்களை 60 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மறு கலந்தாய்வு நடத்தி ஒதுக்கப்படும்’ என தெரிவித்திருந்தாா். அதையடுத்து, ‘கலந்தாய்வில் கலந்துகொள்ளும் 60 மாணவா்களில் யாருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்’ என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், ‘வழக்குத் தொடா்ந்த மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டாா். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி,மாநில அரசுக்கு திருப்பி அளிக்கப்பட்ட அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மறு கலந்தாய்வு நடைமுறையை மேற்கொள்ளவும், மறு கலந்தாய்வின்போது, வழக்குத் தொடா்ந்த அரசுப் பள்ளி மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜனவரி 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

ஆசிரியர்கள் அனைவருக்கும் இனி ஸ்மார்ட் கார்ட் கட்டாயம் - தமிழக அரசு...

 தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு கியூஆர் கோடு வசதியுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும், ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.


இதற்காக, எமிஸ் என்ற இணையதளம் மூலம், பெயர், முகவரி, ரத்த வகை, புகைப்படம் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டன. அதன்படி ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர், ஆசிரியல்லா பணியாளர் என 24 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட உள்ளன. தற்போது முதல்கட்டமாக, 12 ஆயிரத்து , 901 கார்டுகள் தயார் நிலையில் உள்ளது. அதனை மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மூலம், அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

பள்ளிகள் திறக்கும் போது, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணிக்கு வரும்போது, ஸ்மார்ட் கார்ட்டை கட்டாயம் அணிந்து வரவேண்டும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.

2021 ஜனவரி 1 முதல் ஏற்படப் போகும் மாற்றங்கள்...

 அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும், 'பாஸ்டேக்' கட்டாயம் உட்பட, பல புதிய நடைமுறைகள், வரும், ஜன., 1 முதல் அமலுக்கு வர உள்ளது.வரும், ஜன., 1 முதல் அமலுக்கு வர உள்ள புதிய மாற்றங்கள்:

* மின்னணு முறையில், சுங்க கட்டணம் செலுத்துவதற்கான, 'பாஸ்டேக்' ஸ்டிக்கர் இருப்பது, அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

* இனி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகைக்கான காசோலைக்கு, 'பாசிடிவ் பே' என்ற புதிய முறை கட்டாயமாகிறது.

அதன்படி, அந்த காசோலையின் எண், யாருக்கு வழங்கப்பட்டுள்ளது உள்ளிட்ட விபரங்களை, வங்கிக்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும்.

* கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை, 'ஸ்வைப்பிங் மெஷினில்' செலுத்தாமலேயே, பரிவர்த்தனை செய்வதற்கான வரம்பு, 2,000 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இது சுய விருப்பத்தில் அவரவர் பதிவு செய்து கொள்ளலாம்.

* ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கணக்குகளை தற்போது, மாதந்தோறும் தாக்கல் செய்ய வேண்டும். 5 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யும் நிறுவனங்கள், இனி, காலாண்டுக்கு ஒருமுறை கணக்கு தாக்கல் செய்தால் போதும். இதனால், 94 லட்சம் பேர் பயன் பெறுவர்.

* வரும், ஜன., 15ம் தேதி முதல், தொலைபேசிகளில் இருந்து, மொபைல் போன்களை அழைக்கும்போது, அந்த எண்ணுக்கு முன், பூஜ்ஜியம் சேர்க்க வேண்டும்.

* 'வாட்ஸ்ஆப்' சமூக வலை தளம், சில குறிப்பிட்ட மொபைல் போன்களில் செயல்படாது.

* பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள்,ஜன., 1 முதல், கார்களின் விலையை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளன. இடுபொருள் செலவு அதிகரித்துள்ளதால், இந்த விலையேற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பா? / Tamil Nadu School Reopen Date...

 


கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்விநிலையங்கள் மூடப்பட்டன. அடுத்த கல்வியாண்டு தொடங்கி 6 மாத காலம் முடிவடைந்த நிலையில் தற்போது டிசம்பர் 6-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்த அறிக்கையின் படி ஜனவரி மாதம் பொங்கல் கழித்த பின் பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளதாக அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தெரிவித்தார்.

பள்ளிகள் திறப்பு: 

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 25 முதல் பள்ளிகள் மூடப்பட்டன. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் படங்கள் நடத்திவரும் நிலையில், வசதி இல்லாத அரசு மற்றும் அரசு உதவி பெரும் மாணவர்களுக்காக அரசு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். கேரளா மற்றும் கர்நாடக அரசுகள் வருகிற ஜனவரி 4 முதல் பள்ளிகளை திறக்க ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு பள்ளிகளை திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தது.

கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்துவரும் நிலையில் தற்போது இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 150 பேருக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பள்ளிகள் ஜனவரி மாதம் திறக்கவிருந்த நிலையில் தேதி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்த போது கொரோனா நோய் முற்றிலும் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு தான் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பெற்றோர்கள் கருத்தின் அடிப்படையில் தான் தமிழக அரசு முடிவெடுக்கும் என தெரிவித்தார்.

இந்நிலையில் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய மூத்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,” அரசு, பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளது,

குறிப்பாக அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜனவரி மாதத்தில் பொங்கலுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும். இருப்பினும், ஐ.ஐ.டி-மெட்ராஸ் மற்றும் அண்ணா பல்கலைக்கழக வைரஸ் பரவலைப் பார்க்கும்போது, இயல்புநிலை வரும் வரை பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O.Ms.No.170, Dated: 22-09-2024 - Providing non-equivalent for various degree courses - Attachment: DSE Proceedings, Tamil Nadu State Council of Higher Education Letter and Ordinance

   பல்வேறு பல்கலைக்கழகங்கள் &  கல்லூரிகளின் 23 பட்டப் படிப்புகளுக்கு இணைத்தன்மை இன்மை (Not Equivalent) வழங்கி அரசாணை G.O. Ms. No. 170, D...