கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Safety and Security லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Safety and Security லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பருவ மழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் - DEE Proceedings, நாள் : 14-10-2024...



 தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2024-25ஆம் கல்வியாண்டு பருவ மழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 14-10-2024...


Elementary Education - Precautionary Rainfall Safety Measures in Panchayat Union / Municipal / Government Primary and Middle Schools for the academic year 2024-25 issuance of instructions regarding - Proceedings of the Director of Elementary Education, Dated : 14-10-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு - ரூ.2000 நிதி விடுவித்தல் - பள்ளி & வட்டாரங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Safety and Security of Children at School Level - Release of Rs.2000 - Work to be done in Schools & Blocks - Proceedings of Chief Educational Officer)...


>>> பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு - ரூ.2000 நிதி விடுவித்தல் - பள்ளி & வட்டாரங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Safety and Security of Children at School Level - Release of Rs.2000 - Work to be done in Schools & Blocks - Proceedings of Chief Educational Officer)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


2021-2022 - பள்ளி அளவில் குழந்தைகளின் பாதுகாப்பு - பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைத்தல் - (மாணவர் மனசு) பாதுகாப்பு பெட்டி மற்றும் விழிப்புணர்வு நெகிழ் பலகை வைத்தல் - இரண்டாம் கட்டமாக நிதி ஒதுக்கி மாநிலத் திட்ட இயக்குனர் செயல்முறைகள் (Child Protection Safety & Security at School Level - SSAC - Students Safeguarding Advisory Committee Formation - (Students Mind) Safety Box and Awareness Sliding Board in Schools - State Program Director Proceedings Allocating Funds for the Second Phase) ந.க.எண்:451/C6/SS/ S& S/2021, நாள்: 10-12-2021...



>>> 2021-2022 - பள்ளி அளவில் குழந்தைகளின் பாதுகாப்பு - பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைத்தல் - (மாணவர் மனசு) பாதுகாப்பு பெட்டி மற்றும் விழிப்புணர்வு நெகிழ் பலகை வைத்தல் - இரண்டாம் கட்டமாக நிதி ஒதுக்கி மாநிலத் திட்ட இயக்குனர் செயல்முறைகள் (Child Protection Safety & Security at School Level - SSAC - Students Safeguarding Advisory Committee Formation - (Students Mind) Safety Box and Awareness Sliding Board in Schools - State Program Director Proceedings Allocating Funds for the Second Phase) ந.க.எண்:451/C6/SS/ S& S/2021, நாள்: 10-12-2021...


Safety & Security - II Installment


பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டியவை:


1. ரூ. 1,000/- பெறப்பட்டதை EMIS வலைத்தளத்தில் Schools -->Finance -->Income & Expenses என்ற இடத்தில் உடனடியாக வரவு வைக்கப்பட வேண்டும்.


2. மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு (Students Safeguarding Advisory Committee - SSAC) உருவாக்குதல் [பள்ளித் தலைமையாசிரியர் தலைமையில், 2 ஆசிரியர்கள், 1 பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், 1 ஆசிரியரல்லாத பணியாளர், 1 நிர்வாகப் பணியாளர், 1 வெளி உறுப்பினர் (விருப்பப்பட்டால்)]


3.மாணவர் மனசு - பாதுகாப்பு பெட்டி (Safety Box) வைத்தல் ( 4. 5*12*7 அங்குலம் நீளம், அகலம் மற்றும் உயரம்)


4. விழிப்புணர்வு நெகிழ் பலகை (Flex Board) வைத்தல் (6 அடி நீளம் மற்றும் 4 அடி அகலம்)   


5. மேற்கண்ட பணிகளின் விவரங்களை EMISல் உடனடியாக பதிவேற்றம் செய்தல்


Dashboard -> School Option -> Select CSA Compliance ->Select Yes ->

5.1 SSAC Member Details ->Click Submit Button


5.2 Placement of Safety Boxes - - Select Yes -> Upload the Image 


5.2.a) Upload image  1 :  Upload Full Box Image

5.2.b) Upload image  2 :  Upload the picture to show where the box is placed and at what Height

5.2.c) Comment Box : Type the location where the Safety Box is Placed*  -> Click Submit Button


5.3.Awareness Posters - > Select Yes -> Upload the Image 

5.3.a) Upload image  1 :  Upload Full Poster Image

5.3.b) Upload image  2 :  Upload the picture to show where the Poster is placed and at what Height

5.3.c) Comment Box : Type the location where the Poster is Placed*  -> Click Submit Button 



SMC TRAINING & SCHOOL SAFETY AND SECURITY TRAINING EXTENDED UPTO 15-02-2021...

 முன்பே பயிற்சியை நிறைவு செய்தவர்கள் மீண்டும் முயற்சிக்க தேவையில்லை.


அனைத்து பள்ளிகளும் பள்ளி வளாகத்தை தூய்மை செய்து பயனீட்டுச் சான்றை ஜனவரி 20 க்குள் சமர்ப்பிக்கவும், Safety & Security Training நிறைவு செய்யாத ஆசிரியர்கள் விவரம் கோரியும் மாநிலத் திட்ட இயக்குனர் செயல்முறைகள்...

 


ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வாயிலாக 2020- 21 கல்வி ஆண்டில் கல்வி ஆண்டில் அனைத்து அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பாதுகாப்பு உணர்வுடன் கல்வி கற்கும் சூழலை உருவாக்குவதற்காக பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பில் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்காக பள்ளி ஒன்றுக்கு ரூபாய் 500 வீதம் 6173 அரசு உயர் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் 31 ஆயிரத்து 297 அரசு தொடக்க நடுநிலை பள்ளிகளுக்கு நிதி விடுவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 19-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதாலும் பார்வை ஒன்றில் உள்ள வழிகாட்டுதலின்படி விடுவிக்கப்பட்ட நிதியை உடனடியாக பயன்படுத்தி பணியினை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் அனைத்து அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கும் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனி கவனம் சார்ந்து ஒருநாள் இணையதள பயிற்சி 16-12-2020 முதல் வழங்கப்பட்டு வருகிறது இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்தவர்கள் செய்யாதவர்கள் விவரத்தை மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ள படிவத்தை உடனடியாக பூர்த்தி செய்து அனுப்ப  அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மாநிலத் திட்ட இயக்குனர் செயல்முறைகள் ந.க. எண்: 539/ C6/ SS/ 2020, நாள்: 12-01-2021...

>>> மாநிலத் திட்ட இயக்குனர் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


"பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு" (Safety & Security at School Level) என்ற தலைப்பில் பள்ளி ஒன்றுக்கு ரூ.500/- வீதம் நிதி ஒதுக்கீடு...

 


பார்வையில் காணும் மாநில திட்ட இயக்குநர் அவர்களின் கடிதத்தின்படி, 2020-2021 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பாதுகாப்பு உணர்வுடன் கல்வி கற்கும் சூழலை உருவாக்குவதற்காக, “பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு" (Safety & Security at School Level) என்ற தலைப்பில் பள்ளி ஒன்றுக்கு ரூ.500/- வீதம் திட்ட ஏற்பளிப்புக் குழுவால் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

இதன் உயரிய நோக்கம், உலக அளவில் கோவிட் - 19 கிருமியின் காரணமாக நோய்த் தொற்று பரவும் அசாதாரணமான தற்போதைய சூழலில், பள்ளி மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பள்ளிக்கு வருவதை உறுதிபடுத்துவதும், தன்சுத்தத்துடனும், பாதுகாப்பு உணர்வுடனும் கல்வி கற்கும் சூழலை பள்ளிகளில் ஏற்படுத்துவதும் ஆகும். எனவே பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்காக, பள்ளி ஒன்றுக்கு ரூ.500/- வீதம் அனைத்து வட்டார வளமையங்களுக்கு 1758 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்காக இணைப்பில் காணும் அட்டவணைப்படி நிதி விடுவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.


வழிகாட்டுதல்கள்

மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டியவை:

மாவட்ட திட்ட அலுவலகத்திலிருந்து நிதி விடுவிக்கப்பட்டவுடன் சார்ந்த பள்ளிகள் திறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு நிதியை விடுவித்து பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் அனைத்தும் செய்யப்பட வேண்டும்.

மேலும், அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு" சார்ந்து குறிப்பாக கோவிட் - 19 நோய்த் தொற்று பற்றிய விழிப்புணர்வு சார்ந்து ஒருநாள் பயிற்சியும் அதற்கான பயிற்சி கட்டகமும் வழங்கப்பட உள்ளது. அது குறித்த விரிவான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

பயிற்சி முடிந்தவுடன் மேற்காண் பொருள் சார்ந்த விழிப்புணர்வை மாணவர்கள் அவர்களின் பெற்றோர் ஆகியோரிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

4. கோவிட் - 19 குறித்து அரசின் சுகாதாரத்துறை வாயிலாக வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.

மேற்காணும் வழிகாட்டுதல்கள் மற்றும் அனைத்து நடைமுறைகளையும் முறையாக பின்பற்றவும் விடுவிக்கப்பட்ட நிதியினை ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.500/- வீதம் வட்டார வளமையத்திலிருந்து PFMS வாயிலாக தொகை விடுவித்தல் வேண்டும். தொகை விடுவிக்கப்பட்ட விவரத்தினை 23.12.2020 க்குள் மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

இணைப்பு : Safety & Security Block wise Fund Released Abstract

>>> முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


>>> ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...